(அதிட்டன (திடசங்கற்பம்) முப்படையினர் கூட்டமைவு – ஜாஎல தொகுதி சந்திப்பு 27.01.2024) இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அழுகி துர்நாற்றம் வீசுகின்ற இந்த சிஸ்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனை தனிநபரால் மாத்திரம் செய்ய முடியாது. கோட்டாபய வந்தால் நாட்டை முன்னேற்றிவிடுவார் என்று வாய்ச்சவடால் விட்டார்கள். நாட்டைக் கட்டியெழுப்ப வந்த எங்கள் வீர்ர் என்றார்கள். நினைவிருக்கிறதுதானே? ஆக, ஒற்றை நபரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தோழர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் கூட தனியாக அதனை சாதிக்க முடியாது. நான் […]
(அதிட்டன (திடசங்கற்பம்) முப்படையினர் கூட்டமைவு – ஜாஎல தொகுதி சந்திப்பு 27.01.2024)

இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அழுகி துர்நாற்றம் வீசுகின்ற இந்த சிஸ்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனை தனிநபரால் மாத்திரம் செய்ய முடியாது. கோட்டாபய வந்தால் நாட்டை முன்னேற்றிவிடுவார் என்று வாய்ச்சவடால் விட்டார்கள். நாட்டைக் கட்டியெழுப்ப வந்த எங்கள் வீர்ர் என்றார்கள். நினைவிருக்கிறதுதானே? ஆக, ஒற்றை நபரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தோழர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் கூட தனியாக அதனை சாதிக்க முடியாது. நான் உங்களிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே?
தனியாக இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டுமானால் மாயசக்தி தெரிந்திருக்க வேண்டும். உலகில் அப்படி எவருக்கும் அவ்வாறான மாயசக்தி இல்லைதானே? மந்திரங்களை உச்சரித்து தேங்காயை நிமிர்த்துவது போல பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது. இன்று வளர்ச்சியடைந்துள்ள சீனா, கொரியா, ஜப்பான், அமெரிக்க போன்ற எந்தவொரு நாடும் மாயசக்தியால் முன்னேறவில்லை. கூட்டான குழு வேலைத்திட்டங்கள் மூலமாகத்தான் அந்த நாடுகள் முன்னேற்றமடைந்தன. அதற்குத் தலைமை தாங்குபவர் இருக்கிறார். தலைமை இல்லாது பயணிக்க முடியாதுதானே? ஆனால், அந்த தலைவரை சுற்றி இணைந்த விசாலமான சக்தியொன்று தேவை. ஆகவே, எமது இலங்கை நாட்டை கரைசேர்க்க மனித அரணை சக்திமிக்கதாக கட்டியெழுப்ப வேண்டும்.
அதற்கு நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாகவுள்ள பெண்களின் சக்தி வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு விவசாயிகள், மீனவர், தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தின் சக்தி வேண்டும். இளைஞர் சக்தி மிக அவசியம். அவர்களால்தான் புதிய உற்பத்தியை, ஆக்கப்பூர்வமான படைப்புகளை வெளிகொணர முடியும். இவர்களைப் போலவே, ஆகாயத்திலும், சமுத்திரத்திலும், தரையிலும் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற படையணிதான் ஓய்வுபெற்ற முப்படையினர். ஓய்வு பெறாதவர்களும் இதில் அடங்குவார்கள். அவர்கள் இதயத்தால் எம்மோடு பிணைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் இப்போது எம்மோடு இணைந்து செயலாற்ற முடியாதுதானே? அந்த விடயத்தை நீங்களும் அறிவீர்கள். முப்படையில் இருக்கின்ற பெரும்பான்மையானவர்கள் இதயத்தால் திசைகாட்டியோடு இணைந்திருக்கிறார்கள். அது சுரேஸ் சலேவிற்குத் தெரியும். அதனால்தான், திசைகாட்டியுடன் இணைந்திருக்கின்ற முப்படையினரை கழற்றி எடுக்கவேண்டும் என்று அவர் அரசாங்கத்திற்கு அறிக்கையை வழங்கியிருக்கிறார். அவர் அந்த அறிக்கையை வழங்கி ஐந்து மாதங்களாகிவிட்டன. அரசாங்கத்தால் எதையுமே செய்ய முடியவில்லை. அதனால், கொடுத்த அறிக்கைபடி அரசாங்கம் வேலை செய்யவில்லை என்று சலே கோபமாக இருக்கிறாராம். சலே கேட்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் இதனைக் கூறுகிறேன். ஏனென்றால், இவையெல்லாம் எமக்குத் தெரியாது என்று சலே நினைப்பார். சலே ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் அதனை அரசியல் தலைமைத்துவத்துடன்தானே செய்யமுடியும். அவர்களால் அதனை செய்யமுடியாது. அதனால், அவர்கள் பயந்திருக்கிறார்கள்.
முப்படையினரின் கூட்டமைவு இதற்கு முன்னர் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் அரசியல் கட்சியோடு இந்தளவிற்கு ஒன்றுசேர்ந்திருக்கவில்லை. திசைகாட்டியுன்தான் முதற்தடவையாக இவ்வாறு இணைந்துள்ளார்கள். அதற்குத்தான் சலே பயப்படுகிறார். ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்ல அரச சேவையில் இருப்பவர்களும் எம்மோடு இணைந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். அரச சேவையில் இருக்கும் சிலர் ஓய்வுபெற்ற முப்படையினர் கூட்டமைவில் இணைவதற்கு பொறுமையிழந்து ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதற்கான தேவை எல்லோருக்கும் இருக்கிறது. எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓய்வுபெற்றவர்கள் மட்டுமல்ல! முட்டை, அரிசி, எரிவாயு போன்றவற்றின் விலை அதிகரிக்கும்போதும், கட்டணங்கள் அதிகரிக்கும்போதும் பொலிஸ் காண்ஸ்டபிள், SI, ASP, DIG உள்ளிட்டவர்களும் அதனை உணர்வார்கள்.
நாம் அனைவரும் இணைந்தே மிகப்பெரிய மனித அரணை உருவாக்க வேண்டும். இந்த மனித அரணே உண்மையாக நாட்டைக் கட்டியெழுப்புகின்ற படையணியாகும். தோழர் அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் மிகப்பெரிய மனித அரணை அமைத்து அதன் மூலமாக நாட்டை படிப்படியாக கட்டியெழுப்புகின்ற ஒபரேசனை ஆரம்பிக்க வேண்டும்.
-Colombo, January 31, 2024- (ஊடக சந்திப்பு – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்) இன்றளவில் ஆங்காங்கே மனிதப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த படுகொலை செயற்பாங்கு வெலிகம சம்பவத்திலிருந்தே தொடங்கியது. அதன் பின்னர் நாரம்மலவிலும் பின்னர் கம்பஹா மாவட்டத்தின் பிக்கு ஒருவர் மற்றும் இன்றளவில் அநுராதபுரம் மாவட்டத்தின் இளைஞரொருவர்மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது. தற்போது மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் இன்று எங்கே? யார்? படுகொலை செய்யப்பட்டுள்ளார்களென்று. இந்த உயிர்ப்பலி சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு […]
-Colombo, January 31, 2024-
(ஊடக சந்திப்பு – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்)

இன்றளவில் ஆங்காங்கே மனிதப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த படுகொலை செயற்பாங்கு வெலிகம சம்பவத்திலிருந்தே தொடங்கியது. அதன் பின்னர் நாரம்மலவிலும் பின்னர் கம்பஹா மாவட்டத்தின் பிக்கு ஒருவர் மற்றும் இன்றளவில் அநுராதபுரம் மாவட்டத்தின் இளைஞரொருவர்மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது. தற்போது மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் இன்று எங்கே? யார்? படுகொலை செய்யப்பட்டுள்ளார்களென்று. இந்த உயிர்ப்பலி சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் மேலோங்கி வருவதோடு அரசாங்கம் அடக்குமுறை பொறியமைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது அவற்றின் ஒரு பகுதியா என நாங்கள் அதிகாரிகளிடம் கேட்கிறோம். நேற்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையிலும் நாங்கள் கண்டிக்கிறோம். அதனை சனநாயகத்திற்கு எதிரான அவமதிப்பு என நாங்கள் காண்கிறோம்.
நாரம்மல சம்பவத்தின்போது மோட்டார் வாகனத்தின் பின்புற ஆசனத்தில் இருந்தவர் வாகனத்தில் இருந்து இறங்கிவந்து முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதியை அச்சுறுத்துகிறார். அந்த மோட்டார் வாகனத்தின் சாரதி வந்து டிப்பர் வாகனத்தின் சாரதியை சுட்டுக்கொலைசெய்கிறார். இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ள முடியுமா? சம்பந்தப்பட்டவரின் அடையாள அட்டையை அல்லது வருமான அனுமதிப்பத்திரம், லயிஷன் இன்சுவரன்ஸை பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு மாத்திரமே ஏதேனும் செயற்பாங்கில் பிரவேசிக்க வேண்டும். சம்பவம் மிகவும் பாரதூரமானது. சுட்ட துப்பாக்கி ரவையை பொறுக்கி அந்த உத்தியோகத்தர் பைக்குள் போட்டுக்கொள்கிறார். இதனை நேரடியாக பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது சட்டத்தரணிகள் குழுவொன்று நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் அந்த வழக்கிற்காக தோற்றிவருகிறார்கள். பின்புற ஆசனத்தில் இருந்துவந்து கொலைசெய்யப்பட்டவரை அச்சுறுத்தியவரை முறைப்பாட்டாளரின் சாட்சியாளராக மாற்றிக்கொள்ள முறைப்பாட்டாளர் முயற்சிசெய்துகொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டாளர் சார்பில் தோற்றுகின்ற எமது சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பொலீஸாருக்கே மேற்கொள்ள இடமளிக்கவேண்டாமென மதிப்பிற்குரிய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. “அது கள்வனின் தாயிடம் மைபோட்டுப் பார்ப்பதைப் போன்ற” வேலையாகும். எமது சட்டத்தரணிகள் குழு இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றத்திடம் விடுத்துள்ளது. ஒன்று இதன் முழுமையான விசாரணை நடவடிக்கைகளையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்தல். இல்லாவிட்டால் அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மா அதிபரின்கீழ் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்க.
ஆங்காங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற படுகொலை செயற்பாங்கிற்கு அரசாங்கம் வேண்டுமென்றே இடமளித்து வருகின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது. ஆளொருவரை படுகொலைசெய்து அடுத்தநாளன்று பதில் பொலீஸ் மா அதிபர் பத்திலட்சம் ரூபா பணத்தை குடும்பத்தவர்களுக்கு வழங்குகிறார். தனது கணவனின் பெறுமதி பத்திலட்சமா? அந்த பணமும் மக்களின் வரிப் பணத்திலிருந்தே போகின்றது. பொது திறைசேரியின் பணமாகும். மனித உயிரின் பெறுமதியை பொருட்படுத்தாமல் செயலாற்றுவது பாரதூரமான விடயமாகும். அது பாரதூரமான குற்றமொன்றை பொதுமைப்படுத்துதல் ஆகும். ஒரு சமூகம் என்றவகையில், சமூகத்தின் பொறுப்புவாய்ந்த அரசியல் இயக்கமொன்றின் சட்டத்தரணிகள் என்றவகையில் அதனை எம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது சட்டத்தினதும் சனநாயகத்தினதும் விலகிச்செல்லலாகும். 1992 இலும் இவ்விதமாக ஆங்காங்கே மனிதப் படுகொலைகள் இடம்பெற்று பாரிய குற்றச்செயல்கள்வரை பயணித்ததை நாங்கள் அறிவோம். இங்கு வந்துகொண்டிருப்பது அந்த பாணியிலான வேலையா? இது ஒரு தேர்தல் வருடமாகும். ரணில் விக்கிரமசிங்க கூறுகின்ற வகையிலேயே இரண்டு தேர்தல்கள் உள்ளன. இந்த தேர்தலில் வெற்றியடைய ஏற்புடைய பின்னணியை அமைத்துக்கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமூகத்தை ஒரு பயங்கரமான நிலைமைக்கு கொண்டுவந்து அரசாங்க எதிர்ப்பு என்பதை அடக்கியாள தோல்விகண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்த சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி மிகப்பெரிய சமூக அரணாக இதனை எதிர்கொள்வோம். நீங்கள் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல்களுக்கு அஞ்சவேண்டாம். இந்த கொடிய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாங்கினை வாபஸ்பெற வேண்டாம்.

“மனைவிக்கு கணவன், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனை இல்லாதொழித்து தான் பெறப்போகின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா? என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன்.” -தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த-
இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னராக பொலீஸாரின் தாக்குதலிலேயே பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடிந்தார். ஒரு பொலீஸ் குழுவிற்கு அவசியமாகி இருந்த, மறைந்திருந்த நிகழ்ச்சி நிரலொன்றின் செயற்பாங்கு என்றவகையிலேயே அந்த பொலீஸ் உத்தியோகத்தர் இறந்தார். அவர் ஒரு சார்ஜன்ட் பதவி வகித்தவராக இருந்து இறந்த பின்னர் எஸ்.ஐ. பதவிக்கு மாற்றபட்டுவிட்டால் நியாயம் கிடைக்குமா? அந்த பொலீஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு கணவனையும் பிள்ளைகளுக்கு தகப்பனையும் இல்லாதொழிப்பதை விட தேஷபந்துவின் பதில் பொலீஸ் மா அதிபர் நிலையை பொலீஸ் மா அதிபராக மாற்றுவது பெரியதா? நாரம்மல அப்பாவி மனிதனின் மனைவிக்கு கணவனையும் அவரது உலகத்தையும் இல்லாதொழித்து, மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனையும் அவர்களின் உலகத்தையும் இல்லாதொழித்து தான் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். அதனை பத்திலட்சத்திற்கு சுருக்கிவிட முடியுமா? தேஷபந்து இந்த பத்திலட்சங்களை கொடுத்துக்கொடுத்துக்கொண்டே போக நேரிடும். தான் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கியவருக்கு சொந்தப் பணத்தில் இருந்து ஐந்து இலட்சத்தை செலுத்துமாறு உயர்நீதிமன்றம் தேஷபந்துவிற்கு கட்டளையிட்டது. இந்த மனிதாபிமாமற்ற சித்திரவதையை 05 இலட்சத்திற்கு சுருக்கிவிடவும் முடியாது. சட்ட மா அதிபர் சரிவர சட்டத்தை அமுலாக்கினால் வருங்காலத்தில் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் சம்பந்தமாக குற்றப்பகர்வொன்று வரவேண்டும்.
இவ்விதமாக மனிதர்கள் ஆங்காங்கே நாய்கள் போல் செத்து மடிவதும், அது அரசாங்க பொலீஸினால் இடம்பெறுவதாயின் அது அரச பயங்கரவாதமாகும். அவ்வாறான செத்துமடிதல்கள் காரணமாக உருவாகின்ற அதிர்ச்சியைத்தான் நாங்கள் சமூகமயப்படுத்துகிறோம். இவ்விதமாக காரணமின்றி ஒருவரை கொலைசெய்தலானது அந்த குடும்பத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகும். இந்த அதிர்ச்சி சமூகத்தை சென்றடையவேண்டும். தமக்கு ஏதாவது நேரிடும்வரை ஒத்துணர்வு தெரியமாட்டாது. உங்களுக்கோ, உங்கள் குடும்ப அங்கத்தவருக்கோ அல்லது உறவினருக்கு ஏற்பட்டால் இதன் தாற்பரியம் புரியும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தேஷபந்துவை ஹெல்மட்டினால் மக்கள் தாக்கியபோது தப்பான இடத்தில் பட்டிருந்தால், ஏதாவது வேதனை ஏற்பட்டிருந்தால் மனைவியும் பிள்ளைகளும் அந்த அதிர்ச்சியை உணர்ந்திருப்பார்கள். பதில் பொலீஸ் மா அதிபர் தனது தொனிப்பொருள் வாசகத்தைப் பார்த்திட வேண்டும். ” தம்மே பவே ரக்கிதி, தர்ம சாரீ” தர்மவழியில் நடப்பவனை தர்மம் தலைகாக்கும் என்பதாகும். தொனிப்பொருள் வாசகம் அதனைத்தான் கூறுகிறது. தனது பதவி அதிகாரத்திற்கு வருங்காலத்தில் எடுக்கவுள்ள புரமோஷனுக்கு தனது தொனிப்பொருள் வாசகத்தின்படி செயலாற்றாமல் நடந்துகொள்ள வேண்டாம்.
பதில் பொலீஸ் மா அதிபர் மே 09 சம்பவத்தின் பிரதான பிரதிவாதிகளில் ஒருவராவார். அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளயில் மேல்மாகாண வடக்கு (நீர்கொழும்பு) சீனியர் டீ.ஐ.ஜீ. கட்டுவாபிட்டியவில் மனிதப்படுகொலை இடம்பெற்றது. நீதியின் மறைவில் இருந்துகொண்டு அநீதி இழைக்கப்படுமானால் சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் நாங்கள் அதனை எதிர்ப்போம். நீதியின் பெயரால் இந்த நாட்டில் போதைப்பொருள், குற்றச்செயல்கள், பாதாள உலகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் நாங்கள் இருகரங்களையும் உயர்த்தி ஆதரவு தெரிவிப்போம். ஆங்காங்கே மனிதர்கள் செத்துக்கிடப்பதன் மூலமாக அரசியல் தலைமையின், சமூகத்தின், பொருளாதாரத்தின் சீரழிவே வெளிக்காட்டப்படுகின்றது. இந்த நாடு ஒரு தரிசுநிலமல்ல, குடிமக்கள் – மக்கள் – மனிதர்கள் நிறைந்த சமூகமாகும் என்பதை தேஷபந்துவிற்கு கூறுகிறோம். நீங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளீர்கள். மக்களை நேசிப்பவர்கள் அல்ல. தர்மவழியில் பயணிக்குமாறு பொலீஸ் மா அதிபரை பாதுகாக்கின்ற அரசியல்வாதிகளுக்கும் கூறுகிறோம். அப்படிச் செய்தால் தர்மம் தலைகாக்கும்.

“சட்டத்திற்கும் மக்களுக்கும் இடையிலான அரசியல் தலையீடு நீங்கிய நாளில்தான் இந்நாட்டு மக்கள் நீதிதேவதைமீது நம்பிக்கை வைக்கமுடியும்.” -சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-
எந்தவொரு நாடும் சமூகமும் முன்னேற்றகரமானதென்பது பொருளாதார அளவுகோல் மூலமாக மாத்திரம் அளவிடப்படுமாயின் அது நூற்றுக்கு நூறுவீதம் சரியானதாக அமையமாட்டாது. ஒரு பிரச்சினைக்கு பிரச்சினைக் கட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது சிக்கலாக மாறிவிடும். ஆட்சியாளர்கள் சிக்கலுக்கு சிக்கல் கட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது நெருக்கடியாக மாறிவிடும். ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு நெருக்கடிக் கட்டத்தில் கட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது அனர்த்தமாக மாறிவிடும். ஒரு நாட்டில் வசித்த மக்கள் என்றவகையில் நாங்கள் மிகவும் மேசமான அனர்த்தத்திலேயே இருக்கிறோம். அதற்கு பதில் தேடுவது சுலபமான விடயமல்ல. நாங்கள் அனர்த்தத்தை பஞ்சமாகவும், வறுமையாகவும், அரசியல் கிளர்ச்சியாகவும், யுத்தச் சூழ்நிலையாகவும் காணமுடியும்.
சமூகத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களையும் அனர்த்தமாகக் காணமுடியும். மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பதில் பொலீஸ் மா அதிபரும் நீதியின் பெயரால் முன்னெடுத்துவருகின்ற நடவடிக்கையின் பெறுபேறாக குற்றச்செயல்கள் 17% ஆல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க, பாதாள உலகத்தை ஒழித்துக்கட்ட எடுக்கின்ற முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டுமென்ற குறுகிய அரசியல் கருத்தியலில் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் இல்லை. எனினும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளும்விதத்தில் சிக்கல் நிலவுகின்றது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையே சாதாரண பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு இன்றளவில் சிதைந்துள்ளது.
நீங்கள் இனிமேலும் சட்டம் மீது நம்பிக்கை வைத்திருப்பின் நாங்கள் ஒரு கட்சிஎன்றவகையில் ஒரு வாக்குறுதியை அளிக்க விரும்புகிறோம். சட்டத்தின் ஆட்சி என்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பது, சட்டம் அனைத்துப் பிரசைகளையும் சமமாக மதிக்கின்றது என்பது, மக்களின் உரிமைகள் அமுலாக்கபடுகின்றதென்பது முறைசார்ந்த நீதிமன்ற முறைமைக்குள் மாத்திரமே இடம்பெறும். அந்த செயற்பாங்கு நிகழ்காலத்தில் இடம்பெறமாட்டாதெனில் “நீதியின் நடவடிக்கை” என்பது பெயரளவில் மாத்திரம் அமுலாக்கப்படின் நாங்கள் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்க விரும்புகிறோம். முறைமை மாற்றத்தின் ஊடாக மக்களின் பலத்தை முறைப்படி தேர்தல் மூலமாக பெற்றுக்கொண்ட பின்னர் இந்த மண்ணில் நடைமுறைச்சாத்தியமானதாக அமுலாக்குவதற்கான பிரமாண்டமான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரித்து வருகிறோம். சட்டத்திற்கும் மக்களுக்கும் இடையிலான அரசியல் தலையீடு நீங்கிய நாளில்தான் இந்நாட்டு மக்கள் நீதிதேவதைமீது நம்பிக்கை வைக்க முடியம். எனினும் அதனூடாக இடம்பெறுவது மக்கள் மேலும் பாதிக்கப்படுவதாயின் அத்துடன் குற்றச்செயல்கள் புரியப்படுவதை நியாயப்படுத்துவதாயின் நாங்கள் ஒரு போதுமே அதற்கு உடன்படமாட்டோம்.

“மக்களின் விருப்பத்துடன் நியமிக்கப்படுகின்ற திசைகாட்டியின் அரசாங்கத்தினால் மாத்திரமே சட்டம் சரிவர அமுலாக்கப்படமுடியும்” -சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார-
1992 காலப்பகுதியில் படுகொலை கலாசாரமொன்று நிலவியது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வந்தார்கள். குற்றச்செயல்கள் பொதுநிலைப்படுத்தப்படுகின்ற ஒரு போக்கு நிலவியது. அதைப்போலவே தேர்தல் காலங்களில் வன்முறைச் செயல்கள் காரணமாக ஆட்கள் உயிரிழந்ததை நாங்கள் கண்டோம். எனினும் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த கலாசாரம் ஓரளவு தணிந்தது. அண்மைக்காலமாக நாளாந்தச் செய்தித்தாள்களில் எத்தனை கொலைகள் இடம்பெற்றன என்பதை வாசிக்கிறோம். அரசாங்கத்தால், பொலீஸாரினால், தவறுதலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த படுகொலை மனிதர்களின் மண்டைகளில் பொதுமைப்படுத்தப்படுவதன் மூலமாக இதனைக் கேள்விக்குட்படுத்துவது நிறுத்தப்படுகின்றது. அத்தகைய நிலைமையில் இவை துரிதமாக அதிகரிக்கின்றன.
இது ஒரு தேர்தல் வருடம். “தேர்தல் காலங்களில் இவை இடம்பெறுவது சகஜம்” என மக்கள் மௌனம் சாதிப்பார்கள். இவை அரசாங்கத்தின் அரசியல் கலாசாரத்தினால் உருவாக்கப்படுகின்ற நிலைமையாகும். ஒரு நாட்டில் தவறு புரிந்தால் கைதுசெய்யப்படல் வேண்டும். வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். நீதிமன்ற முறைமைக்குப் புறம்பாக மக்கள் மடிவது “நல்லது, அவன் பாதாள உலகக்காரன், தூள் பாவிப்பவன்” என மௌனமாக இருக்கவேண்டாம். ஏனென்றால் அது பொலீஸ் ஊடகப் பேச்சாளரோ, எவரேர ஓர் அமைச்சரோ கூறுகின்ற விடயமாகும். அதனால்த்தான் பொலிஸ் அமைச்சரும் தேஷபந்து தென்னக்கோனும் கூறுகின்ற விடயங்கள் மற்றும் நடந்தகொள்கின்ற விதம் பற்றிய எமது கடுமையான விமர்சனம் நிலவுகின்றது.
இந்த நிலைமையை உருவாக்கியதே இந்த நாட்டின் அரசியல் கலாசாரம்தான். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா கோட்டாபய ராஜபக்ஷ கூறினார் “எனது வார்த்தைகள்தான் சுற்றுநிருபங்கள்” என. ரணில் விக்கிரமசிங்க போய் “எனக்கு போஸ்ற் ஒபீஸை தருவீர்களா? இல்லையா?” என அச்சுறுத்தல் விடுக்கிறார். பொலீஸ் அமைச்சர் “அடித்தால் அடிக்கவேண்டும்” என்கிறார். அவர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு உண்டு. எவரையும் கைதுசெய்வதற்கான அதிகாரம் உண்டு. எனினும் இவ்வாறு செய்வதனால் கீழ்நோக்கிச் செல்கின்ற செய்திதான் ” நீங்கள் என்ன தவறு புரிந்தாலும், எந்த மனித உரிமையை மீறினாலும் நாங்கள் அரசாங்கம் என்றவகையில் பார்த்துக்கொள்வோம்” என்பது. அப்போதுதான் நாரம்மல போன்ற சம்பவங்கள் இடம்பெறும். இதனை விமர்சித்தது நாங்கள் மாத்திரமல்ல. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இதனை விமர்சித்துள்ளது. அதனால்த்தான் பொலீஸ் ஆணைக்குழு ” நாட்டு மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படத்தக்க வகையில்” செயலாற்றுமாறு தேஷபந்துவிற்கு கூறியுள்ளது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படத்தக்கவகையில் சட்டத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கூறுகிறோம். அந்த ஆற்றல் தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. ஏனென்றால் நாங்கள் மக்களின் விருப்பத்துடனேயே ஆட்சிக்கு வருவோம். மக்களின் விருப்பத்திற்கு முரணாக அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கங்களே இத்தகை அடக்குமுறைசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முனைகின்றன. அதனால் நாங்கள் சமூகத்தைக் குணப்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கின்றது.
-Colombo, January 31, 2024- இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியுமான் அவர்களுக்கும் தேசிய மக்கள் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் நிகழ்கால பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றியும் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்நிறைந்த நிலைமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் ஜேர்மனிய தூதரகத்தின் அரசியல் விவகாரங்கள் பற்றிய ஆலோசகர் திருமதி தரிணி தலுவத்த மற்றும் தேசிய மக்கள் […]
-Colombo, January 31, 2024-
இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியுமான் அவர்களுக்கும் தேசிய மக்கள் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் நிகழ்கால பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றியும் மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்நிறைந்த நிலைமை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் ஜேர்மனிய தூதரகத்தின் அரசியல் விவகாரங்கள் பற்றிய ஆலோசகர் திருமதி தரிணி தலுவத்த மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.


-Colombo, January 31, 2024- இன்று (31) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வணிகத்துறை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைரீதியான அணுகுமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை […]
-Colombo, January 31, 2024-
இன்று (31) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வணிகத்துறை எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைத்தல் சம்பந்தமான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைரீதியான அணுகுமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை வணிகப் பேரவையின் சார்பாக இந்த சந்திப்பில் அதன் தவிசாளர் ஏர்னஸ்ற் அன்ட் யங் நிறுவனத்தின் உள்நாட்டு முகாமைத்துவ பங்காளி துமிந்த ஹுலங்கமுவ, ஸ்டேன்டர்ட் அன்ட் சார்ட்டட் வங்கியின் பிங்குமால் தெவரதன்திரீ, டயலொக் ஆசியாட்டாவின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுபுன் வீரசிங்க, அட்வகாட்டா நிறுவனத்தின் தலைவர் முட்டாசா ஜெபர்ஜி ஆகியோரை உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதோடு தேசிய மக்கள் சக்தியின் சார்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டி. லால்காந்த, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகிய தோழர்களை உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.




(ஊடகச் சந்திப்பு – பதுளை – 30.01.2024) தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர மானியமாக 2000 ரூபாவை வழங்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற உர மானியத் திட்டமானது சிறுதோட்ட உரிமையாளர்களையும், பெரிய பணக்காரர்களையும், குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள செல்வந்தர்களையும் போசிக்கும் நடவடிக்கையாகும். இது ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரமும் அதற்கான வியூகமும் ஆகும். தேயிலைச் சபையில் உள்ள நிதியம் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் சேமிக்கப்பட்டதாகும். இந்த […]
(ஊடகச் சந்திப்பு – பதுளை – 30.01.2024)
தேயிலைச் சபையில் உள்ள நிதியத்தை பயன்படுத்தி உர மானியமாக 2000 ரூபாவை வழங்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற உர மானியத் திட்டமானது சிறுதோட்ட உரிமையாளர்களையும், பெரிய பணக்காரர்களையும், குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள செல்வந்தர்களையும் போசிக்கும் நடவடிக்கையாகும். இது ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரமும் அதற்கான வியூகமும் ஆகும்.
தேயிலைச் சபையில் உள்ள நிதியம் ஒட்டுமொத்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினால் சேமிக்கப்பட்டதாகும். இந்த நிதியத்தை தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க எடுக்கப்படுகின்ற அரசாங்கத்தின் நடவடிக்கை பிற்போக்குத்தனமானதாகும். ஆகவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதியத்தை பயன்படுத்தி நியாயமான வகையில் உர மானியத்தை வழங்குவதோடு, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா. 2000 ஆக அதிகரிக்கவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

(தேசிய மக்கள் சக்தியின் கழுத்துறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.01.28) செய்திகளைப் பார்த்தால் அவர்கள் எம்மைப்பற்றி கூறுகின்ற கதைகளையே காண்கிறோம். எமது ஆட்சியின்கீழ் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கூறுபவர்களும் அவர்களே. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வந்து எம்முடன் பேசிய விடயங்கள் பற்றிக் கூறுவதும் அவர்களே. அவர்களின் திகைப்பும் அச்சமும் இவை மூலமாக தெளிவாகின்றது. அதற்கு மேலதிகமாக அவதூறுகள், பொய்யான தகவல்கள், ஒருசிலரது அச்சுறுத்தல்கள் போன்ற பலவிடயங்கள் இருக்கின்றன. இன்று முதல் அவை மேலும் அதிகரிக்கும். […]
(தேசிய மக்கள் சக்தியின் கழுத்துறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.01.28)

செய்திகளைப் பார்த்தால் அவர்கள் எம்மைப்பற்றி கூறுகின்ற கதைகளையே காண்கிறோம். எமது ஆட்சியின்கீழ் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கூறுபவர்களும் அவர்களே. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வந்து எம்முடன் பேசிய விடயங்கள் பற்றிக் கூறுவதும் அவர்களே. அவர்களின் திகைப்பும் அச்சமும் இவை மூலமாக தெளிவாகின்றது. அதற்கு மேலதிகமாக அவதூறுகள், பொய்யான தகவல்கள், ஒருசிலரது அச்சுறுத்தல்கள் போன்ற பலவிடயங்கள் இருக்கின்றன. இன்று முதல் அவை மேலும் அதிகரிக்கும். கழுத்துறை மாவட்டத்தில் குழுமியுள்ள பெண்களின் பெருவெள்ளத்தை பார்க்கும்போது அவர்கள் மேலும் பீதியடைவார்கள், அவதூறாக பேசுவார்கள். எமது நாட்டில் மோசடியின் உச்சத்தை எட்டிப்பிடித்த, குற்றச்செயல்களின் பாதுகாவலர்களாக விளங்கிய, மக்களின் செல்வத்தை கோடிக்கணக்கில் சூறையாடிய, அதனோடு பின்னிப்பிணைந்த பாதாள உலகத்தை நிர்மாணித்த, அதனோடு ஒட்டிஉறவாடிய கொள்ளைக்கார வளையத்தை நிர்மாணித்த எமது நாட்டின் மூர்க்கத்தனமான பாசறைக்கு எதிராகவே நாங்கள் இந்த அரசியல் அணிதிரலை உருவாக்கி இருக்கிறோம். நாட்டை நாசமாக்கிய, மக்களை துன்பக் கடலில் அமிழ்த்திய, நாசகார பாசறைக்கு எதிராக நாங்கள் இந்த பாசறையை உருவாக்கி இருக்கிறோம். அதனால் அவர்கள் தாமாகவே அதிகாரத்தைக் கைவிடப்போவதில்லை. நாங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில் அடுத்த நாளில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அவர்கள் தோல்வியுற்றால் அவர்கள் அனைத்தையுமே இழந்துவிடுவார்கள்.
அதனால் இறுதிவரை எமது முயற்சியை தோற்கடிக்க அவர்கள் செயலாற்றுவார்கள். சேரக்கூடிய எந்தவொரு வகையையும்சேர்ந்த அணியுடன் ஒன்றாக மேடையில் ஏறுவார்கள். ரணில் – மைத்திரி – சந்திரிக்கா கூட்டு வெகுவிரைவில் வெளிவரும். ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குறைகூறியவர்கள்கூட அந்த அணியில் இணைந்துகொள்வார்கள். எழுந்துவருகின்ற முற்போக்கு மக்கள் இயக்கத்தை தோற்கடித்திட மேலும் சிலர் ஒரே மேடையில் இல்லாவிட்டாலும் இரண்டு மேடைகளில் இருந்துகொண்டு ஒரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். மக்களின், தாய்நாட்டின் பகைவர்கள் தமது ஒரேயொரு எதிரியாக தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளார்கள். அந்த அனைத்துவிதமான அச்சுறுத்தல், குறைகூறல், பகைவனின் செயல்கள் எமக்கு மேலும் பலத்தையும் தெம்பினையும் நம்பிக்கையையும் தருகின்றது. இந்த வருடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயார். அதனைச் சாதிக்க முடியும். எமது நாட்டின் பெண்களை அரசியல்ரீதியில் முனைப்பற்றவர்களாக வைத்திருக்கவேண்டுமென அவர்கள் சதாகாலமும் சிந்தித்தார்கள். அதைப்போலவே பெண்களை ஏமாற்ற இயலுமென அவர்கள் நினைத்தார்கள். பெண்களை அரசியலில் செயலற்றவர்களாக்கி, பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, பெருநிலத்தில் இருந்துகொண்டு பெண்களை ஏமாற்றமுடியுமென அவர்கள் நினைத்தார்கள். எனினும் தற்போது இலங்கை வரலாற்றிலும் தேர்தல் வரலாற்றிலும் பலம்பொருந்திய பெண்கள் எழுச்சி தேசிய மக்கள் சக்தி ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சியுடன் வெற்றிவரை தமது செயற்பொறுப்பிற்கு தோள்கொடுப்போம் என்பதே எதிர்பார்ப்பினை சுமந்த இந்த முகங்களில் வெளிப்படுகின்றன. அதிகாரத்தை பரிமாற்றிக்கொள்ளும் தேர்தலொன்று இந்த வருடத்தில் கட்டாயமாக வரும். ஏழு எட்டு மாதங்களுக்கு கிட்டிய காலத்தில் கழிகின்ற மிகமுக்கியமான காலப்பகுதி பிறந்துள்ளது. முன்னொருபோதும் இருந்திராதவகையில் நாமனைவரும் செவிசாய்ப்போம். விழிப்படைவோம். முனைந்து செயலாற்றுவோம். உறுதியாகவே இந்த இந்த பணியை வெற்றியில் முடிக்க இயலும். நாங்கள் அரசியல் பலத்தைக் கைப்பற்றுவது இறுதியானதல்ல. இது நாட்டை மாற்றியமைப்பதன் தொடக்கமாகும். ஒட்டுமொத்த முறைமையும் சீர்குலைந்த ஒரு நாட்டில் ஓரிரு விடயங்களுக்கு தீர்வுகாண முடியாது. அனைத்து துறைகளையும் புதிய நோக்கங்களால் நிரப்பி மாற்றியமைத்திட வேண்டும். புதிய சமூக மாற்றமொன்று தேவை. அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது ஒரு தனிமனிதனின் அல்லது அரசியல் கட்சியின் செயற்பொறுப்பு மாத்திரமல்ல. மக்கள் அனைவரும் ஒருவராக ஒரே மூச்சில் எழுந்துநின்று உறுதியான திடசங்கற்பத்துடன் செயலாற்ற வேண்டும். அதனால் மீளக் கட்டியெழுப்புதல் ஒட்டுமொத்த மக்களினதும் பணியாகும். அதற்காக அனைவரையும் விழிப்படையச்செய்து அனைவரும் செயற்படவேண்டும். முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு இரண்டாவதாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இடையீடுசெய்ய வேண்டும். அதற்கான புதிய தேசிய எழுச்சி எமக்குத் தேவை. எதிர்காலம் பற்றிய நலமான கனவைக் கொண்டுவருகின்ற புதிய மக்கள் எழுச்சியொன்று அவசியமாகும்.
மனிதர்களின் ஒத்துணர்வினை பிறருக்கு அறிவிக்கக்கூடிய கலைஞன், இலக்கியவாதி, பொறியியலாளன், கல்விமான், கமக்காரன், மீனவன் உள்ளிட்ட அனைவரதும் பிரதான பங்குதாரராக எமது நாட்டின் பெண்கள் மாறியுள்ளார்கள். சமூகத்தில் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த அனைவரையும்விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் விழித்தெழுங்கள் என அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். சாதகமான எதிர்பார்ப்புக்களுடனேயே இதற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். எனினும் மேற்படி எதிர்பார்ப்புகளை முழுமையாகவே சிதைத்துவிட்ட ஆட்சியாளர்கள் அவர்களைச் சுற்றிக் குழுமியுள்ள சிறிய வளையத்திடம் அனைத்துச் செல்வங்கனையும் ஒன்றுதிரட்டி அவர்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொண்டார்கள். பொதுமக்களை ஏமாற்றி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சதாகாலமும் சமூகத்தில் அனைத்துச் சிறப்புரிமைகளையும் அனுபவிக்கின்ற ஆட்சியைக் கட்டியெழுப்பினார்கள். பொதுமக்களின் ஆட்சியொன்றை நிறுவி அனைவரதும் இடையீட்டுடன் நாட்டைக் கட்டியழுப்பிடவே நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது எமது தொடக்கநிலையே என்பதை விளங்கிக்கொண்டு அனைவரும் முனைப்பாக செயலாற்ற ஒன்றுசேர்வோமாக.

