Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் – மூன்றாம் நாள்

-Colombo, February 07, 2024- இந்தியாவுக்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (07) குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. பூபெந்திரபாய் பட்டேல் (Bhupendrabhai Patel) அவர்களுடன் காந்திநகரின் கட்டளைப் பேரவையில் (மாநில சட்டவாக்கப் பேரவை) சந்திப்பினை மேற்கொண்டார்கள். மாநிலத்தில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் மாநில நிருவாகச் செயற்பாங்கு சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதன் பின்னர் அந்த மாநிலத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட சந்திப்பு இடம்பெற்றதோடு, இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி […]

-Colombo, February 07, 2024-

இந்தியாவுக்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (07) குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் திரு. பூபெந்திரபாய் பட்டேல் (Bhupendrabhai Patel) அவர்களுடன் காந்திநகரின் கட்டளைப் பேரவையில் (மாநில சட்டவாக்கப் பேரவை) சந்திப்பினை மேற்கொண்டார்கள். மாநிலத்தில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் மாநில நிருவாகச் செயற்பாங்கு சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதன் பின்னர் அந்த மாநிலத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட சந்திப்பு இடம்பெற்றதோடு, இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி மாதிரியாக பாவிக்கப்படுகின்ற “குஜராத் எடுத்துக்காட்டு” (Gujarat Model) பற்றிய சமர்ப்பணமொன்றும் இடம்பெற்றது. வலுச்சக்தி மறுசீரமைப்பு, விவசாயமும் நீரும், உட்கட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்தல், கைத்தொழில் மற்றும் முதலீடு, சுகாதாரப் பாதுகாப்பும் பெண்களுக்கு வலுவளித்தலும் என்பவை இந்த குஜராத் எடுத்துக்காட்டின் பிரதானமான பிரிவுகளாகும்.

அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்கள் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களின் அவதானிப்புச் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

Show More

அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் – இரண்டாம் நாள்

-Colombo, February 06, 2024- இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தின் இரண்டாவது நாளாகிய இன்று (06) புதுடில்லியில் அமைந்துள்ள Observer Research Foundation உலகளாவிய சிந்தனைக் குழு மன்றத்திற்குச் சென்றார்கள். Observer Research Foundation என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதிலும் தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் மதியுரை சேவைகளை வழங்குகின்ற நிறுவனமாகும். அதன் பின்னர் தூதுக்குழுவினர் […]

-Colombo, February 06, 2024-

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் விஜயத்தின் இரண்டாவது நாளாகிய இன்று (06) புதுடில்லியில் அமைந்துள்ள Observer Research Foundation உலகளாவிய சிந்தனைக் குழு மன்றத்திற்குச் சென்றார்கள். Observer Research Foundation என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பதிலும் தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் மதியுரை சேவைகளை வழங்குகின்ற நிறுவனமாகும்.

அதன் பின்னர் தூதுக்குழுவினர் இந்தியாவின் எலெக்ரோனிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பினை (Unique Identification Authority of India) பார்வையிட்டதோடு அதன் பிரதானிகளுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

பின்னர் இன்று (06) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் அஹமதாபாத் நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

Show More

அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழு இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரை சந்தித்தது…

-Colombo, February 05, 2024- இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அணி நேற்று (05) இரவு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் Vinay Mohan அவர்களை சந்தித்தது.

-Colombo, February 05, 2024-

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அணி நேற்று (05) இரவு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு செயலாளர் Vinay Mohan அவர்களை சந்தித்தது.

Show More

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார்

-Colombo, February 05, 2024- இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினையேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு Sardar Patel Bhavan இல் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றியும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித […]

-Colombo, February 05, 2024-

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினையேற்று அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு Sardar Patel Bhavan இல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றியும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Show More

“தேசிய மறுமலர்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள்” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

-Colombo, February 03, 2024- (“பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன்” – தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – பொலநறுவை மாவட்டம் – 2024.02.03) எதிர்காலத்தில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த பிரமாண்டமான பெண்கள் சக்திக்கு முன்னால் வாக்குகளை கோருவதல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி “நான் தோற்றுவிட்டேன்” என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரிடும். எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க இதுவரை தொடர்புபட்டிராத […]

-Colombo, February 03, 2024-

(“பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன்” – தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – பொலநறுவை மாவட்டம் – 2024.02.03)

எதிர்காலத்தில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்த பிரமாண்டமான பெண்கள் சக்திக்கு முன்னால் வாக்குகளை கோருவதல்ல இரண்டு கைகளையும் உயர்த்தி “நான் தோற்றுவிட்டேன்” என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரிடும். எதிர்வரும் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க இதுவரை தொடர்புபட்டிராத பிரமாண்டமான ஒரு சக்தி பெண்களே என்பதை அவர் ஏற்றுக்கொள்ள நேரிடும்.

எமது நாட்டின் சமூகத்திற்காக பெண்கள் பாரிய செயற்பொறுப்பினை ஈடேற்றினாலும் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. அரசியலில் இருந்தும் அவர்கள் விலக்கிவைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது எம்மால் பெண்களை ஒரு சக்தியாக, அமைப்பாக கட்டியெழுப்ப இயலுமானதாகி உள்ளது. பொலநறுவை மாவட்டத்தின் “பெண்கள் சக்தியே” இங்கு இருக்கின்றது. வரலாற்றில் முதல்த்தடவையாக பெண்கள் ஒரு சக்தியாக ஒழுங்கமைந்து சமமான உரிமைகளுடன் முன்வந்துள்ள ஒரு தருணமாகும். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள், சஜித் பிரேமதாசாக்கள் ஒன்றுதிரண்டு வந்தாலும் எதிர்கால அரசியல் வெற்றி தேசிய மக்கள் சக்திக்குரியதாகும். இந்த சக்தியை தோற்கடிக்கவல்ல பிறிதொரு சக்தி இலங்கையில் கிடையாது. 05 ஆந் திகதி ரணில் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க தம்புள்ளைக்கு வருகிறாராம். காணி உறுதிகளை வழங்க பெண்களை பிரிவுவாரியாக சேர்க்கிறார்கள். எமது காணிகள் நி்ர்ணயம் செய்யப்படவில்லை. எமது காணியின்மையைப் பயன்படுத்தி அவர்கள் இடைக்கிடையே உறுதிகளை வழங்குகிறார்கள். உறுதி கிடைக்கின்றது: காணி உரிமை கிடைப்பதல்லை. எமக்கு உறுதிகளை வழங்கினாலும் காணிகளை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கப் போகிறார்கள். அரசாங்கத்திற்குச் சொந்தமான 32 பாற்பண்ணைகளை “இந்தியாவின் அமூல்” கம்பெனிக்கு கொடுக்கப் போகிறார்கள். 32 விவசாயப் பண்கைகளுக்குள் 28,000 ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அத்தகைய ஏமாற்றுவேலையை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரு நாளில் காணி உறுதிகளை வழங்க, அஸ்வெசும வழங்க, குறைந்த வருமானம் பெறுபவர்கள், நுண் நிதிக்கடன் என்றவகையில் குழுக்களைக் கொண்டுவந்து தமது தேர்தல் இயக்கத்தை மேற்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அந்த பழைய விளையாட்டுக்கள் தற்போது செல்லுபடியாகாது என்பதை நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறுகிறோம். அந்த பழைய அரசியலை தோற்கடித்து எந்த தேர்தல் வந்தாலும் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விக்க மக்கள் தீர்மானித்துள்ளார்கள். அந்த தீர்மானத்திற்கு மாபெரும் பக்கபலமாக “பெண்கள் சக்தி” அமைந்துள்ளது. இதுவரைகாலமும் ஒளிந்திருந்த பெண்கள் ஒரு சக்தியாக, திடசங்கற்பத்துடன் முன்வந்து கூறுவது “நீங்கள் எந்த தேர்தலைக் கொண்டுவந்தாலும் “இந்த ஆட்சியாளர்களைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்திட நாங்கள் தயார்” என்பதையாகும்.

நீங்கள் இங்கே வந்திருப்பது சமுர்த்தியை பெறுவதற்காக, அஸ்வெசும அமைத்துக்கொள்ளவதற்காக, காணி உறுதியைப் பெற்றுக்கொள்வதற்காகக அல்ல. 76 வருடங்களாக எமது நாட்டில் நிலவிய ஆட்சி தவறானது, அதனை மாற்றயமைத்திட வேண்டும். மாற்றியமைத்திட நாங்கள் முன்வரத் தயாரென்ற நம்பிக்கையில்தான். நாங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவே விளைகிறோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து அந்த அதிகாரத்தைப் பாவித்து, அந்த அதிகாரத்தைப் பிரயோகித்து எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். உங்களுக்கும் எமக்கும் பாரிய செயற்பொறுப்பு இருக்கின்றது. இந்த கொடிய, திருட்டுக் கும்பலை தோற்கடித்து மக்களின் அரசாங்கமொன்றை ஆண் – பெண் இருசாராருக்கும் சமஉரிமைகள் கிடைக்கின்ற, பெண்களை கௌரவமாக கவனிக்கின்ற சமூகமொன்றை அமைத்திட வேண்டும். அந்த சமூகத்தில் பிரமாண்டமான மாற்றத்தை எற்படுத்திக்கொள்ள எமக்கு புரிந்துணர்வு இருக்கவேண்டும்.

பொருளாதாரரீதியாக அடிமட்டத்திற்கே வீழ்த்திய, வங்குரோத்து நிலைக்குள்ளாக்கிய ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். எம்மெதிரில் இருக்கின்ற சவால்கள் எளிமையானவையல்ல. நிவாரணம் வழங்குவதென்பது பசளையைக் கொடுப்பதோ அல்லது கெரட் விலையைக் குறைப்பதோ அல்ல, ஐயாயிரம் ரூபாவினால் சம்பளத்தை அதிகரிப்பதுமல்ல. வீழ்த்தப்பட்ட நாசமாக்கப்பட்ட பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற சவால் எம்மெதிரில் இருக்கின்றது. இந்த பொலநறுவை மாவட்டம் பெருந்தொகையான கமக்காரர்கள் இருக்கின்ற, நாட்டுக்கு சோறுபோடுகின்ற மாவட்டமாகும். ஆனால் இந்த மாவட்டங்களிலேயே பெருந்தொகையான வறியவர்கள் இருக்கிறார்கள். எமக்கு மனிதர்கள் என்றவகையில் உயிர்வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. நாடு வங்குரோத்து என்பதை ஏற்றுக்கொண்ட ஓர் அரசாங்கம் கோல்ஃபேஸ் அருகில்சென்று கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் பயனில்லை. வங்குரோத்து அடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. எமது பிள்ளைகளின் தலைமீது பாரிய கடன்மேடு இருக்கின்றது. நாடு உலகிற்கு கடன்பட்டுள்ளது. மக்கள் நுண் நிதிக் கடன் சுமையில் இருக்கிறார்கள். கடன் சுமையால் பிழியப்பட்ட மக்களே இருக்கிறார்கள். சனத்தொகையில் பெரும்பாலானோர் மூன்றுவேளை உணவு உண்பதில்லையென அறிக்கைகள் கூறுகின்றன. இப்போது அரசாங்கம் மீண்டும் பதினோராயிரம் மில்லியன் ரூபா கடன்பெற பார்த்துக்கொண்டு இருக்கின்றது. மறுபுறத்தில் வரிச்சுமை ஏற்றப்படுகின்றது. வீழ்த்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்திட வேண்டும். அதற்காக சொத்துக்களை ஈட்டுகின்ற உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கிடவேண்டும். அத்தகைய பொருளாதாரமொன்றை அமைத்திட சேர்த்துக்கொள்ளக்கூடிய பிரமான்டமான சக்திதான் பெண்களின் சக்தி. அதைப்போலவே பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் நியாயமாக பகிர்ந்துசெல்ல வேண்டும்.

எமது பொருளாதாரத்தின் உரிமை எமக்கு கிடையாது. அரசாங்கத்தின் நிதி பற்றிய கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். நாங்கள் எவ்வளவு வரி விதிக்கவேண்டும் வங்கிகளுக்கு அரச நிறுவனங்களுக்கு என்பதை தீர்மானிப்பவர்கள் அவர்களே. நாங்கள் பொருளாதாரரீதியாக சுயாதீனமற்றவர்கள். பொருளாதாரம் வங்குரோத்து என்பதைப்போன்றே சுயாதீனமானதுமல்ல. சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் பலனில்லை. பொருளாதாரரீதியாக சுயாதீனமற்றவர்கள். சமூகரீதியாக சுயாதீனமற்றவர்கள். எமது கொள்கைகளை நாங்கள் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமில்லாத ஒரு நாட்டிலேயே நாங்கள் வசிக்கிறோம். பொருளாதாரத்தை சீரமைக்க மனித வளம் மற்றும் இயற்கை வளம் வேண்டும். தற்போது மனிதவளம் நாட்டைவிட்டுச் செல்கிறது. மறுபுறத்தில் சொத்துக்களை ஈட்டக்கூடிய பெரும்பாலான இயற்கை வளங்கள் இலங்கைக்குச் சொந்தமானதாக இல்லை. அம்பாந்தோட்டை துறைமுகம் டொலர்களை ஈட்டக்கூடிய ஒரு வளமாகும். துறைமுகத்தின் 99 வருடகால உரிமையை ரணில் விக்கிரமசிங்கவே சீனாவுக்கு கொடுத்தார். கொழும்புத் துறைமுகத்தின் ஒரு முனையம் எமக்குச் சொந்தமானது. ஏனையவை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கே சொந்தமானவை. ரெலிகொம் நிறுவனத்தையும் கொடுக்கப் போகிறார்கள். ஒருபுறத்தில் பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்கிறார்கள். மறுபுறத்தில் சுயாதீனத்தன்மையை இழக்கச் செய்துள்ளார்கள். பொருளாதாரத்தை சீர்செய்யக்கூடிய வளங்களை விற்றுவிட்டார்கள். பிரச்சினை பாரதூரமானது. உறுதிகளை வழங்கி, சமுர்த்தியை வழங்கி, அஸ்வெசும வழங்கி அதிலிருந்து விடுபட இயலாது. இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீட்டுக்கவேண்டும். எமக்கு பலமான உறுதியான பொருளாதாரமொன்று தேவை. சுயாதீனமடைய வேண்டும். அடிமைநிலையிலிருந்து விடுபட வேண்டும். அதற்கான தேசிய எழுச்சி தேவை. தேசிய மறுமலர்ச்சி தேவை. அதற்கு தலைமை வகிக்கக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். அதற்கான பொரும்பங்கினை பெண்களாகிய உங்களாலேயே ஆற்றமுடியும். நீங்கள் “ஒரே மூச்சுடன்” என்றால் அந்த சக்தியை தோற்கடிக்க எவருமே கிடையாது.

பொருளாதாரம் மாத்திரமல்ல சமூகமும் சிதைக்கப்பட்டுள்ளது. அரசியல் குப்பையாக்கப்பட்டுவிட்டது. மோசடி, உழல், களவுகள் நிரம்பி வழிகின்றன. திருடாத ஓர் ஆட்சியாளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தகாலத்தில் மக்களை கொலைசெய்கின்ற அளவுக்கு தரங்குறைந்த மருந்துகளைக் கொண்டுவந்தார்கள். விசாரணையின்போது உத்தியோகத்தர்கள் மாட்டிக் கொண்டார்கள். அமைச்சர் கைதுசெய்யப்படவில்லை. அமைச்சர் பதவி மாற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தி திருடனைப் பாதுகாத்தார்கள். பின்னர் அமைச்சு மாற்றப்பட்டது. மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அமைச்சர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றம் றிமாண்ட் பண்ணியது. எனினும் சிறைச்சாலைக்குச் செல்லவில்லை. சுகவீனம் எனக்கூறி சிறைச்சாலை வைத்தியசாலைக்குச் சென்றார். பார்த்தால் அமைச்சர் பதவியை வகித்தவர் ஒரு நோயாளி. நோயாளிகள் எப்படி நாட்டை ஆள்வது. சரியென்றால் அமைச்சுப் பதவிகளை கழற்றவேண்டும். நாங்கள் நோயாளிகளுக்கே அரசாங்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறோம். திருடி அகப்பட்டு றிமாண்டுக்குப் போட்டால் அவர்கள் எல்லோருமே வைத்தியசாலைக்குப் போகிறார்கள். அவர்களின் அரசாங்கங்கள் அவர்களுக்கு தண்டனை வழங்க மாட்டாது. ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தால் தண்டிக்கின்ற அரசாங்கமொன்று கிடையாது. திசைகாட்டியால் மாத்திரமே அவ்வாறான அரசாங்கமொன்றை அமைத்திட முடியும்.

எமது நாட்டில் மனிதம் கிடையாது. பெண்களுக்கு பிள்ளைகளுக்கு வீதியில் செல்ல முடியாது. எல்லா இடத்திலும் போதைப்பொருள். ஒரு நாளுக்கு தொள்ளாயிரம்பேர் கைது செய்யப்பட்டதாக தற்போது நாள்தோறும் செய்திவெளியாகிறது. அப்படியானல் ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம்பேர் பிடிக்கப்படுகிறார்கள். முழு நாடுமே தூள்தானா என நினைக்கலாம். நாட்டின் நெறிமுறைகள் சிதைக்கப்பட்டு, சகோதரத்துவமும் கூட்டுணர்வும் நாசமாக்கப்பட்டுவிட்டது. இந்த குப்பை அரசியலை மாற்றியமைத்திடவேண்டும். தனிப்பட்ட முறையில் எதனையும் எதிர்பாராமல் நாட்டை மாற்றியமைக்கின்ற போராட்டத்தில் தலைமை வகிக்கவும் தயார் என்பதை பெண்களாகிய நீங்கள் எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். இந்த நாட்டின் துன்பம் அனுபவிக்கின்ற இறுதிப் பரம்பரையினராக நாங்கள் அமையவேண்டும். இன்னும் ஒன்பது மாதங்களில் இந்த நாட்டை மாற்றியமைத்திட நாங்கள் தயார். அதற்கு பலம் சேர்ப்பதற்காகவே நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களின் அந்த முயற்சிக்கு நாங்கள் மதிப்புடன் தலைசாய்க்கிறோம். பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்றியமைத்து சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய தேசமொன்றை அமைத்திட வேண்டும்.

எமக்கு புதிய சுதந்திரப் போராட்டமொன்று இருக்கின்றது. இந்த நாட்டின் உரிமையை உண்மையான உரித்தாளிகளின் கைகளுக்கு கைமாற்றவேண்டும். பொருளாதாரத்தை சீரமைத்திட வேண்டும். அடிமைநிலையில் இருந்து மீட்புபெற்று சுயாதீனத்தன்மையை அடையவேண்டும். எமது சிந்தனை மாற்றமடைய வேண்டும். பொதுவில் மக்களைப்பற்றிச் சிந்திக்கின்ற, சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டுமெனச் சிந்திக்கின்ற சமூகமொன்றை அமைக்கவேண்டியது அவசியமாகும். மனிதம் மனித மனங்களில் உதிக்கவேண்டும். அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும். எமது நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுத நாங்கள் தயார். அதற்காக முன்னணி வகிக்க பெண்களாகிய நாங்கள் தயார். அந்த சமூகத்தை சீராக்குகின்ற சக்தியாக எமது சகோதரிகள் ஒன்றிணையவேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது பலத்தை கெட்டியாக்குவொம். மக்களாட்சியை உருவாக்குவோம். 2025 இல் காலடி எடுத்துவைப்பது எமது ஆட்சியின் கீழேயே எனும் திடசங்கற்பத்துடன் நாங்கள் கைகோர்த்திடுவோம்.

“சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்றுசேர்ந்துள்ளோம்.” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

இலங்கையின் தென் மாகாணத்திலிருந்து ஆரம்பித்து முழுநாட்டையும் உலுக்கிய பெண்களின் பலம் இன்று புலதிசிபுரத்திற்கும் வந்துள்ளது. இன்று முழு நாடும் மாத்திரமல்ல முழு உலகுமே இந்த பெண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு தீர்வுக்கட்டமான தருணமாகும்; திரும்பற் புள்ளியாகும். சமூக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வரலாற்றுப் பயணத்திற்காகவே நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். எமது வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற பணியின் பங்காளிகளாக நீங்கள் மாறியுள்ளீர்கள். வரலாற்றில் பெண்களாகிய எங்களின் குரல் ஒடுக்கப்பட்டிருந்தது. எமது வரலாற்றினை எழுத எமக்கு வாய்ப்பு இருக்கவில்லை. நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்களாகிய போதிலும் பெண்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமக்குள் இருக்கின்ற துணிச்சலை நாட்டை மாற்றியமைப்பதற்காக பிரயோகிக்கவுமே இன்று நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம்.

பெண்களின் வாழ்க்கை எந்தளவுக்கு பாதுகாப்பானது, எந்தளவுக்கு அபிமானத்துடன் வாழ்கிறார்கள் என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி நாகரிகமானதா என்பதை அளக்கின்ற அளவுகோலாகும். கடந்த 17 மாதங்களில் 119 தாய் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. எமக்கு குடும்ப சுகாதார சேவகிகள் மூலமாக உன்னதமாக சமுதாய சுகாதார சேவை கிடைத்திருந்தது. வைத்தியசாலைக்கு கிளினிக்கிற்குச் சென்றால் ஒருசதம்கூட செலவிடாமல் உலகில் இருக்கின்ற மிகச்சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இன்று வைத்தியசாலைக்குச் சென்றால் தாதிமார்களும் மருத்துவர்களும் இல்லை. அதைப்போலவே மருந்தும் கிடையாது. பாரிய செலவில் வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இன்று பெண்கள் சுகாதாரத்தைக் கைவிட்டுள்ளார்கள். அது உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டையுமே ஒரேநேரத்தில் சமாளித்துக்கொள்ள முடியாதென்பதாலேயே. எமது சகாதார அமைச்சர் அப்பட்டமாகவே சுகாதாரத்துறையை நாசமாக்கிவிட்டார். பிரபல்யமான திருடன் எனப் பெயர்பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் சிறைவைக்கப்பட்டுள்ளார். அதனை சாதிக்க மக்கள் எவ்வளவுதான் போராட்டங்களை நடாத்தினார்கள்? எவ்வளவு காலம் எடுத்தது? எமது வாழக்கைக்கு அவசியமான அனைத்துத் துறைகளும் சீரழிக்கப்பட்டுள்ளன. கல்வி பாரதூரமான அனர்த்தமாக மாறியுள்ளது. நம்பிக்கையுடன் பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பமுடியாது. தற்போது இளைஞர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றிய நம்பிக்கை கிடையாது. பிள்ளைகளை பாடசாலைகளில் தக்கவைக்க முடியாதென ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒருபோதுமே நிலவியிராதவகையில் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்ல விருப்பமில்லாதவர்களாகி விட்டார்கள். பிள்ளைக்கு கல்விபுகட்டி கரைசேர்க்க முடியுமென்ற பெற்றோர்களின் நம்பிக்கை சிதைவடைந்துவிட்டது.

நாளைய தினம்தான் அவர்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இறுதிநாள். 76 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற வேளையில் இந்த ஆட்சியாளர்கள் பிரசைகளுக்கு எஞ்சவைத்துள்ள எதிர்பார்ப்பு என்ன? அவர்கள் எமது சுதந்திரத்தை நாசமாக்கி இத்தடவை சுதந்திரதின வைபவத்தை மக்களுக்குத் தடைசெய்திருக்கிறார்கள். மக்களில்லாத சுதந்திரக் கொண்டாட்டம் என்ன? நாங்கள் 2025 இல் எமது பிரசைகளின் சுதந்திரத்தை அனுபவிக்கின்ற ஆண்டாக மாற்றுவோம். மக்கள்நேயமுள்ள ஆட்சியில்தான் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அத்தகைய ஆட்சியொன்றை கட்டியெழுப்புகின்ற பணியைத்தான் நாங்கள் தற்போது செய்துகொண்டிருக்கிறோம்.இந்த நாட்டு சனத்தொகையில் 52% பெண்களாவர். இந்த நாட்டில் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் நாட்டுக்காக பாரிய பங்கினை ஆற்றிவருகிறார்கள். ஆடைத்தொழில்த்துறையில் தொழில்புரிந்து, வெளிநாடுகளுக்குச்சென்று, தேயிலைக் கைத்தொழிலில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து டொலர்களை ஈட்டினார்கள். இந்த ஆட்சியாளர்கள் அவற்றை நாசமாக்கினார்கள். கல்வி, சுகாதாரம், போன்ற துறைகளில் பாரிய செயற்பொறுப்பினை பெண்கள் ஆற்றிவருகிறார்கள். எந்தவிதமான சம்பளத்தையும் பெறாத பெண்கள் சமூகப் பணிக்காக பாரிய பங்களிப்பினை நல்கி வருகிறார்கள். பெண்கள் ஆற்றுகின்ற பணிகள் ஈடேற்றப்படாவிடின் இந்த நாடு ஒரு நாள்கூட நிலவமாட்டாது. பிள்ளைகளை வளர்த்தெடுப்பது, பிள்ளைகளின் கல்வியை மேற்பார்வை செய்வது, முதியோரைப் பராமரிப்பது, குடும்ப அங்கத்தவர்கள் சுகவீனமுற்றால் பார்த்துக்கொள்வது இவையனைத்தையும் பெண்களே ஈடேற்றிவருகிறார்கள்.

இந்த பணிகளுக்காக சமூகத்திடமிருந்து கிடைக்கின்ற பெறுமதி என்ன? நீங்கள் சமையலறைக்குள் புரிகின்ற போராட்டம் எமக்குத் தெரியும். இந்த தருணத்திலும் இரவு என்ன சாப்பிடுவது என நீங்கள் சிந்திக்கக்கூடும். நாளைய நாள் பற்றி சிந்திக்கக்கூடும். உங்களுடைய தனித்தன்மையும் உன்னதநிலையும் அதுதான். அந்த முயற்சி மூலமாகத்தான் இந்த நாடு மாற்றமடைகின்றது. எமது வாழ்க்கை வசதியானதாக அமைகின்ற சுதந்திரமாக வாழக்கூடிய சமூகமொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். இதுவரை பொறுத்தது போதுமென இந்நாட்டின் பெண்கள் தற்போது தீர்மானித்துள்ளார்கள். அதைவிட நியாயமானதும் பெண்களுக்கு பெறுமதியளிக்கின்றதும், பெண்களாகிய எமது பலத்திற்கு இடமளிக்கின்ற சமூகமாக மாற்றியப்போமென பெண்கள் தற்போது தீர்மானித்துள்ளார்கள். அதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்குகின்றது. அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளோம். தேர்தல் காலங்களில் எம்மைப் பாவித்து அதிகாரத்திற்கு வந்து எமது வாழ்க்கையை நாசமாக்குவதையே மரபுரீதியான அரசியல் இதுவரைகாலமும் புரிந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவர்களின் அதிகாரக் கருத்திட்டத்திற்காக எம்மை ஈடுபடுத்த இடமளிக்கமாட்டோம் எனும் முடிவினை எடுத்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி செய்துகொண்டிருப்பது வெறுமனே தேர்தல் இயக்கமொன்று மாத்திரமல்ல: நாசமாக்கிய நாட்டை சீர்செய்யவே உங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஏகோபித்த நோக்கத்துடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டால்தான் இந்த நாட்டை சீராக்க முடியும். நீங்கள் அந்த பிரமாண்டமான இயக்கத்தின் பங்காளிகள். இந்த சமூகத்தை மாற்றியமைக்காமல் ஓயமாட்டோம் எனும் திடசங்கற்பத்துடன் நாங்கள் முன்நோக்கி நகர்வோம்.

Show More