Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களே வனப்புமிகு நாட்டை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டு இருக்கிறார்கள்” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.29) இவ்வருடத்தின் செத்தெம்பர் இறுதியில் அல்லது ஒற்றோபர் தொடக்கத்தில் சனாதிபதி தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலொன்று நெருங்கும்போது எமது நாட்டு மக்கள் இந்த கொடிய ஆட்சியை மாற்றியமைப்பதற்கான பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்தல், மூன்றுவேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாமை, போசாக்கின்மை அதிகரித்தல் போன்றே அரசாங்கம் கடந்தகாலத்தில் அமுலாக்கிய வரிக்கொள்கைகள் காரணமாக சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பாரியளவில் சீரழிந்துவிட்டன. அவையனைத்தும் காரணமாக […]

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.29)

இவ்வருடத்தின் செத்தெம்பர் இறுதியில் அல்லது ஒற்றோபர் தொடக்கத்தில் சனாதிபதி தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தலொன்று நெருங்கும்போது எமது நாட்டு மக்கள் இந்த கொடிய ஆட்சியை மாற்றியமைப்பதற்கான பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்தல், மூன்றுவேளை உணவு பெற்றுக்கொள்ள முடியாமை, போசாக்கின்மை அதிகரித்தல் போன்றே அரசாங்கம் கடந்தகாலத்தில் அமுலாக்கிய வரிக்கொள்கைகள் காரணமாக சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் பாரியளவில் சீரழிந்துவிட்டன. அவையனைத்தும் காரணமாக மக்களில் பெருந்தொகையானோர் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். மருந்துகள் இன்மை, தரங்குறைந்த மருந்துப் பிரச்சினை போன்றே கல்விச் சிக்கல்கள், பிரமாண்டமான வரிச்சுமை முதலியவற்றை மாற்றியமைத்து மக்களுக்கு உயிர்வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக அனைவருமே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும்சிலர் இந்த துன்பங்கள் காரணமாக நாட்டைவிட்டுச் செல்கிறார்கள்.

மக்கள் நினைப்பதும் எளிமையான மாற்றங்களுக்காக அரசாங்கமொன்றை அமைப்பது பற்றியல்ல. கடந்த 76 வருடகாலமாக எளிமையான போராட்டக் கோஷங்களுக்காக அரசாங்கங்களை அமைத்துள்ளார்கள். ரூ. 3.50 இற்கு பாண், எட்டு இறாத்தல் கொட்டைகள், சந்திரனில் இருந்து அரிசி கொண்டுவந்து தருதல் போன்ற நிலைமைகளல்ல தற்போது இருப்பது. பொருளாதாரத்தை அடிமட்டத்திற்கே வீழ்த்தி, தாங்கமுடியாத கடன்சுமையை ஏற்றி, நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதென்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்கள். மறுபுறத்தில் சமூகச் சீரழிவு, சட்டத்தின் ஆட்சியின்மை, அரசாங்கமே அரசியலமைப்பினை மீறுதல் போன்ற நிலைமைகளால் மிகவும் பாரதூரமான சமூக, பொருளாதார, அரசியல், கலாசார பிரச்சினைகளே நிலவுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டறிய நாட்டில் ஆழமான மாற்றமொன்று அவசியமாகும். மக்களும் ஊழல்நிறைந்த ஆட்சியை மாற்றியமைப்பதற்காக அணிதிரண்டு உள்ளார்கள். பொருளாதார அபிவிருத்தி நிலவுகின்ற, நியாயம் நிலவுகின்ற சுமூகமொன்று பற்றிய எதிர்பார்ப்பினைக் கொண்டவர்களாக மக்கள் இருக்கிறார்கள். தமக்கு கிடைக்கின்ற சிறிய அநுகூலங்களை ஒருபுறம் வைத்துவிட்டு சமூகத்தின் ஆழமான மாற்றத்திற்காக திசைகட்டியுடன் கைகோர்த்து மக்கள் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்குள் தோல்வி பற்றி உணர்ந்த, அதிகாரத்தைக் கைவிடுவதுபற்றி நினைத்துப்பார்க்கக்கூட முடியாத ஊழல்மிக்க ஆட்சிக் கும்பல்கள் பலவிதமான தந்திரோபாயங்களை பிரயோகித்து பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு இந்த நிலைமையை தட்டிக்கழித்துச்செல்ல முயற்சிசெய்கிறார்கள். திரிபடைந்த தோற்றமுடைய அரசியல் நாடகங்களை உள்ளடக்கிய கூட்டணிகளை கட்டியெழுப்பி வருகிறார்கள். புதிய தோற்றத்தைக்காட்டி பழைய மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிசெய்து வருகிறார்கள். நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களே வனப்புமிகு நாட்டை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்துக்கொண்டுஇருக்கிறார்கள். நீண்டகாலமாக ஒன்றாக அரசாங்கத்தில் இருந்தவர்களும் வேலைத்திட்டங்களை முன்வைத்து, வேறு உரையாடல்களை உருவாக்கி, மக்களை தவறாக வழிநடாத்த முயற்சிசெய்து வருகிறார்கள். மக்கள் அவர்களை பார்ப்பதே கிடையாது. அதனாலேயே தேர்தலை தவிர்த்துச்செல்ல நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற கதைகளைக் கூறிவருகிறார்கள். மக்களின் பாரிய எதிர்ப்பு அரசாங்கத்திற்கு எதிராக வந்தவேளையில் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் பற்றி அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு வெற்றிபெற முடியாதென்பது உறுதியானதால் அவசரஅவசரமாக நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்தல் ஞாபகத்திற்கு வருகின்றது. நாங்கள் நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதற்காக தொடர்ச்சியாக போராடி பலவற்றை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தொடர்ச்சியாக பொய் வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்று சனாதிபதி முறையைப் பேணி வந்தவர்களாவர். நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழித்துக்கட்டி மக்களின் இறைமையை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும். சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, பொதுத்தேர்தலில் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவி புதிய அரசியலமைப்பொன்றினை அறிமுகஞ்செய்து சனநாயகத்தை நிலைநாட்டி நிறைவேற்று சனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட முன்வருவதில் நிலவுகின்ற அச்சம் காரணமாக திடீர் பொதுத் தேர்தல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத் தேர்தல் வந்தால் ஊழல்மிக்க திருட்டுக் கும்பலை அகற்றி, புதிய ஆட்சியொன்றை அமைக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேர்தல் காலம் நெருங்கும்போது வழமையாக செய்வதுபோல் பொருட்களை பகிர்ந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள். திருடிய பொதுப்பணம், வரிச்சுமையை ஏற்றி மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணம், அமைச்சுக்களுக்கு ஒதுக்கிய பணத்தொகைகளைப் பாவித்து தேர்தல் இயக்கங்களுக்காக பொருட்களைப் பகிர்ந்தளிக்கத் தொடங்கியுள்ளார்கள். இறையிலி உறுதிகளை வழங்குவதாகக்கூறி எமது நாட்டின் சனாதிபதி மக்களை தம்புல்லைக்கு திரட்டினார். உறுதிகளை வழங்கவேண்டியது சனாதிபதியல்ல, சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களே. நாடு பூராவிலும் இருக்கின்ற மக்களை பல்வேறு பொருட்களை வழங்குவதாக ஒர் இடத்தில் ஒன்றுசேர்த்து தேர்தல் கெம்பேன் புரிகிறார்கள். அதைப்போலவே 20 கிலோ அரிசியையும் பகிரத் தொடங்கியுள்ளார்கள். கடந்தகாலத்திலும் தீப்பெட்டியில் தொடங்கி பலபொருட்களை பகிர்ந்தார்கள். சவப்பெட்டிகளை மாத்திரமே பகிரவில்லை. இந்த வாக்குகளைப் பெற்றுக்கொண்டே ரணில் நாட்டைத் திருடினார். நாட்டைக் கடனாளியாக்கினார். மக்களால் உயிர்வாழ முடியாத நிலைக்கு வீழ்த்தினார். அந்த விளையாட்டுக்கு இனிமேலும் இடமளிக்கவேண்டாமென நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம். பகிர்ந்தளிக்கின்றவற்றை வாங்கிக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை காட்டிக்கொடுக்காதிருப்பதற்கான தீர்மானத்தை எடுக்கவேண்டியுள்ளது.

தமது ஒரே எதிராளி தேசிய மக்கள் சக்தி என்பதால் புதியதொரு சுற்றில் அவதூறாக பேசவும் தொடங்கி உள்ளார்கள். மொட்டு, ஐக்கிய தேசிய கட்சி அதிலிருந்து கழன்றுசென்ற ஐக்கிய மக்கள் சக்தி அல்லது வேறு கும்பல்களும் மேடைகளில் நூறு வார்த்தைகளைப் பேசினால் அதில் தொண்ணூறு வார்த்தைகள் “திசைகாட்டி, தேசிய மக்கள் சக்தி, அநுர திசாநாயக்க” என்பதாகும். தமது கொள்கைகளைக் கூறுவதில்லை. தேசிய மக்கள் சக்தியே இந்த அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளதென்பது அதன் மூலமாக மேலும்மேலும் உறுதிசெய்யப்படுகின்றது. அதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். புதிய கூட்டணிகளை அமைத்தாலும், புதிய பெயர்களை சூட்டினாலும் இருக்கின்றவர்கள் பழைய மனிதர்களே. அவர்கள் புதிதாக கூறிவருவது ” இது புதிய பரீட்சித்துப் பார்த்தலுக்கான நேரமல்ல” என்பதாகும். பழையவர்களையே வைத்துக்கொள்ளுமாறே அதன்மூலமாக கூறுகிறார்கள். மகிந்த ராஜபக்ஷவை, ரணில் விக்கிரமசிங்கவை, சஜித் பிரேமதாசவை போதுமான அளவுக்கு பரீட்சித்துப் பார்த்துள்ளார்கள். அவர்கள் பெயிலானவர்கள், நாட்டை நாசமாக்கியவர்கள் என்பதை எவரும் அறிவார்கள். புதிதாக பரீட்சித்துப்பார்க்க ஒன்றுமே கிடையாது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியுமென நன்றாகவே தெரிந்திருந்தும் ரணில் விக்கிரமசிங்காக்கள் முன்னெடுத்துவருகின்ற தந்திரோபாயங்கள் பற்றி தோழர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தோழர் வசந்த சமரசிங்கவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்கள். வரிச்சுமையை ஏற்றி மக்களை வதைத்து பெற்றுக்காண்ட அரசாங்க வருமானத்தைக்கொண்டே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகி கழிந்த 19 மாதங்களில் 19 தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகவேண்டிய வைபவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தான் வென்றெடுக்கவேண்டிய கும்பல்கள் புடைசூழ போகிறார். அவர்கள் தொடர்ந்தும் நாட்டை நாசமாக்கி பழைய பாதையிலேயே பயணிக்கிறார்களேயொழிய புதிய பாதையில் பயணிக்க தயாரில்லை என்பதை தற்போதும் உறுதிசெய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த திசெம்பர் 15 ஆந் திகதி மொட்டுக் கட்சியின் மாநாடு ஒன்றை நடாத்தி 16 ஆந் திகதியன்றே அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் 05 ஆந் திகதி இலங்கைக்க வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் உண்மையான வீட்டுக்குச்சென்று கொந்துராத்து வாங்கிக்கொண்டு இங்கே வருகிறார். பொது வேட்பாளராக அமைவதற்காக கனவுகண்டுகொண்டிருக்கின்ற அனைவரும் அரசாங்கங்களில் இருந்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய அழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். இவர்கள் அனைவரும் பழைய பாதையில் பயணித்தவர்களாவர். அவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாட்டுக்கு அவசியமான ஆழமான மாற்றங்களைச் செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இருப்பவர்கள், புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கொண்ட அர்ப்பணிப்புச் செய்யக்கூடிய ஒரு நோக்கினைக்கொண்ட திசைகாட்டியைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே. அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துவிதமான மக்கள் கருத்தறிதல் மதிப்பாய்வுகளால் நிரூபிக்கப்பட்டு பதற்றமடைந்துள்ளார். நாங்கள் புரிகின்றவற்றை காப்பியடிக்க முனைகிறார்கள். சஜித் பிரேமதாசவின் கட்சி அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியை தாக்கி வருகின்றது. ஏனைய சிறிய கும்பல்களும் அப்படித்தான். பிரபுக்கள் வர்க்கத்தின் கையில் இருந்த அதிகாரம் பொதுமக்களிடம் கைமாறப் போவதை அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். அதனால் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பினை மீறி பல்வேறு தருணங்களில் செயலாற்றி உள்ளார். பொலீஸ் மா அதிபரை நியமிக்கையில் சபாநாயகர் நடந்துகொண்டவிதம் அரசியலமைப்பிற்கு முரணானதென்பது வெளிப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது மென்மேலும் சதிவேலைகள், பலவிதமான தந்திரோபாங்களை பாவிப்பதைப்போலவே திருடிய பணத்தைப் பாவித்து எமக்கெதிராக பல்வேறு குறைகூறல்களை மேற்கொள்ளத் தயாராகி வருகிறார்கள். அந்த எவருக்கும் கட்டுப்படாமல் உலகத்தார் முன்னிலையில் எமது நாட்டை கௌரவமான இடத்திற்கு உயர்த்திவைக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற புதிய தேசிய மலர்ச்சியை நாட்டில் உருவாக்கிட செயலாற்றுவோமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

“எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தேசிய மக்கள் வெற்றியீட்டச் செய்விக்க அணிதிரள்வீராக”
-தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் நிஹால் அபேசிங்க-

ஒரே அரசியலுக்காக தோற்றுபவர்கள் பலவிதமான பிரிவினைகளுடன் மக்கள் முன்னிலையில் தோற்றினார்கள். இதுவரை நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்சென்ற அந்த அனைவரிடமும் இருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தேசிய மக்களின் சக்தியிடம் அதிகாரத்தைக் கையளிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது. இந்நாட்டின் முற்போக்கான, இடதுசாரி அரசியலில் 50 வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்திக்குள் இயங்கிவருவதோடு தேசிய புத்திஜீவிகள் அமைப்பு போன்ற வெகுசன அமைப்புகள், மாற்றுக் கமியுனிஸ்ட் கட்சிக் குழுக்கள், ஐக்கிய இடதுசாரி சக்தி போன்ற கட்சிகளின் ஊழலற்ற தலைவர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமியுள்ளார்கள். பிரபுக்கள் வர்க்கமல்லாத தமக்கே சொந்தமான அரசியல் இயக்கமொன்றை தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இத்தடவை சனாதிபதி தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களின்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. நாட்டில் மோசடிகள், ஊழல்கள், விரயங்கள், குடும்ப ஆட்சி, பலவீனமான முகாமைத்துவத்தைப் பேணிவந்த பின்னணியை மாற்றியமைப்பதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

மக்கள் மிகுந்த துன்பங்களுக்கு இலக்காகியுள்ளபோதிலும் உயர்ந்த மட்டத்திற்கே வந்துள்ள பொருட்களின் விலைகள் அதேவிதத்தில் நிலவுகின்ற வேளையிலேயே பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக காட்டப்படுகின்றது. மக்கள் அனைவருக்கும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதாரத்துறை பாரதூரமான பல்வேறு சீரழிவுகளுக்கு இலக்காக்கப்பட்டுள்ளது. ஓளடதத் தட்டுப்பாடு, ஓளடத விலையேற்றம், தரமற்ற மருந்துவகைகள், பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரித்துள்ளமை, பிரத்தியேக சேவையில் பல்வேறு கட்டணங்கள் அறவிடப்படல் போன்ற பல சிக்கல்கள் நிலவுகின்றன. மருத்துவர்கள் தொட்டு அனைத்து சுகாதார பணியாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் போசாக்கின்மை, தொற்றுநோய்கள் அதிகரித்தல், தொற்றுநோய்கள் பரவுதல் போன்ற அனைத்தையுமே சுகாதாரத்துறையில் தாங்கிக்கொண்டே மக்கள் வாழ்கிறார்கள். அதைப்போலவே ஏறக்குறைய 3% பிள்ளைகள் பாடசாலை செல்வதை கைவிட்டுள்ளார்கள். பாடசாலைக் கல்வி சீரழிந்துள்ளதைப்போன்றே பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியும் பாரியளவில் சிதைவடைந்து வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் நாட்டில் உழைப்புப் பங்களிப்பில் பிரவேசிக்கின்ற இளைஞர்கள் துறைசார்ந்த அறிவு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. குடும்பத்தில் மனஅழுத்தம் அதிகரித்துள்ளது. இவையனைத்தையும் நோக்கினால் பொருளாதாரமானது மீண்டும்மீண்டும் வீழ்ச்சியடைகின்ற வட்டத்திற்குள்ளேயே நிலவுகின்றது. இதன்காரணமாக எதிர்வருகின்ற எந்தவொரு தேர்தலிலும் விவேகமான தீர்மானத்தை மேற்கொண்டு தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விக்க அணிதிரளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

NPP Press 02/29
Show More

பிமல் ரத்நாயக்க மற்றும் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களை சந்தித்தனர்

நேற்று (27.02.2024) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களை தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழ உறுப்பினரான தோழர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர் தற்போது நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலமைகள், பொருளாதார நெருக்கடி, மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஒரு நீண்ட கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதுடன் சுமுகமான உரையாடாலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகக்தாகும். இதன்போது […]

நேற்று (27.02.2024) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களை தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழ உறுப்பினரான தோழர் பிமல் ரத்நாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்

தற்போது நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலமைகள், பொருளாதார நெருக்கடி, மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஒரு நீண்ட கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றதுடன் சுமுகமான உரையாடாலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகக்தாகும்.

இதன்போது இருசாராருக்குமிடையில் ஒரு நெருக்கமான பரிந்துணர்வு ஏற்பட்டதுடன் எதிர்காலத்திலும் இந்த உரையாடலை தொடர வேண்டுமென இணக்கப்பாட்டுடன் சுமுகமான கலந்துரையாடலாக அமைந்திருந்தமை குறப்பிடத்தக்க விடயமாகும்.

Show More

சித்தார்த்தன் எம்.பி.யை, பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர்.

புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் எம்.பி.யை அவரது இல்லத்தில் வைத்து (14.02.2024) கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க, தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும், தேர்தல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் வடக்கு மற்றும் தெற்கின் மக்கள் இயக்கங்களின் வரலாறு குறித்தும் விவாதித்தனர். இது இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சுமுகமான மற்றும் புரிதலுடனான உரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் எம்.பி.யை அவரது இல்லத்தில் வைத்து (14.02.2024) கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க, தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சந்தித்தனர். தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும், தேர்தல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் வடக்கு மற்றும் தெற்கின் மக்கள் இயக்கங்களின் வரலாறு குறித்தும் விவாதித்தனர். இது இரண்டு பிரதிநிதிகளுக்கு இடையே ஒரு சுமுகமான மற்றும் புரிதலுடனான உரையாடலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More

தேசிய மக்கள் சக்தியின் தெனியாய மலையக மக்கள் சபை

தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் மலையக மக்கள் சபை மாநாடு தெனியாயவில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான தோழர் சுனில் அந்துன்நெத்தி, தோழர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோழர் சமந்த வித்தியாரத்ன, தெனியாய தொகுதியின் அமைப்பாளர் தோழர் கதிரேசன் கண்ணன் மற்றும் தெனியாய தொகுதி உறுப்பினர் தோழர் லிஸ்றா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையகத் தமிழர்கள் இந்நிகழ்வில் […]

தேசிய மக்கள் சக்தியின் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் மலையக மக்கள் சபை மாநாடு தெனியாயவில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான தோழர் சுனில் அந்துன்நெத்தி, தோழர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தோழர் சமந்த வித்தியாரத்ன, தெனியாய தொகுதியின் அமைப்பாளர் தோழர் கதிரேசன் கண்ணன் மற்றும் தெனியாய தொகுதி உறுப்பினர் தோழர் லிஸ்றா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மலையகத் தமிழர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

தாயகத்திற்கு வலிமை… கெளரவமான பிரஜை என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் ஹற்றன் பிரகடனத்தை மக்கள்மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More

“மின்சார பில்லை 37% ஆல் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.27) மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்கையில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயலாற்ற தயாராகிய வேளையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களும் மேலும் சில அமைப்புகளும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோம். மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் ஏறக்குறை 3.34% ஆல் பில்லைக் குறைக்க முடியுமென முதலில் கூறினார்கள். 2023 ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோதமாக 18% ஆல் மின்சார பில் அதிகரிக்கப்பட்டது. வருடத்திற்கு […]

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.02.27)

மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்கையில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் செயலாற்ற தயாராகிய வேளையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்களும் மேலும் சில அமைப்புகளும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோம். மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் ஏறக்குறை 3.34% ஆல் பில்லைக் குறைக்க முடியுமென முதலில் கூறினார்கள். 2023 ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோதமாக 18% ஆல் மின்சார பில் அதிகரிக்கப்பட்டது. வருடத்திற்கு இருதடவைகள் திருத்தப்பட வேண்டியபோதிலும் எதிர்காலத்திலும் தாக்கமேற்படுத்தக்கூடியவகையில் மூன்று தடவைகள் திருத்தம் செய்யப்பட்டது. ஒக்டோபர் மாதத்தில் நிலவிய விலைமட்டங்களுக்கே மீண்டும் கொண்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் தற்போது கூறுகிறார். அவர்கள் கூறுகின்ற விடயங்களின்படி மின்சார சபையின் மொத்த வருமானம் 710 பில்லியன் ரூபாவாக அமையுமிடத்து மொத்தச் செலவு 688 பில்லியன் ரூபாவாகும். அனைத்துச் செலவுகளையம் தீர்த்தபின்னர் 23 பில்லியன் ரூபா மிகைநிலை காணப்படுவதாகவும் அதற்கமைவாக 3.34% ஆல் பில்லைக் குறைக்கமுடியுமெனவும் கூறினார்கள். எனினும் நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விடயங்களை எடுத்துரைத்து மின்சாரக் கொள்ளளவின் கிரயம் 50 பில்லியனில் இருந்து 133 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் விநியோக கிரயம் ஏறக்குறைய 150%ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டினோம். வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன் வட்டியாக 53 பில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டுமென சபை கூறியுள்ளது. ஆனால் நிகழ்கால வட்டியாக 45 பில்லியன் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும்.

பாவனையாளர்களை சுரண்டி தீத்தொழில் புரிகின்றவர்களின் கீழ்த்தரமான நோக்கங்களுக்காக அமைச்சரும் உத்தியோதகத்தர்களும் செயலாற்றி வருகிறார்கள் என்பதை நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டினோம். 2023 மின்சார சபையின் இலாபம் 48 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிதாக சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி செலவினை 93 பில்லியனால் குறைக்க முடியுமென கூறியுள்ளது. கணக்கீட்டுக் கொள்கைகளின் பிரகாரம் மின்சார சபையின் விலைகள் இலாபமீட்டுகின்ற நோக்கத்தின் அடிப்படையிலன்றி செலவுகளை தீர்த்துக்கொள்கின்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படல் வேண்டும். ஆசியாவின் ஏனைய நாடுகளைவிட எமது நாட்டின் மின்சார பில் 50% அதிகமானதாகும். அதனாலேயே கைத்தொழில்கள் சீரழிந்துள்ளன. நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகவே மின்சார பில் தாக்கமேற்படுத்துவதாலேயே மின்சார பில்லைக் குறைத்தல் சம்பந்தமாக நாங்கள் விடயங்களை முன்வைக்கிறோம். இப்போது 93 பில்லியனால் செலவினைக் குறைக்க முடியுமென கூறுகின்ற அமைச்சரும் உத்தியோகத்தர்களும் ஏன் ஆரம்பத் தருணத்தில் அதனை மறைத்து வைத்தார்கள்? 2023 இல் மின்சார சபையின் இலாபம் 62 பில்லியன் என இன்றளவில் வெளிப்பட்டுள்ளது. மேலும் 14 பில்லியனால் இலாபம் அதிகரித்துள்ளது. வட்டிக்காக அதிகமாக உள்ளடக்கப்பட்டிருந்த 08 பில்லியன் இலாபத்துடன் சேர்ந்து 70 பில்லியன் ரூபா மேலதிக இலாபத்திற்கு மின்சார பிறப்பாக்க மற்றும் விநியோகச் செலவு என்றவகையில் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்த 140 பில்லியன் இருக்கின்றது. இதன்படி மின்சார சபையின் 210 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட மேலதிக தொகை கணக்குகளுக்கிடையில் மறைத்துவைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. மொத்தச் செலவு 680 பில்லியன் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அந்த செலவில் 210 பில்லியன் குறைந்ததும் 470 பில்லியன் வரை செலவுகள் குறைவடைகின்றன. அதன்படி மின்சார பில்லை 37%ஆல் குறைக்கமுடியும்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது கஞ்சன விஜேசேகர அமைச்சருடையதன்று: அது நாட்டு மக்களின் ஆணைக்குழுவென்பதை நாங்கள் அந்த உத்தியோகத்தர்களிடம் கூறினோம். அமைச்சரின் மன ஆசைகளை நிறைவுசெய்தல், உயரதிகாரிகளின் தீத்தொழிலைப் பாதுகாத்தல் ஆணைக்குழுவின் செயற்பொறுப்பு அல்லவென்பதை தெளிவுபடுத்திக் கூறினோம். இந்த விலையைக் குறைக்காமல் தொடர்ந்தும் கேம் அடிக்க தயாராக வேண்டாமென அமைச்சரை வலியுறுத்துகிறோம். நாங்கள் முன்வைத்த விடயங்களை செவிமடுத்தமைக்காக நாங்கள் பொதுப்பயன்பாடுகள் ஆணக்குழுவிற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கு முன்னர் நடந்துகொண்ட விதத்திற்கிணங்க நடந்துகொள்ளாமல் மக்களிடமிருந்து கருத்துக்களைப்பெற்று, மீண்டும் மின்சார சபையிடமிருந்து தரவுகளைப் பெற்று செயலாற்றியமைக்காக நன்றி கூறுகிறோம். மீண்டும் கூடி மின்சார பில் திருத்தம் சம்பந்தமாக மக்களின் பக்கத்தில் நின்று தீர்மானத்தை வழங்குமாறு ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். மின்சாரசபையின் செலவுகளை 210 பில்லியனால் குறைக்க முடியுனெ நாங்கள் சுட்டிக்காட்டியது குறைந்தபட்ச மட்டமாகும். தொடர்ந்தும் மக்களை துன்புறுத்தி சுரண்டுகின்ற தீத்தொழிலுக்கு துணைபோகவேண்டமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம். அதைப்போலவே அமைச்சரும் சபையின் உயரதிகாரிகளும் தான்தோன்றித்தனமாக மறைக்க முயற்சிசெய்த செலவுகள் அம்பலமாகி உள்ளதென்பதையும் வலியுறுத்துகிறோம். கடந்த 15 ஆந் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் வரலாற்றில் முதல்த்தடவையாக நாங்கள் விடயங்களை முன்வைத்த பின்னர் அது பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது. மீண்டும் அமைச்சர் கஞ்சனவின் பிடிக்கு கட்டுப்படாமல் உண்மையாகவே 37%ஆல் குறைக்க இயலுமான மின்சார பில் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தட்டிக்கழிக்க வேண்டாமென வலியுறுத்துகிறோம்.

“மக்கள் சம்பாதிப்பது லயிற் பில் கட்டுவதற்காக மாத்திரமல்ல என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ-

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நாட்டுப் பிரஜைகளினதும் பாவனையாளர்களினதும் சார்பாக நியாயத்தை ஈடேற்றுவதற்காகவே தாபிக்கப்பட்டுள்ளது. 2002 இல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது மின்சாரக் கட்டணத் திருத்தத்தின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்காகவேயாகும். மின்சாரசபையின் நிருவாகம் இவ்வாணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்த 3.34% மின்சார பில்லைக் குறைத்தலை அவ்வண்ணமே ஆணைக்குழுவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளமைக்கான காரணம் தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்களும் ஏனைய தரப்பினர்களும் முன்வைத்த விடயங்களாகும். மின்சார சபை சட்டத்தின் 30 வது பிரிவில் மின் பிறப்பாக்கத்தின்போதும் விநியோகத்தின்போதும் உறப்படுகின்ற நியாயமான செலவினை அறவிட்டுக்கொள்வதேயன்றி அனைத்துச் செலவுகளையும் அறவிட்டுக்கொள்வதல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரியதர்ஷன தர்மவர்தன ஊடகக் கலந்துரையாடலில் வெளியிட்ட தகவல்களை நான் உங்களிடம் முன்வைக்கிறேன். கைத்தொழில் பிரிவின் நடுத்தர அளவிலான 1100 நிறுவனங்களும் சிறிய அளவிலான 6900 நிறுவனங்களும் நுண் அளவிலான 254,000 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. உள்நாட்டைப் போன்றே வெளிநாட்டுச் சந்தைக்கு பண்டங்களை உற்பத்தி செய்கின்ற இலட்சக்கணக்கான கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. மறுபக்கத்தில் பராட்டே சட்டத்தின்படி உயர்மட்ட வைத்தியசாலைகள்கூட வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. மறுபுறத்தில் மின்சார பில்லைச் செலுத்த முடியாமல் போனமையால் ஏறக்குறைய 10 இலட்சம் சாதாரண பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமையில் மின்சார சபையின் நிருவாகத்திற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் நியாயமான செலவுகள் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு நிலவுகின்றது. மின்சாரத்தை வழங்குபவர் நியாயமாக செயலாற்றாவிட்டால் மக்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவது ஆணைக்குழுவின் செயற்பொறுப்பாகும். கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் 18% ஆல் மின்சார பில்லை அதிகரிப்பதற்காக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய புள்ளிவிபரங்கள் வழுக்கள் நிறைந்தவையாகும். கடந்த வருடத்தின் செத்தெம்பர் மாதத்தில் மின்சார சபையின் நட்டம் 51 பில்லியன் என அவர்கள் கூறினார்கள். ஒரு மாதத்திற்குள் நட்டத்தை 18 பில்லியன்வரை குறைத்துக்கொண்டதாக அவர்கள் கூறினார்கள். மின்சாரசபை முன்வைக்கின்ற தகவல்களை அவ்வண்ணமே ஏற்றுக்கொள்வது நியாயமானதல்ல. இத்தடவையும் எதிர்பார்த்த இலாபம் 23 பில்லியன் என தொடக்கத்தில் கூறினாலும் தொழிற்சங்கங்கள் அறிவித்த பின்னர் அதனை 94 பில்லியன் வரை மாற்றியமைத்துள்ளார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மின்சார பில்லை அதிகரிக்கையில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு 13 நிபந்தனைகளை முன்வைத்தது. 2023 டிசம்பர் தொடக்கம் 2024 மார்ச் வரையான காலப்பகுதிக்குள் இந்த நிபந்தனைகள் ஈடேற்றப்படவேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மின்சார பில்லை அதிகரித்தலுடன் தொடர்புடைய ஒரு நிபந்தனையேனும் இதுவரை ஈடேற்றப்படவில்லை. அமைச்சரின் பிரதிபிம்பத்தை பெரிதாக்கிக் காட்டவும் அரசாங்கத்தின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவும் சபை செயற்பட்டு வருகின்றமை நன்றாகவே தெளிவாகின்றது. எமக்கு கிடைக்கின்ற தகவல்களின்படி குறைந்தபட்சம் 37%ஆல் மின்சார பில்லைக் குறைப்பதற்கான இயலுமை இன்றளவில் நிலவுகின்றது. மக்களும், கைத்தொழிலதிபர்களும் சம்பாதிப்பது லயிற் பில் செலுத்துவதற்காக மாத்திரமல்ல என்பதை ஜனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும். மின்சார விலையக் குறைப்பதன் மூலமாக அரசாங்கத்திற்கு பாரிய நன்மைகள் கிட்டும். குறைக்கக்கூடிய உச்ச அளவில் மின்சார பில்லைக் குறைக்குமாறே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்

கேள்வி:- உங்களின் ஆட்சியின்கீழ் கூறுகின்ற இதேமாதிரி மின்சார பில்லைக் குறைத்த நிவாரணம் வழங்குவீர்களா?

பதில் :- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எமது பொருளாதாரக் கொள்கையின் இயக்க விசையாக மாற்றப்படுவார்கள். மறுபுறத்தில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளை இயலுமானவரை குறைத்து மக்களின் கொள்வனவு ஆற்றலை அதிகரிப்போம். இந்த ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாங்கிற்குள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய துறைகளில் நிவாரணங்களை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை மேற்கொண்ட பொருளாதாரப் பயணத்தை இனிமேலும் தொடரமுடியாது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அந்த தவறான பாதையிலேயே தொடர்ந்தும் வேகமாக பயணிக்க முயற்சி செய்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் கைத்தொழிலதிபர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொருளாதாரத்தின் பங்காளிகளாக செயலாற்றுவதற்கான இடவசதிகள் அனைத்தையும் வழங்குவோம். மின்சார சபையே சமர்ப்பித்த கணக்குகளில் நிலவுகின்ற மோசடியான மற்றும் தவறான செயற்பாடுகளின் தரவுகளைத்தான் நாங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தோம். 37 வீதத்திற்கு கிட்டிய அளவினால் மின்சார பில்லைக் குறைத்து சபைக்கு நட்டமேற்படாதவகையில் பேணிவர முடியுமென்பதை அதற்கிணங்கவே நாங்கள் தெளிவுபடுத்தினோம். பூநகரியில் சூரிய சக்தி வலு பிறப்பாக்கத்தின் மூலமாக ஓர் அலகிளை ரூபா 52 இற்கே கொள்வனவுசெய்ய தயாராகி வருகிறார்கள். எனினும் நிலக்கரியால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஓர் அலகு மின்சாரத்திற்காக ரூபா 22 மாத்திரமே செலவாகின்றது. இந்த சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் மூலமாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயாரில்லை என்பது அதன்மூலமாகவே தெளிவாகின்றது.

கேள்வி:- தற்போது இருக்கின்ற உத்தியோகத்தர்கள்தான் உங்களுடைய அரசாங்கம் வந்தாலும் இருப்பார்கள். ஒரு தடவை அமைச்சருக்கும் தவறாக தகவல்களைக் கொடுத்திருந்தார்கள். அது சம்பந்தமான சிக்கலை எவ்வாறு தீர்த்துக்கொள்ளப் போகிறீர்கள்?

பதில் :- மின்சக்தி அமைச்சருக்கு வழங்கிய தகவல்களில் கொள்திறன் கிரயம் அதிகரித்தமை பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? விநியோக செலவுகள் அதிகரித்த விதம் பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? கடன்வட்டிவீதம் குறைவடைந்திருக்கையிலும் வட்டி செலுத்துவதற்காக பெருமளவிலான பணத்தொகை செலவாகின்றவிதம் பற்றிக் கேள்வியெழுப்பக் கூடாதா? ஊழல்நிறைந்த உத்தியோகத்தர்கள் அமைச்சருடன் கூட்டுச்சேர்ந்து திருட்டில் ஈடுபட்டால் நீங்கள் கூறுகின்ற பிரச்சினை உருவாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் அவ்வாறு இடம்பெற மாட்டாதென்பதை அனைவரும் அறிவார்கள்.

கேள்வி:- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரத் தயாராகி இருக்கிறார்கள். அது சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவது ஏனோதானோ என்றல்ல. தெளிவாக அரசியலமைப்புச்சார்ந்த விடயமொன்றுக்காகவே. ஒன்லயின் சேஃப்டி பில் தொடர்பாக சட்டத்துறை தலைமை அதிபதியாலேயே சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகையில் உள்ளடக்கப்படாமை காரணமாகவே. இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணமாகும். சமர்ப்பிக்கப்படுகின்ற சட்டமூலம் மீதான விவாதம் நடாத்தப்பட்டு சம்பந்தப்பட்ட திருத்தங்கள் பிரிவுவாரியாக அதே தருணத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கான காலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பதில்லை. சபாநாயகர் தனது பணியாட்டொகுதியுடன் இணைந்து அந்த பிரிவுகளைச் சேர்த்துள்ளதாக நம்பப்படுகின்றது. எனினும் இங்கு பாராளுமன்ற மரபுகள், நீதித்துறையின் உன்னதநிலை மற்றும் நம்பிக்கை மீறப்படுகின்றவகையில் சபாநாயகர் நடந்துள்ளமையே நேர்ந்துள்ளது. அதனால் தேசிய மக்கள் சக்தி சபநாயகருக்கு எதிராக செயலாற்றும்.

கேள்வி:- புதிய பொலீஸ் மா அதிபர் நியமனம் பற்றிய உங்களின் அபிப்பிராயமென்ன?

பதில் :- பொலீஸ் மா அதிபர் நியமனம் பெரிதும் சிக்கல் நிறைந்ததாகும். ஒருசில விடயங்கள் சரச்சைக்குரியனவாகும். 2023.12.14 ஆந் திகதி S.C.S.R./2011 இலக்கமுடைய வழக்கு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழாத்தின் தீர்ப்பு மூலமாக நியமிக்கப்பட்ட இந்த பொலீஸ் மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு சித்திரவதை கொடுத்தமை தொடர்பாக சர்வதேச சமவாயத்தை மீறியதாக, நாட்டின் அரசியலமைப்பினை மீறியதாக உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக இன்றளவிலும் மனித உரிமைகள் மீறப்பட்டமை சம்பந்தமாக பொலீஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சில வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்தஞாயிறு தாக்குதலைத் தடுக்காமை பற்றி பல தரப்பினர் அவருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்கள்.

அதைப்போலவே பொலீஸ் மா அதிபர் நியமனத்தின்போது அரசியமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெறுதல் பற்றிய மற்றுமொரு பிரச்சினை நிலவுகின்றது. அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவே பொலீஸ் மா அதிபரை நியமிப்பதற்கான அதிகாரம் சனாதிபதிக்கு கிடைகின்றது. இத்தகைய நியமனங்களின்போது அரசியலமைப்புப் பேரவையின் அங்கீகாரம் பெறப்படவேண்டியது எவ்வாறு என்பது 41E (7 ) எனும் உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீர்மானம் தொடர்பிலும் அரசியலமைப்புப் பேரவையின் ஏகோபித்த அங்கீகாரம் பெறப்பட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அத்தகைய ஏகோபித்த தன்மை இங்கு கிடையாது. அடுத்ததாக ஏகோபித்த தன்மை இல்லாத சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் ஐவருக்கு குறையாத எண்ணிக்கையுடையோரால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். சபாநாயகரை உள்ளிடக்கியதாக அரசியலமைப்பு பேரவையில் ஒன்பதுபேர் இருக்கிறார்கள். ஏதேனும் விதத்தில் 4:4 என பிரிந்த தீர்ப்பு வந்தால் மாத்திரம் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கும். 41E (5) உறுப்புரையில் அது காட்டப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவல்களின்படி சார்பாக நால்வரே இருந்துள்ளார்கள். இருவர் எதிராகவும் இருவர் வாக்களிப்பதை தவிர்த்தும் இருந்துள்ளார்கள். அதன்படி இந்த பொலீஸ் மா அதிபர் அரசியலமைப்புப் பேரவையின் தத்துவங்கள் மீறப்பட்டே நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறான அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டால் இந்த பொலீஸ் மா அதிபர் பல்வேறு சிக்கல்களை எஞ்சவைத்தே நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டுரீதியாகவும் சர்வதேசரீதியாகவும் எமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் பற்றிய பல்வேறு சிக்கல்களை எஞ்சவைத்தே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Show More

“ஆளுகையின் தேவையும் மக்களின் தேவையும் சமச்சீராக அமையத்தக்க அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவோம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – கம்பஹா மாவட்டம் – 2024.02.25) இங்கு குழுமியுள்ள பெண்கள் பொருளாதாரச் சீரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களாவர். நாட்டின் குற்றச்செயல்களை தாங்கிக்கொண்டு தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். தமது நகைநட்டுகளை அடகுவைத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்டி இறுதியில் தம்மைக் கைவிட்டு வெளிநாடு செல்ல எத்தனிக்கையில் கண்ணீர் வடித்துக்கொண்டு பொறுத்திருந்தார்கள். பொறுத்தது போதும். தற்போது எழுச்சிபெறுவது பெண்களின் வெறும் மண்டைகள் மாத்திரமல்ல. பொறுமையின் எல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் ஆயிரக்கணக்கான பெண்கள் […]

(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – கம்பஹா மாவட்டம் – 2024.02.25)

இங்கு குழுமியுள்ள பெண்கள் பொருளாதாரச் சீரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களாவர். நாட்டின் குற்றச்செயல்களை தாங்கிக்கொண்டு தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். தமது நகைநட்டுகளை அடகுவைத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்டி இறுதியில் தம்மைக் கைவிட்டு வெளிநாடு செல்ல எத்தனிக்கையில் கண்ணீர் வடித்துக்கொண்டு பொறுத்திருந்தார்கள். பொறுத்தது போதும். தற்போது எழுச்சிபெறுவது பெண்களின் வெறும் மண்டைகள் மாத்திரமல்ல. பொறுமையின் எல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் ஆயிரக்கணக்கான பெண்கள் எழுச்சியடைந்துள்ளார்கள். இங்கு பங்கேற்றுள்ளவர்கள் வேதனைகளால் பிறந்த உணர்வு, திடசங்கற்பம், நோக்கம் மற்றும் கனவு கலந்த பெண்களாவர். உங்களின் இந்த எழுச்சி நிச்சயமாக எமது நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத்தருவது திண்ணமே. மாத்தறையில் இருந்து தொடங்கிய பெண்களின் சேர்க்கை நிச்சயமாக வெற்றியடைய முடியுமென்பது மீண்டும்மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அசைகின்ற பல்லைப்போன்ற ஒரு அரசாங்கத்தை நாங்கள் கட்டியெழுப்பிவிடலாகாது. மக்களின் கடப்பாடுகளுடனான பலம்பொருந்திய ஆட்சியையே கட்டியெழுப்பவேண்டும். இந்த 07 மாதங்களில் உச்ச அளவிலான அர்ப்பணிப்புடன் செயலாற்றி பலம்பொருந்திய வெற்றியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்தனகல்ல தலைவியில் தொடங்கி மேலும் பலருக்கு செவிசாய்த்த பெருந்தொகையானவர்களே இங்கு குழுமியுள்ளார்கள். அந்த தலைவர்களும் தலைவிகளும் வெற்றியீட்டிய பின்னர் அவர்களிடம் நிலவிய நலமான பிரார்த்தனைகள் அவர்களின் கண்ணெதிரில் சிதைக்கப்பட்டன. அண்மைக்காலத்தில் மிகவும் அதிகமான நல்ல பிரார்த்தனைகளுடன் கட்டியெழுப்பியது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியாகும். கோட்டாபய ராஜபக்ஷவுடன் மகிந்த ராஜபக்ஷவிற்குகூட விளையாட்டுக்காட்ட முடியாதென அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டதுமே மக்கள் எழுச்சிபெற்று அவரை விரட்டியடித்தார்கள். வெகுவிரைவில் அவர்களின் அனைத்துக் குழுக்களும் ஒரே மேடையில் தோன்றுவார்கள். 94 இல் சனாதிபதியான சந்திரிக்கா, 2005 இல் சனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ, 2015 இல் சனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 2022 இல் சனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் ஒரே மேடைக்கு ஏறுவார்கள். எதிர்வருகின்ற தேர்தலில் அவர்களின் மேடை இலங்கையின் பலவர்ண மேடையாக அமையும். அது நன்மைக்காக அல்ல. புதுவருடப் பிறப்பின்போது வினோதஉடை போட்டியைப்போல் கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற மக்கள் வெற்றிக்கு எதிராகவே அவர்கள் வருகிறார்கள். சஜித்திற்கும் ரணிலுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு இல்லாவிட்டால் அவர்கள் இருவரும் ஒரே மேடைக்கு வருவார்கள். எனினும் நாங்கள் ஒன்றை அறிவோம். அவர்கள் ஊழல்மிக்க பிரபுக்கள் பொறியமைப்பாவர். ஊழல்மிக்க பிரபுக்கள் பொறியமைப்பினை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரே மூச்சுடன் ஒன்றுசேர்வதே அவர்களின் நோக்கமாகும். மக்களின் அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதற்காக ஊடகப் பலத்தை உள்ளிட்ட பலவிதமான சாதனங்கள் அவர்களிடம் உண்டு. தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பது மக்களின் எழுச்சி மாத்திரமேயாகும். சுயாதீனமான நடுநிலை அவதானிப்பாளர்கள் போன்ற எவராலுமே நிலவ முடியாது. ஒன்றில் ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின் பாதுகாவலர்கள் அல்லது பொதுமக்களின் அவசியப்பாடுகளுக்காக செயலாற்றுபவர்கள்.

மோசடியும் ஊழலுமற்ற அரசியல், சட்டம் அனைவருக்கும் அமுலாக்கப்படுகின்ற அரசியல், தேசிய வளங்களை விற்றுத்தீர்ப்பதற்கு எதிரான அரசியல் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயலாற்றுகின்ற அரசியல் பொதுமக்களின் அவசியப்பாடாக நிலவியது. மே 09 ஆந் திகதி கோல்பேஸ் போராட்டம்மீது தாக்குதல் நடாத்தியவேளையில் துறைமுகத்தில், தேசிய வைத்தியசாலையில் மற்றும் வேறு இடங்களிலிருந்து மக்கள் ஓரேயடியாக கோல்பேஸ் நோக்கி ஓடினார்கள். தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காக அணிதிரண்டார்கள். அதனால் பொதுமக்களின் தேவையும் ஊழல்மிக்க பிரபுக்கள் தலைமுறையின் தேவையும் தெளிவான பிரிகைக்கோடு மூலமாக பிரிக்கப்படுகின்ற தருணத்தில் நடுநிலையாக எவராலுமே இருக்க முடியாது. கம்பஹா மாவட்டத்தின் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுசேர்வதன் மூலமாக சுட்டிக்காட்டுவது அதனையே. 76 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் இருண்டதெல்லாம் பேய் என்ற பயத்துடனேயே இருக்கிறார்கள். பசில் ராஜபக்ஷ அமைச்சர் பதவியில் நீங்கியதும் ஊடக சந்திப்பில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறினார்கள். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதியானதும் உடனடியாக சனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ள இயலாதென்பதால் எல்லாவற்றையும் வாபஸ் பெற்றுக்கொண்டார்கள். இவ்விதமாக எல்லாவற்றினாலும் பாதிக்கப்பட்ட மக்களே இருக்கிறார்கள். அதனால் எம்மை எவ்வாறு நம்புவதென எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கிறோம். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். வரலாற்றில் அவர்களின் தேவைகள் – மக்களின் தேவைகள் என இருவிதமான தேவைகள் நிலவின. இலங்கையில் முதல்த்தடவையாக நாங்கள் ஒன்றுசேர்ந்து ஆளுகையின் தேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் சமச்சீராக அமையத்தக்க அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.

பொருளாதாரத்தின் வீழ்ச்சி நாட்டையும் மக்களையும் பாதிக்கின்றது. அரசாங்கத்திற்கு செலவுசெய்ய திறைசேரியில் பணம் இல்லாமை நாட்டைப் பாதித்துள்ளது. இந்த வருடத்தில் மதிப்பீடுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 4164 பில்லியன் ரூபாவாகும். இந்த தடவை கடன் தவணை செலுத்துதல், வட்டித் தவணை செலுத்துதல் மற்றும் அரசாங்க செலவினங்களுக்காக 11,277 பில்லியன் ரூபா செலவாகின்றது. பொருளாதாரமொன்று வீழ்ச்சியடைந்ததும் உள்நாட்டைப் போன்றே நாட்டுக்கு இறக்குமதி செய்யவேண்டிய பண்டங்களுக்கான டொலர் இல்லாமல் போகின்றது. இன்றளவில் பாடசாலை உபகரணங்களை உள்ளிட்ட கல்விமீதும் வற் வரி விதிக்கப்படு்டுள்ளது. அதைப்போலவே ஓளடத உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பாரிய வரி வலையமைப்பில் மக்களை சிறைப்படுத்தி மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் பேர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீரழிந்ததும் தொழில்கள் உருவாக மாட்டாது. நாங்கள் கட்டியெழுப்புகின்ற பொருளாதாரத்தில் அத்தியாவசிய பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் குறைவடைகின்ற, உற்பத்தி அதிகரிக்கின்ற, பிள்ளைகளுக்கான தொழில்கள் பிறக்கின்ற புதிய பொருளாதார திட்டமொன்றை அமுலாக்குவோம். மின்சாரத்திற்கான செலவினை இரண்டு வருடங்களில் 2/3 ஆல் குறைக்கமுடியும். அதைப்போலவே சரியான பெறுகை செயற்பாங்கினை கடைப்பிடியாமையால் அரசாங்கம் 30,000 கோடி ரூபாவினை இழக்கின்றது. மறுபுறத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வரிவலையிலிருந்து வெளியேற, வங்கிகளுக்கு பொல்லுவைத்திட இடமளித்துள்ளார்கள். அதனை நிறுத்தி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை பாரியளவில் குறைக்க முடியும்.

புதிய தலைமுறையினர் எட்டு மணித்தியால வேலையை செய்வதற்குப் பதிலாக சுதந்திரமாக தொழிலில் ஈடுபட எதிர்பார்க்கிறார்கள். அதற்காக எமது பொருளாதாரத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி வர்க்கமொன்று உருவாகும். ஆபிரிக்க பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்துவருகின்ற சந்தைக்காக இப்போதிருந்தே திட்டங்களை வகுத்திடவேண்டும். சர்வதேசரீதியாக புதிய சந்தையை உருவாக்கிடாமல் அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யாமல் முன்நோக்கி நகரமுடியாது. தேசிய மக்கள் சக்தியால் அதற்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற செயற்பாங்கு ஆரம்பிக்கப்படும். அதைப்போலவே குற்றச்செயல் புரிபவர்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளிவைத்து சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்திடுவோம். கள்ளத்தனமாக உருவாக்கிய ஒரு நாடு உலகில் எங்குமே கிடையாது. பொதுமக்களிடமிருந்து திருடிய செல்வத்தை மீளவும் கையகப்படுத்துகின்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்புவோம். தற்போது அமுலில் இருப்பது ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற கல்வியாகும். முதலாவது வருடத்தில் சேர்கின்ற ஒவ்வொரு பிள்ளையையும் மருத்துவராக மாற்றுகின்ற நேர்கோட்டுப் பாதையை முன்னெடுத்து வருவதற்குப் பதிலாக பிள்ளைகளின் பரந்துவிரிந்த திறன்களை வளர்த்தெடுக்கின்ற விரிவான பாதையொன்றை அமுலாக்கவேண்டியது அவசியமாகும். சமூகமொன்று நிலவவேண்டுமாயின் சமூக கௌரவத்தைக்கொண்ட தொழில்சார் திறன்களைக்கொண்ட பலவிதமான தொழில்கள் நிலவவேண்டும். எமது கல்வியை அதற்கேற்ற நவீனமயமாக்கிய நிலைமைகளுடன் ஒத்திசைவு செய்யவேண்டும். ஜப்பானின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும் பிரஜைகள் ஆணிமுறிச்சிகளாக மாறியுள்ளார்கள். அத்தகைய ஒரு நிலைமை எமக்கு பயனுறுதியானதல்ல. ஒத்துணர்வுகொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். கலை, இலக்கியத்தை இரசிக்கின்ற, புதிய மனோபாவரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக பொலீஸ், இராணுவம் ஈடுபடுத்தப்படவேண்டும். சமூகப் பாதுகாப்பு அவசியமாகும். புதிய எதிர்பார்ப்பினைக்கொண்ட சமூகமொன்றை நாங்கள் உருவாக்குவோம். அதற்காக பெரும்பான்மையான மக்களின் எழுச்சி அவசியமாகும். 1948 இல் வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலைபெற்றவேளையில் பாரிய மகிழ்ச்சியுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். 450 வருடங்களாக பல மேலைத்தேய நாடுகளுக்கு கட்டுப்பட்டு இருந்து 133 வருடங்கள் முற்றாகவே வெள்ளைக்காரனுக்கு கட்டுப்பட்டிருந்து சுதந்திரம் பெற்றது எத்தகைய தேசிய புத்துணர்ச்சியை எற்படுத்தியிருக்க வேண்டும்? இத்தடவை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சுற்றிக்கைகள் மூலமாக அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் எம்மோடு இணையாக சுதந்திரம்பெற்ற இந்தியாவில் மொழி பேதங்கள், பிரதேச வேறுபாடுகள், சமய வேறுபாடுகள் அனைத்துமே ஒருபுறம் தள்ளிவைக்கப்பட்டு ஒருகொடியின் நிழலில் ஒன்றுதிரண்டது. இறுதியில் அப்துல் கலாம் சனாதிபதியானார். மன்மோகன் சிங் பிரதமரானார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரென அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெண் சனாதிபதியானர். அதற்காக எவ்வளவு முன்னேற்றமடைந்த நோக்கு இருக்கவேண்டும்? எனினும் எமது நாட்டில் 1949 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை ஒழிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். 1956 இல் மொழிப் பிரச்சினை. 1958 இல் தமிழ்- சிங்கள கலவரம். 1965 அளவில் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” எனக்கூறி ஊர்வலமாக சென்றார்கள். 1976 அளவில் வடக்கில் ஆயுதமேந்திய போராட்டம் தோன்றியது. 1981 இல் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் செட்டியார் தெருவை தீக்கிரையாக்கினார்கள். இறுதியாக 2019 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2015 இல் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகள் வந்து 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எமக்கு எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான திட்டமொன்று இருக்கவில்லை.

உலகம் பாய்ச்சலுடன் முன்நோக்கி நகரும்போது எமது ஆட்சியாளர்கள் எம்மை வரலாற்று மோகத்தில் சிறைவைத்தார்கள். உலகத்தில் மாறிவருகின்ற நவீனத்துவத்தை உறிஞ்சிக்கொள்ள எமக்கு இயலாமல் போயிற்று. உலகில் வேகமாக ஓடுகின்ற தொடர் ஊர்தியை கண்டுபிடிக்கையில் இரவு 10 மணிக்குப் பின்னர் ஊருக்குப்போக எமக்கு பேருந்து கிடையாது. வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாக அமையாத ஒரு நாட்டை உருவாக்குவதற்கான நோக்கு எம்மிடம் இருக்கவில்லை. தற்போது 76 வருடகால ஊழல்மிக்க அரசியலை தோற்கடித்து அந்த நுகத்தடியில் இருந்து விடுபட்டு நாட்டு மக்கள் புதிய தேசிய உணர்வுடன் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 76 வருடகால ஊழல்மிக்க ஆட்சியிலிருந்து விடுபட்டமை வெள்ளைக்காரனிடமிருந்து எமது நாடு சுதந்திமடைந்ததைவிட மிகப்பெரிய உணர்வினை எமக்கு உணர்த்தும். எமது வாழ்நாளில் கிடைக்கின்ற மிகப்பெரிய மகிழ்ச்சியை இந்த தேசிய புத்தெழுச்சி, மலர்ச்சி ஊடாக எமது நாட்டுக்கு புதிய பாதையொன்றைத் திறந்துவிடுவதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக நாமனைவரும் எழுந்திடுவோம். நாமனைவரும் அதற்காக மல்லுக்கட்டுவோம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோமென உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Show More