தமது வாழ்க்கைக்கு, வேலைத்தலத்திற்கு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உலகம் பூராவிலுமுள்ள இந்துக்களான தமிழ் மக்களுடன் ஒன்றுசேர்ந்து இலங்கைவாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கல் தினம் (15) இன்றைய நாளாகும். புது வருடமொன்றின் தொடக்கம் புதிய எதிர்பார்ப்பின் தொடக்கமென்ற வகையிலேயே கலாசார வாழ்க்கையுடன் தொடர்புபடுகின்றது. அதைப்போலவே அது இதுவரை நிலவிய பழக்கவழக்கங்கள், உளப்பாங்குகளை மேலும் சாதகமானதாக அமைத்துக்கொள்ளல் பற்றிய, வெற்றிகொள்ள இயலாமல்போன சவால்களை வென்றெடுத்தல் பற்றிய எதிர்பார்ப்புகள் புதுவடிவம் பெறுகின்ற தருணமாகும். முந்திய 75 வருடகால பேரிடர்களின் மற்றுமொரு […]
தமது வாழ்க்கைக்கு, வேலைத்தலத்திற்கு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உலகம் பூராவிலுமுள்ள இந்துக்களான தமிழ் மக்களுடன் ஒன்றுசேர்ந்து இலங்கைவாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கல் தினம் (15) இன்றைய நாளாகும்.
புது வருடமொன்றின் தொடக்கம் புதிய எதிர்பார்ப்பின் தொடக்கமென்ற வகையிலேயே கலாசார வாழ்க்கையுடன் தொடர்புபடுகின்றது. அதைப்போலவே அது இதுவரை நிலவிய பழக்கவழக்கங்கள், உளப்பாங்குகளை மேலும் சாதகமானதாக அமைத்துக்கொள்ளல் பற்றிய, வெற்றிகொள்ள இயலாமல்போன சவால்களை வென்றெடுத்தல் பற்றிய எதிர்பார்ப்புகள் புதுவடிவம் பெறுகின்ற தருணமாகும். முந்திய 75 வருடகால பேரிடர்களின் மற்றுமொரு நீடிப்பாக அமைய இடமளியாமல் புதிய வருடத்தை வெற்றிகரமான வருடமாக அமைத்துக்கொள்வதற்காக அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் அதில் தடையேற்படுத்துகின்ற சவால்களை வெற்றிகொள்ள போராட வேண்டி உள்ளது.
புதிய வருடம் புதிய எதிர்பார்ப்புகளையும் புதிய வாய்ப்புகளையும் எமக்கு எடுத்துவந்துள்ளது. பிறந்த தைப்பொங்கல் தினம் மேற்படி புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் புதிய பாதையில் பயணிக்கவும் இலங்கைவாழ் இந்து அடியார்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகின்ற தினமாக அமைய நல்வாழ்த்து தெரிவிக்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.01.15
(தேசிய மக்கள் சக்தியின் கண்டி தொகுதி மாநாடு – 13.01.2024) அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருநாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப்போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தேர்வு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர். மேலும், அநுராதபுரத்தில் […]
(தேசிய மக்கள் சக்தியின் கண்டி தொகுதி மாநாடு – 13.01.2024)
அரசியலில், பொருளாதாரத்தில் மற்றும் மனித வாழ்க்கையில் மாத்திரம் நெருக்கடி இருப்பதில்லை. மக்களின் சிந்தனையிலும் அவ்வாறுதான் இருக்கிறது. நாம் சரியாக அவதானித்தால் கடந்த பாராளுமன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் யார் என்பது புலப்படும். குருநாகலில் ஜோன்ஸ்டன், கண்டியில் மஹிந்தானந்த, இரத்தினபுரியில் சொக்கா மல்லி, களுத்துறையில் ரோஹித அபேகுணவர்தன, அதைப்போலவே, கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்க போன்றோர் தேர்வு செய்யப்பட்டனர். பிரசன்ன ரணதுங்க கப்பம் வாங்கியமைக்காக நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டவர். மேலும், அநுராதபுரத்தில் எஸ்.எம்.சந்திரசேனவும் தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் பலவந்தமாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவர்கள் அல்லர். நாட்டு மக்களின் வாக்குகளாலேயே இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். எனவே, சீரழிவு பொருளாதாரத்தில் மாத்திரமா இருக்கிறது?
எமது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மனித சிந்தனைகள் சீரழிந்திருக்கின்றன. எனவே, எம் கண்ணெதிரே இருப்பது ஓர் அழிவடைந்த தேசமாகும். நாம் ஒரு தீர்வுகட்டமான திருப்புமுனைக்கு வந்துள்ளோம். இந்த ஆட்சியாளர்களினால் இன்று நாட்டில் அரிசி, எரிபொருள் மற்றும் ஔடதங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு தோன்றியுள்ளது. கடன் செலுத்தமுடியாத நாடாக மாறியிருக்கிறோம். வாழமுடியாத ஒரு நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.
சட்டம் அமுலாக்கப்படாத, ஒழுக்கமில்லாத, போதைவஸ்துக்கள் நிரம்பிய மற்றும் குற்றச்செயல்கள் மலிந்த ஒரு நாடே இன்றைய பெறுபேறாக இருக்கிறது. இதே பயணப்பாதையில் சென்று நாம் செத்து மடியப்போகிறோமா? இல்லையென்றால் ஒன்றாக எழுச்சிபெற போகின்றோமா? மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
எம்மிடம் சுலபமான வழியும் இருக்கிறது. அதாவது, எவ்வித பிரச்சினையும் இன்றி எல்லோரும் இதே அழிவுப் பாதையில் சுடுகாட்டை நோக்கி பயணிக்கவும் முடியும். இல்லையென்றால், நாம் திடசங்கற்பத்துடன், ஒன்றாக எழுச்சிபெற வேண்டும். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை நிராகரித்து நாம் எழுச்சி பெறுவோம் என்ற பிரேரணையை முன்வைக்கவே கண்டி நகரில் நாமனைவரும் திரண்டிருக்கிறோம்.
இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து இதைவிட எவ்வாறன பெலென்ஸ் சீட் கிடைக்கப்போகிறது. எந்த துறையில் நாம் வென்றிருக்கிறோம்; எந்த துறையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது; எந்த துறையை பற்றிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று எவராவது கூறமுயுமா? இப்பொழுதும் நீங்கள் விழித்தெழாவிட்டால் இனி ஒருபோதுமே எழுச்சிபெற மாட்டீர்கள்.
-Colombo, January 12, 2024- அரசாங்கம் கொண்டுவரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைவதாகவும் தெரிவித்து அச்சட்டத்திற்கு எதிராக இன்று (12) தேசிய மக்கள் சக்தி அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்கள் மனுதாரராவார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் […]
-Colombo, January 12, 2024-
அரசாங்கம் கொண்டுவரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைவதாகவும் தெரிவித்து அச்சட்டத்திற்கு எதிராக இன்று (12) தேசிய மக்கள் சக்தி அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்கள் மனுதாரராவார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி தோழர் சுனில் வட்டகல உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
-Colombo, January 12, 2024- (பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தின் போது) குறிப்பாக இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டில் நிதி ஒழுகலாறு மற்றும் பொருளாதார நெருக்கடி பற்றி பேசப்படுகிறதுதானே? நாம் நிதி ஒழுகலாறு பற்றி பார்ப்போம். 1300 மில்லியன் ரூபா அதாவது, 13,000 இலட்சம் ரூபா அரசாங்க பொறுப்பு முயற்சிகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எதற்காக? ஸ்ரீலங்கா டெலிகொம் மறுசீரமைப்புக்கான வசதிகளை வழங்குவதற்காக. எனவே, இவ்வாறான மேலதிக ஏற்பாட்டில் 13,000 இலட்சம் ரூபா […]
-Colombo, January 12, 2024-
(பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தின் போது)
குறிப்பாக இன்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டில் நிதி ஒழுகலாறு மற்றும் பொருளாதார நெருக்கடி பற்றி பேசப்படுகிறதுதானே? நாம் நிதி ஒழுகலாறு பற்றி பார்ப்போம். 1300 மில்லியன் ரூபா அதாவது, 13,000 இலட்சம் ரூபா அரசாங்க பொறுப்பு முயற்சிகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எதற்காக? ஸ்ரீலங்கா டெலிகொம் மறுசீரமைப்புக்கான வசதிகளை வழங்குவதற்காக. எனவே, இவ்வாறான மேலதிக ஏற்பாட்டில் 13,000 இலட்சம் ரூபா எவ்வாறு செலவாகியது என்று பாராளுமன்றத்திற்கு கூறவேண்டும். ஏனென்றால், அதனை விற்பனை செய்வதற்காகவா இத்தனை செலவு என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இங்கு நிதி ஒழுகலாறு இருக்கிறதா?
அதே மதிப்பீட்டில் ஜனாதிபதிக்கு மேலதிக செலவினமாக 200 மில்லியன் ரூபா அதாவது, 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக பணத்தொகை ஜனாதிபதிக்கு எதற்காக? வெளிநாட்டு விஜயங்களுக்கு, எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்கான ஏற்பாட்டின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவாகும். எமக்குத் தெரியும் குறைநிரப்பு மதிப்பீடு என்பது வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்த பணத்திற்கு மேலதிக ஒதுக்கீடாகும். ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, வாகனங்களுக்காக, வாகன பராமரிப்புக்காக, வரவு செலவு திட்டத்தில் பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் இந்த செலவு தலைப்பு சுமையென கூறியிருக்கிறோம். தற்போது மேலும் 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது. நிதி ஒழுகலாறை முதலில் ஜனாதிபதி வெளிக்காட்ட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் போதாதென்று மேலதிகமாக பணம் ஒதுக்கப்படுகிறதென்றால் ஜனாதிபதியின் நிதி ஒழுகலாறு எங்கே?
இங்கிலாந்திற்கு 4 தடவைகள், ஜப்பானுக்கு 2 தடவைகள். இப்பொழுது இலங்கையில் மிக நீண்ட விஜயம் மேற்கொள்கிறார். 12, 13 நாட்கள் போகபோகின்றார். 14 மாதங்களில் 14 விஜயங்கள்! வேறு நாட்டின் ஜனாதிபதிகள் இப்படி போயிருக்கிறார்களா? ஒன்று இறந்த வீடு இல்லையென்றால் திருமண வைபவம், இல்லையென்றால், உலகில் தலைவர்கள் வராத மாநாட்டிற்கு சென்று, சுற்றாடல் மாநாட்டிற்கு சென்று, எந்த தலைவர்களும் வராவிட்டால் இவர் உரை நிகழ்த்துவார். அப்படிச் செய்து பாராளுமன்றத்திற்கு மீண்டும் வந்து விமான பயணத்திற்காக 200 மில்லியன் ரூபாவை கேட்கின்றார்.
நிதி ஒழுகலாறு பற்றியும் நிதி உதவி பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், பாடசாலை பிள்ளைகளுக்கு உணவு வேலைக்கான நிதியைக் கொடுக்கவில்லை. எஞ்சிய பகுதி இன்னமும் கிடைக்கவில்லை. பாடசாலை சீருடைக்கு பணம் கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதிக்கு 2000 இலட்சம் ரூபாவை வைத்திருக்கின்றோம். ஆசிரியர்களுக்கு வினாத்தாள்களை சரிபார்ப்பதற்கான கொடுப்பனவு செலுத்தப்படவில்லை. பிரயாணச் செலவுகளை ஏற்று அவர்கள் விடைத்தாள்களை பார்க்க போகின்றார்கள். ஆனால் இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை. ஆனால் ஜனாதிபதிக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு மேலதிக பணத்தொகை ஒதுக்கப்படுகிறது. வரவு செலவில் அவருக்கு சிறிய தொகை ஒதுக்கப்படுவதில்லை. பெரிய தொகையே ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாராளுமன்றதில் ஜனாதிபதிக்கான இந்த செலவு தலைப்பு சுமையென கூறியிருக்கிறோம். அவ்வாறான பெருந்தொகை ஒதுக்கப்பட்ட வேளையிலும் வெளிநாட்டு பயணத்திற்காகவும் வாகனத்திற்காவும் எரிபொருளுக்காகவும் பராமரிப்புக்காகவும் மேலதிகமாக இந்த 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. இது பொதுப்பணம். ஜனாதிபதி சிந்தித்து பார்க்க வேண்டும். பாராளுமன்றம் சிந்திக்க வேண்டும். நாடு படுகுழியிலாம். நாடு சீரழிந்துவிட்டதாம். பாலுக்கு வெட். டீசலுக்கு வெட், பாடசாலை உபகரணங்களுக்கு வெட். சுகாதார உபகரணங்களுக்கு வெட். அவ்வாறு சேகரிக்கின்ற பணத்தை ஜனாதிபதியின் சவாரிக்காக செலவிடுகின்றார்.
மக்களும் பரிசுத்தமான தொழிலதிபர்களும் வரிசெலுத்த தயார். ஆனால், செலுத்தப்படுகின்ற வரிக்கு என்ன ஏற்பட்டுள்ளது? ஜனாதிபதி ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது ஒரு அம்பியுலன்ஸ் பின்னால் வருகிறது. முன்னாள் ஜனாதிபதி விஜேராமவில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது பின்னால் அம்பியுலன்ஸ் வருகின்றது. சுகாதார அமைச்சருக்கு தெரியும்தானே? வைத்தியசாலைக்கே அம்பியுலன்ஸ் இல்லை. நோய் பிண்டங்களா இவர்கள்? இது பொது மக்களின் பணம். இந்தக் கூத்தை வீதியில் செல்கின்ற தொழிலதிபர்கள் காணுகின்றார்கள். பாருங்கள் தலைவர்களின் பின்னால் அம்பியுலன்ஸ் வருகின்றன. எனவே, மக்கள் மீது பாரிய வரிச் சுமையைதானே ஏற்றி வருகின்றீர்கள். மக்கள் அவர்கள் செலுத்துகின்ற வரிக்கு என்ன நேரிடும் என்று சிந்திப்பார்கள். எனவே, உங்களுடைய நிதி ஒழுகலாறு, இந்த பொருளாதார நெருக்கடி என்பதெல்லாம் பொய்க் கதை. நீங்கள் உங்களுடைய சுகபோகத்திற்காக மக்களின் பணத்தை செலவிடுகிறீர்கள்.
நாமல் ராஜபக்ஸ, சித்தப்பா, சின்ன சித்தப்பா, பெரியப்பா எல்லோருமே அரசாங்க வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்பட வேண்டும். மகனும் அரசாங்க வீட்டில் இருக்கிறார். எப்படி மகனுக்கு அரசாங்க வீட்டைக் கொடுக்க முடியும்? பாராளுமன்றத்திற்கு வந்து கூறுங்கள் பார்ப்போம். எனவே, மக்கள் இதற்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நியாயமான வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால், வரிக்கு என்ன நேரிடுகின்றது என்ற கேள்வி இருக்கிறது?
அடுத்ததாக பார்ட்டி போடுவதற்காக சென்றதை அவதானிப்பு சுற்றுலாவுக்குச் சென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் இரவில்தான் போகின்றார்கள். இரவு அவர்கள் எவற்றை அவதானிக்கப் போகிறார்கள் என்று எமக்குத் தெரியும். 20 மீட்டர் தூரத்திற்குத்தான் கண் தெரியும். ஆனால், பொது மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி நெருக்கடி நேர்ந்துள்ள நேரத்திலே இவர்கள் இரவில் அவதானிக்க போகின்றார்களாம். ஆகவே, இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றி இந்தப் பாராளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக, வாகன பராமரிப்புக்காக எவ்வளவு செலவாகிறது? மேலதிகமாக ஏன் இவ்வளவு செலவாகின்றது? டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்காக 1300 மில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு ஏன் சேர்க்கப்படுகின்றது? தனியார் மயமாக்குவதற்காக ஏன் இவ்வளவு தொகை செலவிடப்படுகின்றது? என்பதை பற்றி பாராளுமன்றத்தில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.01.11- நேற்று (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செத்தெம்பர் 15 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது. அமைச்சர் சபாபீடத்தில் சமர்ப்பித்தது பழைய தட்டினையாகும். இதற்கு முன்னர் இந்த வர்த்தமானப் பத்திரிகை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் […]
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.01.11-
நேற்று (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செத்தெம்பர் 15 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது. அமைச்சர் சபாபீடத்தில் சமர்ப்பித்தது பழைய தட்டினையாகும். இதற்கு முன்னர் இந்த வர்த்தமானப் பத்திரிகை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ‘ஒன்லயின்’ சட்டமூலமும் அதனோடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திற்கு கிடையாதென நாங்கள் அது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்போது சட்டத்துறை தலைமை அதிபதி அறிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களினதும் பிரமாண்டமான எதிர்ப்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தோன்றியதால் அரசாங்கத்தின் சார்பில் சட்டத்துறை தலைமை அதிபதி உயர்நீதிமன்றத்திற்கு அதனை அறிவித்தார்.
இதே சட்டம் கடந்த ஏப்பிறல் மாதத்தில் கசெற்றில் வெளியிடப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, செத்தெம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. அது தற்போது மூன்றாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓர் எழுத்தையேனும் திருத்தாமல் செத்தெம்பர் மாதத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் மக்களை தவறாக வழிநடாத்த செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு முரணானது. அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புரைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள மக்களின் இறைமைத் தத்துவத்திற்கு முரணானது. இந்த சட்டத்தின் உள்ளடக்கம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கும் மக்களின் இறைமைத் தத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு உறுப்புரைகளின் ஒவ்வோர் எழுத்திற்கும் முரணானதாகும். அதைப்போலவே சமர்ப்பித்துள்ள பிரிவுகளுக்குள்ளே பயங்கரவாதம் என்பதற்கான பொருள்கோடல் வழங்கப்படவில்லை. எனினும் பயங்கரவாத தவறுகள் பற்றி பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. பயங்கரவாத தவறு என்பதற்கான பல விரிவான தெளிவுபடுத்தல்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக பயங்கரவாதத்தை தூண்டுதலுடன் தொடர்பாகவும், 11 வது பிரிவில் இருந்து சம்பந்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுதல் பற்றியும், 12 வது பிரிவில் பயங்கரவாதம் பற்றியும், ஏனைய பிரிவுகளில் தகவல்களை வழங்குதல் மற்றும் தவறவிடுதல் என்றவகையிலும் பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இங்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிரிவும் உள்ளடங்குகின்ற விதத்தில் குற்றவியல் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறோம். அதபை்போலவே தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றங்கள் சம்பந்தமான சட்டங்களுடனும் தொடர்புடைய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 19 வது பிரிவின் பொருள்கோடல் மூலமாக பிடியாணையின்றி கைதுசெய்வதற்கான அதிகாரம் எந்தவொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எந்தவொரு முப்படை உத்தியோகத்தருக்கும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மின்சாரசபை ஊழியர்கள் அண்மையில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற வேலைத்தளங்களில்கூட முன்னெடுக்கின்ற நியாயமான ஆர்ப்பாட்டங்களுக்கும் இடமளிக்காதிருக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுப்பவர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்தலுடன் ஏற்புடைய ஏற்பாடுகள் இதில் இருக்கின்றன. நாட்டின் சனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்துவைப்பதற்கான கட்டளையை விடுக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
புனர்வாழ்வு அதிகரசபை சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கான சட்டம், ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர செயலாற்றுகின்ற அரசாங்கம் அந்த சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற, நியாயமான மக்கள் எதிர்ப்புகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ரணில் ராஜபக்ஷ ஜுன்டா இந்த தேர்தல் வருடத்தில் மேலும் ஒருநாளாவது அதிகாரத்தில் இருப்பதற்காக இந்த சட்டங்களை ஆக்கி வருகின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இந்த பயணத்தைத் தொடர நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்த சட்டங்களை அங்கீகரித்துக்கொண்டால் நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் வீழ்த்திய கெஹெலிய ரம்புக்வெல்ல அப்பாவி எனக் கூறுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த ஈனியா சட்டத்திற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பிப்போம். இந்த படுமோசமான சட்டத்தை தோற்கடிப்பதற்காக நாங்கள் நாட்டின் எல்லா இடங்களிலம் முனைந்து செயலாற்றுவோம்.
“அநீதியான சட்டங்கள் எனும் இரும்புச் சப்பாத்தினை பாவித்து மக்களின் மூச்சினை இறுக்க முடியுமானால் இந்த அரசாங்கம் அதனையும் செய்ய முனைகிறது.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சமிலா குலசேகர-
மாத்தறை பெண்களின் பலம், காலி பெண்களின் பலம் மற்றும் கம்பறா நைவலவில் நடைபெற்ற இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் பலத்தை அரசாங்கம் கண்டது. அரசாங்கம் அதனாலேயே பதற்றமடைந்தள்ளது. வருங்காலத்தில் கம்பஹாவை உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் பெண்களின் பலத்தை அரசாங்கம் கண்டுகொள்ள முடியும். தேசிய மக்கள் சக்தியுடன் பொதுமக்கள் ஒன்றுசேர்கின்ற விதத்தைக் காண்கின்ற அரசாங்கத்திற்குள்ள ஒரே மாற்றுவழி ஈனியா பங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற சட்டங்களை அங்கீகரித்துக் கொள்வதே என அவர்கள் சிந்தித்து வருகிறார்கள். மனிதர்கள் என்றவகையில் எமக்கு தற்போது எஞ்சியுள்ளது சுதந்திரமாக மூச்செடுப்பது மாத்திரமே. அநீதியான சட்டங்கள் எனும் இரும்புச் சப்பாத்தினை பாவித்து மக்களின் மூச்சினை இறுக்க முடியுமானால் இந்த அரசாங்கம் அதனையும் செய்ய முனைகிறது.
பயங்கரவாதத்தை தடுப்பதாகக் கூறிக்கொள்கின்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால் பயங்கரவாதம் நிலவவேண்டும். தேசிய மக்கள் சக்தியுடன் எழுச்சிபெறுகின்ற மக்களே இந்த அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள்போல தெரிகின்றது. இந்த சட்டமூலத்தின் 62 வது பிரிவிற்கிணங்க வழக்கு விசாரணை நிறைவடையும்வரை பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் அனுமதியுடன் தடுத்து வைக்கலாம். அவசியமெனில் தடுத்துவைத்தல் சட்டத்தை அமுலாக்குகின்ற அதிகாரத்துடன் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சேர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஈனியா சட்டங்கள் தொடர்பாக நாங்கள் குறைவாக மதிப்பிடலாகாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளவே இந்த சட்டங்கள் மூலமாக எதிர்பார்க்கிறார்கள். இந்த சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கக்கூடியவர்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை 81,82 பிரிவுகளின்கீழ் சனாதிபதிக்கும் வழங்கத் தயாராகி வருகிறார்கள்.
அதைப்போலவே மனிதர்கள் இருக்கவேண்டிய இடத்தை தீர்மானிக்கின்ற அதிகாரத்தையும் சனாதிபதி பெற்றுக்கொள்ள தயாராகி வருகிறார். “எவ்விதத்திலேனும் வதிகின்ற இடத்திற்கு வெளியில் நடமாடித் திரிவதையும் சனாதிபதியால் கட்டுப்படுத்த முடியும்.” அதைப்போலவே வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்தவும், கைது செய்யவும், இடம்பெயர்வதை மட்டுப்படுத்தவும், வதிகின்ற இடத்திலும் தொழில்புரிகின்ற இடத்திலும் இருந்து வெளியில் செல்வதை மட்டுப்படுத்தவும், குறித்துரைத்த ஆட்களுடன் தொடர்பாடல் தொடர்புகளை பேணிவருவதை மட்டுப்படுத்தவும் அதிகாரங்களை சனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த நாட்டு மக்கள் நடமாடுகின்ற இடங்கள், உண்கின்ற இடங்களை மட்டுப்படுத்துவதைத் தவிர நிறைவேற்று சனாதிபதிக்கு வேறுவேலை கிடையாதா?
இந்த ஈனியா சட்டங்களின் ஒரே நோக்கம் சனநாயகரீதியாக எழுச்சிபெறுகின்ற மக்களின் குரலை அடக்குவதாகும். தொழிற்சங்க செயற்பாடுகளை இல்லாதொழிப்பதும் ஒரே குறிக்கோளாகும். இவ்வாறான அநீதியான சட்டங்களுக்கெதிராக குரல்கொடுக்க தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கான சனநாயகரீதியான இடவசதியை சுருட்டுவதாயின் அந்த இடத்தில்தான் அரசாங்கமொன்றின் சரிவு இருக்கின்றது. எனினும் அபிவிருத்தி நலிவடைவதை தடுப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிப்பதாகவே அவர்கள் இந்த சட்டம் மூலமாகக் கூறுகிறார்கள். தேசிய அபிவிருத்தியை நலிவடையச்செய்த பொருளாதாரக் கொலைஞர்கள் யாரென உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நாங்கள் நேர்மையாக. சனநாயகரீதியாக இந்த அநீதியான சட்டங்களைத் தோற்கடித்திட முன்வருவோமென்பதை வலியுறுத்துகிறோம்.
“ஆபத்தினை முன்கூட்டியே கண்டு அதற்கெதிராக மக்களை அணிதிரட்டுவதே எமது பொறுப்பாகும்…”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார-
இந்த பயங்கரவாத சட்டம் பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டினோம். சட்டத்தின் ஆட்சி பற்றி நாங்கள் பேசும்போது “அவற்றை நாங்கள் தின்னப்போகிறோமா?” என ஒருசிலர் கேட்டார்கள். எனினும் அவர்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட வேளையில் தான் அவர்களுக்கு சனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் ஞாபகத்திற்கு வரும். மக்களுக்கு வரப்போகின்றஆபத்தினை முன்கூட்டியே கண்டு அதற்கெதிராக மக்களை அணிதிரட்டுவதே எமது அரசியல் மற்றும் சமூகப் பொறுப்பாகும்.
இலங்கையில் சாதாரணமாக குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கக்கூடிய பல தவறுகள் பயங்கரவாத தடுப்பு எனும் பெயரில் வருகின்ற இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திடமிருந்து அதிகளாவிலான தத்துவங்கள் அதன்மூலமாக நீக்கப்பட்டு நிறைவேற்று சனாதிபதியிடம் எடுத்துக்கொள்ள அல்லது அவருக்கு உடைமையாக்கிக்கொள்ள தயாராவதே அதற்கான அடிப்படைக் காரணம். சரவ்தேசரீதியாக எடுத்துக்கொண்டால் இரண்டு அடிப்படை நோக்கங்களை நிறைவுசெய்த பின்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். மரணத்திற்கு காரணமாக அமைகின்ற கடுமையான சேதங்கள் அல்லது பணயக் கைதியாக எடுத்தலே அத்தகைய நோக்கங்களாகும். அடுத்தது அரசாங்கத்தை அல்லது மக்களை திகிலடையச் செய்விப்பது, பயமுறுத்துவது, சர்வதேச நிறுவனங்களுக்கு எதையேனும் புரியுமாறு அல்லது புரியாதிருக்குமாறு நிர்ப்பந்தித்தல் அதில் இரண்டாவது செயலாகும். பயங்கரவாதச் செயல் என்பது இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவுசெய்வதாகும்.
எனினும் இதில் உள்ளடக்கியுள்ள விரிவான வரைவிலக்கணங்கள் மூலமாக அரசாங்கம் எதிர்பார்ப்பது மக்கள் அபிப்பிராயமற்ற அரசாங்கத்திற்கெதிராக சிவிலியன்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அடக்கவும் பயமுறுத்தவும் முயற்சிசெய்வதாகும். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்பினை நடாத்துதல், போஸ்ற் ஒன்றைப் போடுதல், துண்டுப்பிரசுத்தை விநியோகித்தல் முதலியவற்றையும் பயங்கரவாத வெளியீடுகளாக பெயர்குறித்து பணிப்புரை வழங்கவும் முடியும். “நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம்” மற்றும் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” ஆகிய இரண்டு சட்டங்களையும் ஒன்றாக நிறைவேற்றிக் கொள்வதன் நோக்கமாக அமைவது தும்மினாலும்கூட அரசுக்கெதிரான பயங்கரவாதச் செயலென குறிப்பிட இயலும். யுத்தம் முற்றுப்பெற்று பயங்கரவாதம் இல்லாத காலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவது ஏன் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியலுக்கு தடையேற்படுத்துகின்ற நோக்கத்துடனேயே இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. நீதின்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்ப்பட்ட தேசபந்து தென்னக்கோன் போன்ற ஒருவரை பதில் பொலீஸ் மா அதிபராக பெயர்குறித்தல் போன்ற விடயங்களுடன் சட்டத்தை கருத்திற்கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனும் அநீதியான செயற்பாடுகளுடனும் இணங்குகின்ற ஒருசில உத்தியோகத்தர்கள் இருப்பார்களாயின் “நீங்கள்தான் பயங்கரவாதிகள்” எனஎம்மால் அவர்களுக்கு கூறமுடியும். பயங்கரவாதியாக மாற அரசாங்கத்திற்கு லயிஷன் கொடுக்க முனைகின்ற சட்டமாவே நாங்கள் இதனைக் காண்கிறோம். அதனைத் தோற்கடிப்பதற்காக பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், வீதியிலும் நாங்கள் போராடுவோம். அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.
-Colombo, January 05, 2024- இன்றளவில் எமது நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான பிரச்சினை தாங்கமுடியாத வகையில் பொருட்களின் விலை அதிகரித்தலாகும். குடும்பப் பெண்கள், எமது தாய்மார்கள் பொருட்களின் விலையேற்றத்தை அதிகமாக உணர்கிறார்கள். முழு நாட்டிலும் இருக்கின்ற பெண்களைச் சுற்றி பற்றியெரிகின்ற குடும்பங்களின் தீயினை ஆட்சியாளர்கள் கடுகளவேனும் உணரவில்லை. 2024 ஆம் ஆண்டு பிறக்கையில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் சாயலையே ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நாளைய தினத்தில் வாழ்வது எவ்வாறு, வற் வரிக்கு தாக்குப் பிடிப்பது எவ்வாறு எனும் […]
-Colombo, January 05, 2024-
இன்றளவில் எமது நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான பிரச்சினை தாங்கமுடியாத வகையில் பொருட்களின் விலை அதிகரித்தலாகும். குடும்பப் பெண்கள், எமது தாய்மார்கள் பொருட்களின் விலையேற்றத்தை அதிகமாக உணர்கிறார்கள். முழு நாட்டிலும் இருக்கின்ற பெண்களைச் சுற்றி பற்றியெரிகின்ற குடும்பங்களின் தீயினை ஆட்சியாளர்கள் கடுகளவேனும் உணரவில்லை. 2024 ஆம் ஆண்டு பிறக்கையில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் சாயலையே ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நாளைய தினத்தில் வாழ்வது எவ்வாறு, வற் வரிக்கு தாக்குப் பிடிப்பது எவ்வாறு எனும் பாரிய அதிர்ச்சி அனைவருக்குமே இருந்தது. செய்தித்தாளில் ஒருபக்கத்தில் புதுவருட நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறு பக்கத்தில் சனவரி மதலாந் திகதியன்றே வற் வரி விதிக்கப்படுகின்ற விதமும் இருந்தது. ” 97 வகையான பண்டங்களுக்கு புதிதாக வற் வரி விதிக்கப்படுகின்றது, டீசல், பெற்றோல், எரிவாயுவுக்கும் வற் விதிக்கப்படுகின்றது, அதனால் பணவீக்கம் அதிகரிக்கின்றது” போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. தாய்மார்கள் பட்டினியுடன் இருந்து பிள்ளைகளுக்கு ஒன்றுவிட்டு ஒருவேளையேனும் உணவு கொடுக்கத் தூண்டப்படுகின்ற அளவுக்கு துன்பந்தருகின்ற பணவீக்கமே நிலவுகின்றது. பிள்ளைகளின் துயரங்கள், பெண்களின் துயரங்கள் , வாழ்க்கைச் சுமையை அரசாங்கத்தினால் அமைச்சர்களால் உணரமுடியாது.
மக்களின் வருமானம் ஒரு ரூபாவினால்கூட உயரவில்லை. அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 10,000/- அதிகரிப்பதாகக் கூறினாலும் ஏனைய மக்கள் அனைவர்மீதும் சுமத்தப்படுகின்ற வற் வரிச் சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது? 2024 வரவு செலவினை நிறைவேற்றிக்கொள்ள வாக்குகளை அளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகள்போல் தாவத்தொடங்கி உள்ளார்கள். எனினும் அவர்கள் அங்கீகரித்துக்கொடுத்த வரவுசெலவின்படி பண்டங்கள் மற்றும் சேவைகள்மீது இவ்வருடத்தில் 2235 பில்லியன் ரூபாவை அறவிட்டுக்கொள்ள தயாராகி வருகிறார்கள். இதுவரை 15% ஆக நிலவிய வற் வரியை 18% வரை அதிகரித்து மேலும் 97 வகையான பண்டங்கள் மற்றும் சேவைகளை புதிதாக சேர்த்து ஒரேயடியாக 18% வரியை விதித்ததன் மூலமாக இந்த 2235 பில்லியன் ரூபாவை அறவிட்டுக்கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இந்த வரி விதிக்கப்படுவது நாட்டின் அபிவிருத்திக்காகவல்ல.
சனவரி மாதத்தில் இருந்து ஒருவர் மாதத்திற்கு 38,000 ரூபா கடன் வட்டியை செலுத்தவேண்டி நேரிட்டுள்ளதென பேராதனை பல்கலைக்கழக பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டி உள்ளார். அபிவிருத்தியின் மறைவில் இருந்துகொண்டு கடன்வாங்கி கொள்ளையடித்தமையாலேயே நாங்கள் செலுத்துகின்ற வரியிலிருந்து இவ்வளவு பெருந்தொகையான கடன்வட்டியை செலுத்தவேண்டி நேரிட்டுள்ளது. அரசாங்க வருமானத்தின் 93% ஐ வரி ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயலாற்றி உள்ளது.
இவ்விதமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பண்டங்கள் மீது வரி விதித்து மக்களுக்கு புல்லை சாப்பிடுமாறா கூறுகிறார்கள்? எமது நாட்டு மக்கள்மீது வரிவிதித்து களைத்துப்போகச் செய்வித்து, துன்புறுத்தி, மௌனிகளாக்கி வைக்க அரசாங்கம் தயாராகி வந்தாலும் மக்கள் அதற்குத் தயாரில்லை. தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் ஊர்ஊராகச் சென்று பொருளாதார கொலைஞர்கள் யாரென மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். இந்த வரியை சேகரித்ததும் எமது நாட்டின் போசாக்கின்மைக்கு கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்தச்சோகைக்கு என்ன நேரிடும்? பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றது. எமது தாய்மார்களின் வயிற்றைக் கட்டிக்கொள்ளுமாறு கூறுகின்ற ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான சுகபோகங்களையும் அனுபவித்து வருகிறார்கள். அந்த முறையியலை மாற்றியமைத்து பொருளாதாரக் கொலைஞர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான காலம் தற்போது எமக்கு பிறந்துள்ளது. பொருளாதாரக் கொலைஞர்கள் கட்சி தாவிக்கொண்டு ஆடைகளை மாற்றிக்கொண்டு ஆட்சிக்குவர தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை மாற்றியமைத்திட பெண்களாகிய எம்மிடம் துணிச்சல் மாத்திரமே எஞ்சியுள்ளது. இந்த துணிச்சலுடன் புதிய தேசமொன்றைக் கட்டியெழுப்பிட தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
“ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எம்மீது தொடர்ச்சியாக சுமத்துகின்ற இந்த சுமையை தொடர்ந்தும் மௌனமாக தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.”
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விராய் கெலீ பல்தசார்–
புதுவருட நல்வாழ்த்து அனுப்பிவைக்கப்படுகின்ற காலத்தில் எமக்கு குறுந்தகவலாக கிடைத்ததோ பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு பற்றிய செய்தியாகும். அதனூடாக இந்த வருடத்தை நலமானதாக அமைத்துக்கொள்ள எவ்வாறு அணிதிரள்வது என்பதைத்தான் நாங்கள் கலந்துரையாட வேண்டியுள்ளது. வற் வரி அதிகரிக்கப்பட முன்னர் குடித்தொகை, புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் 60.5% வீடுகளின் மாதாந்த வருமானம் வீழ்ச்சியடைந்து எமது 91% வீடுகளின் மாதாந்த செலவுகள் அதிகரித்துவிட்டன. இந்த புள்ளிவிபரத் தரவுகளில் 91% எனக் கூறினாலும் நூற்றுக்கு நூறுவீதமான வீடுகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. 03 – 21 வருட வயதிற்கிடைப்பட்ட எமது பிள்ளைகளின் கல்வி 54.9% ஆல் வீழ்ச்சியடைய பொருளாதார நெருக்கடி ஏதுவாக அமைந்துள்ளதென மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாட கூலியைப் பெறுகின்றவர்கள் இன்றும் ரூபா 1500/- – 2000/- இற்கு இடையிலான வருமானத்தையே பெறுகிறார்கள். மேலும் சிலர் நாளொன்றுக்கு ரூபா 1000/- இற்கும் குறைவான வேலையையே செய்துவருகிறார்கள். நூளொன்றில் ரூபா 2000/- வீதம் பெற்றாலும் முழுமாதத்திற்குமே கிடைப்பது ரூபா 60,000/- மாத்திரமே. லயிற் பில், தண்ணீர் பில் போக்குவரத்து பில் என்பவற்றைத் தாங்கிக்கொண்டு எவ்வாறு உணவைக்கூட எவ்வாறு பெற்றுக்கொள்வது? பிள்ளைகளும் பெற்றோர்களும் இருக்கின்ற குடும்பங்களில் இந்த ரூபா 60,000/- உயிர்வாழப் போதாதென்பதால் பாட்டிமார்களும்கூட வேலைதேடிச் செல்கிறார்கள்.
எமது மனைப்பெண்கள், பெண்கள், குடும்ப அமைப்பு அத்தகைய நெருக்கடிக்குள் இருப்பதோடு திடீரென நோயுற்றால் அரசாங்க வைத்தியசாலையில்கூட செய்துகொள்ள முடியாத பரிசோதனைகளை தனியார் துறையில் செய்துகொள்ள வேண்டும். மருந்துகளை விலைக்குவாங்க வேண்டும். இதனால் வருடத்தின் பின்னரைப்பகுதியில் தங்க ஆபரணங்களை அடகுவைத்து கடன்பெறுதல் பெருமளவில் அதிகரித்துள்ளது. முன்னர் தங்க நகைகளை அடகுவைத்து கடன்பெற்றது அவசரத் தேவைகளுக்காகவே. ஆனால் தற்போது அன்றாட உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக, லயிற் பில் கட்டுவதற்காக அடகுக்கடன் பெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பாடசாலைத் தவணையை புதிதாக தொடங்கும்போது புதிய புத்தகப் பட்டியலுக்கு ரூபா இருபதாயிரம் தொடக்கம் இருபத்தையாயிரம்வரை பணத்தை செலவிட நேர்ந்துள்ளது. இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்கள் இந்த சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது? எமது குடும்பங்களில் உடல்ரீதியான அழுத்தத்திற்கு, உளரீதியான அழுத்தத்திற்கு இலக்காகி குடும்ப உறவுகளைப் பேணிவருவதும் சிக்கலாக மாறியுள்ளது. சமூக உறவுகள் முற்றாகவே சிதைவடைந்துவிட்டன. சேகரிக்கப்படவேண்டியபோதிலும் சேகரித்துக் கொள்ளப்படாத வரி 900 பில்லியன் ரூபாவை விஞ்சியுள்ளதென ஒருசில அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. சாதாரண பொதுமக்கள் மீது புதிதாக வற் வரி விதிப்பது இதோ இந்த விதத்தில் ஊழல், திருட்டு, மோசடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள இடமளித்துள்ள பின்னணியிலேயே ஆகும். தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் முழுநாட்டினதும் பெண்களாகிய நாங்கள் நாட்டின் பெண்களை உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வூட்டி முன்நோக்கி நகர்கின்றோம். தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அச்சமின்றி இந்த பயணத்தை தொடர வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். மகிழ்ச்சி என்பது எமது உரிமையாகும். ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எம்மீது தொடர்ச்சியாக சுமத்துகின்ற இந்த வரிகளை மௌனமாக இனிமேலும் தாங்கவேண்டியதில்லை.
“சர்வதேசத்திற்கு ஐ.எம்.எஃப். இற்கு மெஜிக் காட்டி மகிழ்விக்கின்ற அடிப்படையில் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.“
–தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–
ஒரு நாட்டின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்துகையில் கவனத்திற் கொள்ளவேண்டிய சில அடிப்படை விடயங்கள் உள்ளன. நியாயமானதாக அமைதல், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக அமைதல், வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமுலாக்குதல், முறைகேடுகள் குறைவடையத்தக்கதாக அமுலாக்குதல் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றவகையில் அமைதல் வேண்டும். இந்த எந்தவிதமான கோட்பாடும் இன்றளவில் எமது நாட்டில் அமுலில் இல்லை. இன்றளவில் மிகவும் அநீதியானவகையில் அமுலாக்கப்பட்டுள்ள வரிக்கொள்கையின் அடிப்படையில் வற்வரி விதிக்கப்பட்டுள்ளது. இற்றைக்கு இரண்டு வருடங்களாக அமுலில் உள்ள பொருளாதாரத்தைச் சுருக்குகின்ற கொள்கைக்குள் மக்களின் கொள்வனவு ஆற்றல் முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான ஆற்றல் மக்களுக்கு முடக்கப்பட்டு பயணிக்கின்ற இந்த பயணம் மக்களின் பக்கத்தில் அல்ல. இன்றளவில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இந்த அரசாங்கம் வரி மற்றும் பொருளாதாரம் பற்றி சிந்திப்பது கணக்குகளை இணக்கஞ்செய்யும் பக்கத்தில் இருந்து மாத்திரம்தான். பொருளாதாரம் இறுதியாக தாக்கமேற்படுத்துகின்ற மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பிரசைகள் பற்றி எந்தவிதமான கரிசனையும் கிடையாது. மனிதர்களும் வெறுமனே புள்ளிவிபரங்கள் மாத்திரமே என ஆட்சியாளர்கள் நினைப்பார்களாயின் அத்தகைய ஆட்சியாளர்கள் இவ்விதமான பொருளாதார தீர்மானங்களைத்தான் எடுப்பார்கள். இந்த அரசாங்கத்திற்கு மனிதர்கள் அல்லது மனிதர்கள் உயிர்வாழ்வது பற்றி எந்தவிதமான ஏற்புடைமையும் கிடையாது. சர்வதேசத்திற்கு ஐ.எம்.எஃப். இற்கு மெஜிக்காட்டி மகிழ்விக்கின்ற அடிப்படையில் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
புதிதாக விதித்த வரி காரணமாக மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதைப்போலவே ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்படுகின்றது. எல்லாவற்றையும் வெட்டிவிட்டு ஆகக்குறைந்ததில் சீவிப்பது பற்றியே எல்லோரும் சிந்திக்கிறார்கள். தேங்காய் சம்பலுக்ககு வெங்காயம் போடுவது எப்படியென மனைப்பெண்கள் சிந்திப்பது போன்றே பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களும் சிந்திக்கிறார்கள். இதுவரை பெற்றோர்கள் “என்ன செய்யாவிட்டாலும் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்” என நினைத்தார்கள். ஆனால் இன்றளவில் பிள்ளைகளை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். எப்படியாவது வருமானத்தை தேடிக்கொள்ளும் இடத்திற்கு 15 – 16 வயதுடைய பிள்ளைகள் வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள். மக்களின் அன்றாட அழுத்தங்கள் பற்றி எந்தவிதமாக கூருணர்வுமற்றவர்கள் என்பது அவர்கள் சொல்கின்ற செய்கின்றவற்றிலிருந்து தெளிவாகின்றது.
மாற்றீடு கிடையாதென சனாதிபதி கூறுகின்ற கதை அயோக்கியத்தனமான கதையாகும். எந்தவொரு பிரச்சினைக்கும் மாற்றீடு இருக்கின்றது, பதில் கிடைக்கின்றது. எந்த மாற்றீட்டினை தெரிவுசெய்வது என்பது தீர்மானிக்கப்படுவது நாங்கள் வகிக்கின்ற கருத்தியல் மற்றும் மக்களுடன் நிலவுகின்ற தொடர்பின் அடிப்படையிலாகும். மக்கள் மீது சுமையேற்ற வேண்டுமென்ற முடிவினை ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின்கீழ் நியாயமான வரித்திட்டமொன்றை உருவாக்குதல், வரி காரணமாக பொருளாதாரம் சுருங்காமை மற்றும் வரிமுறைமையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமுலாக்குவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாவனையாளரிடமிருந்து அறவிடப்படுகின்ற வற் வரி அதேவிதத்தில் திறைசேரியை சென்றடைகின்றதா என்பதை ஆராய்வதற்கான முறையியல்கள் இருக்கின்றனவா? மக்களை வரிச்சுமையால் பிழிந்தெடுத்தபோதிலும் அந்த வரியை திறைசேரிக்கு எடுப்பதற்கான தொழில்நுட்பம் அமுலாக்கப்படவில்லை. தொடர்ந்தும் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வது பற்றி மாத்திரமே அவர்கள் சிந்திக்கிறார்கள். இந்த நாட்டுப் பெண்கள் துணிச்சல்மிக்க, திராணியுள்ளவர்கள் என்பதை வரலாற்றுக்காலம் பூராவிலும் நிரூபித்துள்ளார்கள். எமது நாடு அபாயநேர்வினை சந்தித்த எல்லாவேளைகளிலும் பெண்கள் முன்னணிக்கு வந்துள்ளார்கள். மீண்டும் அத்தகைய தருணமொன்று வந்துள்ளது. பெண்களாகி நாங்கள் தலைமைத்துவம் பெறவேண்டும். மேலும் ஒழுங்கமைந்து இந்த வருடத்தில் மூர்க்கத்தனமான ஆட்சியை முடிவுறுத்துவதற்காக முனைப்பாக முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளக்கான பதில்கள்…
கேள்வி: வற்வரியை சில காலத்திற்காக விதித்துள்ளதாக சனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் கூறுகின்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பதில்: எமது நாட்டில் வரிக்கொள்கை குறைந்த இடைவெளியில் மாற்றப்படுகின்றது. அவ்வாறு மாற்றுவதே ஒரு பிரச்சினையாகும். நிலையான வரிக்கொள்கையொன்று இல்லாமை பாரிய பிரச்சினையாகும். மறுபுறத்தில் வரி அறவிட்டு பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. வரி என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வருமானத்தை சேகரிக்கின்ற ஒரே மார்க்கம் வரியெனில் அந்த பொருளாதாரத்தினால் கரைசேர முடியாது. கடன் சுமை மற்றும் பொருளாதாரம் சுருங்குதல் ஆகிய இரண்டு பிரதான சிக்கல்களை நாங்கள் எதிர்நோக்கிஇருக்கிறோம். வருமானத்தை தேடுகின்ற ஒரே மார்க்கம் வரி என நினைப்பதாயின் அதைப்போன்ற முட்டாள்த்தனமான சிந்தனை வேறோன்றும் கிடையாது.
கேள்வி: வயது 18 வருடங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி அறவிடுவதற்கான பின் இலக்கமொன்று வழங்கப்பட வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படுகின்ற பிரதிவிளைவுகள் என்ன?
பதில்: பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு இலக்காகியுள்ள வேளையில் மக்கள் ஒரு திட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளவேண்டிய திட்டமொன்று அரசாங்கத்திற்கு இருக்கின்றது. தொடர்ச்சியாக தலைக்கனத்தை வெளிக்காட்டுகின்ற அரசாங்கத்தினால் மக்களை ஒன்றுசேர்த்துக்கொண்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஒட்டுமொத்தமாக டெக்ஸ் பைஃல் ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடிந்தபோதிலும் எமது நாட்டுக்கு அதனை அறிமுகஞ் செய்வது மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் குழப்பியடித்து துன்பத்தில் ஆழ்த்தியுள்ள பின்னணியிலாகும்.