Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

உள்நாட்டு வெளிநாட்டு பொருளியல் நிபுணர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, June 10, 2024-) நேற்று (10) பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு பொருளியல் நிபுணர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆர்ஜென்டீனாவின் முன்னாள் பொருளாதார அமைச்சரும் கொலொம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Martin Guzman, மசெசுசெற்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Jayathi Ghosh, ஐக்கிய நாடுகள் புத்தாயிரக் கருத்திட்டத்தின் முன்னாள் பிராந்திய பணிப்பாளர் Charls Abugre, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி Ahilan Kadirgamar உள்ளிட்டோர் அதற்காக வருகைதந்திருந்தனர். தேசிய மக்கள் […]

(-Colombo, June 10, 2024-)

நேற்று (10) பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் உள்நாட்டு வெளிநாட்டு பொருளியல் நிபுணர்களுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஆர்ஜென்டீனாவின் முன்னாள் பொருளாதார அமைச்சரும் கொலொம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான Martin Guzman, மசெசுசெற்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Jayathi Ghosh, ஐக்கிய நாடுகள் புத்தாயிரக் கருத்திட்டத்தின் முன்னாள் பிராந்திய பணிப்பாளர் Charls Abugre, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி Ahilan Kadirgamar உள்ளிட்டோர் அதற்காக வருகைதந்திருந்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த, கலாநிதி அநுர கருணாதிலக, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, சட்டத்தரணி லக்மாலீ ஹேமசந்திர, சத்துரங்க அபேசிங்க, பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பேராசிரியர் உபாலி பன்னிலகே மற்றும் பட்டயப்பெற்ற கணக்காளர் சுனில் கமகே ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி, சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடு, அரசாங்கத்தின் பொருளாதார வழிமுறைகள் பற்றியும் இதன்போது நீண்ட உரையாடல் இடம்பெற்றது.

Foreign-Economists-Meet-NPP
Foreign-Economists-Meet-NPP
Foreign-Economists-Meet-NPP
Foreign-Economists-Meet-NPP
Foreign-Economists-Meet-NPP
Show More

“பொலிஸாரின் தொழில்சார் நன்மதிப்பினை பாதுகாக்கின்ற ஆட்சியை நாங்கள் நிலைநாட்டுவோம் ” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் தேசிய மாநாடு – 2024-06-09- தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்க்கூடம்-) இதற்கு முன்னர் நாங்களும் நீங்களும் லிப்டன் சுற்றுவட்டத்தில், கோட்டை ஸ்டேஷன் முன்னிலையில் சந்தித்திருப்போம். அன்று எங்கள் கையில் போராட்டக் கோஷப்பலகை. உங்களுடைய கையில் சிலவேலை குண்டாந்தடிகள், கண்ணீர்புகை இருந்திருக்கும். அது உங்களின் கடமை. இன்று நாங்கள் ஒன்று சேர்ந்திருப்பது அந்த கடமையை விஞ்சிச் சென்ற பொறுப்பிற்காகவே. எம்மெதிரில் இருக்கின்ற இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற திடசங்கற்பத்துடனேயே. உங்களைச் சந்தித்தது பாரிய […]

(-இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் தேசிய மாநாடு – 2024-06-09- தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்க்கூடம்-)

Retiered-Police-Community

இதற்கு முன்னர் நாங்களும் நீங்களும் லிப்டன் சுற்றுவட்டத்தில், கோட்டை ஸ்டேஷன் முன்னிலையில் சந்தித்திருப்போம். அன்று எங்கள் கையில் போராட்டக் கோஷப்பலகை. உங்களுடைய கையில் சிலவேலை குண்டாந்தடிகள், கண்ணீர்புகை இருந்திருக்கும். அது உங்களின் கடமை. இன்று நாங்கள் ஒன்று சேர்ந்திருப்பது அந்த கடமையை விஞ்சிச் சென்ற பொறுப்பிற்காகவே. எம்மெதிரில் இருக்கின்ற இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற திடசங்கற்பத்துடனேயே. உங்களைச் சந்தித்தது பாரிய தெம்பையும் நம்பிக்கையையும் தருகின்றது.

ரவி செனெவிரத்ன அவர்களுக்கு ஆளுங்கட்சியிலிருந்து மாத்திரமல்ல எதிர்கட்சியிலிருந்தும் பாரிய அழுத்தம் வந்தது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகிய இரண்டு குழுக்களும் அவருக்கு சிலவேலைகளில் நட்புணர்வுடனும் மற்றுமொறு வேளையில் மன்றாடுகின்ற தன்மையிலும் மேலும் சில நேரத்தில் அச்சுறுத்தல் விடுத்தும் இந்த மேடைக்கு ஏறவேண்டாமென கூறியிருக்கின்றனர். அது மாத்திரமல்ல ஏற்கெனவே அவர் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மேடையிலிருந்துகொண்டு உங்களுடைய கீழ்த்தரமான வேலையை நிறுத்திக் கொள்ளுமாறு நான் சாகல ரத்நாயக்காவிற்கு கூறுகிறேன். எந்தவொரு பிரஜைக்கும் இந்த நாட்டில் தான் விரும்பிய அரசியல் இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து ஜனநாயக ரீதியாக செயற்படுவதற்கான புனிதமான உரிமை இருக்கின்றது. அந்த எதற்குமே சாகலவின் அல்லது சஜித்தின் விருப்பமோ வெறுப்போ அவசியமில்லை.

ரவி செனெவிரத்ன எமது நாட்டின் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராவார். ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராவார். எனவே அந்த இரண்டு கட்சியினதும் வரலாற்றினை அவர்கள் நன்றாக அறிவார்கள். இந்த அச்சுறுத்தலின் பின்னால் இருப்பது அதுதான். அத்தகைய எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் ஓடி ஒளிந்திடாமல் அவர்கள் இந்த மேடைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களை விளித்து அவர்கள் கொண்டுள்ள அனுபவங்களிலிருந்து எமது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு என்ன நேர்ந்துள்ளதென அவர்கள் பொதுமக்களுக்கு எடுத்தியம்பி உள்ளார்கள். அவர்கள் துணிச்சல் மிக்கவர்கள். கூறுவது மாத்திரமன்றி இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான முனைப்பாக செயலாற்றுவதாக சபதம் செய்திருக்கிறார்கள்.

பலர் எம்மிடம் கேட்கிறார்கள் உங்களுடைய அரசாங்கமொன்று வந்தால் யார் அதை செய்வார்கள் என்று. எங்களுடைய ஆட்சியின் இந்த பொலிஸ் திணைக்களத்தின் சட்டத்திற்கு மதிப்பளித்து பணியாற்றிய சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் அனுபவங்கள், ஆலோசனைகள், இடையீடுகள் மூலமாகவே சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் என நான் கூறுகிறேன். இந்த நாட்டுக்கு எமது பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதக விளைவுகளை நாம் அனைவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நீண்ட வரலாற்றுக்குச் செல்லாமல் கடந்த இரண்டு மூன்று வருடங்களை திரும்பிப்பார்த்தால் நாட்டுக்கும் பிரஜைகளுக்கும் என்ன நேர்ந்துள்ளது என்பது தெளிவாகும். கடனை மீளச்செலுத்தமுடியாமல் வங்குரோத்து நிலையடைந்த ஒரு நாடு வைத்தியசாலைக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்கமுடியாமல்போன ஒரு நாடு. எம் எதிரில் இருப்பது பிள்ளைகளுக்கு முறையான கல்வியை பெற்றுக்கொடுக்க முடியாமல்போன, வருமானம் பெற்றுத்தருகின்ற தொழிலொன்றை புரியமுடியாமல் போன, குற்றச்செயல் புரிபவர்களினதும் ஊழல் பேர்வழிகளினதும் பிடிக்குள் அகப்பட்ட ஒரு நாடு. இதன் பாதக விளைவினை ஒட்டுமொத்த சமூகமுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும்.

Retiered-Police-Community

இதனை மாற்றியமைக்க வேண்டுமானால் ஏனைய எல்லா விதமான மறுசீரமைப்புகளையும் போன்றே சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டியது முக்கியமானதாகும். எமது நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சட்டத்தின் முன்னிலையில் தனக்கு நேர்ந்த அநீதி பற்றிய மனக்குறையை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். நாங்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா? இல்லை. அதிகாரம், பணம் படைத்தவர்களுக்கு ஒரு விதமான சட்டம். பொலிஸ் திணைக்களம், சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களம், நீதிமன்ற முறைமை என்பவற்றை ஏளனம் செய்த தலைவர்கள் தான் இங்கே இருக்கிறார்கள். சுற்றுலா வீசா மூலமாக இலங்கைக்கு வந்திருப்பதை டயனா அறிந்திருந்தார். அந்த வீசா காலம் தீர்ந்து விட்டதென அவர் அறிந்திருந்தும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து ராஜாங்க அமைச்சராக செயலாற்றினார். பிரஜாவுரிமை இல்லாத அவருக்கு அவருடைய அரசியல் அதிகாரத்திற்கிணங்க சட்டம் அமுலாக்கப்படமாட்டாது என்பது தெரியும். அந்த லைசன் இல்லாமல் பைசிக்கிள் ஓட்டுவதற்கு பயப்படுகின்ற பிரஜைகள் இருக்கின்ற ஒரு நாட்டில் பிரஜாவுரிமையின்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து அவர் அமைச்சர் பதவியை வகிக்கிறார். டயனாவுக்கு பிரஜாவுரிமை கிடையாது என்பதை அடுத்ததாக அறிந்தவர் ரணில் ஆவார். அப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு முன்னோக்கி நகரமுடியாது. சட்டத்தின் ஆட்சியை முறைப்படி பாதுகாக்கின்ற ஒரு நாடு எமக்கு தேவை. தனிப்பட்டமுறையில் என்னையோ எங்கள் இயக்கத்தையோ பாதுகாப்பதற்காக குற்றச் செயல் புரிபவர்கள், ஊழல் பேர்வழிகள், பாதாள உலக கோஷ்டியினர், நிதிசார் குற்றச்செயல் புரிந்தவர்கள் அல்லது கொலைக்காரர்கள் எமக்கு தேவையில்லை. பொலிஸ் திணைக்களத்திற்கு சட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதாதென்றால் அதற்கான வசதிகளை வழங்கி சட்டத்தின் ஆட்சியை முறைப்படி பாதுகாப்போம் என நாங்கள் உத்தரவாதமளிக்கிறோம்.

பலர் பொலிஸ் மீது குற்றச்சாட்டுகிறார்கள் எனினும் நூரி தோட்டத்தில் தோட்ட அத்தியட்சகரின் படுகொலை, ஹோகந்தர அறுவர் படுகொலை, நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை போன்ற சர்ச்சைக்குரிய கொலைகள் சம்பந்தமாக பொலிஸார் முறைப்படி செயலாற்றி நீதிமன்றம் ஊடாக குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கினார்கள். எனினும் லசந்த படுகொலை, எக்னெலிகொட கடத்தல் பற்றிய விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகள், கீத்நொயார் தாக்கப்பட்டமைப் பற்றிய விசாரணைகள,; உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியதாக மற்றும் போத்தல ஜயந்;தவின் கை கால்களை முறித்தமை போன்ற விசாரணைகள் ஏன் முடியவில்லை? அந்த குற்றச்செயல்களின் மறைவில் அரசியல் தலையீடுகள் இருக்கின்றன. எமது நாட்டின் பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படுகின்ற பயிற்சிகள் மாத்திரமன்றி சிறப்பான மோப்பம் பிடிக்கின்ற திறமைகளும் இருக்கின்றன. எனினும் இவையனைத்தையும் அரசியல் தலையீடுகளே சீர்குலைக்கின்றன. ரவி செனெவிரத்ன அவர்கள் ஷானி அபேசேகர பற்றி வெளிப்படுத்ததிய கதையில் எம்மனைவரதும் இதயங்கள் ஒருகணம் நின்றுவிட்டன. கடமையைப் புரிந்தமைக்காக தண்டனை கிடைக்குமாயின் அந்த அரசியல் என்ன? ஷானி அபேசேகரவிற்கு நாங்கள் ஓர் உத்தரவாதம் அளிக்கிறோம். எமது ஆட்சியின்கீழ் நாங்கள் உங்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். அநீதிகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் இலக்காகிய அவர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கவேண்டும்.

சமூகத்தில் உறுதிநிலையை பாதுகாத்துக் கொள்ளும்போது பொலிஸ் மற்றும் குற்றப் புலளாய்வுத் திணைக்களத்திற்கு பாரிய செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. பாரிய போராட்டங்களின் பெறுபேறாகவே மனித நாகரிகம் இற்றைவரை பயணித்துள்ளது. பழங்குடித் தலைவரிடம் இருந்த சட்டங்களை ஆக்குகின்ற நிறைவேற்று அதிகாரம் மக்களால் நியமிக்கப்படுகின்ற நிறைவேற்றுத்துறைக்கு கையளிக்கப்படுகின்றது. பழங்குடித் தலைவரிடம் இருந்த தண்டனை வழங்குகின்ற அதிகாரம் பொலிஸ் திணைக்களம், சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களம் மற்றும் நீதிமன்றத் தொகுதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனினும் எமது நாட்டில் பாராளுமன்றம் மீண்டும் ஜனாதிபதியின் சிக்னல் தூணாக மாறியுள்ளது. நீதி நிருவாகத்திற்காக இருக்கின்ற நிறுவனங்கள் படிப்படியாக அவரது பிடிக்குள் அகப்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நிறுவனங்கள் சுயாதீனமாக தமது அலுவல்களை மேற்கொண்டு வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பாக பொலிஸ் திணைக்களத்திற்கு முறையாக பதவியுயர்வு நடைமுறையொன்று அறிமுகஞ் செய்யப்படும். பொலிஸில் சேர்கின்றபோது, விவாகம் செய்யும்போது அத்துடன் இளைப்பாறுகின்ற வேளையிலும் கான்ஸ்டபிள் பதவியிலேயே பெரும்பாலானோர் இருக்கின்ற நிலைமையை மாற்றியமைத்து தொழிலை முன்னெடுத்துச் செல்கின்ற ஆற்றலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தற்போது பொலிஸில் பெரும்பாலானோர் பிரபுக்கள் பாதுகாப்பிற்காகவே ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவே ஈடுபடுத்தப்பட வேண்டும். 2000 ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதியாக நியமனம்பெற்ற நான் இதுவரை எனது பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தரை பெற்றுக்கொள்ளவில்லை. பிரபுக்கள் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் படுகின்ற வேதனைகளை நாங்கள் அறிவோம். வரவுசெலவு விவாதம் நடைபெறுகின்ற காலத்தில் தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்களுக்கு மேலாக கடமையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த நிலைமையை மாற்றியமைப்பதோடு பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரதும் உயிர்களைப் பாதுகாக்கவும் தேசிய மக்கள் சக்தி கடப்பாடு கொண்டுள்ளது. 24 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்ற நான் எமது நண்பரொருவர் ஹெல்மட்; இன்றி பயணித்து அகப்பட்ட வேளையில்கூட பொலிஸ் நிலையத்திற்கு கோல் பண்ணியதில்லை. தவறாளிகளை விடுவிப்பதை தமது அரசியல் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ள கலாசாரத்தை நாங்கள் முற்றாகவே மாற்றியமைத்திடுவோம். அதேவேளையில் மற்றுமொரு விடயத்தையும் தெளிவாக கூறுகிறோம். குற்றச்செயல் புரிந்தவர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகள் பற்றிய விசாரணைகளின்போது மிகவும் நெருக்கமாக செயலாற்றுவோம். பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஒவ்வொரு திணைக்களத்திற்கும் ஏற்புடையதாகும் வகையில் அரச பொறியமைப்பினை ஒருபோதுமே அரசியலுக்காக பயன்படுத்தமாட்டோம். பொலிஸின் உரிமையாளர் அரசியல்வாதியல்ல. பொலிஸின் ஒரு பகுதியினர் பயிற்சிகளை பெற்றிருந்தாலும் தமது சீருடைகள், நட்சத்திரங்களின் நன்மதிப்பும் மற்றும் தொழில்சார் மகிமையை பாதுகாக்கின்ற ஆட்சியொன்றை நாங்கள் நிலைநாட்டுவோம்.

Retiered-Police-Community

கால ஓட்டத்தில் மண்ணில் புதையுண்டுபோக இடமளித்துள்ள குற்றச்செயல்களை தேசிய மக்கள் சக்தி மறந்துவிடமாட்டாது. 1994 இல் மேடையில் ஏறி சந்திரிக்கா குமாரதுங்க 17 வருடங்களாக திருடியுள்ள ஊழல் பேர்வழிகளை கோல்பேஸ் மைதானத்திற்கு கொண்டுவந்து தோலை உரிப்பதாக கூறினார். ஒரு ஏக்கர் தென்னங்காணியை ரூபா 2 வீதம் கொள்வனவு செய்த விஜேபால மெண்டீஸ் போன்றவர்களை தண்டிப்பதாக கூறினாலும் 7 வருடங்கள் கழிகின்றபோது அதே விஜேபால மெண்டீஸ் சந்திரிக்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிணைமுறி மோசடியின் சூத்திரதாரி, உயிர்த்தஞாயிறு தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கட்சியின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ராஜபக்ஷாக்களைப் போன்றே எமக்கெதிராகவும் பேனையை பாவித்த லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை ரணில் விக்கிரமசிங்க மூடிமறைத்துள்ளார். தேர்தல் மேடைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் வெறும் மேடை பேச்சுக்களாக மாத்திரமே அமைந்துள்ளது. அத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொள்ளும் கலாச்சாரத்தை அமுலாக்கி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் குற்றச்செயல்களும் ஊழல்களுமற்ற நாடாக இந்த நாட்டை மாற்றியமைக்கும் பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றே அடிப்படை விடையத்துறைகள் சம்பந்தமாக எம்மிடம் எவ்வளவுதான் திட்டங்கள் இருந்தாலும் சட்டம் சீரழிந்து காடுமண்டிப்போயிருந்தால் அவற்றில் பயனில்லை. எமது நாட்டின் சாதகமான எதிர்காலம் பற்றி எவருக்காவது நோக்கமொன்று இருப்பின் சட்டத்தின் ஆட்சி கட்டாயமாக நிலைநாட்டப்படல் வேண்டும். அதற்காக ஆற்றக்கூடிய பாரிய செயற்பொறுப்பு உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. என்னத்தான் செய்தாலும் ஊழலை நிறுத்திவிட, குற்றச்செயல்களை தடுக்க முடியாதென ஒரு சிலர் கருத்தினை முன்வைத்து வருகிறார்கள். எனினும் அத்தகைய நிலைமைக்கு இழுத்துப்போட்ட அரசியலை மாற்றியமைப்பதன் மூலம் அந்த கருத்தினை முற்றாகவே நாங்கள் தோற்கடிப்போம். சில வேளைகளில் நட்புமிக்க வகையிலும், சிலவேளைகளில் தாபனம்சார் வடிவத்திலும் மற்றுமொரு தருணத்தில் அச்சுறுத்தல் வடிவத்திலும் பொலிஸ் மீது இடம்பெறுகின்ற அரசியல்வாதிகளின் இடையீட்டினை முற்றாகவே முடிவுறுத்துவோம்.

மேலும் ஒரு சிலர் ~~பொலிஸாரை திருத்தவே முடியாது” எனக்கூறுகிறார்கள். எனினும் ஒவ்வோர் உத்தியோகத்தர்களுக்கும் தான் ஈடேற்றுகின்ற கருமத்திலிருந்து வெற்றிப்பெற வேண்டுமென்ற மகத்தான உணர்வு இருக்கின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஏதேனும் விசாரணை ஒப்படைக்கப்பட்டால் அதற்காக மல்லுக்கட்டிக்கொண்டு இறுதிவரை பயணிக்கின்ற உணர்வு பெரும்பாலான உத்தியோகதர்களிடம் இருக்கின்றது. பிரஜையொருவரிடமிருந்து பொலிசுக்கு முறைப்பாடுடொன்று கிடைத்தவிடத்து அந்த பிரஜைக்கு நியாயத்தை வழங்கவேண்டுமென்ற உணர்வு பெரும்பாலானோரிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அனைத்து உணர்வுகளையும் மனிதநேய உணர்வுகளையும் தொழிற்சார் கௌரவத்தையும் ஐஸ் தண்ணீரில் அமிழ்த்தி கொலை செய்திருக்கிறார்கள். பொதுப்பிரஜைக்கு நியாயத்தை ஈடேற்றவேண்டுமென்ற உணர்வைப்போன்றே தமது தொழிலின் மகிமை, தொழிற்சார் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டுவோம். அநீதிக்கு இலக்காக்கி தம்மிடம் வருகின்ற ஒருவருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதன் மூலம் ஏற்படுகின்ற உணர்வினை காசுக்கு வாங்க முடியாது. மனநிறைவினை மீண்டும் ஏற்படுத்துவோம். அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுவில் முன்வைக்கப்பட்டுள்ள அதிருப்திகரமான உணர்வினை மாற்றியமைக்கக்கூடிய மறுமலர்ச்சி யுகமொன்றை அனைத்து அரச நிறுவனங்களிலும் ஏற்படுத்துவோம். எமது சமூகத்தில் உருவாக்கவேண்டிய உளப்பாங்குகளையும் விருப்பு வெறுப்புகளையும் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தல் பற்றிய உணர்வு இல்லாவிட்டால் சிரமங்களை தாங்கிக்கொண்டு தொலைத்தூர பிரதேசங்களிலிருந்து நீங்கள் இங்கு வந்திருக்கமாட்டீர்கள். எவ்வளவுதான் சிரமங்கள் இருந்தாலும் உங்களின் மனிதநேய பண்புகள் இந்த நாட்டு மக்களுக்கு சாதகமான வாழ்க்கையொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பங்காளிகளாக மாறுவதற்காக உங்களைத் தூண்டியுள்ளது. நீங்கள் இங்கு வரும்போது எம்மீது வைத்த நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம் என்பதை உங்களுக்கு உறுதியாக கூறுகிறோம்.

Retiered-Police-Community
Retiered-Police-Community
Retiered-Police-Community
Retiered-Police-Community
Show More

இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் மகா சபை கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்…

(-Colombo, June 06, 2024-) நேற்று (06) பிற்பகல் கொழும்பு Cinnamon Lake ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் (COYLE – Chamber of Young Lankan Entrepreneurs) 2024 ஜூன் மகா சபை கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இதன்போது கலந்துகொண்டிருந்த நபர்களுடன் தொழில் முயற்சிகள் சம்பந்தமாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்ததோடு, தொழில்முனைவோருக்கு தோன்றியுள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

(-Colombo, June 06, 2024-)

நேற்று (06) பிற்பகல் கொழும்பு Cinnamon Lake ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் (COYLE – Chamber of Young Lankan Entrepreneurs) 2024 ஜூன் மகா சபை கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

இதன்போது கலந்துகொண்டிருந்த நபர்களுடன் தொழில் முயற்சிகள் சம்பந்தமாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்ததோடு, தொழில்முனைவோருக்கு தோன்றியுள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Show More

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கும் இலங்கை செந்தாரகை நிவாரணப் படையணி

(-Colombo, June 05, 2024-) இந்நாட்களில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்திருக்கின்ற நிலையில், பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கை செந்தாரகை நிவாரணப் படையணி சேவைகளில் ஈடுபட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் எமது படையணி சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

(-Colombo, June 05, 2024-)

இந்நாட்களில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்திருக்கின்ற நிலையில், பொதுமக்கள் பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இலங்கை செந்தாரகை நிவாரணப் படையணி சேவைகளில் ஈடுபட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் எமது படையணி சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

Show More

ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி

(-Colombo, June 04, 2024-) பல்கலைக்கழக கல்விசாரா பணியாட்டொகுதியினரின் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் பற்றியும் அதன் காரணமாக பல்கலைக்கழக முறைமைக்குள் தோன்றியுள்ள சிக்கலான நிலைமை பற்றியும் இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அரச பல்கலைக்கழகங்களில் 13,000 ற்கு கிட்டிய கல்விசாரா பணியாட்டொகுதியினரால் மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் ஒரு மாதத்திற்கு கிட்டிய காலமாக தொடர்ச்சியான வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான முரண்பாடுகள் அத்துடன் அவை சார்ந்த சிக்கல்கள், […]

(-Colombo, June 04, 2024-)

பல்கலைக்கழக கல்விசாரா பணியாட்டொகுதியினரின் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் பற்றியும் அதன் காரணமாக பல்கலைக்கழக முறைமைக்குள் தோன்றியுள்ள சிக்கலான நிலைமை பற்றியும் இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

அரச பல்கலைக்கழகங்களில் 13,000 ற்கு கிட்டிய கல்விசாரா பணியாட்டொகுதியினரால் மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் ஒரு மாதத்திற்கு கிட்டிய காலமாக தொடர்ச்சியான வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான முரண்பாடுகள் அத்துடன் அவை சார்ந்த சிக்கல்கள், வரிக்கொள்கைகள் காரணமாக தோன்றியுள்ள சிக்கல்கள் முதலியவை இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

அதன் காரணமாக கல்வி அலுவல்கள், பரீட்சை அலுவல்கள், பட்டமளிப்பு வைபவங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக முறைமையின் அனைத்துப் பணிகளும் முற்றாகவே செயலிழந்து போயுள்ளன. இந்த வேலை நிறுத்த நிலைமை திடீரென தோன்றியதொன்றல்ல. 06 மாதங்களுக்கு மேற்பட்ட காலமாக மேற்படி பணியாட்டொகுதியின் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பல்கலைக்கழக ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களின் குழுவினால் தொழில்சார் சிக்கல்கள் சம்பந்தமாகவும் தீர்க்கப்படாத நிலைமையினால் உருவாகியுள்ள நிலைமையைப் பற்றியும் அமைச்சர்களுடனும் நிர்வாகத்துடனும் கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் போன்றே பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இறுதியில் பல்கலைக்கழக கல்விசாரா பணியாட்டொகுதியினர் வேலை நிறுத்தமொன்றுக்கு தள்ளப்படும்வரையில் அது சம்பந்தமாக அவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கவில்லை என்பது புலனாகின்றது.

பல்கலைக்கழகமொன்றின் அடிப்படை நோக்கமானது மாணவர் சமுதாயத்தின் அறிவு மேம்பாட்டுக்கான கல்விச் செயற்பாங்காக அமைந்தபோதிலும் அதனோடு தொடர்புடைய உட்கட்டமைப்பும் வசதிகளினதும் சார்ந்த சேவை வழங்கல்களினதும் பொறுப்பு கல்விசாரா பணியாட்டொகுதியினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முறைமையை இயல்பு நிலையில் பேணிவருவதற்காக இந்த அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கவேண்டியது அத்தியாவசியமாகும். அதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை இடையறாமலும் தரமிக்கதாகவும் பேணிவருவதற்காக கல்விசாரா பணியாட்டொகுதியினரின் சிக்கல்கள் துரிதமாக தீர்க்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. குறிப்பாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பரீட்சை அலுவல்களும் தாமதிக்கின்றமையானது பொருளாதார சிரமங்கள் நிலவுகின்ற இவ்வாறான காலகட்டத்தில் கல்வி அலுவல்களில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்துவது போன்றே பெற்றோர் மீது சுமத்தப்படுகின்ற சுமையையும் அதிகரிக்கின்றது.

இந்த நிலைமையின் கீழ் தோன்றுகின்ற பின்வரும் சிக்கல்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த சபையில் பதிலளிப்பாரென எதிர்பார்க்கிறேன்.

  1. வேலை நிறுத்த செயற்பாட்டிற்கு முன்னர் பல்கலைக்கழக கல்விசாரா பணியாட்தொகுயினரின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின்; அவை ஏன் தீர்வுகளாக அமையவில்லை
  2. வேலை நிறுத்தம் ஒரு மாதகாலமாக நீடித்துச்சென்று ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கைக்கு ஏற்படுத்திய தாக்கம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு புரிந்துணர்வு இருக்கின்றதா?
  3. ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து நிலவுகின்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக இன்றளவில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? அதற்கான காலச்சட்டகம் என்ன?
Show More

மலையகம் 200 – கண்டி

(-Colombo, June 03, 2024-) தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் கண்டி மலையகம் மாநாடு நேற்றைய தினம் (02) கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தின் வரவேற்பு மண்டபத்தில் (கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள்) இடம்பெற்றது. இம்மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், கண்டி மாவட்டத் தலைவர் தோழர் கே.டி.லால் காந்த, தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைப்பின் தேசிய குழு உறுப்பினர், தேசிய […]

(-Colombo, June 03, 2024-)

தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் கண்டி மலையகம் மாநாடு நேற்றைய தினம் (02) கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தின் வரவேற்பு மண்டபத்தில் (கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள்) இடம்பெற்றது.

இம்மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், கண்டி மாவட்டத் தலைவர் தோழர் கே.டி.லால் காந்த, தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைப்பின் தேசிய குழு உறுப்பினர், தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையக மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Show More