(-மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக – தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை பொதுக்கூட்டம் – 2024-06-29-) ஜனாதிபதித் தோ்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை, தயக்கம், சந்தேகம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னராகவே அது நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றுக்காக பொதுமக்கள் ஒன்று சோ்ந்திருக்கிறார்கள். அது தொடர்பில் ஆளுங்குழு பதற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி தோ்தலை நடத்தாதிருக்க மேற்கொண்ட படிமுறைகள் உரையாடல்கள் தற்போது முற்றுப்பெற்றுள்ளன. ஜுலை மாதம் 17 ஆம் திகதியாகும்போது […]
(-மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக – தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை பொதுக்கூட்டம் – 2024-06-29-)

ஜனாதிபதித் தோ்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை, தயக்கம், சந்தேகம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னராகவே அது நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றுக்காக பொதுமக்கள் ஒன்று சோ்ந்திருக்கிறார்கள். அது தொடர்பில் ஆளுங்குழு பதற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி தோ்தலை நடத்தாதிருக்க மேற்கொண்ட படிமுறைகள் உரையாடல்கள் தற்போது முற்றுப்பெற்றுள்ளன. ஜுலை மாதம் 17 ஆம் திகதியாகும்போது ஜனாதிபதி தோ்தலை பிரகடனம் செய்வதற்கான, வேட்பு மனுக்களை கோருவதற்கான, தோ்தல் தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. தோ்தலை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வி கண்டுள்ளன.
தற்போது அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்திருப்பது தோ்தலை எதிர்கொண்டு வெற்றிபெறுவதற்கான சதிவேலைகளை மேற்கொள்வதாகும். மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் முன் உரையாற்றி தோ்தல் இயக்கமொன்றை முன்னெடுப்பதில் ரணில் தற்போது தோல்வி கண்டுள்ளார். அதனால் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழு தற்போது மாளிகைக்குள்ளே சதிவேலைகளை புரிந்துந்து வருகின்றது. நாங்கள் ஹொரண பொது விளையாட்டரங்கில் மக்கள் முன் உரையாற்றிக்கொண்டிருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க மாளிகைக்குள் ஹர்ஷ த சில்வா, கபீர் ஹஷீம், மயந்த, காவிந்தவுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். ஆங்காங்கே இருக்கின்ற குழுக்களை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து தோ்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார். மேலிடத்திருந்து புரிகின்ற மாளிகை சூழ்ச்சிகளால் மக்களின் எழுச்சியை மீளத்திருப்ப முடியாதென்பதைத்தான் ஹொரணவில் குவிந்துள்ள மக்கள் வெளிக்காட்டுகிறார்கள். இப்போது ரணில் விக்கிரமசிங்க பாசறை, சஜித் பிரேமதாஸ பாசறை, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாசறை என்ற வகையில் மூன்று பாசறைகள் ஜனாதிபதி தோ்தலுக்கு முகம் கொடுப்பதற்காக அணிதிரண்டுள்ளன.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு உள்ள ஒரே தகைமை அவரே கூறுகின்ற விதத்தில் பிரேமதாஸவின் மகனாக அமைந்துள்ளமை மாத்திரமேயாகும். சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரேமதாஸவின் மகனாக அமைந்திராவிட்டால் என்ன நடக்கும்? அவர் ஹொரண நகரசபையின் உறுப்பினர் பதவிக்குக்கூட பொருத்தமான ஒருவரல்ல. இப்பொழுது சஜித்தைப் பற்றி அவருடைய கட்சியைச் சோ்ந்த சரத் பொன்சேகாவே பேசி வருகிறார். அவர்களுடைய அரசாங்கத்தில் திருட்டுக்களை அம்பலப்படுத்துகின்ற பொறுப்பினை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதாக சஜித் கூறினார். இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னரே சரத் பொன்சேகா ஒரு திருடனை பிடித்துள்ளார். கெஷினோ பணம் வருகின்ற விதம் பற்றி கூறினார். எனவே சஜித்தின் பாசறையைப் பற்றி இனிமேலும் பேசுவதில் பயனில்லை.

எனினும் ரணிலின் பாசறையைப் பற்றி பேசியேயாகவேண்டும். மக்களின் எழுச்சியை முழுமையாகவே காட்டிக்கொடுத்து மக்கள் எதிர்பார்ப்புக்களை முற்றாகவே அழித்து பழைய நாசகார பயணத்திலேயே நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்து வருவது ரணில் விக்கிரமசிங்கவின் பாசறையாகும். கடந்த தினமொன்றில் பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீடொன்றை கொண்டு வந்து தனக்கு வரவு செலவில் ஒதுக்கிய பணத்திற்கு மேலதிகமாக 875 கோடியை ஒதுக்கிக் கொள்கிறார். காலமோ இன்னும் இரண்டு மாதங்கள் தான். (அணையப்போகின்ற ஒரு மின்குமிழ்.) இந்த பொதுச் செல்வத்தை முற்றாகவே தனது தோ்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்த ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். தெற்கின் ஆளுநர் பல புதிய நியமனங்களை கொடுத்துள்ளார். முன்னாள் பிரதேச சபையின் தலைவர்களுக்கு ஆளுநரின் ஒருங்கணைப்பாளர் பதவி. பெரும்பாலான தலைவர்கள் உள்ளூர் அதிகார சபை தோ்தலில் அபேட்சகர்கள் ஆவர். தோ்தலின்போது அவர்கள் எவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை செலவிடுவது? கருத்திட்டங்களுக்காக எவ்வாறு பிரயோகிப்பது? அந்த கருத்திட்டத்தை எவ்வாறு வகுப்பது? அவற்றில் எவ்வாறு இடையீடு செய்வது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்? தான் ஒரு தொகை பணத்தை எவ்வாறு சுருட்டிக்கொள்வது? அதற்காக தற்போது லக்ஷ்மன் யாப்பா முன்னாள் தலைவர்களை நியமித்துள்ளார். பொதுப்பணத்தை தமது அடிவருடிகளை தோ்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்த ரணில் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.
பொதுப்பணத்தை பயன்படுத்திக் கொண்டு ரணில் கட்சிக்குழுக்களுக்கு விசேட நிதியேற்பாடுகளை ஒதுக்கி அவர்களை தமது பக்கம் தூண்டிலிட்டு எடுக்க ரணில் முயற்சி செய்கிறார். பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து 120 கோடி ரூபாவை எதிர்கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்தார். றிசாட் பதுர்தீன், சன்பிக ரணவக்க, ஹர்ஷ த சில்வா, மான்னப்பெரும, மயந்த திசாநாயக்க, காவிந்த ஜயவர்த்தன, அலவத்துவல ஆகியோருக்கு கொடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பொதுப்பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார். ரணிலுக்கு ஊரிலே ஐக்கிய தேசிய கட்சியின் கிளைச்சங்கங்கள் கிடையாது. தொகுதி அமைப்பாளர் ஒருவர் கிடையாது. அதனால் ரணில் ஆளுங்கட்சியில் இருக்கின்றவர்களுக்கும் ஆளுங்கட்சியை சாராத தான் தெரிவு செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பார் லைசன் வழங்கி, பெற்றோல் ஷெட்களில் லைசன் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். “அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட பார் லைசன் எல்லாவற்றையும் கென்சல் பண்ணுவதாக” சஜித் அண்மையில் கூறினார். நான் சஜித்திடம் கேட்கிறேன் “உங்களால் கூறமுடியுமா உங்கள் கட்சியைச் சோ்ந்த எவருமே பார் லைசன் பெறவில்லையென்று.” ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு, நாட்டின் நிதி நிறுவனங்களுக்கு நிதி ஒழுகலாறு பற்றி உபதேசம் செய்கிறார். நிதி ஒழுகலாறு பற்றி பேசுகின்ற ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது வரி விதித்து மிகவும் கஷ்டமான நிலைமையில் மக்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு சேமித்த பணத்தை தனது தோ்தல் இயக்கத்திற்காக செலவிடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். இத்தருணத்தில் ரணில் கூறுகின்றவற்றை பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க கட்டாயமாக தோற்கடிக்கப்பட்டேயாக வேண்டும்.
மக்களின் பிரார்த்தனை “மாற்றமொன்று அவசியம் என்பதாகும்.” வடக்கின் தமிழ் மக்களும் கிழக்கின் முஸ்லிம் மக்களும் தெற்கின் சிங்கள மக்களும் மாற்றமொன்று அவசியமெனக் கூறுகிறார்கள். கமக்காரர்கள், மீனவர்கள், தொழிற்முயற்சியாளர் சமூகம், முச்சக்கரவண்டி சாரதிகளை சந்தித்தால் ”தொடர்ந்தும் இவ்வாறு பயணிக்கமுடியாது. மாற்றமொன்று அவசியம். என்றே கூறுகிறார்கள். “மாற்றம்” பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாகும் எவ்வாறான மாற்றம் ஒன்று தேவை? ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மொட்டுக்கட்சியைச் சோ்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் மொட்டுக் கட்சியை சோ்ந்த சிலர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்கள். அவர்கள் யார்? பாராளுமன்றத்திற்கு மிளகாய் தூள் கொண்டுவந்த, எயார் போர்ட்டில் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய, துர்ப்பிரயோக செயல்களுடன் தொடர்புடைய கம்பஹா பிரசன்ன ரணவீர, கப்பம் வாங்கியமை காரணமாக மேல் நீதிமன்றத்தினால் நான்கு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள கம்பஹா பிரசன்ன ரணதுங்க, சிறைச்சாலைக்குள் நள்ளிரவில் புகுந்து சிறைக்கைதிகளை முற்றத்திற்கு கொண்டு வந்து கைத்துப்பாக்கியை தலையில் வைத்து மண்டியிடச் செய்வித்து அச்சுறுத்திய கண்டி லோஹான் ரத்வத்த அமைச்சர், நீங்கள் அறிந்த நீர்கொழும்பின் நிமல் லன்சா, கிழக்கின் கருணா, கிழக்கின் பிள்ளையான் புதிய மாற்றத்திற்காக ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இந்த குழுவில் உள்ளவர்கள் யார்? நாட்டை மாற்றியமைப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சூழவுள்ளவர்களும் அயோக்கியத்தனமிக்க குழுவினரிடமும் கையளிக்கமுடியுமா? ஏற்கெனவே இருக்கின்ற வஜிர அபேவர்தன போன்றவர்கள் பழைய தோல்வி கண்ட பயணத்தில் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லவே தயாராகி வருகிறார்கள். இந்த அயோக்கியத்தனமான குழுவின் கைகளில் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்ற திடசங்கற்பத்திற்கு மக்கள் வரவேண்டும். அப்படியானால் சஜித்தின் குழுவிற்கு கொடுக்கவே வேண்டுமா? பாவம், அது பற்றி அதிகமாக கூறவேண்டியதில்லை.

ஜே.ஆர் ஜயவர்தன நாட்டை ஆட்சி செய்த பின்னர் மருமகன் அதிகாரத்தை கோரி நிற்கிறார். பிரேமதாஸ நாட்டை ஆட்சி செய்தார். இப்போது அவருடைய மகன் அதிகாரத்தை கோருகிறார். மகிந்த ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்தார். இப்போது மகன் அதிகாரத்தை கோரத் தயாராகி வருகிறார். எமது நாட்டில் அரசியல் பலத்தின் சுக்கான் ஒரு சில குடும்பங்களில் கைகளிலேயே சுழன்றது. பழைய அழிவுமிக்க ஊழல் புரிந்த பிரபுக்கள் வர்க்கத்தின் கைகளுக்கே மீண்டும் அதிகாரத்தை கோரி வருகிறார்கள். அவர்கள் எவராலும் இந்த நாட்டுக்கு எந்த விதமான மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஹொரண பொது விளையாட்டரங்கிற்கு இத்தருணத்தில் குழுமியுள்ள உங்களைப் போன்ற நாடு பூராவும் பரந்துள்ள மக்களாலேயே அதனை சாதிக்க முடியும். ஒருபோதுமே அரசியல் மேடையில் ஏற நினைக்கவில்லையென்றே அமைச்சு செயலாளர் ஒருவராக பணியாற்றிய திரு. ஏ.பி.ஏ. குணசேகர இந்த மேடையில் கூறினார். ரவி செனெவிரத்ன அவர்கள், சம்பத் துய்யகொந்தா அவர்கள், பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தோழர் போன்ற பலர் இன்று அந்த கதையைக் கூற காரணம் எம்மனைவருக்கும் நாட்டை மாற்றியமைப்பதற்காக இந்த மேடைக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளதால் ஆகும். இந்த எவருமே பழைய தோல்வி கண்ட அரசியல் பயணத்திற்கு துணைநின்று அந்த பயணத்திற்கு தோள்கொடுத்து சென்றவர்களல்ல. புதிய குழுவினரை சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பாரிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பியிருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.
மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்த வேளையில் அவர் கூறிய கதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. 1970 மற்றும் 1980 சதாப்தங்களில் அவர் இந்தியாவுக்கு சென்ற வேளையில் ஒரு குடையை பிடித்துக்கொண்டு சென்றால் இந்தியர்கள் வந்து குடையை தடவிப்பார்த்து அபகரித்துக்கொள்ள முயற்சி செய்வார்களாம். அதைப்போலவே இந்தியாவுக்கு காற்சட்டை துணியை எடுத்துச் சென்றால் எயார் போர்ட்டிலிருந்து வெளியில் சென்றதுமே விற்றுவிட முடியுமென ஒரு வியாபாரி கூறினார். அப்படிப்பட்ட இந்தியா இந்த பிராந்தியத்திற்கு அவசியமான ஔடதங்கள், மோட்டார் வாகனங்கள், உணவுகளை உற்பத்தி செய்வதைப்போன்றே தொழிநுட்பத்தை உற்பத்தி செய்கின்றது. சந்திரனுக்கு செல்கின்றது. எமது ஆட்சியாளர்கள் நாட்டில் இருந்த கைத்தொழில் முறைமையை முற்றாகவே நாசமாக்கி எஞ்சியிருந்த நிறுவனங்களையும் விற்றுவிட முயற்சி செய்கிறார்கள். ரணிலின் பொருளாதார பயணம் அதுவாகும்.
எங்கள் நாட்டில் இருக்கின்ற வளங்களை நன்றாக பயன்படுத்தி புதிய பயணம் ஒன்றுக்கு புதிய மாற்றமொன்றுக்கு கொண்டு செல்வதற்கான நிலைமாற்றத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக உலகம் பூராவிலும் இருக்கின்ற இலங்கை விஞ்ஞானிகள் ஒன்றுக்கூடி எங்களுடைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கைத் தொடரின் அடிப்படை வரைவினை சமர்ப்பித்தார்கள். தனது பிள்ளை எந்த நேரத்தில் போதைப் பொருளுக்கு இறையாகிவிடும் என்ற பயத்துடன் இருக்கின்ற சமூகத்தை முற்றாகவே மாற்றியமைத்து விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் ஒரு புதிய மலர்ச்சியை அந்த பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதுவரை எம்மீது நம்பிக்கை வைத்திராத மக்களில் ஏறக்குறைய 90% எம்மைச் சுற்றி குழுமியிருப்பது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பயணத்தின் முதலாவது படிமுறையாகும். மக்கள் மாற்றமடைந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்தை நாட்டின் வெற்றிவரை பிரயோகித்து ஜனாதிபதி தோ்தலின்போது திசைகாட்டியை வெற்றியீட்ட செய்விக்க வேண்டும். இன்றளவில் தாமும் மாற்றமடைந்து அவ்விதமாக மாற்றிக் கொண்ட விடயங்களை பற்றி மற்றவர்களுடன் கலந்துரையாடுகின்ற பெருந்தொகையானோர் எமது நாட்டில் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக சமூகத்துடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு ஒன்று சோ்வதிலான வெற்றியை நாட்டுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“சேறு பூசி குறை கூறி எங்கள் இயக்கத்தின் வெற்றியை தடுக்க இயலாது”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-
இந்த மைதானம் பூராவிலும் நிறைந்துள்ள திடசங்கற்பமிக்க மக்களை பார்க்கும்போது ஜனாதிபதி தோ்தலின் வெற்றிக்காக தமது பங்கினை சோ்ப்பதற்காக ஹொரண தொகுதியின் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே தெளிவாகின்றது. இன்றவில் ஜனாதிபதி போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் சஜித் பிரேமதாஸ அவர்கள் எவரிடமிருந்தாவது சிறிது பணத்தை பெற்று பாடசாலைக்கு ஒரு பஸ் வண்டியையோ வகுப்பறையையோ வழங்கி பிள்ளைகளை சோ்த்துக்கொண்டு “நண்பர்களே” என அரசியல் உரைகளை ஆற்றுகிறார். திருவாளர் பொன்சேகா அவரை நிலத்தில் விழக்கூடிய வகையில் தாக்கியதால் இந்நாட்களில் சற்று பேச்சினை குறைத்துக்கொண்டுள்ளார். மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்க அரச பலத்தை பிரயோகித்து மாவட்ட அபிவிருத்தி சபைக் குழுக்களுக்கு அழைப்பு விடுத்து மறுபுறத்தில் இலஞ்சம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பண்டங்களையும் காணி உறுதிகளையும் வழங்கி வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்க சதாகாலமும் எதிர்காலம் பற்றிய மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார். அவர் எதிர்காலத்திற்காக சதாகாலமும் கூறிய எதுவுமே ஈடேற்றப்படவில்லை. இற்றைக்கு சில காலத்திற்கு முன்னர் எமது நாட்டின் இளைஞர்களுக்கு தங்க பிறேஸ்லற் அணியக்கூடிய நிலைமையை உருவாக்குவதாக கூறினார். எனினும் இறுதியில் வீட்டிலுள்ள தாய்மார்களினதும் சகோதர சகோதரிகளினதும் தங்கச் சாமான்கள் வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. அதன் பின்னர் நாடு பூராவிலும் wifi வலயங்களை உருவாக்குவதாக கூறினார். இறுதியில் ரூபா 100 டேட்டா காட் ஒன்றைக்கூட போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2020 அளவில் இலங்கையை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக முன்னர் கூறினார். மேலும் நான்கு வருடங்களில் கடன் செலுத்த ஆரம்பிப்பதாக இப்போது கூறுகிறார். முன்னர் வானொலியில் பாட்டுக்கு பாட்டு என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது போல் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறுவது பொய்க்கு பொய். ஒரு பொய்யை கூறி அது மறந்து போகும்போது மற்றுமொரு பொய்யை கூறி முதலாவது பொய்யை மக்களுக்கு மறக்கச் செய்கிறார். பொய்க்கூறிக் கொண்டே பயணிக்கிறார். அவர்கள் ஏதாவது செய்வார்கள் என நம்பிய காலத்தில் மக்கள் அந்த பொய்யை நம்பினார்கள். எங்கள் நாட்டு மக்களை இவ்வாறான பொய்களால் ஏமாற்ற முடியாததென்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொய் வேலை செய்த, பொய்க்கூறிய அனைவரையும் தமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலே தோற்கடிக்க மக்கள் தயார்.
எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் எவருமே சந்தேகம் கொள்ளவேண்டாம். நாங்கள் எவருமே திடீரென ஒரு தோ்தலில் குதித்தவர்களல்ல. ரணில் விக்கிரமசிங்க பொறுக்கிக் கொள்ளும் முறைக்கிணங்க ஒரு கும்பலை கழற்றி எடுப்பதே செய்து வருகிறார். மொட்டிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து போல் ஆங்காங்கே ஆட்களை சோ்த்து அமைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். மகிந்த ராஜபக்ஷாக்களுக்கு அப்படியொன்றுக்கூட கிடையாது. சஜித் பிரேமதாஸவும் தனது கும்பலை பாதுகாத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முயற்சி செய்கிறார். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் கொழும்பில் தேசிய மாநாட்டினை நடாத்தி, அதன் பின்னர் மாவட்ட மாநாடுகளை நடாத்தி, தொகுதி மாநாடுகளை நடாத்தி, நிறைவேற்று குழுக்கள் மற்றும் ஏற்பாட்டு சபைகளை நிறுவி இயங்கினோம். இறுதியாக கிராம சேவைகள் பிரிவு மட்டத்தில் வட்டார சபைகளை தாபித்தோம். இவ்விதமாக பிரமாண்டமான அமைப்பாண்மை வலையமைப்பை சுற்றி இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராகிய ஐக்கிய தேசிய கட்சியினதும் மொட்டுக்கட்சியினதும் அனைவரையும் சோ்த்துக் கொண்டோம். அத்துடன் நின்று விடாமல் பெண்களை சோ்த்துக் கொண்டு “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” அமைப்பினை கட்டியெழுப்பினோம். பல்லாயிரக்கணக்கான பெண்கள் அமைப்புக்களை அரசியலில் சோ்த்துக்கொண்டோம். முப்படைகளைச் சோ்ந்த இளைப்பாறியோர் கூட்டமைப்பு, இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒன்றியம், சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு, மருத்துவர்களின் கூட்டமைப்பு, பொறியியலாளர்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சக்திகளையும் மேல் மட்டத்தைப்போன்றே அடிமட்டம்வரை சோ்த்துக் கொண்டு நாட்டை மாற்றியமைக்கக்கூடிய பாரிய மக்கள் சக்தியொன்றை கட்டியெழுப்பினோம். எங்கள் நாட்டின் பொதுமக்கள் திசைகாட்டியை வெற்றிபெற செய்விப்போம் என்ற நம்பிகையுடன் இயங்கி வருகிறார்கள்.
எமக்கு மாத்திரமன்றி திசைகாட்டி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ரணிலுக்கும் உண்டு. ரணிலால் இந்த ஜனாதிபதி தோ்தலை எளிதாக வெற்றி கொள்ள முடியுமானால் ஜனாதிபதி தோ்தலை பிற்போடுவதற்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கமாட்டார். அவர்கள் ஜனாதிபதி தோ்தலிலிருந்து தப்பியோட முயற்சி செய்வதன் மூலமாக திசைகாட்டியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. நாங்கள் திசைகாட்டியை வெற்றிபெற செய்விப்பது நிலவுகின்ற இந்த அரசாங்கங்களுக்கு பதிலாக புதிய அரசாங்கமொன்றை அமைக்கவோ அல்லது தற்போது இருக்கின்ற ஜனாதிபதிக்கு பதிலாக வேறொரு ஜனாதிபதியை நியமிக்கவோ மாத்திரமல்ல. நாங்கள் கட்டியெழுப்புகின்ற அரசாங்கத்தால் மாத்திரம் சாதிக்கமுடியாத நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து ஆழமான சமூக மாற்றத்தை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புகின்ற சவால் எம்மெதிரில் இருக்கின்றது.

தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கவேண்டும் உலக நாடுகள் வேகமாக முன்னோக்கி நகர்ந்தாலும் இருந்த ஆட்சியாளர்கள் கடந்த நூற்றாண்டில் எமது நாட்டை பின்னோக்கியே எடுத்துச் சென்றார்கள். சுதந்திரம் பெற்றவேளையில் ஆசியாவின் பலம் பொருந்திய இரண்டாவது பொருளாதாரம் நிலவிய இலங்கை இன்று ஆசிய பொருளாதாரத்தில் கடைசி நாடாகும். சுதந்திரம் பெறுகின்ற வேளையில் வெளிநாடுகளுக்கு கடன்பட்டிராத இலங்கை தற்போது கடனை மீளச்செலுத்த முடியாமல் வங்ரோத்து அடைந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் போய் முனங்கிக்கொண்டு கடனை மீளச்செலுத்துதலை பிற்போட்டுக்கொண்டிருக்கிறது. எமக்கு முற்காலத்தில் பாரிய மகிமை இருந்ததென்பதை நாம் அனைவரும் அறிவோம். புதிய ஆட்சியாளர்கள் மீண்டும் பராக்கிரமபாகு யுகமொன்றை உருவாக்குமெனக்கூறி ஒரு மாயையை முன்வைத்தார்கள். மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் துட்டுகெமுனு பற்றிய திரைப்படமொன்றை திரையிட்டு இறந்தகாலத்திற்கு கொண்டு செல்ல எத்தனித்தார்கள்.
மலேசியா விவசாயத்தில் புதிய விதையினங்களை கண்டுபிடித்து முன்னேறிச் செல்கையில் எமது நாடு மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தவற்றை தெருவோரங்களில் விற்கின்ற நிலைக்கு மாறியது. மலேசியாவின் புளியம் பழமும் இங்கு இருக்கிறது. ஏனைய நாடுகள் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பதுறையில் பாய்ச்சலுடன் முன்னேறுகையில் ஆட்சியாளர்கள் எமது நாட்டை இருபதாம் நூற்றாண்டிலிருந்து கைவிட்டார்கள். அதனால் இருபத்தோராம் நூற்றாண்டுக்காக எமது நாட்டுக்கு மறுமலர்ச்சி யுகத்திற்கான பாச்சலொன்று அவசியமாகியிருக்கிறது. அதனால் இது ஜனாதிபதி தோ்தலை வென்றெடுக்கின்ற அல்லது பாராளுமன்ற தோ்தலை வென்றெடுக்கின்ற ஒரு தோ்தல் அல்ல. முழுநாடுமே ஒரு பாச்சலுக்காக அனைத்து சக்திகளையும் சோ்த்துக்கொள்கின்ற தருணமாகும். அதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இணைத்துக்கொண்ட மக்கள் பங்கேற்பு உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவோம். சியம்பலாண்டுவவிற்கு, வவுனியாவிற்கு, கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிராத அபிவிருத்தியை அங்குள்ள மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். கீழிலிருந்து மேல்நோக்கி அதைபோலவே மையத்திலிருந்து பரிதிவரை மக்களுக்கு நியாயமான வகையில் பொறியமைப்பொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்வரை நிவாரணங்களை வழங்கி நிவாரணங்கள் இன்றி சொந்தக்கால்களால் நிற்கக்கூடிய மக்களை இந்நாட்டில் உருவாக்குவோம். இந்த பணியில் ஈடுபடுகின்றபோது எம்மிடம் அடிக்கடி கேட்கின்ற ஒரு சில கேள்விகள் இருக்கின்றன.
ஜே.வி.பி. மற்றும் என்.பி.பி. பற்றி கேள்வி கேட்கின்ற பலருக்கு இந்த மக்கள் இயக்கம் பற்றி விளங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்னர் தோ்தல் ஒன்று நெருங்குகையில் கூட்டணிகளை நிறுவிக்கொண்டு உறுப்பினர் பதவிகள், தேசிய பட்டியல் உறுப்பினர்கள் போன்றே அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்கின்ற அரசியலே காணப்பட்டது. எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள்? எனக் கேட்கின்ற எவருமே என்.பி.பி. மேடைகளில் இல்லை. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து நாட்டுக்காக எவ்வாறு சேவையாற்றுவது எனும் திடசங்கற்பம் கொண்ட குழுவினரே எம்மைச் சுற்றியிருக்கிறார்கள். மறுமலர்ச்சி யுகத்தின் பிரதான பணியாக இலங்கை தேசத்தவரை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இலங்கை தேசம் கட்டியெழுப்பப்பட்டதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைவரதும் அடையாளம் அதற்குள்ளே பாதுகாக்கப்படும். திசைகாட்டி உருவாகியுள்ள பல்வேறு அமைப்புக்களின் அடையாளம் தனித்தனியாக இருக்கின்ற அதேவேளையில் சீரழித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான மறுமலர்ச்சி யுகத்தின் செயற்பொறுப்புக்காக நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இவ்வாறான ஒரு சக்தி வேறு எவருக்குமே கிடையாது. ரோஹித அபேகுணவர்தன போன்ற ஒருவருக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் எமது அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு நியமிக்கப்படுகின்றவர்களின் தகைமைகளைப் பற்றி கேட்கிறார்கள். மஹிந்தானந்த அளுத்கமகே கமத்தொழில் அமைச்சராக இருந்த வேளையில் நுண்ணங்கிகள் இல்லாத கரிம உரத்தை சீனாவிலிருந்து கொண்டு வருவதாகக் கூறினார். எனினும் திசைகாட்டியைச் சுற்றி ஒவ்வொரு துறையையும் சார்ந்த உயர் மட்ட ஆற்றல் படைத்த தொழில்வாண்மையானவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள்.
எம்மை கண்டு பதற்றம் அடைந்துள்ள எதிரிகள் எமது உரைகளை திரிபுபடுத்தி மக்களை அச்சுறுத்துகின்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எம்மீது கல்லெறிந்து சேறு பூசி வீழ்த்த முடியாதென்பதை எதிரிகளுக்கு ஞாபகப்படுத்துகிறேன். நாங்கள் கூறும் கதைகளை திரிபடுத்தி பிரச்சாரம் செய்வதால் பதற்றமடைபவர்களுக்கு நாங்கள் முழு உரையையுமே கேட்குமாறு கூறியதும் எங்களுடைய உரைகள் அடங்கிய வீடியோவை முழுமையாக கேட்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனூடாக மிகவும் நன்றாக உண்மையை விளங்கிக்கொள்கின்ற மக்கள் அவர்களிடமிருந்து விலகி எங்களுடன் சோ்ந்துகொள்வார்கள். எமக்கு சேறு பூசுகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளை வேகமாக நிராகரிப்பார்கள். எம்மீது சேறு பூசுகின்ற யூ ரியுப் அலைவரிசைகள் மக்களால் வேகமாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. சேறு பூசல்களால் இந்த மக்கள் வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கமுடியாது. “முன்னணியின் தடைகளை கண்டு – எந்த ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டது” என கூறுவார்கள். ஆற்றின் ஓட்டம் தடைகளால் நின்றுவிடமாட்டாது. திசைகாட்டி அனைத்து தடைகளையும் தாண்டி முன்னோக்கி நகரும். நாங்கள் அனைவரும் ஜனாதிபதி தோ்தல் வரை ஒன்றாக சோ்ந்து எவராலும் தோற்கடிக்க முடியாத மக்கள் பிரவாகமாக கட்டியெழுப்பி முன்னோக்கி நகரவேண்டும். வெற்றி எங்கள் கைகளில் தான் இருக்கிறது. இறந்தகாலம் எதிரிகளுக்கு சொந்தமானதாகும். எதிர்காலம் மக்களுக்கு சொந்தமானதாகும். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பொதுமக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்போம். ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொண்டு மக்கள் நேயமுள்ள ஆட்சியை நிறுவி நாட்டை வெற்றிபெறச் செய்விப்போம்.

“மறுமலர்ச்சி யுகத்தில் பிரஜைகளின் வரலாற்றினை எழுதுவதற்கான உரிமை பிரஜைகளுக்கே கிடைக்கும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் எங்களுடைய கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நாசமாக்கினார்கள் என நாங்கள் அன்று நினைத்தோம். இன்று அது மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் நீங்களே. எனினும் நாட்டின் ஆட்சியாளர்கள் மாறவில்லை. அந்த ஊழல்மிக்க அயோக்கியமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் என்ற வகையில் ஒரே நோக்கத்துடன் கூட்டாக ஒன்றுசோ்ந்து நாம் அனைவரும் மீண்டும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்; கனவு காண்கின்ற வாய்ப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளை கொண்டதாக இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எம்மால் ஒன்றுசேர முடிந்துள்ளது.
எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் என்ன? இந்த மூர்க்கத்தனமான ஆட்சியை மாற்றியமைத்து இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தோழர் ஒருவரை நியமித்துக்கொள்ள எமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தோழர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கழியமுன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதாக கூறியிருக்கிறார். அதன்போது ஊழல் மிக்க பாராளுமன்றத்தை சுத்தம் செய்து எமக்கு அவசியமான வகையில், மக்கள் நேயமுள்ள, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற புதிய மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த இரண்டு விடயங்களை நிறைவு செய்து கொண்ட பின்னர் நாட்டை கட்டியெழுப்புகின்ற வேலையை தொடங்க எமக்கு இயலுமானதாக அமையும்.
முதலாவது நாளிலிருந்தே எமது செயற்பாடுகளில் எமது பாவனைகள் மூலமாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை நிறுவிக்கொள்வோம். அரசியல்வாதியின் எல்லையை விளங்கிக் கொள்ள தரவு விஞ்ஞானத்தின் பேரில் மக்களை முதன்மையாகக் கொண்ட மக்களை மையப்படுத்திய கொள்கைகளை வகிக்கின்ற அரசியல் கலாச்சாரமொன்றை நாங்கள் ஆரம்பிப்போம். அரசியல் என்பது சிறப்புரிமைகளுக்காக பேராசையுடன் இருக்கின்ற தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக உழைப்பதற்கு பதிலாக மக்களுக்கு நோ்மையாக சேவையாற்றுகின்ற மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரச பொறியமைப்பொன்றினை நாங்கள் நியமிப்போம். அந்த பொறியமைப்பூடாக புதிதாக உருவாக்கப்படுகின்ற புதிய எதிர்பார்ப்புக்களுடன் கூட்டான கொள்கைகளுக்கு அமைவாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுடன் அரசியல் தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்து இந்த நாட்டை படிப்படியாக கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சியுகத்தை நாங்கள் தொடங்குவோம்.
புதிய பொருளாதார முறையியலொன்று எமக்கு தேவை. மக்களை மையமாகக் கொண்ட, மக்கள் பங்கேற்பினை பெற்றுக்கொள்வதற்காக உற்பத்தி அதிகரிக்கின்ற பொருளாதாரமொன்று எமக்கு தேவை. அதற்காக அவசியமான தரவுகள், கொள்கைகள், விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். இந்த தேவையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் முதல் தடவையாக பெருந்தொகையான விஞ்ஞானிகள் ஒன்றுசோ்ந்து நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான ஆராய்ச்சிகள் என்ன என்பதை கலந்துரையாடுவதற்கான எமது ஆராய்ச்சிக் கொள்கையை நாங்கள் களமிறக்கினோம். அத்தகைய பொருளாதாரமொன்றில் எம்மனைவரினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு பலம் பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். இந்த நாட்டில் 52% ஆக அமைகின்ற பெண்களுக்கு தமது பராமரிப்பு வேலைகளுக்கு பெறுமதியொன்றைக் கொடுக்கின்ற, சமூக பொறுப்பை எடுத்துக்கொண்டு தமது தொழில்களை சுதந்திரமாக புரியக்கூடிய வகையிலான அரச இடையீடுகள் மூலமாக அந்த பராமரிப்பு வேலைகளில் சுமையை குறைத்துக் கொண்டு அவ்வாறு அமைக்கின்ற கட்டமைப்புக்குள் பெண்களுக்கு இந்த பொருளாதாரத்தின் சம பங்காளிகளாக மாறக்கூடிய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். அந்த பொருளாதாரத்தின் நன்மைகளை நாம் அனைவரும் நியாயமான வகையில் அனுபவிக்கக்கூடிய முறையியலொன்றை நாங்கள் தயாரிப்போம். அவை அனைத்தையும் செய்ய எங்களுடைய மனித வளத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவைகளூடாக மக்களுக்கு சேவையாக அமைகின்ற மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கக்கூடிய வகையிலான மக்கள் சேவைகள் கிடைக்கத்தக்க வகையிலான நிலைமாற்றமொன்றை நாங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

கல்வி கற்கின்ற ஒரு பிள்ளையை முன்பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை ஒரு நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாத்து, சமூகப் பொறுப்பு கிடைக்கின்ற, சமூகத்திலிருந்து தமக்கு கிடைக்கின்ற பொறுப்பு பற்றிய மனோபாவங்களை உருவாக்குகின்ற, சமூக அபிவிருத்தியில் பங்கேற்றக்கூடிய நிலைமையொன்று கட்டியெழுப்பப்படும். சமூகத்திற்கு தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய பிரஜையொருவரை உருவாக்குகின்ற கல்வியை நாங்கள் படிப்படியாக வழங்குவோம். ஆரோக்கியமான பிரஜையை உருவாக்குகின்ற, பாதுகாக்கின்ற சுகாதார சேவையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். பொதுமக்களின் தேவைகளுக்கிணங்க மக்கள்மீது கூருணர்வுபடைத்த பொதுப் போக்குவரத்துச் சேவையொன்றினை நாங்கள் உருவாக்குவோம்.
எமது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துவிட்ட உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எவரையும் பசியுடன் இருக்க இடமளிக்க மாட்டோம் என்பதோடு , போசாக்கினால் நிறைவடைந்த, உணவின் தரம் பற்றிய சந்தேகத்துடன் வாழ இடமளிக்க மாட்டோம். அதைப்போலவே எமக்கு பலம்பொருந்திய சமூகப் பாதுகாப்பு அவசியமாகும். சமூகத்தின் அனைத்துப் பாகங்களையும் ஊனமுற்றவர்கள், விசேட தேவை கொண்ட பெண்கள், பிள்ளைகள், மூத்த பிரஜைகள் அனைவருமே பாதுகாக்கப்படுகின்ற நிறுவன முறைமையொன்று எமக்கு அவசியமாகின்றது. எவருமே நிர்க்கதிநிலையுறத் தேவையில்லை. அனைவர் சார்பிலும் பொறுப்புக்கூறுகின்ற, அனைவரையும் பாதுகாக்கின்ற, சமூகப் பாதுகாப்பினை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த நாட்டுக்கு சட்டத்தின் ஆட்சி அவசியமாகின்றது. எவருக்கும் பாரபட்சம்காட்டாத, சட்டத்தின் ஆட்சி, நீதி, நியாயம் உறுதிப்படுத்தப்படுகின்ற சட்ட முறைமையொன்றை, நீதிமன்ற செயற்பாங்கினை நாங்கள் அமைத்துத் தருவோம்.இவையனைத்தையும் சாதித்துக்கொள்ள எமக்கு பலம்பொருந்திய அரசியலமைப்பொன்று தேவை. அந்த அரசியலமைப்பு மக்கள் இறைமைக்கு முதன்மைத்தானம் வழங்குகின்றவகையில், சனநாயகத்திற்கான அகல்விரிவான அர்த்தத்தைத் தருகின்றவகையில் தயாரிக்கப்படும். இலங்கைப் பிரஜை தேர்தலின்போது புள்ளடி இடுகின்ற நிலைக்கு அப்பால் பயணிக்கின்ற, தான் நிருவாகத்துடன் நேரடியாக தொடர்புபடக்கூடிய, தனது இறைமையை அமுலாக்கக்கூடிய, தனது உரிமைகள் உறுதிசெய்யப்படுகின்ற, பாதுகாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பினை வகுக்கின்ற செயற்பாங்கினை நாங்கள் தொடங்குவோம்.
நாங்கள் பல வருடங்களாக இரத்தம்சிந்திய ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாவோம். அதற்கு மூலகாரணமாக அமைந்த தேசிய ஒற்றுமையை நாங்கள் நிலைநாட்டுவோம். எந்தவொரு பிரஜைக்கும் பாரபட்சம் காட்டாத, இரண்டந்தர பிரஜையாக கருதாத, அனைவரும் இலங்கையர் எனும் அடையாளத்தைக்கொண்டதாக தனது கலாச்சார உரிமைகளை, மொழி, மதம் என்பவற்றை அபிமானத்தை பாதுகாக்கக்கூடிய சமூகமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற, சமூகத்தில் நிலவுகின்ற பன்வகைமைக்கு மதிப்பளிக்கக்கூடிய, தேசிய ஒற்றுமையுடனான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
நாங்கள் எதிர்பார்க்கின்ற மறுமலர்ச்சி, ஆழமான சமூக நிலைமாற்றம் என்பது மக்களின் யுகம் ஆரம்பிக்கின்ற காலப்பகுதியாகும். நாங்கள் 2500 வருடகால வரலாறு பற்றியும் 75 வருடகால வரலாறு பற்றியும் பேசினோம். எமக்கு வாசிக்க, கேட்க கிடைப்பது ஆட்சியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்ட வரலாறாகும். அந்த வரலாற்றின் வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஆட்சியாளர்கள் அல்லது பிரபுக்கள் வர்க்கத்தைச் சோ்ந்தவர்களாவர். மன்னர்களின் கோமகன்களின் ஜனாதிபதிகளின் கதைகளை கேட்கிறோம். பிரதமர்கள் அமைச்சர்கள் பற்றி தெரியும். இந்த நாட்டின் உண்மையான வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் அமைவது இந்நாட்டு மக்களே. அனைத்துவிதமான நெருக்கடிக்களையும் தாங்கிக் கொண்டு, அவற்றுக்கு முகங்கொடுத்து, நாட்டை வீழ்ந்திடச் செய்யாமல் இந்த நாட்டு மக்களே, இந்த நாட்டு பிரஜைகளே தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். எனினும் பிரஜைகளின் வரலாறு பற்றி கேட்க கிடைப்பதில்லை. எனினும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் நாங்கள் எழுதப்போவது பிரஜைகளின் வரலாற்றினையாகும். அதனை எழுதுகின்ற உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வார்கள். 2024 பின்னர் நாங்கள் ஆரம்பிப்பது பிரஜைகள் பொறுப்பேற்கின்ற, பிரஜைகள் எழுதுகின்ற, பிரஜைகள் நிர்மாணிக்கின்ற ஒரு வரலாற்றினையாகும். அதனை எழுதுவதற்கான உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வார்கள். அது தான் மறுமலர்ச்சி யுகத்தில் இடம்பெறுகின்ற தனித்துவமான விடயம். பிரபுக்கள் வர்க்கத்திலிருந்து விடுபட்ட பிரஜைகள் யுகமொன்றை நாங்கள் தொடங்குவோம். அதற்காகத்தான் அதன் பங்காளிகளான நீங்கள் அனைவரும் இந்த இடத்திற்கு குழுமியிருக்கிறீர்கள். அந்த மறுமலர்ச்சி யுகத்தை அடைவது ஒரு கனவு, எதிர்பார்ப்பு மாத்திரமன்றி அதனை யதார்த்தமாக அனுபவமாக எமது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வோம்.

“இலங்கையை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கும் அதற்கு தலைமைத்துவம் வழங்குவதற்குமான ஆற்றலை திசைகாட்டி கொண்டுள்ளது” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி-
தோழர் நிலந்தி ‘உபுன்டு’ எனும் வார்த்தையை கூறும்போது எனது செவிகளுக்கு இசை போன்றதாகும். தென்னாபிரிக்க ஜனநாயக உரையாடலில் ‘உபுன்டு’ எனும் வார்த்தை முன்னேற்றமடையாத பழங்குடியினரின் வார்த்தையொன்றல்ல. மானிட சகோதரத்துவம் பற்றிய உன்னதமான வார்த்தையாகும். இவர் தான் எங்கள் ‘உபுன்டு’. இதுதான் எமது சகோதரத்துவம். இதுதான் பிறர் பற்றிய எமது அர்ப்பணிப்பு, கரிசனை.
இன்று நான் இங்கு பேசுவது சுயநலம் கலந்த ஒரு ஆசையுடனாகும். நான் முதிய வயதில் இருப்பவன். எனக்கு ஏற்பட்ட ஒரு தொல்லையிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். அது எனது சுயநலம் கலந்த ஆசையாகும். தொலைக்காட்சியை பார்க்கையில், செய்தித்தாள் ஒன்றை வாசிக்கையில் எனது வயது முதிர்ந்த வாழ்க்கைபூராவிலும் இரண்டு கண்களுக்கும் தொல்லையாக அமைந்த ஒரு சிக்கலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். செய்திகளை கேட்கும்போது செவிகளுக்கு ஏற்படுகின்ற இரைச்சலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். எனது செவிகள் இரண்டையும் வேதனைக்கு இலக்காக்குகின்ற அந்த தொந்தரவு என்ன? இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்கின்ற மனிதர்களின் முகங்களும் குரல்களும் வியத்தகு துன்புறுத்தலாகும். ஒக்டோபர் மாதத்தில் அந்த அரியாசனத்திலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். இது சுயநலம் கலந்த ஆசையாகும். உங்கள் அனைவருக்கும் அவ்வாறான ஆசைகள் கிடையாதா? அது தான் எங்கள் ‘உபுன்டு’. அது தான் சகோதரத்துவம். அதுதான் நாடு பற்றிய கரிசனை. அது தான் பிறர் மீதான கரிசனை. அது ஒரு கூட்டான ஆசையாகும். கூட்டான பிரார்த்தனையாகும். கூட்டான கனவாகும். அநுர என்றால் எமது கூட்டான கனவின் பிரதிபிம்பம். எங்களுடைய கூட்டான ஆசையின் இதய கீதம். எங்களுடைய கூட்டான ஆசையின் பிரதிபலிப்பு.
இலங்கையின் அரசியல் துறையின் இந்த நேரத்திலே இருக்கின்ற மிகவும் பரிபூரணமான, தூரநோக்குடைய அரசியல்வாதி அவராவார். அவர் எங்கள் இதயக்கனி. எதிர்வரும் சில மாதங்களில் அந்த பிரதிபிம்பத்தை பின்தொடர்ந்து செல்வோம். புதிய இலங்கையொன்று பற்றி கனவு காண்கின்ற ஆசையுடன் இயலுமைகளையும், அறிவையும் சோ்த்திடுவோம். எங்கள் கனவுடன் விவேகத்தை சோ்த்திடுவதற்கான புலனுணர்வினை சோ்த்திடுவதற்கான ஆசைதான் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும் தோழர் அநுரவின் வெற்றியுமாகும். இந்த நாட்டின் கீர்த்திமிக்க எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருப்போம். அந்த எதிர்காலம் நிகழ்காலமாக மாறுகின்ற நாள் அண்மித்துவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் ஒரு பலம் தான் விவேகத்தின் மூலாதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ அதனை ஈர்த்துக்கொள்வதற்கான திறந்த மனதும் நலமான நெகிழ்ச்சித்தன்மையும் எம்மிடமிருக்கிறது. அதுவொரு வலிமையாகும். இலங்கைக்கு மறுமலர்ச்சியொன்று அவசியமாகும். இலங்கையை மறுமலர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தலைமைத்துவம் வழங்குவதற்கான ஆற்றலும் எமக்கிருக்கின்றது.
மறுமலர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு மனிதத்திற்கு எதிரான 11 பாவங்களை தோற்கடிக்கவேண்டியது அவசியமாகும். நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கை சார்ந்த கோட்பாடுகள் இல்லாத அரசியலை நாங்கள் தோற்கடிக்கவேண்டும். அது கொள்கைசார் அத்திவாரமற்ற அரசியல் பாவமாகும். அந்த பாவம் எம்மிடம் கிடையாது. இரண்டாவது பாவம் களியாட்டமாகும். எங்கள் நாட்டின் அரசியல்வாதிகள், ஜனாதிபதி மைந்தர்கள் கொவிட் 19 க்குள்ளே பஞ்சத்திற்குள்ளே கடல் சார் விளையாட்டுகளுக்காக சென்றிருந்தார்கள். அந்த பொழுதுபோக்கு ஒரு பாவமாகும். அரசியல்வாதிகளின் இரவு நேர வாழ்க்கையை அலசிப்பார்த்தால் மனசாட்சியற்ற பொழுதுபோக்கு நிறைந்த வாழ்க்கையாகும். உழைப்பற்ற செல்வம் ஒரு பாவமாகும். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான காரணம் இந்த நாட்டின் அரசியல் வர்க்கத்தின் கொள்ளைக்கார வளையம் பற்றிய தோழர் அநுரவின் அம்பலப்படுத்தல். அந்த பாவத்தை தோற்கடிப்பதற்கான பலமும் ஆற்றலும் இருப்பது தேசிய மக்கள் சக்தியிடமாகும். குணநலனற்ற அறிவு நான்காவது பாவமாகும். மக்களுடன் கூட்டான விடுதலையின் பக்கத்தில் நிற்பதற்கான குணநலன் இல்லாவிட்டால் அது அறிவல்ல. அது குணநலனற்ற அறிவாகும். ஐந்தாவது பாவம் விழுமியங்களற்ற தொழில் முயற்சி. எங்களுடைய சாதாரண பொதுமகன் பசியால் இறக்கையில், நோய் காரணமாக இறக்கையில் அவர்களுக்குக்காக கொண்டுவரப்படுகின்ற அன்டிஜன்களிலிருந்து திருடுகின்ற வியாபாரி ஒழுக்கநெறிகளற்ற நல்லவை கெட்டவைப்பற்றிய தர்க்கரீதியான சிந்தனையற்ற வியாபாரியாவான். ஆறாவது பாவம் மனிதபிமானமற்ற விஞ்ஞானம். அது மனிதத்துவத்திற்கு பொதுவான சகோதரத்திற்கு சேவையாற்றாவிட்டால் அந்த விஞ்ஞானத்தில் பலனொன்று இருக்கிறதா? அதுதான் இன்றைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கையை வெளியிடுகின்ற தருணத்தில் விஞ்ஞானிகள் கேட்டது. பரிவிரக்கமற்ற மதம் ஏழாவது பாவமாகும். புத்த மதமோ வேறொரு மதமாகவோ அமையலாம். பொறுப்பற்ற உரிமை ஒரு பாவமாகும். எமது பொறுப்புக்கள் பற்றி உணர்வுமற்ற உரிமைகளை பின்தொடர்ந்து செல்வது ஒரு பாவமாகும். தேசிய மக்கள் சக்தியின் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்ல அவ்வாறான பாவங்களுக்கு பங்களிப்புச் செய்யாத மக்களே சோ்த்துக்கொள்ளப்படுவார்கள். அடுத்த பாவம் பொறுப்புக்கூறலற்ற அதிகாரம். இந்த நாட்டில் அனைத்து அதிகாரங்களும் பொருளாதார, நிதிசார், ஆயுத, கலாச்சார, அதிகாரத்தை ஒப்படைக்கையில் அதுவொரு பொறுப்புக்கூறலாகும். ஒக்டோபர் மாதத்தில் தமது கைக்கு வருகின்ற இந்த மட்டற்ற அதிகாரத்தை பாவிப்பவர் ஜனாதிபதி தோழர் அநுர குமார ஆவார். நீண்ட காலம் நிலைத்திராத அபிவிருத்தி ஒரு பாவமாகும். எமது சூழற்றொகுதி, விலங்கினங்கள், எமது தாவரங்கள், எமது மதனிதர்களை நாசமாக்குகின்ற அபிவிருத்தியல்ல எமது மறுமலர்ச்சியின் அபிவிருத்தி. அடுத்த பாவம் நியாயமற்ற சட்டம். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அரசியலமைப்பில் சிறிய ஓட்டையை எதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்? நுழைந்து செல்வதற்கான சட்ட இடைவெளி. அதாவது விடுபட்டு செல்வதேயன்றி நீதியை தேடுவதில்லை. எமது கூட்டங்களில் குழுமியுள்ள மக்கள் நீதியின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கையில் சட்டத்தில் எவ்வளவுதான் ஓட்டைகள் இருந்தாலும் நாங்கள் அவற்றை தோற்கடிப்போம்.
நான் இங்கு முன்வைத்த 11 பாவங்களை தோற்கடித்த செல்வம் கொழிக்கும் சமூகமொன்றை சகவாழ்வு கொண்ட சமூகமொன்றை உருவாக்கக்கூடிய அரசியல் சக்தியொன்று இருக்குமேயானால் அது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். அதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய எங்கள் கனவின் இதயகீதம் அநுர குமார திசாநாயக்க ஆவார். எதிர்வருகின்ற ஒரு சில வாரங்களில் இந்த மாற்றத்திற்கான பயணத்தில் நாங்கள் கூட்டாக பயணிப்போம். மென்மேலும் சோ்த்துக் கொள்வோம். எங்கள் அனைவரதும் முகங்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் ததும்புகின்ற நாளை நோக்கி பயணிப்போம்.
(-Batticaloa, June 27, 2024-)
(-Batticaloa, June 27, 2024-)




(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.06.23-) தேர்தல் நெருங்கும்போது இதுவரை அதிகாரத்தில் இருந்த குழுக்கள் பலவிதமான பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களைப் போன்றே சேறுபூசுதல்களையும் விடுவித்து வருகின்றது. மறுபுறத்தில் மக்கள் மத்தியில் தேர்தல் நடாத்தப்படுமா என்ற ஐயப்பாடு உருவாக்கப்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட தேர்தலுக்கு அஞ்சிய அனைவரும் சனாதிபதி தேர்தலை தவிர்த்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மதலில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள், ரணிலுக்கு மேலும் இரண்டு வருடங்களை கொடுங்கள், அரசியலமைப்பின் வாசகங்களில் நுழைந்து செல்லுங்கள் […]
(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.06.23-)

தேர்தல் நெருங்கும்போது இதுவரை அதிகாரத்தில் இருந்த குழுக்கள் பலவிதமான பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களைப் போன்றே சேறுபூசுதல்களையும் விடுவித்து வருகின்றது. மறுபுறத்தில் மக்கள் மத்தியில் தேர்தல் நடாத்தப்படுமா என்ற ஐயப்பாடு உருவாக்கப்பட்டு வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட தேர்தலுக்கு அஞ்சிய அனைவரும் சனாதிபதி தேர்தலை தவிர்த்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மதலில் பொதுத்தேர்தலை நடாத்துங்கள், ரணிலுக்கு மேலும் இரண்டு வருடங்களை கொடுங்கள், அரசியலமைப்பின் வாசகங்களில் நுழைந்து செல்லுங்கள் என்றவகையில் பலவற்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் அவர்களின் தரப்பில் தேர்தலொன்றை தவிர்த்துச்செல்ல இவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச தேர்தலை தவிர்த்துச்செல்ல எந்தவிதமான வாய்ப்பும் இல்லையென்பதால் தேசிய மக்கள் சக்தி மீது குறைகூறி வருகிறார்கள். அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஷாக்களின் குழு சிதறிப்போயுள்ளது. சனாதிபதி தேர்தல் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கையில் அதில் போட்டியிடுவதா இல்லையா என்பதை திட்டவட்டமாக கூறமுடியாத அளவுக்கு அது சிதைந்துபோய் விட்டது. மொட்டின் ஒருசில தலைவர்கள் ரணிலுடன், மற்றுமொரு பிரிவினர் மகிந்தவுடன் இருக்கையில் மேலும் சில குழுக்கள் நாலாபக்கங்களிலும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ராஜபக்ஷாக்களின் பெரும்பாலானோர் ரணில் சரணம்நாட தூண்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மற்றுமொரு பிரிவினர் இறுதித் தருணத்தில் சிறிது பணத்தை தேடிக்கொள்ள எத்தனிக்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க சனாதிபதி அதிகாரத்தைப் பிரயோகித்து பொதுப்பணத்தை செலவிட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பாகவும் தேர்தல் சட்டங்களுக்கு எதிராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் நிதியேற்பாடுகளை ஒதுக்கி மக்களுக்கு பத்து கிலோ அரிசியைக் கொண்டுத்துக் கொண்டிருக்கிறார். இத்தருணத்திலும் எமது நாட்டில் தேர்தல் சட்டங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற உள்ளுரதிகார சபைத் தேர்தலுக்கு ஏற்புடைய நிலைமையே இருக்கின்றது. அதைப்போலவே கட்சியின் பெயர் ஐக்கிய மக்கள் சக்தியாக விளங்கியபோதிலும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாதென்பது திரு. பொன்சேகாவின் பாராளுமன்ற உரைமூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. பொருட்களை பங்கிடுவதற்காக கொமிஸ் பெறுகின்ற விதத்தை வெளிப்படுத்தினார். மேலும் சிலர் இரவிரவாக உரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஹர்ஷ த சில்வாவை உள்ளிட்ட பலம்பொருந்திய பொருளாதார குழுவொன்று இருப்பதாகக் கூறினாலும் சஜித் பிரேமதாச பொருளாதார ஆலோசகர்களை நியமித்துக் கொண்டுள்ளார். சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ஷாக்களால் மக்களின் ஆதரவினை சேரத்துக்’கொளள் முடியாதிருப்பதோடு தேசிய மக்கள் சக்தி நாட்டுக்குள் போன்றே சர்வதேசரீதியாகவும் பாரிய ஒத்துழைப்பினைப் பெற்று முன்நோக்கி நகர்கின்றது. அனைத்து சக்திகளும் திசைகாட்டியுடன் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிச் செல்கின்றவேளையில் ராஜபக்ஷ, ரணில், சஜித் அனைவரும் கூட்டாக தேசிய மக்கள் சக்தியை குறிவைத்து அசிங்கமான சேறுபூசுதல்களையும் திரிபுபடுத்தல் இயக்கமொன்றையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
அவதூறாக பேசினாலும் சேறு பூசினாலும் பதலளிப்பது இலகுவானதாக அமைந்தாலும் திரிபுபடுத்துதலை பாரதூரமான மட்டத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். 76 வருடங்களாக தம்மை துன்புறுத்திய முறைமைக்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை தடுப்பதற்காக அவதூறுகள், சேறுபூசுதல் மற்றும் உண்மையைத் திரிபுபடுத்துதல் என்பவற்றை முழுமையாக தோற்கடிக்க மக்கள் புரிந்துணர்வுடன் அணிதிரள வேண்டும். திசைகாட்டிக்கும் ரணிலுக்கும் இடையில் ஒரு டீல் இருப்பதாக பொய்ப்பிரசாரமொன்றை மேற்கொண்டு வருகிறார்கள். ரணிலுடன் டீல்போட்டு காப்பாற்றிக்கொள்ள எமக்கு என்ன இருக்கிறது? திசைகாட்டி வெற்றிபெறும் என்பதற்காகவே உள்ளுரதிகார சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டது. கூட்டுறவுச் சங்கத் தேர்தலைக்கூட பிற்போட்டு எமது பயணத்தை தடுக்க முயற்சி செய்கிறார்கள். எனினும் உண்மையான டீல் ராஜபக்ஷாக்களுக்கும் ரணிலுக்கும் இடையிலேயே நிலவுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ரணிலுடன் பேச்சுவாரத்தைகளை நடாத்துகிறார்கள். இரவில் ரணிலுடன் எதிர்கால அரசியல் பற்றித் திட்டமிடுகின்ற இவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து திசைகாட்டிக்கு ரணிலுடன் டீல் இருப்பதாக கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் பலம்பொருந்தியவர்கள் 19 பேர் ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பன்முகப்படுத்திய நிதிகளைப் பெற்றுள்ளார்கள். எமது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வழங்காத பன்முகப்படுத்திய நிதியை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளார்கள். அதுமாத்திரமல்ல வயின் ஸ்டோர்ஸ் உரிமங்கள் போன்றே பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர்கள் எல்லோருமே ஒன்றாக இருந்துகொண்டு தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுத்துநிறுத்த அசுத்தமான கூட்டமைப்பினைக் கட்டியெழுப்பி தேசிய மக்கள் சக்திக்கு எதிராக தாக்குதல் நடாத்துகிறார்கள். திசைகாட்டி பெறுகின்ற வெற்றி காரணமாக பகிரங்கமாகவே பொய்கூறத் தொடங்கி இருக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி வெற்றிகரமான ஒரு வேலையைச்செய்தால் அதனைக் காப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். முடியாமல்போனால் சேறு பூச தொடங்குகிறார்கள். தோழர் அநுரவின் வெற்றிகரமான லண்டன் பயணம் சம்பந்தமாக படைக்குந்திறன்மிக்க பிரச்சார நிகழ்ச்சியொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. டபள் டெக்கர் பஸ், கட்டிடங்களை பயன்படுத்தி படைப்பாற்றல்மிக்கதாக செய்யப்பட்டிருந்த பிரச்சார வேலைகளுக்கு பணம் எங்கிருந்து என்று அவர்கள் பதற்றமடைந்திருந்தார்கள். அந்த நாட்டின் பஸ்களில் அதுபோன்ற பிரச்சார அலுவல்களை மேற்கொள்ள முடியாதெனக்கூட அறிந்திராதவர்கள்தான் அதிகாரத்தை வேண்டிநிற்கிறார்கள். மேதினத்தை நடாத்த டிக்கெற் அச்சிட்டு பணம் தேடிக்கொண்டதாக மகிந்தானந்த அழுத்கமகே பாராளுமன்றத்தில் கூறினார். மே தினத்திற்கான செலவுகளை ஈடுசெய்துகொள்ள மக்களிடமிருந்து பணத்தை சேகரிப்பதற்கான டிக்கெற்றுகளை நாங்கள் அச்சிடுவது 1978 இல் இருந்தாகும். மற்றுமொரு பிரச்சாரத்தைக் கொண்டுசென்றார்கள் கணடாவில் கூட்டங்களுக்கு சோற்றுப்பொதிகளைக்கொடுத்து வரவழைத்துக்கொண்டதாக. எமது வெளிநாடு சென்றுள்ள தோழர்கள் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக கூட்டாக பல்வேறு பொருளாதார வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கின்ற எமது தோழர்கள் இலங்கையின் உணவுவகைகளை தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக தேரத்தல் நிதியைத்தை பலப்படுத்திக்கொள்வது அவர்கள் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டமாகும். கணடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில் எமது தோழர்கள் புரிகின்ற வேலைகள் பற்றி அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. எமது அரசியல் சம்பந்தமாக கொள்கைசார் உரையாடலொன்றுகூட இல்லாமல் அவர்கள் குறைகூறல், பொய்புனைதல் மற்றும் திரிபுபடுத்துதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் செயற்பாடுகளைப் பார்த்தால் எமக்கு உண்மையாகவே கவலையாக இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து தனியார் ஆதனங்களை கையகப்படுத்திக் கொள்வதாகவும் பிரச்சாரமொன்றை மேற்கொண்டு வந்தார்கள். உண்மையாகவே நாங்கள் செய்வது எமது உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதையாகும். இன்றளவில் ஆதனங்கள் இல்லாதவர்களும் வாழக்கூடியவகையில் ஆதனமுள்ளவர்களாக மாற்றியமைப்பதாகும். “சரதியலின்” செயற்பாங்கு எமது கொள்கையல்ல. உண்மையாகக் கூறப்போனால் அவர்களே ஆதனங்களை இழக்கச் செய்விக்கிறார்கள். இலட்சக்கணக்கான கைத்தொழில்கள் மூடப்பட்டுவிட்டன, ஆதனங்கள் வங்கிகளுக்கு சொந்தமாகி விட்டன, தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை சுமத்தப்பட்டு தற்போது புதிதாக ஆதன வரியொன்றையும் விதித்துள்ளார்கள். அவ்வாறு செய்துகொண்டும் அவர்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும் திசைகாட்டி ஆதனங்களை கையகப்படுத்திக் கொள்வதாகவும் இன்னமும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கி, மக்களை பிச்சையேந்த வைத்து, அவர்கள் வந்ததும் நாட்டைக் கட்டியெழுப்புவதாக இன்னமும் கூறுகிறார்கள். குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட தலைவர்களை குறிவைத்து கீழ்த்தரமான சேறுபூசுகின்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு ஒன்றுமே கிடையாதென்பதால் கடந்தகாலத்தில் ஐ.ம.ச. குழுவொன்று தோழர் ஹந்துன்னெத்தியை குறிவைத்து விசேட தாக்குலொன்றை நடாத்தியது. மத்திய வங்கி மோசடியை அவர்கள் மூடிமறைக்க முற்பட்டவேளையில் அதற்க இடமளிக்காமல் கோப் குழுவின் தவிசாளர் என்றவகையில் தோழர் ஹந்துன்னெத்தி செயலாற்றினார். தற்போது ஐ.ம.ச. இல் இருக்கின்ற அப்போது யு.என்.பி.இல் இருந்த பலர் கோப் குழு அறிக்கைக்கு “புஃட் நோற்” போட்டு ரணிலைப் பாதுகாக்க முயற்சி செய்தவர்களாவர். தோழர் ஹந்துன் சம்பந்தமாக அவர்களுக்கு பழைய பகையும் இருக்கின்றது. நாங்கள் உங்கள் அனைவருக்கும் வலியுறுத்துவது ” ஐயாமார்களே உங்களின் கட்சிகளைப்போலல்ல தேசிய மக்கள் சக்தி. எமது எவரையும் தனிக்கவிட்டு தாக்குதல் நடாத்தி வீழ்த்த முடியாது. நாங்கள் அனைத்திற்கும் கூட்டாக முகங்கொடுப்போம்.” என்று. எந்தவொரு சவாலையும் கூட்டாக எதிர்கொண்டு வெற்றிகொள்ளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கிறது.
குறிப்பாக தோழர் ஹந்துன்னெத்தி இற்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் “நெத் எஃப் எம்” கலந்துரையாடலில் அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற பொருளாதார செயற்பாடுகள் பற்றி விபரித்த ஒரு விடயத்தை துண்டுகளாக வெட்டிஎடுத்து வகுத்துதொகுத்து செய்தியொன்றை புனைந்துள்ளார்கள். முதலில் லேக்ஹவுஸ் செய்தித்தாள்களில் இதனைப் பிரசுரிக்க விரும்பவில்லை. பின்னர் தேசிய ரூபவாஹிணியில் திரிபுத்தப்பட்ட அந்த செய்தியை ஒளிபரப்பிய பின்னர் திணமின செய்தித்தாளில் பிரசுரித்தார்கள். காலையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அந்த செய்தியை மேற்கோள் காட்டினார்கள். சனாதிபதியிடம் இருக்கின்றவர்கள் இந்த செய்தியை திரிபுபடுத்தி உள்ளார்கள். ஒரு சட்டப் பிரச்சினை நிலவுவதாலேயே அதனை லேக்ஹவுஸ் பிரசுரிக்கத் தயங்கியது. நாங்கள் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதைப்போலவே “எம்மால் பொருளாதாரத்தை சீராக்க முடியாது” என தோழர் ஹந்துன்னெத்தி கூறியதாக பிரச்சாரம் செய்துள்ளார்கள். அது ஒரு திரிபுபடுத்தலாகும். எமது ஆட்சியில் ஒரே இரவில் பொருளாதாரத்தை சீராக்க முடியாது எனக்கூறியதை வெட்டி இவ்வாறு பிரச்சாரம் செய்துள்ளார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இவ்வாறு வெட்டிஎடுத்து திரிபுபடுத்திய செய்திகளின் மூல நிகழ்ச்சியை ஆராய்ந்து பாரக்குமாறு நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். முழுக் கதையையும் கேளுங்கள். அப்போது உண்மையை உணரலாம்.
தோழர் லால்காந்த சம்பந்தமாகவும் அவ்வாறான திரிபுபடுத்தலை செய்தார்கள். “ஒருசிலர் கூறுகிறார்கள் நாங்கள் வந்தால் தொழில்முயற்சிகளை கையகப்படுத்துவோம் என”. அந்த தலைப்பை திரிபுபடுத்தி “ஒரு சிலர் கூறுகிறார்கள்” எனும் பகுதியையும் “என” என்கின்ற பகுதியையும் வெட்டிவிட்டு “நாங்கள் வந்தால் தொழில்முயற்சிகளை கையகப்படுத்துவோம்” எனும் வாக்கியப் பகுதியை போடுகிறார்கள். இந்த அசிங்கமான, கீழ்த்தரமான, அருவருப்பான வேலையையே தற்போது செய்துவருகின்றனர். அவர்களால் அதைத்தவிர வேறு ஒன்றையுமே செய்ய முடியாது. இந்த விளையாட்டு மூலமாக திசைகாட்டியின் பயணத்தை நிறுத்திவிட முடியாது. தமது தோல்வியால் வெறிபிடித்துள்ளவர்கள் முன்னெடுத்து வருகின்ற திரிபுபடுத்துதல் சம்பந்தமாக நாங்கள் அவதானத்துடன் இருந்து எமது உத்தியோகபூர்வ ஊடகங்கள் வாயிலாகவும் எம்மிடமிருந்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் அவ்விதமாக கீழ்த்தரமாக நடந்துகொள்ளவேண்டாமென எதிரிகளை வலியுறுத்துகிறோம். சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய இடங்களில் அதனைச் செய்வோம். தேவையான இடங்களில் மாத்திரம் தெளிவுபடுத்துவோம். பொருட்படுத்தாமல் விடக்கூடிய இடங்களில் பொருட்படுத்தாமல் விடுவோம். மக்களின் நம்பிக்கையுடன் பரிசுத்தமான நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக உழைப்போம்.
இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரும் பங்கேற்றனர்


(-Colombo, June 17, 2024-) ‘புதிய தேசிய மறுமலச்சிக்காக இலங்கையர் அனைவரும் அணிதிரளுகின்ற தருணத்தில் தோழமையின் பெயரால் இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்கு ஈகைத் திருநாள் உறுதுணையாக அமையட்டுமென பிரார்த்திக்கிறோம்…” அநுர குமார திசாநாயக்க
(-Colombo, June 17, 2024-)
‘புதிய தேசிய மறுமலச்சிக்காக இலங்கையர் அனைவரும் அணிதிரளுகின்ற தருணத்தில்
தோழமையின் பெயரால் இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்கு ஈகைத் திருநாள்
உறுதுணையாக அமையட்டுமென பிரார்த்திக்கிறோம்…”
அநுர குமார திசாநாயக்க

(-London, June 15, 2024-) கேள்வி: வினைத்திறனின்மை மற்றும் உத்தியோகத்தர் மனநிலை (பணிக்குழு ஆட்சிமுறை) நிறைந்த அரச சேவையை வினைத்திறன் கொண்ட மக்கள் நட்புமிக்க அரச சேவையாக மாற்றுவதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது? பதில் : அரசசேவை எமது நாட்டுக்கு அத்’தியாவசியமானதாகும். எமது அரசசேவை முற்றாகவே சீரழிந்துள்ளது. அரச சேவையை வழங்குவதற்காக உறப்படுகின்ற செலவுகளே சுமை. கல்வி, சுகாதாரம் சுமையல்ல. அந்த சேவையை வழங்குவதற்கான கிரயமே சுமையாக அமைகின்றது. அரசியல் இடையீடுகள் […]
(-London, June 15, 2024-)

கேள்வி: வினைத்திறனின்மை மற்றும் உத்தியோகத்தர் மனநிலை (பணிக்குழு ஆட்சிமுறை) நிறைந்த அரச சேவையை வினைத்திறன் கொண்ட மக்கள் நட்புமிக்க அரச சேவையாக மாற்றுவதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது?
பதில் : அரசசேவை எமது நாட்டுக்கு அத்’தியாவசியமானதாகும். எமது அரசசேவை முற்றாகவே சீரழிந்துள்ளது. அரச சேவையை வழங்குவதற்காக உறப்படுகின்ற செலவுகளே சுமை. கல்வி, சுகாதாரம் சுமையல்ல. அந்த சேவையை வழங்குவதற்கான கிரயமே சுமையாக அமைகின்றது. அரசியல் இடையீடுகள் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களால் நிரப்பப்பட்டு சீர்குலைக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒருபோதுமே உறவுமுறைத் தொடர்புகளின்பேரில், அரசசேவையை நெறிப்படுத்த மாட்டோம் என்பதற்கு உத்தரவாதமளிக்கிறோம். துறைசார் அனுபவங்கள் வாய்ந்த, திறன்கொண்ட துறைசாரந்த நிபுணர்களே அவற்றை நெறிப்படுத்த வேண்டும். ஒவ்வோர் அரச நிறுவனத்திற்கும் அந்த துறைசார் திறன்களும் ஆற்றல்களும் நிறைந்த குழுவினர் மாத்திரமே நியமிக்கப்படுவர்.
ஆட்சேர்ப்பு, பதவியர்வு, இடமாற்றம் அரசியலின்பேரில் இடம்பெறமாட்டாது. நாங்கள் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் பகிரங்க கூட்டத்தில் “எங்களின் இந்த கூட்டத்தில் பங்கேற்பது அரசாங்க சேவையில் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமையாக மாட்டாது” எனக் கூறுமாறு சவால் விடுக்கிறோம். நாங்கள் அதனைக் கூறுகிறோம். விஷமத்தனமான செயல்களைப் புரிவதற்கான கும்பல்கள் இருக்கலாம். அதனைத் தடுப்பதற்காகத்தான் அதிகாரம் இருக்கின்றது. அதிகாரம் பிறப்பது அரசியலமைப்பில் அல்ல. அதிகாரம் பிறப்பது மக்களிடமிருந்தாகும். மக்கள் எமக்கு வினைத்திறன்மிக்க அரசசேவைக்காக அதிகாரத்தை தருகிறார்கள். அரசியலமைப்பினால் அதிகாரத்தை பிரயோகிப்பதற்கான எல்லைகளே தரப்படுகின்றது. மக்களிடமிருந்து எமக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதற்காக பிரயோகிக்க அஞ்சமாட்டோம். அரசசேவையை வினைத்திறன் கொண்டதாக்கிட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை அமுலாக்கவேண்டும்.
கேள்வி: NPP அரசாங்கமொன்றின் கீழ் புத்த சமயத்திற்கு கவனிப்பு குறைவடையுமென பரவிச் செல்கின்ற வதந்திகள் சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில் : எமக்கு எதிரான குழுக்கள் எமக்கு எதிராக உண்மையற்ற, குறைகூறல் மட்டத்திலான தகவல்களை வெளியிடுவதை அவர்களின் தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மதத்திற்கு அமைவாக வாழ்வது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களே. அவர்களின் கூற்று பொய்யானதாகும். அரசியலமைப்பின் 9 வது உறுப்புரையில் பௌத்த மதத்திற்காக வழங்கப்பட்டுள்ள முதன்மைத்தானம் எவ்விதத்திலும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது. 2015 தொடக்கம் 2019 வரை இலங்கைக்கு அரசியலமைப்பொன்றினை ஆக்குவதற்கான உரையாடலொன்று நிலவியது. அந்த உரையாடலில் 9 வது உறுப்புரையை மாற்றியமைப்பது பற்றி பேசப்படவே இல்லை. அனைவரும் 9 வது உறுப்புரையை ஏற்றுக்கொண்டு கலந்துரையாடலை மேற்கோண்டார்கள். அதனால் இனந்தெரியாத அச்சத்தை ஏற்படுத்த முற்படுகிறார்கள். 9 வது உறுப்புரையில் கைவைக்க மாட்டோம். அதில் கைவைக்கவேண்டிய அவசியம் தமிழ் தலைமைகளுக்கும் கிடையாது.

கேள்வி: தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சமவுரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமென்ன?
பதில்: நாங்கள் எந்த நோக்கத்திற்காக அதிகாரத்தை எடுக்கிறோம்? தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவா அதிகாரத்தை எடுக்கிறோம்? நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர்ந்து தேசிய ஒற்றுமையை உருவாக்கிக் கொள்வதற்காகவே அதிகாரத்தை எடுக்கிறோம். நாங்கள் அதிகாரத்திற்கு வருகிறோம் என்ற செய்தியே பெரும்பாலும் இனவாதத்தை தோற்றிகடித்திடும். இனவாதம் அவ்வாறே நிலவினால் நாங்கள் அதிகாரத்திற்கு வரமாட்டோம். அதற்கு அப்பால் இருக்கின்ற மறுசீரமைப்பு செயற்பாங்கு என்ன? தமிழ்பேசுகின்ற மக்களும் பொதுவில் மக்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். தமிழ் மொழியைப் பேசுகின்றதாலேயே அவர்களுக்கே தனித்துவமான பல சிக்கல்களும் இருக்கின்றன. பொதுப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கவேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்காக உறப்பட நேரிடுகின்ற செலவானது வடக்கு, தெற்கு, கிழக்கினை உள்ளிட்ட அனைவருக்குமே பொதுவான பிரச்சினையாகும். அவை தீர்க்கப்படல் வேண்டும்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழியில் அரசாங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? ஒவ்வொரு பிரஜைக்கும் தனது மொழியில் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கான உரிமை உறுதிசெய்யப்படல் வேண்டும். அரசியலமைப்பில் அது இருந்தாலும் நடைமுறையில் அமுலாக்கப்படுதில்லை. நாங்கள் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். ஒவ்வொரு பிரஜைக்கும் தனது மதத்தை பின்பற்ற அவசியமான சுற்றுச்சூழல் உருவாக்கிக் கொடுக்கப்படும். மதம் என்பது தமது நம்பிக்கையாகும். அதைப்போலவே பல்வேறு கலாசார அடையாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரினதும் கலாசார அடையாளங்களை கௌரவத்தினை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். பொதுமக்கள் ஒன்றாக கொண்டாடக்கூடிய வைபவ வாய்ப்பகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
பிரதானமான பிரச்சினை அதிகாரப் பகிர்வுடனேயே பின்னிப்பிணைகின்றது. மாகாண சபைகளை நிலவுகின்ற இந்த விதத்திலேயே பேணி வருவோம். நாங்கள் அரசியல் தீர்வு என்றவகையில் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மாகாண சபைகள் தாம் வென்றெடுத்த உரிமை என நினைக்கிறார்கள். மாகாண சபைகளை ஒழித்துக்கட்டுவதானால் அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை பறித்தெடுப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். அப்போது மீண்டும் அநாவசியமான முரண்பாடொன்று உருவாக்கப்படும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை உருவாகும்வரை, இலங்கையரை உருவாக்கி புதிய கட்டமைப்புகளை இனங்காணும்வரை மாகாண சபைகள் இவ்வண்ணமே இயங்கும். எனினும் நிரந்தர தீர்வு இந்த இடத்தில் கிடையாதென நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக மலையகத்தில் வசிக்கின்ற மக்கள்மீது கவனஞ் செலுத்தப்படுகின்றது. கடந்த காலத்தில் மலையக மக்கள் பற்றிய பிரகடனமொன்றை நாங்கள் வெளியிட்டோம். அவர்களின் வீடமைப்புப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அவர்களுக்கே தனித்துவமான பிரச்சினைகள் இருக்கின்றன. இலங்கையர்களான மக்களை உருவாக்குவதென்பது அவர்களின் அடையாளத்தை ஒழித்துக்கட்டுவதையல்ல. அவர்களின் அடையாளத்தி-ற்கு மதிப்பளித்து, ஏற்றுக்கொண்டு ஒன்றுசேர்வதாகும். வடக்கிலுள்ள மக்கள் சனாதிபதி தேர்தலில் தெற்கின் தலைவரொருவரை தெரிவுசெய்வதாயின் என்.பி.பி. இன் தலைமைத்துவத்தை தெரிவுசெய்வார்களென நாங்கள் நம்புகிறோம். நாங்கள் கட்டியெழுப்பப்போகின்ற அரசு அனைவருக்கும் நிழல் தருகின்ற குடையாக மாறும். தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையை அமைக்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கில் உள்ள அனைவரையுமே பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சரவையாக அமையும். நாங்கள் வடக்கில் உள்ள மக்களிடம் கேட்கிறோம் வடக்கிற்கு தனிவேறான ஆட்சியொன்று அவசியமா, நாட்டின் நிருவாகத்தின் பங்காளிகளா மாறுவதா அவசியமென்று. தேசிய சிக்கலைக் குறைத்துக்கொண்டு தேசிய ஒற்றுமையை நிர்மாணிக்க அவசியமான ஆரம்பகட்ட நடவடிக்கைளை நாங்கள் மேற்கொள்வோம்.

கேள்வி: ஒருசில வாக்காளர்கள் தோ்தலை பகிஷ்கரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான உங்களின் வேலைத்திட்டமென்ன?
பதில்: மிதக்கின்ற வாக்காளர்கள் வெற்றிபெறுகின்ற பக்கத்தைநோக்கி மிதக்கிறார்கள். சமுதாயத்திற்குள்ளே நாங்கள் வெற்றிபெறுவோமென்ற விடயத்தை எம்மால் பலம்பொருந்தியவகையில் உறுதிசெய்ய முடியுமா? அந்த அளவுக்கே மக்கள் எம்மை நோக்கி வருவார்கள். அதைப்போலவே அனைவருமே எம்மை நோக்கி வருவார்களென நம்பிக்கைவைக்க முடியாது. எந்தவொரு மனித சமூகத்திலும் வித்தியாசமான கண்ணேட்டத்தில் பார்ப்பவர்கள் இருக்கக்கூடும். எனினும் காற்று இந்த பக்கத்திற்கு திரும்பினால் இது வெற்றிவரை பயணிக்கும்.
கேள்வி: உயர்கல்வி தொடர்பாக இருக்கின்ற உங்களின் எண்ணக்கரு யாது? வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு வர முயற்சி செய்த வேளையில் அவை நிறுத்தப்பட்டன. அதனால் நாங்கள் பாரிய வருமானத்தை இழந்தோம். பலர் இலங்கையில் கல்வி கற்கமுடியாமல் வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அவற்றை நிறுத்தி நாங்கள் எவ்வாறு ஒரு தேசம் என்ற வகையில் வேறு நாடுகளிலுள்ளவர்களை இலங்கைக்கு வரவழைத்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ள வேலைத்திட்டமென்ன?
பதில்: எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் தனியார் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அழைப்பித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்ற மூடநம்பிக்கையில் இல்லை. இந்தியாவில் பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. 2022 இல் 71.000 பேர் உயர் கல்விக்காக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து 11 இலட்சம் பேர் வெளியில் சென்றுள்ளார்கள். பிரித்தானியாவில் கல்விக்காக 82% வருவது இங்கு தங்குவதற்காகவே. இங்கு வருவதற்குள்ள பாதைதான் கல்வி பயில்வது. எந்தவொரு பிள்ளையையும் பாதுகாப்பற்ற நாட்டுக்கு கல்விக்காக அனுப்ப மாட்டார்கள்.
கல்வியில் புதிய அறிவு மேற்கிலேயே உருவாகின்றது. அதனால் புதிய அறிவினைத் தேடிக்கொண்டு மேற்கிற்கே செல்லவேண்.டி இருக்கின்றது. அதனால் மேற்கிற்குச் செல்கின்ற போக்கு அதிகமானதாகும். தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதாயின் இதனைவிட எமது நாடு பாதுகாப்பானதாக அமையவேண்டும். எமது நாடு பாதுகாப்பற்ற நாடாக இருக்கையில் வெளிநாட்டு மாணவர்கள் வரமாட்டார்கள்.
கல்வி என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எமது ஆட்சியில் அரச கல்வி நிலவும். ஒழுங்குறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட உயர்கல்வி நிலவும். வெளிநாட்டுக் கல்வியும் நிலவும். ஒரு பிள்ளைக்கு தனியார் கல்வியைப் பயிலவேண்டுமானால் அதற்காக ஒழுங்குறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பிள்ளை வெளிநாடுசென்று கல்வி பயிலவேண்டுமானால் அதற்கான வாய்ப்பு உரித்தாகும்.
கேள்வி: இலங்கையிலிருக்கின்ற அடிப்படை பிரச்சினையாக நோ்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சிதைந்து விட்டதாக நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள். அதனை கட்டியெழுப்புவதற்காக நீங்கள் நம்பிக்கையை உறுதிசெய்வதை ஆரம்பித்தால் நல்லது. அதற்காக சட்டவிரோதமாக பெறப்பட்ட வாகன அனுமதிப்பத்திரங்களையும் எங்களின் வரித்தொகையையும் எங்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தது அதிகாரப் பகிர்வின் கீழ் உங்களுடைய கொள்கைப் பிரகடனத்தை தாமதிப்பதன் மூலமாக கொள்கையற்றவர்கள் என வெளிப்படுத்தப்படுகிறது. அதற்கான உங்களுடைய தீர்வு என்ன?
பதில்: எமது அரசநிருவாகத்தில் பிரதானமான பிரச்சினையொன்று நிலவுகின்றது. அரச நிரவாகத்தில் பொறுப்புக்கூறல் கிடையாது. மக்களுக்கும் எமக்கும் இடையிலான உடன்பாடு என்ன? நாங்கள் மக்களிடம் கூறுகிறோம் இந்தஇந்த விடயங்களை செய்வோமென. அதற்காக நீங்கள் எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் எனக் கூறுவோம். அதுதான் எமக்கிடையில் நிலவுகின்ற சமூக உடன்படிக்கை. தேர்தல் என்பது அரசியல் இயக்கத்திற்கும் பிரஜைக்கும் இடையில் நிலவுகின்ற தேர்தல் உடன்படிக்கையாகும். வாக்காளனின் பொறுப்ப புள்ளடி இடுவதுடன் முடிவடைகின்றது. கொடுத்த வாக்குறுதிகளுக்கு பொறுப்பக்கூறவேண்டியது அரசாங்கத் தரப்பினரின் பொறுப்பாகும். அரசியல்வாதியிடமும் மக்களிடமும் அவ்வாறான பொறுப்குக்கூறல் பற்றிய குறிப்பு கிடையாது. “தேர்தல் பிரகடனம் என்பது அந்த காலத்தில் கூறுகின்றவை அல்லவா” என சனாதிபதிமார்களே கூறியிருக்கிறார்கள். அதாவது பொறுப்புக்கூறல் கிடையாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பொறுப்புக்கூறுவது யார்? உயர்நீதிமன்றம் வழக்குத் தீர்ப்பொன்றினை வழங்கியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்காக அந்த நேரத்தில் சேனாதிபதி என்றவகையில் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சரென்றவகையில் தனது பொறுப்பினை சரிவர ஈடேற்றாமைக்காக 100 மில்லியன் நட்டஈடு செலுத்தவேண்டியநிலை முன்னாள் சனாதிபதிக்கு ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, பி.பீ. ஜயசுந்தர, அஜித் நிவாட் கப்ரால் குழுவினரக்கு எதிராக மற்றுமொரு வழக்குத் தீர்ப்பு கிடைத்தது. மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். பொருளாதாரத்தை முறைப்படி முகாமைசெய்து முன்நோக்கி எடுத்துச்செல்வதற்கான பொறுப்புக்கூறல் நிலவவேண்டும். அவர்கள் பொறுப்பினை ஈடேற்றவில்லையென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களை தவறாளியாக்கியது. அரசியல்வாதி பொதுமக்களுக்கு எந்தளவிற்கு பொறுப்புக்கூற வேண்டுமென்பது பற்றி இரண்டு வழக்குத் தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்படுள்ளது. பொதுக்களின் பாதுகாப்பு பற்றிய பொறுப்பு சனாதிபதிக்கு உண்டு. பொருளாதாரத்தை சீரழிய இடமளியாமல் பேணிவரவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. உயர்நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் கிடைத்திராவிட்டால் எவருமே அரசியல்வாதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென நினைக்கமாட்டார்கள். எமது ஆட்சியில் நிலவுகின்ற கட்டமைப்பிற்குள் பொறுப்புக்கூற வேண்டியவர் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறாவிட்டால் அதற்கெதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் நிறுவனங்களின் ஒழுங்குவிதிகளில் குறிப்பிடப்படுகின்றன. அதற்கமைவாக நாங்கள் செயலாற்றுவோம்.
அண்மையில் நாங்கள் பொறியியலாளர் மாநாட்டினை நடாத்தினோம். அதன்போது ஐந்து பொறியியல்துறைகள் பற்றிய கொள்கைகளை நாங்கள் முன்வைத்தோம். அதற்கு முன்னர் சுற்றுலாத் தொழிற்றுறை பற்றிய கொள்கைகளை சமர்ப்பித்தோம். இந்த 29 ஆந் திகதி இலங்கையில் இற்றைவரை மேற்கொண்டிராத ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மாநாட்டினை எற்பாடு செய்திருக்கிறோம். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாங்கினூடாகவே உலகம் முன்நோக்கி நகர்கின்றது. ஒரு காலத்தில் மிகவும் அதிகமான பீரங்கிகளின் சொந்தக்காரரரே உலகத்தை ஆட்சிசெய்தார்கள். அதன் பின்னர் உலகத்தை ஆட்சிசெய்தவர்கள் மிகவும் அதிகமான நிதிப் பலத்தைக் கொண்டவர்களாவர். வருங்காலத்தில் உலகத்தை ஆளப்போகின்றவர்கள் மிகஅதிகமான தொழில்நுட்பத்தின் உரிமையாளர்களே. ஐக்கிய அமெரிக்கா தனது வரவுசெலவின் அதிகமான பங்கினை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கி உள்ளது. 533 பில்லியன் டொலர்களாகும். எமது மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும்.
ஜுன் 29 ஆந் திகதி நடாத்தப்படுகின்ற மாநாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை பகிரங்கப்படுத்துவோம். தேர்தல் நெருங்கும்போது எமது ஒட்டுமொத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: எமது நாட்டின் சிறுவர் பாதுகாப்பு பாரிய பிரச்சினையாகி இருக்கிறது. அது பல வருடங்களாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இலங்கை பொலிஸின் கடுமையான குற்றச்செயல்கள் பற்றிய வருடாந்த அறிக்கைகளின்படி சிறுவர் துர்ப்பிரயோகம் அதிகரித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின்கீழ் இலங்கை சிறார்களுக்கு நியதிச்சட்டமுறையான தனித்துவம் வழங்கப்படுகின்றதா?
ஜப்பான், செம்பியா போன்ற நாடுகள் தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக சிறுவர் பாதுகாப்பினை மாற்றியுள்ளது. சிறுவர் பாதுகாப்பு என்பது உடல்ரீதியான பாதுகாப்பு மாத்திரமல்ல. கல்வி, சுகாதாரம், வறுமையொழிப்பு ஆகிய அனைத்தினதும் சேர்க்கையாகும். அதன்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின்கீழ் இலங்கையின் தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக சிறுவர் பாதுகாப்பு மாற்றப்படுமா?
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அடுத்த சனாதிபதி என்றவகையில் அநுர குமார திசாநாயக்க நியமிக்கப்பட்டால் நீங்கள் எமது பிள்ளைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக எடுக்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் என்ன? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் எடுக்கின்ற ஆரம்பகட்ட நடவடிக்கைகள் என்ன?
பதில்: அரசியலமைப்பினால் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். அவையிரண்டையும் சேர்த்துக்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேசிய பாதுகாப்பின் மையப்பொருளாக பிள்ளைகள் மாறுவதற்குப் பதிலாக பிரஜைகளின் பாதுகாப்பின் மையப்பொருளாக பிள்ளைகள் மாறுவார்கள். பிரஜைகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பில் முதன்மையானதாக கருதப்படுவது பிள்ளைகளின் பாதுகாப்பாகும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயார்.
எங்கள் முதற்கட்ட நடவடிக்கைதான் ஒவ்வொரு பிள்ளைக்கும் உணவு கொடுப்பது. எமது நாட்டில் ஐந்து வயதிற்கு குறைவான பிள்ளைகளின் போசாக்கின்மை ஏறக்குறைய 21% ஆகின்றது. ஐந்து வயதினைவிடக் குறைந்த பிள்ளைகள் ஐவரை எடுத்துக்கொண்டால் ஒரு பிள்ளை போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றது. அந்த பிள்ளைகளின் உரிமைகள், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைவிட “உணவு” முதன்மை இடம் வகிக்கின்றது. எனவே எமது கொள்கைப் பிரகடனத்தில் பிரஜைகளின் உணவு, சுகாதாரம், கல்வியை நாங்கள் தெளிவாக உறுதிசெய்திருக்கிறோம்.
இரண்டாம்கட்ட நடவடிக்கையாக பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக இருக்கின்ற நிறுவனங்களில் மறுசீரமைப்பினை எற்படுத்த வேண்டும். இந்த லேபளை ஒட்டிக்கொள்வதற்காக ஒருசில நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களை வினைத்திறன் கொண்டவையாக மாற்றி நெறிப்படுத்தவேண்டும்.
மூன்றாவது விடயம் பொலிஸில் சிறுவர் குற்றச்செயல்கள் பற்றி கண்டறிவதற்காக விசேட கூறு ஒன்று தாபிக்கப்படல் வேண்டும். வயது ஐந்து வருடங்களில், ஏழு வயதில் துர்ப்பிரயோகத்திற்கு இலக்காகின்ற பிள்ளைகளின் வழக்குகள் 22,23 வயதிலேயே விசாரிக்கப்படுகின்றது. அது எவ்விதத்திலும் நியாயமானதல்ல. இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதற்காக துரிதமான பொறியமைப்பொன்று நிறுவப்படும்.
கேள்வி: அரசியல்வாதிகள் இடைக்கிடையே அங்குமிங்கும் விற்பனையாகிறார்கள். உங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இதனை நிறுத்துவீர்களா? திரிபு நிலை ஏற்படவும் இதுதான் காரணம்.
பதில்: அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகையில் அதனை ஆக்குவதற்கான முன்மொழிவுகளை நாங்கள் சமர்ப்பித்தோம். அதில் ஒரு முன்மொழிவுதான் பாராளுமன்றத்தில் கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகும் என்கின்ற வாசகமாகும். பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மூலத் திருத்தத்தில் அந்த வாசகம் இருந்தது. பாராளுமன்றத்தில் சட்டமொன்று ஆக்கப்படுகையில் குழுநிலை எனும் கட்டம் வருகின்றது. குழுநிலைக் கட்டத்தில் தினேஷ் குணவர்தன எழுந்து அதனை நீக்கிவிடுமாறு கூறினார். அந்த நேரத்தில் நீதி அமைச்சர் என்றவகையில் இதனை சமர்ப்பித்தவர் விஜேதாச ராஜபக்ஷ ஆவார். விஜேதாச ராஜபக்ஷ இணங்கினார். அந்த வாசகம் இருந்திருந்தால் விஜேதாச ராஜபக்ஷவிற்கும் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகிப் போயிருக்கும்.
அரசியல்வாதியின் கட்சிதாவல் பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறோம். அது அரசியலை தெருச்சுற்றிமயமாக்கி விட்டது. அண்மையில் வழக்குத் தீர்ப்பொன்று வந்தது. முஸ்லீம் காங்கிரஸின் நசீர் அஹமட் கட்சி தாவியமை காரணமாக உறுப்பினர் பதவி வறிதாகியது. எனினும் ஹரீன் பர்னாந்துவினதும் மனுஷ நாணாயக்காரவினதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டுவிட்டன. தீர்ப்பு வழங்குவது தாமதித்துள்ளது.
எவர் சனாதிபதியானாலும் பாராளுமன்றம் கலைக்கப்படும். கட்சிதாவல் தொடர்பான வழக்குத் தீர்ப்பு வழங்குதல் இதற்கு முன்னரும் நேர்ந்துள்ளது. 1993 அளவில் லலித், காமிணீ நீங்கிய தருணத்தில் எட்டு உறுப்பினர்கள் நீங்கினார்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகியது. அரசியலமைப்பிற்கு மேலும் வாசகங்கள் தேவையெனில் அதனைச் சேர்த்திடுவோம். கட்சி தாவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகுமென எற்கெனவே வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: உங்களுடைய உயிர் பாதுகாப்பு?
பதில்: நாங்கள் மக்களுடனேயே செயலாற்றவேண்டும். பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டும். உயிரை நயமாக விற்றுவிட முடியாது. அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தில் இருந்துகொண்டு நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
கேள்வி: தூதரக சேவையை தூதரக உத்தியோகத்தர்களை கொண்டு மாத்திரம் பேணிவர எதிர்பார்க்கிறீர்களா? அவ்வாறின்றே தூதரக சேவைக்கு அரசியல் உத்தியோகத்தர்களை நியமிக்க எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: வெளியுறவுச் சேவை பற்றிய விடயத்தில் அதற்கான கல்வியைப் பயின்ற, அதற்காகவே பயிற்றப்பட்ட குழுவொன்று இருக்கின்றது. அவர்கள் தொடர்பில் நாங்கள் அதிக அக்கறையைக் காட்டுவோம். சமூகஞ்சார் அனுபவம் உள்ளவர்களை அனுப்பிவைப்பதில் தவறுகிடையாது. இங்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. நாவலகே பெனற் குறே எவ்வாறு உரோமிற்கு செல்வது? ஜாலிய விக்கிரமசூரிய எவ்வாறு அமெரிக்க தூதுவரானது? ஷிரந்தியின் தம்பி எவ்வாறு சீசெல்ஸிற்குச் செல்வது? ரஷ்யாவிற்கு உதயங்க வீரதுங்க எவ்வாறு செல்வது? அத்தகைய அரசியல் நியமனங்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றில் இடம்பெறமாட்டாது. எமது தூதரக சேவையை நாங்கள் புதிய சந்தைகளை தேடுகின்ற திசையைநோக்கி ஆற்றுப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்தருணத்தில் வணிகரீதியான ஆற்றல்களைக்கொண்ட குழுக்கள் தூதரக சேவையில் ஈடுபடுத்தப்படுவது வெற்றிகரமானதாக அமையுமென நாங்கள் நினைக்கிறோம். நாட்டின் அவசியப்பாட்டுடன் தொடர்புபடுத்திக் கொண்டுதான் நாங்கள் தூதரக சேவையில் அமர்த்துவோம்.
கேள்வி: எம்மைப்போன்ற சிறிய நாடுகள் முன்னேற்றமடைந்திருப்பது உற்பத்திப் பொருளாதாரமொன்றின் கீழ் அல்ல. சேவைகள் பொருளாதாரத்தினூடாகவே. கல்வி, நிதிசார் சேவைகளை, விற்பனை செய்யவும் முடியாவிட்டால் சேவைகளின் உற்பத்திக்காக உங்களிடமிருக்கின்ற வேலைத்திட்டமென்ன?
பதில்: நீங்கள் கூறுகின்ற சேவைப் பொருளாதாரம் நிலவுகின்ற ஒவ்வோர் இராச்சியத்திலும் உற்பத்திப் பங்கொன்று இருக்கின்றது. நாங்கள் ஒரு சிறிய நாடாவோம். சேவைகள் பொருளாதாரத்தில் ஒரு பங்கு இருக்கின்றது. எமது நாட்டில் IT துறையில் பாரிய சேவை வாய்ப்பினை உருவாக்கிக்கொள்ள முடியும். கப்பற்பயணத்துறையின் சேவை வாய்ப்புகளின் பெரும்பங்கினை கைப்பற்றிக்கொள்ள முடியும். நிதிசார் சந்தையில் ஒரு மையநிலையமாக எம்மை மாற்றிக்கொள்ள முடியும்.
எனினும் அவசியமான முட்டைகளை இறக்குமதி செய்யாமல் உற்பத்தி செய்துகொள்ள முடியும். கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் குறைந்தபட்சம் தமக்கு அவசியமான அடிப்படை பண்டங்களை தாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டுமென்ற புதிய எண்ணக்கருவொன்று கட்டியெழுப்பப்படவேண்டுமென்ற அழுத்தம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அங்கு விவசாயத்தை நவீனமயமாக்குகின்ற திசைக்கு நாங்கள் செல்லவேண்டி ஏற்படும். அந்த இடத்திற்கு நாங்கள் பயணிக்கவேண்டும். எமது கனியவளங்களின் அடிப்படையில் எமக்கு பொருளாதார வாய்ப்புவளங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்த இடத்திற்குச் செல்லவேண்டும். அத்தகைய பல துறைகளை நாங்கள் தெரிவுசெய்திருக்கிறோம்.. நாங்கள் உற்பத்தியில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என இனங்கண்டு கைத்தொழில் துறை தொடர்பான புதிய மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்’றும் சேவைகள் பங்கினை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி: அரசியலமைப்பிலே ஒரு பிரிவு இருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து வருடங்களை ஆறு வருடங்களாக நீடித்துக்கொண்டு இருக்கமுடியுமா? வடக்கு கிழக்கின் சிறுபான்மை வாக்குகளை வென்றெடுப்பதற்கான உங்களுடைய வேலைத்திட்டம் என்ன?
பதில்: சனாதிபதியீன் பதவிக்காலம் ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பினாலன்றி மாற்றியமைத்திட முடியாதென 83 வது உறுப்புரையில் இருக்கின்றது. அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தில் இந்த உறுப்புரை திருத்தப்படவில்லை. எனினும் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறுப்புரையை எவ்விதத்திலும் ரணில் விக்கிரமசிங்கவினால் பயன்படுத்திக்கொள்ள முடியாது. இப்போது சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டு அடுத்ததாக வருகின்ற சனாதிபதியால் மாத்திரமே அவ்வாறு செய்யமுடியும். அதனால் 83 வது உறுப்புரைக்குள்ளே நுழைந்துசெல்வதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது.
அடுத்ததாக வடக்கு சம்பந்தமான பிரச்சினையில் நாங்கள் காண்பது வெற்றிக்காக தமிழ் வாக்குகள் தேவையென்ற அடிப்டையில் அல்ல. வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய அனைத்து மக்களினதம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாங்கள் அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும். நாங்கள் தெற்கில் மாத்திரம் வெற்றிபெற்றால் அதன்மூலமாக வெளிக்காட்டப்படுவது வடக்கின் மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதாகும். இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கிழக்கு, வடக்கு, தெற்கு, மலையக மக்கட் சமுதாயத்தின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. நாங்கள் வடக்கில் ஒருபகுதி பணியை ஆற்றிவருகிறோம். இளைஞர் தலைமுறையினரின் எழுச்சியொன்று இருக்கின்றது. கிழக்கின் முஸ்லிம் மக்களின் பாரிய போக்கு நிலவுகின்றது. வடக்கும், தெற்கும், கிழக்கும், அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதே எமது எதிர்பார்ப்பு. அதனை மையமாகக்கொண்டு நாங்கள் அந்த பிரதேசங்களில் விரிவான பல வேலைத்திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.
கேள்வி: உங்களின் அரசாங்கமொன்றின் கீழ் விவசாயக் கொள்கை எவ்வாறு அமுலாக்கப்படும்? கமக்காரர்களின் சிக்கல்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்து ஏதேனும் மட்டத்திற்கு கொண்டுவருவதற்காகவுள்ள கொள்கை என்ன?
பதில்: எமது விவசாயத்தில் இருக்கின்ற பிரதானமான சிக்கல் திட்டமிடப்பட்ட விவசாய உற்பத்தியொன்று இல்லாமையாகும். உலகின் எந்தவோர் உற்பத்தியும் சந்தைக்கு வருவது தரவுகள், தகவல்களின் அடிப்படையிலாகும். எமது விவசாயம் இருப்பது தரவுகள், தகவல்களின் அடிப்படையில் அல்ல. மோப்பத்தின் அடிப்படையிலாகும். திட்டமிடப்பட் விவசாயமொன்று எம்மிடம் இல்லை. எமது முதலாவது முயற்சி ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி சந்தைக்கு வரத்தக்கவகையில் ஒழுங்கமைவதாகும். பலம்பொருந்திய பயிர்ச்செய்கைத் திட்டமொன்றுக்குள் விதையினங்கள், உள்ளீடுகள், தொழில்நுட்பம், பொதிசெய்தல், களஞ்சியப்படுத்துதல், சந்தை, அறுவடைக்குப் பிந்திய விரயத்தை தடுத்துக்கொள்ளல், புதிய விதையினங்களை அறிமுகஞ் செய்தல் போன்ற பல துறைகளில் புதிய ஆராய்ச்சிகள், புதிய துறைகள் அவசியமாகும். அவை பற்றி கருத்திற்கொண்டு எமது விவசாயக் கொள்கையை வகுத்திருக்கிறோம்.
(-தேசிய மக்கள் சக்தியின் லண்டன் மக்கள் சந்திப்பு – 2024.06.15-) நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். உங்களுக்கும் எம்மனைவருக்கும் இருப்பது கூட்டான தேவையாகும். ஆட்சியில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக நீங்கள் தோற்றுகிறீர்கள். நீங்களும் நாங்களும் ஒரே நோக்கத்தில் பயணிக்கின்ற கூட்டான மனித சமுதாயமாகும். உங்கள் மனதில் இந்த […]
(-தேசிய மக்கள் சக்தியின் லண்டன் மக்கள் சந்திப்பு – 2024.06.15-)

நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். உங்களுக்கும் எம்மனைவருக்கும் இருப்பது கூட்டான தேவையாகும். ஆட்சியில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக நீங்கள் தோற்றுகிறீர்கள். நீங்களும் நாங்களும் ஒரே நோக்கத்தில் பயணிக்கின்ற கூட்டான மனித சமுதாயமாகும். உங்கள் மனதில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக இருக்கின்ற தேவையை அதற்கு இணையாக விளங்கிக்கொண்டவர்களே நாங்கள்.
அண்மைக்கால உலக வரலாற்றில் 2022 இல் மிகவும் பலம்பொருந்திய மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மக்கள் தன்னிச்சையாக வீதியில் இறங்கத் தொடங்கினார்கள். இளைஞர் மாதக்கணக்கில் ஆட்சியாளனுக்கு எதிராகப் போராடினார்கள். வெளிநாடுகளிலுள்ள நீங்கள் அதற்கான உதவிகளை புரிந்தீர்கள். வெற்றியைப் பிரார்த்தித்தீர்கள். கோட்டாபய வீட்டுக்குச் சென்றார். போராட்டத்தின் இறுதியில் அரைவாசி எஞ்சியிருக்கிறது. பாராளுமன்றமும் கலைக்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாக அமைந்தது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கோட்டாபய வீடு செல்கிறார். உலக வரலாற்றில் ஒருபோதுமே இடம்பெற்றிராதவாறு கோட்டாபயவை விரட்டியடிப்பதற்காக வந்த மக்கள் ஆணையிலேயே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகிறார். இன்று எமது நாட்டின் ஆட்சியென்பது திரிபடைந்த ஓர் ஆட்சியதிகாரமாகும். அன்று இலட்சக்கணக்கில் மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராக எழுச்சிபெற்றனர். அதனை வெற்றியில் நிறைவுசெய்ய இயலாமல் போயுள்ளது. எனினும் தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இன்று மக்கள் தேர்தல் வாய்ப்பு வரும்வரை அனைத்து துன்பதுயரங்களையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவோ அவருடைய கும்பலைச்சேர்ந்த எவருமோ தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருக்க தயாராகினால் உலக வரலாற்றில் இடம்பெறுகின்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியைத் தடுக்க ரணில் விக்கிரசிங்கவிற்கு முடியாமல்போய்விடும். ஆட்சியாளன் தேர்தல் தொடர்பில் பதற்றமடைந்திருப்பது வேறு காரணத்தினால் அல்ல, வரலாற்றில் இற்றைவரை அதிகாரம் கைமாறிய விதம் மாற்றமடைந்து பொதுமக்களின் இயக்கமான தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கைமாறி வருவதாலாகும். ஒன்றுசேரக்கூடிய அனைவருமே தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள். இரண்டு கோப்பைகளில் உள்ள புறூட்செலட்டை ஒரே கோப்பையில் போட்டுக்கொள்ள தற்போது பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். இற்றைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கபீர் ஹசீமின் வீட்டில் ராஜித சேனாரத்னவுடன் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் பதினைந்துபேர் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டால் என்.பி.பி. வெற்றிபெறும். அது அபாயமாம். முகத்துவார மீன்பிடித் துறைமுகம் 25 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது. அரசாங்க மதிப்பீட்டுத் தொகையைவிடக் குறைவான தொகைக்கே குத்தகைக்கு விடப்பட்டது. புலனாய்வு அறிக்கைகள் அனைத்துமே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திடம் வழக்கு அறிக்கைகளும் இருக்கின்றன. அதனால் மக்களின் மாற்றம் ராஜித சேனாரத்னவிற்கு அபாயகரமானதென்பது உண்மையாகும். ஊழல் பேர்வழிகளுக்கு குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு என்.பி.பி. ஆட்சிக்கு வருவது ஆபத்தானதாகும். அதனால் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இந்த தரப்புகள் இரண்டும் இரண்டாக முன்வருவது பயங்கரமானது, அதனால் ஒன்றாக ஒன்றுசேர்ந்து உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கீரியும் பாம்பும் அடித்துச் செல்லப்படும். ஒரு துண்டு மரக்கட்டை அகப்பட்டால் கிரியும் பாம்பும் அதில் ஏறும். ரணிலும் மகிந்தவும் ஒரே கட்டைத்துண்டில் ஏறியிருக்கிறார்கள். இந்த வெள்ளம் என்ன? தேசிய மக்கள் சக்தியுடன் அணிதிரண்ட மாபெரும் மக்கள் வெள்ளம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏறுமளவுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கை வரலாற்றில் எல்லா சனாதிபதிகளும் ஒன்றாக ஏறுகின்ற மேடையை நாங்கள் சந்திக்கிறோம். சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி, கோட்டாபய , ரணில் ஆகியோரை எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரே மேடையில் சந்திக்கலாம். அவர்கள் 1994 இல் இருந்து 2024 வரை 30 வருடங்களாக பிரிந்து இருந்த குழுவினராவர்: ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதம் தரித்து நின்றவர்களாவர். ஆனால் இன்று ஒரே மேடைக்கு ஏறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்துவிதமான வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஊடக அலைவரிசைகளின் நடத்தைகள் சாதாரணமான காலங்களை விட அப்பால் சென்றுள்ளன. செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதில் உள்ளவற்றைவிட அதிகமாக வாசிக்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. மென்மேலும் மக்களின் நம்பிக்கை ஈடுபாடுகளை உறுதிசெய்து கொள்வதுதான் வெற்றிக்காக எமக்கிருக்கின்ற ஒரே பாதை. ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்திப்பிற்கு வந்திருப்பதன் மூலமாக அந்த ஈடுபாட்டினை நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கத்தயார் என்பதையே பறைசாற்றுகின்றது. அதற்காக இடையீடு செய்வோம் என உங்களுக்கு அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்.

எங்கள் நாட்டுக்கு என்ன நோ்ந்துள்ளது? பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்த, பாரிய குற்றச்செயல்கள் நிறைந்த, சட்டத்தின் ஆட்சி முற்றாகவே சீரழிந்த, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே அச்சம், அவநம்பிக்கை, குரோதம் வளர்ச்சியடைந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களுக்கு முறையான உணவை பெற்றுக்கொள்ள முடியாது, வைத்தியசாலையில் மருந்து மாத்திரைகள் இல்லாத, இளைஞர்களின் எதிர்காலம் முற்றாகவே, அழிக்கப்பட்ட கல்வி நாசமாக்கப்பட்ட, போதைப்பொருட்கள் நிறைந்த ஒரு தேசம் எம்மெதிரில் உருவாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு மக்களும் தாய்நாடும் அனுபவிக்கின்ற கவலைக்கிடமான நிலைமை எமது இதயங்களால் உணரப்படுமாயின், எமது பிரஜைகளின் வேதனைகள் எமது செவிகளுக்கு கேட்குமானால், இதயம் படைத்த மனிதர்களாயின் எம்மெவருக்கும் இந்த நிலைமையின் மத்தியில் பாராமுகமாக இருக்கின்ற தார்மீக உரிமை கிடையாது. நாம் அனைவரும் செய்யக்கூடிய அனைத்தையுமே புரிந்து இந்த மாற்றத்தை அடைவதற்கான முன்னோடி செயற்பொறுப்பின் பங்காளிகளாக மாற வேண்டும் அதற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
எங்களுடைய தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பழைய, தோல்விகண்ட அரசியல் பயணப்பாதையை மாற்றயமைக்க வேண்டும். இந்த நெருக்கடியை அரசியலே நிர்மாணித்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள எவரேனும் சிந்திப்பாரெனில் ஒரு பாடசாலைக்கு ஏதேனும் ஒரு உதவியை செய்ய, கல்விப்பிரச்சினையை தீர்க்கமுடியுமென அப்படி தீர்க்க முடியாது. எனினும் நீங்கள் சில பிள்ளைகளுக்காவது உதவி செய்வது பெறுமதியானது. நீங்கள் நினைப்பீர்களானால் ஒன்றுசோ்ந்து வீடற்ற ஒருவருக்கு வீட்டை அமைத்து கொடுத்து உதவவேண்டுமென்றால் அந்த உதவியைச் செய்யுங்கள். எனினும் அதன் மூலமாக இலங்கையின் வீடமைப்பு பிரச்சினை தீரமாட்டாது. உங்களுடைய அன்பருக்கு, உறவினருக்கு மருந்துகளை அனுப்பிவைக்கலாம். ஆனால் அதன் மூலமாக இலங்கையின் சுகாதாரப் பிரச்சினை தீரமாட்டாது. இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நீங்களும் நாங்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயமாக ஆற்றவேண்டிய செயற்பொறுப்புதான் எமது நாட்டின் இந்த அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதாகும். எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலை தீர்மானகரமான திருப்புமுனையாக மாற்றுவோம். இதுவரை பாய்ந்து சென்ற அரசியல் பயணப்பாதையை மாற்றியமைக்க திடசங்கற்பத்துடன் செயலாற்றுவோம். தோ்தல் பெரும்பாலும் செப்டெம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும். இந்த அரசியல் மாற்றத்தை நாங்கள் செய்வோம். அதன்போது எம்மிடம் கையளிக்கப்படுகின்ற பொறுப்பினை நாங்கள் ஆற்றுவோம்.

எமது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வரலாறுமே பிறருக்கு எதிரான அரசியலாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தெற்கின் சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த இயக்கமானது மற்றவருக்கு எதிரானதாகவே செயற்படுகின்றது. 2005 எனில் வடக்குக்கு எதிராக. 2010 எனில் தமிழனுக்கு எதிராக. 2019 எனில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக. அரசாங்கங்கள் அவ்வாறே அமைக்கப்பட்டன. தெற்கிலுள்ள கட்சிகள் வடற்கிற்கு எதிராகவும் வடக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராகவும் கட்டியெழுப்பப்படுகின்றன. கிழக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராக கட்டியெழுப்பப்படுகின்றன. ஆனால் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற நீங்கள் மற்றவருக்கு எதிரான அரசியலொன்றை காண்கிறீர்களா? மற்றவருக்கு எதிரான அரசியல் கட்டியெழுப்பப்படுவதன் மூலமாக எக்கச்சக்கமாக யுத்தங்களும், முரண்பாடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கை மண் நனையும்வரை இரத்தம் பெருக்கெடுத்தோடியது. ஆறுகள் நிரம்பி வழியும்வரை வடக்கிலும், தெற்கிலும் தாய்மார்களின் கண்ணீர் வழிந்தோடியது. இந்த ஒருவருக்கொருவர் எதிரான அரசியல் எமது நாட்டை ஓர் அங்குலமேனும் முன்னோக்கி நகர்த்தமாட்டாது. தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவம் செய்வது தேசிய ஒற்றுமைக்கான அரசியலையாகும். அதனை நாங்கள் வெற்றிக்கொள்ள வேண்டும்.
1948 இல் நாங்கள் சுதந்திரம் பெற்றோம். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரமாண்டமான நாடான இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற, பல்வேறு மதங்களை பின்பற்றுகின்ற, பிரதேச ரீதியான பிளவுகள் நிலவின. இந்தியாவின் தேசிய தலைவர்கள் மக்களை ஒரு கொடியின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அதன் பெறுபேறாக அப்துல் கலாம் போன்ற ஒருவர் இந்தியாவின் குடியரசு தலைவரானார். அதன் பெறுபேறாக மன்மோகன் சிங் போன்ற ஒருவர் பிரமராகிறார். அதன் பெறுபேறாக சாதியில் குறைந்தவரென கருதப்பட்ட ஒரு பெண் இந்தியாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார். ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக விளங்கிய காலத்திலும் 1948 ன் பின்னரும் எமது நாட்டில் நிலவியது பிளவுபடுத்தும் அரசியலாகும். அதிலிருந்து எமக்கு என்ன கிடைத்தது? முப்பதுவருடகால யுத்தம் உருவாகியது. பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் மாண்டார்கள். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகிறது. அதுதான் பிளவுபடுத்துகின்ற அரசியல். நாங்கள் இலங்கையில் புதிய அரசியல் ஒன்றை உருவாக்குவோம். இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமைக்கான கொடியை ஏந்திய புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டுவோம்.

அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் சில சிறிய குடும்பங்களின் கைகளில் குவிந்துள்ளன. பண்டாரநாயக்க, ஜயவர்த்தன, விக்கிரமசிங்க, ராஜபக்க்ஷ, சேனாநாயக்க. நாட்டின் ஆட்சிக்கான சுக்கான் சில குடும்பங்களின் கைகளிலேயே தேங்கியிருந்தன. பிரதேச அரசியல், மாவட்ட அரசியல், ஒரு சில குடும்பங்களின் கைகளில் குவிந்திருக்கின்றன. சஜித் பிரேமதாஸ ஒரு கட்சியின் தலைவராக மாறியமைக்கான ஒரே காரணி அவர் ஒரு ஜனாதிபதியின் மைந்தனாக அமைந்தது மாத்திரமே. உயர்மட்ட அரசியலும் கீழ்மட்ட அரசியலும் ஒரு சில குடும்பங்களின் கைகளை மையமாகக் கொண்டிருக்கின்றன. எமது அரசியலுக்கு புதிய மரபணுக்கள் சோ்க்கப்பட வேண்டும். அண்மையில் நாமல் ராஜபக்க்ஷ அவர்களின் குடும்ப அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன எனக்கூறினார். புதிய இளைஞர் தலைமுறையின் கைகளுக்கு, புதிய கருத்துக்களால் கட்டி வளர்க்கப்படுகின்ற மனிதர்களின் கைகளில் எமது அரசியலை நெறிப்படுத்துவதற்கான சுக்கான் ஒப்படைக்கப்படல் வேண்டும். இந்த அரச அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் எடுப்பது பல பரம்பரையாக இதனை வைத்துக்கொள்வதற்காக அல்ல. எமக்கு மிகவும் சுருக்கமான அத்தியாயம் ஒன்றே இருக்கிறது. அவர்களின் கையில் இருக்கின்ற பெட்டனை நாங்கள் எடுத்து புதிய பரம்பரையின் கையில் ஒப்படைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியாகிய எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு. இசெட் தலைமுறையின், அல்பா தலைமுறையின் பிள்ளைகளாகிய எமது அறிவு, மனோபாவம், விருப்புவெறுப்புக்கள் பழையவையாகும். நவீன இளைஞன் வித்தியாசமானவன். ஆனால் நவீன நிலைமையின் நோக்கங்கள் எமது நாட்டின் அரசியல் அதிகாரத்துடன் ஒத்துவருவதாக அமைவதில்லை. இந்த பழங்குடித்தன்மையிலான அரசியல் அதிகாரநிலை புதிய இளைமைக்கு அவசியமான வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இளைமையின் விருப்புவெறுப்புகளை விளங்கிக்கொள்ளக்கூடிய ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்களெனின் அந்த இளைமைக்காக கட்டியெழுப்பப்படுகின்ற உழைப்புச் சந்தையை கையகப்படுத்த அவசியமான திட்டமொன்றை வகுப்பார்கள். ஒரு தேசம் என்ற வகையில் நாங்கள் புதிய உலகத்துடன் ஒன்றிணைவதில் தோள்வி கண்டுள்ளோம்.
எமது நாட்டில் சட்டத்தின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகின்ற ஆட்சியொன்று அவசியமாகும். நீங்கள் வீசாக்காலப்பகுதி முடிவடையும்போது எவ்வளவு சிந்திப்பீர்கள்? எனினும் உங்களுக்கு தெரியும் டயனா குடியுரிமை இன்றி, வீசாக்காலம் கடந்து இருந்த நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து இராஜாங்க அமைச்சர் பதவியொன்றைக்கூட வகித்தார். அவ்வாறு அமையக்காரணம் சட்டம் அரசியல் அதிகாரநிலைக்கு கட்டுப்பட்டிருப்பதாலாகும். டயனாவுக்கு குடியுரிமை கிடையாதென்பதை முதலில் அறிந்தவர் டயனா ஆவார். இரண்டாவது ரணில். தனக்கு உரித்தாகாத சிறப்புரிமைகளை அறிந்திருந்து அனுபவிக்கிறார். அது எளிமையானதல்ல. பிரசன்ன ரணவீர இராஜங்க அமைச்சர் எயார் போர்ட்டில் ஒருவரை தாக்குகிறார். சட்டம் அமுலாகவில்லை. ஒட்டுமொத்த கட்டுப்பாடும் குற்றச்செயல் புரிபவர்களின் பிடிக்குள் அகப்பட்ட இலங்கை தான் இருக்கிறது. பாரியளவிலான நிதிசார் குற்றச்செயல் புரிந்தவர்கள், மனித படுகொலைகளுடன் தொடர்புப்பட்டவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். நூரித் தோட்டத்தின் தோட்டத்துரை படுகொலை வழக்கில் 13 பேருக்கு மரணதண்டனை உரித்தானது. ஹோகந்தர குடும்பத்தில் ஐவரின் படுகொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது. எனினும் லசந்த படுகொலை, தாஜுடீன் படுகொலை, எக்நெலிகொட கடத்திச் சென்றமை, கீத்நொயார், உபாலி தென்னகோன், போத்தல ஜயந்த தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் இன்றும் கிடையாது. பரபரப்பினை ஏற்படுத்திய ஒவ்வொரு குற்றச்செயலையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்தது. கண்டுபிடிக்க முடியாமல் போன ஒவ்வொரு குற்றச்செயலினதும் ஒவ்வொரு படுகொலையினதும் பின்னால் அரசியல் இருக்கின்றது. எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதி செய்கின்ற நெறிமுறைகள் நிறைந்த சட்டத்தை மதிக்கின்ற ஆட்சியை நாங்கள் உருவாக்கவேண்டும்.

சீரழிந்த ஒரு பொருளாதாரமே எமக்கிருக்கிறது. நாங்கள் 20 ஆம் நூற்றாண்டை கைவிட்ட ஒரு தேசமாவோம். மனித நாகரிகத்தின் முக்கியமான காலகட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டு. தொழிநுட்பத்தின் பாரிய மாற்றங்கள் இடம்பெற்ற நூற்றாண்டாகும். நாங்கள் ஒரு தேசம் என்ற வகையில் பாரிய தொழிநுட்பத்தின் தொடர்பாடலின் மாற்றங்களை இலங்கைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலுக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டோம். எமக்கு பழைய பெருமைமிக்க வரலாறொன்று இருந்தது. மிகவும் முன்னேற்றகரமான நீர்பாசனத் தொழிநுட்பம், கட்டிடக்கலை, சீகிரியாவின் நகரநிர்மாண திட்டமிடல், மீகிந்தலையில் மருத்துவ அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமைக்கான கத்தரிக்கோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமை பாராட்டிய நாங்கள் இன்று உலகில் மிகவும் வறுமையான நாடுகள் தொகுதிக்குள் வீழ்ந்துள்ளோம். பெருமைமிக்க வரலாற்றினை நவீனத்துவத்துடன் சீராக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. 76 வருடகால ஆட்சியாளர்களுக்கு தூரநோக்கொன்று இருக்கவில்லை. பொருளாதார நச்சுவட்டத்தில் நாங்கள் இறுகிப்போனோம். இந்த வட்டத்திலிருந்து நாங்கள் விடுபடவேண்டும்.
உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தில் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். IT தொழிற்துறை மிகமுக்கியமானதாகும். மிகவும் குறுகிய காலத்தில் 5 பில்லியன் பொருளாதாரத்திற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனம் அமைத்துக் கொடுக்கவேண்டும். ஆனால் அதனை விற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க திட்டவரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் அதற்கு இடமளிக்கவேண்டுமா? எங்களுடைய நிதி நிறுவனங்களில் அரசாங்கத்திற்கு உரிமையானதாக இருப்பது ஒன்றுதான். அது தான் காப்புறுதிச் சந்தையை நெறிப்படுத்துகின்றது. அதனையும் விற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான வளங்களிலிருந்துதான் தொலைத்தூர கிராமங்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. வலுச்சக்திக்காக சிறந்த சாத்தியவளம் எம்மிடம் இருக்கிறது. 2030 அளவில் உலகின் எரிபொருளுக்கான கேள்வி உச்சக்கட்டத்தை அடையும். 2050 அளவில் உலகின் வலுச்சக்தி தேவை 65% – 85% இடைப்பட்ட அளவினை மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களே உற்பத்தி செய்யும். எமக்கு மன்னார் வடிநிலத்தில் மிகச் சிறந்த காற்றுக்கொள்திறன் இருக்கிறது. அது 45 கிகாவொற் கொள்ளலவாகும். தற்போது எமக்கு அவசியமாவது 4 கிகவொற் ஆகும். 2040 இல் 8 கிகாவொற் அவசியமாகின்றது. மிகச் சிறந்த சூரிய சக்தி சாத்தியவளம் நிலவுகின்றது. இவை அனைத்தையும் தற்போது சொச்சத் தொகைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். டெண்டர் கோராமல் காற்றாலை மின்சாரத்திற்கான அனுமதி அதானிக்கு வழங்கப்பட்டது. அவர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறு உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும். 20 வருடங்களுக்கான அக்ரீமண்ட் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதானியிடமிருந்து 8.26 சதம் டொலருக்கு வாங்குவார்கள். அதானி இந்தியாவுக்கு கொடுப்பது 3.5 சதம் டொலருக்காகும். அதானிக்கு இந்தியா கொடுப்பதும் டெண்டர் கோரியே. எம்மிடம் 31 விவசாய பண்ணைகள் இருக்கின்றன. 28,000 ஏக்கர்கள் இருக்கின்றன. இந்த 28,000 ஏக்கர்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தனது இறுதிக்காலத்தில் அனைத்து வளங்களையும் விற்று தனது அமைச்சர்களுக்கு இயலுமானவரை திருட இடமளித்து செல்கின்ற பயணமொன்றை நிர்மாணித்துள்ளார். இந்த பயணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில், கனிய வளங்களின் பேரில், சுற்றுலா கைத்தொழிலின் பேரில், வரலாற்றின் பேரில் எம்மால் புதிய பொருளாதார பயணத்தில் பிரவேசிக்க முடியும். தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் இழந்த மறுமலர்ச்சியை கைப்பற்றிக்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்து அதிகாரம் கிடைக்கின்றது. எமக்கிருக்கின்ற ஒரே சக்தி உங்களின் ஒத்துழைப்பாகும்: பொதுமக்களின் சக்தியாகும். உங்களின் ஒத்துழைப்பு முன்னொருபோதும் இருந்திராதவகையில் இன்று அவசியமாகின்றது. உங்களுடைய பலம் கிடைக்காவிட்டால் இந்த பல்லாயிரக்கணக்கானோர் குழுமியுள்ள கூட்டத்தை எம்மால் நடத்த முடியாது. உங்களின் ஊக்கத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் பெரிதும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். உங்களின் இடையீடு, உங்களின் பங்களிப்பு, உங்களின் உழைப்பின் பெறுபேறு இன்று கிடைத்துள்ளது. இது முடிவு அல்ல. இது லண்டனில் புதியதொரு ஆரம்பம். எம்மெதிரில் இருக்கின்ற மூன்றரை மாதக்காலப்பகுதி மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். உங்களின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மீண்டும் மீண்டும் உரையாடுங்கள் நாங்கள் தொடர்ந்து உரையாடுவோம்: எழுதுவோம்: தோற்றுவோம். நீங்கள் முன்வைக்கின்ற பிரேரணைகளையும் விமர்சனங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார். நாங்கள் ஒரே கூட்டு இயக்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் ஒன்று சேர்வோம்.

