–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில், துணிச்சலுடன், திடசங்கற்பத்துடன் ஆட்சியாளருக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறோம். உங்கள் யுகம் முடிந்துவிட்டதென்பதை நாங்கள் இந்த மேடையில் இருந்து உரத்தகுரலில் கூறுகிறோம். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தினத்திலேயே உங்களின் யுகத்தை மாற்றியமைக்கின்ற, எமது அத்தியாயத்தை தொடங்குகின்ற, எமது தலைமுறையினர் பொறுப்புக்களை ஏற்கின்ற, புதிய வரலாற்றினை எழுதுகின்ற இந்த தருணம் குறிக்கப்படுகின்றது. 75 […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–
இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில், துணிச்சலுடன், திடசங்கற்பத்துடன் ஆட்சியாளருக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறோம். உங்கள் யுகம் முடிந்துவிட்டதென்பதை நாங்கள் இந்த மேடையில் இருந்து உரத்தகுரலில் கூறுகிறோம். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தினத்திலேயே உங்களின் யுகத்தை மாற்றியமைக்கின்ற, எமது அத்தியாயத்தை தொடங்குகின்ற, எமது தலைமுறையினர் பொறுப்புக்களை ஏற்கின்ற, புதிய வரலாற்றினை எழுதுகின்ற இந்த தருணம் குறிக்கப்படுகின்றது. 75 வருடங்களில் இந்த கொடிய ஆட்சி எமக்கு எதனை மீதமாக்கியது என்பதை அனைவரும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது பயத்துடனேயே எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்க நேர்ந்துள்ளது. பாடசாலைகளின் கட்டுமாணங்கள்கூட பாதுகாப்பற்றவையாகும். ஆறு வயது நிரம்பிய சிறுமி பிறந்த நாளன்று கட்டுமாணம் சிதைந்து மடிகின்றது. மேலும் சில பிள்ளைகள் வைத்தியசாலையில். இவற்றைத்தான் எமக்கு எமது கல்வி எஞ்சவைத்துள்ளது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைகக்க முடியாத நிலைமை உருவாகி இருக்கின்றது. எமது பிள்ளைகள் மிகவும் சிரமப்பட்டு கல்வி பயின்று, தகைமைகளை சேர்த்துக்கொண்டு, சித்தியடைவேண்டிய அனைத்துப் பரீட்சைகளிலும் சித்தியடைந்து, தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எட்டாம்வகுப்பில் சித்தியடைந்த அமைச்சர்களின் பின்னால் செல்லவேண்டி நேர்ந்துள்ளது. நோயுற்று மருந்து வாங்கப்போனால் அந்த மருந்து தொடர்பில் நம்பிக்கை கிடையாது. நிபுணத்துவ மருத்துவர்கள் வைத்தியசாலைகளில் கிடையாது. தாதிமார் கிடையாது. நாட்டை விட்டுச் சென்றுள்ளார்கள்.
விடுமுறைக்காக இரண்டுநாள் சுற்றுலாசெல்ல வழியில்லை. ஓய்வுநேரத்தில் வாசிக்க புத்தகமொன்றை விலைக்கு வாங்க, திரைப்படமொன்றை பார்க்கச்செல்ல ஆயிரம்தடவைகள் சிந்திக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ஹோட்டலொன்றுக்குச் சென்று ஒருவேளை உணவு உண்ணுவதற்கு வழியில்லாமல் செய்துவிட்டார்கள். ஓய்வுநேரத்தை இல்லாதொழித்து விட்டார்கள். மனிதத்திற்கு அர்த்தம்தரவல்ல எல்லாவற்றையும் ஒழித்துவிட்டார்கள். எமது நிலைமை அப்படியானாலும் அவர்களின் வாழ்க்கைக்கு அவசியமான எல்லா வசதிகளையும் அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் அனைவரும் ஒன்றுகூடி 17 ஆந் திகதி பிறந்தநாள் கேக் வெட்டுகிறார்கள். ஆறு வயது சிறுமி பிறந்தநாளன்று இறக்கின்றது. இரண்டு நாட்கள்கூட கழியவில்லை. நாட்டுப் பிள்ளைகளுக்கு அவ்வாறு நேரும்போது பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கும்.
இந்த நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒருவாரம்கூட கழியவில்லை. பெயர்குறிக்கப்பட்டவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. “ஹெப்பி பேர்த் டே” எனக் குறிக்கொண்டு அவர்கள் கேக் ஊட்டிக் கொள்கிறார்கள். எந்தளவு கொடூரம்? எந்தளவு கூருணவற்றவர்கள்? எவ்வளவு நெருக்கடி தோன்றியுள்ளபோதிலும் மக்களின் துன்பதுயரங்களை அறியாத ஆட்சியாளர்களை விரட்டியடிக்கவேண்டிய தேவையில்லையா?
அவர்களின் வாழ்க்கை எவ்வாறு கழிகின்றது? நோயுற்றால் மருந்து வாங்க வெளிநாடு செல்லலாம். பெற்றோல் விலை அதிகரிக்கின்றமை, போக்குவரத்து அவர்களுக்கு பிரச்சினையில்லை. எம்மீது வரி விதித்து, எம்மைச் சுரண்டித் தின்றே அவர்கள் சுகபோக வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். இதற்கு நாங்கள் மென்மேலும் இடமளிக்கவேண்டுமா? மக்களுக்கு எதிரான ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்க நாங்கள் ஒன்றுசேர்ந்திருப்பதும் திடசங்கற்பம் பூண்டு இருப்பதும் அதற்காகவே. அவர்களுக்குத் தேவையான விதத்தில் எம்மை மிதித்து, துன்பப்படுத்தி, எமது மனிதத்தையும் கனவுகளையும் பிடுங்கிக்கொண்டு இனிமேலும் இந்த பயணத்தை தொடர இடமளிக்க நாங்கள் தயாரில்லை. ரணில் விக்கிரமசிங்க தனது கூட்டாளிகளுடன் புரிகின்ற டீல் அரசியல் யுகத்தை இந்த நாட்டின் பிரஜைகள் இப்போது முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். எமது யுகம் ஆரம்பித்துள்ளது.
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– நாங்கள் நுகேகொடவில் குழுமியிருப்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மகிந்த ராஜபக்ஷ கும்பலுக்கும் இறுதி அறிவித்தலைக் கொடுப்பதற்காகும்: “எமது நாட்டை எங்களுக்கு எஞ்சவைத்து, இறங்கிப்போங்கள்” எனக் கூறுவதற்காகவே: இந்த கொடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் நாட்டை மீட்டெடுப்பதை உறுதிசெய்யவும் அதற்காக நாட்டுமக்கள் அனைவரும் கைகோர்த்திருக்கிறார்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவுமே. எமது நாட்டின் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் என ஓரிரண்டு துறைகளை வீழ்த்தியிருப்பின் மீட்டெடுப்பது […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–
நாங்கள் நுகேகொடவில் குழுமியிருப்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மகிந்த ராஜபக்ஷ கும்பலுக்கும் இறுதி அறிவித்தலைக் கொடுப்பதற்காகும்: “எமது நாட்டை எங்களுக்கு எஞ்சவைத்து, இறங்கிப்போங்கள்” எனக் கூறுவதற்காகவே: இந்த கொடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் நாட்டை மீட்டெடுப்பதை உறுதிசெய்யவும் அதற்காக நாட்டுமக்கள் அனைவரும் கைகோர்த்திருக்கிறார்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவுமே. எமது நாட்டின் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் என ஓரிரண்டு துறைகளை வீழ்த்தியிருப்பின் மீட்டெடுப்பது இலகுவானது. எனினும் கடந்த காலப்பகுதி பூராவிலும் நாடு பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, சமூகரீதியாக மற்றும் கலாசாரரீதியாக அனைத்துப் பிரிவுகளிலும் சிதைக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு நாட்டை கொள்கைகளால் மாத்திரம் மீட்டெடுக்க முடியாது. அதனை மீட்டெடுக்க பல நற்பண்புகள் அவசியமாகின்றன. அவையனைத்துமே பொதிந்திருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பது இந்த ஒழுக்கத்தை மதிக்கின்ற போராட்டத்தன்மைமிக்க ஊர்வலத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரே நோக்கத்துடன் ஒரே போராட்டக் கோஷத்தை எழுப்பி ஒழுக்கமும் அடக்கமும் நிறைந்தவர்களாக தனிப்பட்ட நோக்கங்களுக்காகவன்றி பொதுநோக்கமொன்றுக்காக பேரணியில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். எம்மிடம் இருப்பது தனித்தனியாக பிரத்தியேக நோக்கங்களன்றி வீழ்த்திய நாட்டைக் கட்டியழுப்புகின்ற பொதுவான ஒரே நோக்கமே என்பதை உறுதிப்படுத்தினோம். வேறு கட்சிகளின் ஊர்வலங்களில் ஒவ்வொருவரினதும் முகங்களைப் போட்டுக்கொண்டு ஒவ்வொருவரை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக வருகின்ற பிரிவினரே இருக்கிறார்கள். நாங்கள் எவருக்கும் பின்னால் செல்வதற்காக இங்கு வரவில்லை. நாசமாக்கியுள்ள எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக போராட, அர்ப்பணிக்கத் தயார் என்பதை நிரூபிப்பதற்காகவே. அதற்கு அவசியமான பண்புகள், வலிமை, ஆன்மீகம் இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே.
நாடு எக்கேடுகெட்டாலும் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை கிடையாது. நாட்டுமக்கள் உணவின்றி, மருந்துகளின்றி, கல்விகற்பதற்கான வசதிகளின்றி இருக்கையில் ஆட்சியாளர்கள் பாரியளவிலான ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மனிதர்களை மனிதன் நேசிக்கின்ற, தமக்கு தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பார்க்காமல் 75 வருடகாலமாக பாதிப்படையச் செய்வித்துள்ள மக்களை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்துவிதமான அர்ப்பணிப்புகளையும் செய்ய நாங்கள் தயார் என்பதை மீண்டும்மீண்டும் உறுதிசெய்துள்ளோம். இங்கே இருப்பது வெறுமனே மண்டைகள் மாத்திரமல்ல: எமது நாட்டில் இருக்கின்ற மிகச்சிறந்த பண்புகளைக்கொண்ட துணிச்சல்மிக்க பல்லாயிரக்கணக்கான மனிதர்களே. சிலகாலம் பொய்யாக பிரிந்துநின்று, நாடகமாடி, தற்போது ஒன்றாகக்கூடி பழைய வரலாற்றின் இறுதிக் காட்சியை அவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுதவல்ல சக்தியே இந்த இடத்தில் குழுமி இருக்கின்றது. நாங்கள் கடந்துவந்த தூரப் பயணத்தைப்போன்றே அடக்கமாக, ஊக்கத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது.
இங்கே இன்று குழுமியிருப்பவர்கள் வெற்று மனிதர்கள் அல்லவென்பதாலேயே எதி்ரி தேசிய மக்கள் சக்திக்கு பயந்துபோயுள்ளார்கள்: வெறுமனே வாக்காளர் மாத்திரம் அல்லவென்பதாலேயே. ஒரு தீர்மானத்தை எடுத்தால் கற்பாறையிலும் சாகுபடி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த மனிதர்களே இங்கு குழுமியிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் மக்கள் அபிப்பிராயத்திற்கு அஞ்சுகிறார்கள். தேர்தல்கள் மூலமாக மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு அஞ்சுகின்ற ரணில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள் தேர்தலை பிற்போட்டுள்ளார்கள். அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு பிற்போடப்பட்டு வருகின்றது. அதேவேளையில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னராகவே மக்கள் அபிப்பிராயம் வெளிபடுத்தப்படுகின்ற சமூக வலைத்தளங்களை அடக்குவதற்காக சட்டங்களக் கொண்டுவந்துள்ளது. மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றது. எவருடன் அந்த விளையாட்டை நடாத்தினாலும் மாபெரும் மக்கள் பலத்தைக்கொண்ட ஒழுக்கமும் திடசங்கற்பமும்கொண்ட தேசிய மக்கள் சக்தியுடன் விளையாட இயலாதென ரணிலுக்கும் அவருடைய கையாட்களுக்கும் கூறிவருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவிற்கு எஞ்சியிருப்பது அதிகபட்சமாக இன்னும் பத்து மாதங்களில் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு போவது மாத்திரமே என்பதை வலியுறுத்துகிறோம். ராஜபக்ஷாக்களுக்கும் அப்படித்தான். அரசாங்கங்களை மாற்றி மெச் விளையாடிய எதிரிகளின் யுகம் முடிந்துவிட்டது. தற்போது பிறந்துள்ளது மக்களின் யுகமாகும். இந்த யுகத்தை எமது கைகளால் நிர்மாணிப்போம் என்பதைக் கூறுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம். அதனை நிறுத்தவல்ல எந்தவொரு சக்தியும் கிடையாது.
பல மாதங்களுக்கு முன்னர் “மகிந்தவுடன் எழுந்திடுவோம்” என ஒன்றைப் போட்டுப் பார்த்தார்கள். சரிவரவில்லை என்பதால் “நாமலுடன் எழுந்திடுவோம்” எனப் போட்டார்கள். தற்போது பசிலுடன் எழ எத்தனிக்கிறார்கள், எனினும் முடியவில்லை. அவர்களின் காலம் கடந்துவிட்டது. இப்போது மக்களின் யுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாட்டை வீழ்ச்சியுறச் செய்வித்து திசைமாறி பயணித்துக் கொண்டிருந்த மக்களுக்கு தமக்கு என்ன நேர்ந்ததென்பதை திரும்பிப் பார்க்கமாறு ஆட்சியாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டது. இவ்விதமாக நிர்ப்பந்திக்கின்ற தருணத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து பயணப்பாதையைக் காட்ட தேசிய மக்கள் சக்தி இருந்தது. திருடனைப்பார்த்து திருடன் என்று நாட்டு மத்தியில் வெளிபடுத்திய ஒரே தலைவர் அநுர குமார திசாநாயக்க மாத்திரமே. ஒரு காலத்தில் அவர்களின் ஆட்கள் “திருடினாலும் வீதிகளை அமைத்தார்களே” போன்ற அபிப்பிராயங்களை தெரிவித்து வந்தார்கள். இன்று மக்களுக்கு அந்த வீதிகளில் பயணிக்க வாகனங்களுக்கு எரிபொருள் அடிக்கக்கூட முடியாது. இதனால் திருடர்களுக்கு மீண்டும் வாய்ப்பினை அளிக்காதிருக்க மக்கள் திசங்கற்பத்துடன் இருக்கிறார்கள். மக்களை வென்றெடுக்கின்ற போராட்டத்தின் மிகப்பெரிய ஆயுதம் கருத்துக்களே. எம்மிடம் சரியான கருத்துக்கள் இருப்பதைப்போலவே எம்மொவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள அந்த சரியான கருத்து ஏனைய அனைத்தையும்விட பலம்பொருந்தியது. தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்களுடன் போராடக்கூடிய எந்தவொரு சக்தியும் இலங்கையில் கிடையாது. ஒழுங்கமைத்தல் கோணத்தில் பார்த்தாலும் தோல்விதான். தனியொரு தலைவனின் பின்னால் செல்கின்ற ஒரு குழுவினரை நாங்கள் அமைக்கவில்லை. அநுர தோழரின் தலைமையில் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றிதோல்வியை தாங்கிக்கொண்டு நம்பிக்கையுடன் பயணிக்கின்ற கூட்டான தலைமைத்துவத்தை அமைத்தோம். இந்த கூட்டுமனப்பாங்கிற்கு வெற்றியீட்ட முடியுமென்பது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அவர்களால் கூட்டாக சாதிக்கக்கூடியது திருடுவதை மாத்திரமே. கருத்தியல்ரீதியாகவும் ஒழுங்கமைத்தல் திறனிலும் நாங்கள் அவர்களை தோற்கடித்துவிட்டோம். அரசியலமைப்பில், சனாதிபதி பதவியில் மற்றும் பாராளுமன்றத்தில் மாத்திரமே அவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதிலும் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலில் எமது நாட்டு வரலாற்றில் முதல்த்தடவையாக பொதுமக்கள் தலைவரொருவரை வெற்றியீட்டச் செய்விக்க நாமனைவரும் தயார். சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் உடனடியாக இந்த கொடிய, ஊழல்மிக்க பாராளுமன்றத்தைக் கலைத்து அந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டை சரிக்கட்டுவதை தொடங்குவோம். நாட்டை சரிக்கட்டுவதைப்போலவே கள்வர்களைப் பிடிக்கவும் வேண்டியுள்ளது. கள்வர்களுக்கு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கவும் வேண்டியுள்ளது. எம்மைச்சுற்றி நம்பிக்கைவைத்து ஒன்றுசேர்கின்ற பிரமாண்டமான மக்கள் சக்தி புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதை நிச்சயமாக செய்யும். உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், மீனவர்கள், கைத்தொழிலதிபர்கள், இளைய தலைமுறையினர் மற்றும் நீதியைக்கோரி கண்ணீர்வடிக்கின்ற பெண்களின் சக்திகள் எம்மைச் சுற்றிக் குழுமி இருக்கின்றன. இந்த நாட்டைக் கட்டியழுப்புகின்ற அறிவும் விருப்பமும் கொண்ட தீத்தொழில் புரிபவரல்லாத அனைத்து தொழிலதிபர்களினதும் ஒன்றிணைதல் இடம்பெறுகின்றது. கடந்த நாட்களில் எம்முடன் புதிதாக சேர்ந்தவர்கள் முப்படையிலிருந்து இளைப்பாறிய அதிகாரிகளை உள்ளிட்ட அனைவருமாவர். அவர்கள் மாபெரும் சக்தியாக திடசங்கற்பத்துடன் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். மகிந்த ராஜபக்ஷாக்கள், ரணில் விக்கிரமசிங்காக்களுடன் இருக்கின்ற திருட்டுக் கும்பலைத் தவிர புதிய அனைத்துச் சக்திகளும் தேசிய மக்கள் சக்தியை சுற்றிக் குழுமிவிட்டன. இன்றளவில் மக்கள் கருத்து ஆய்வின்படி 50% ஐ விஞ்சிய வெற்றி தேசிய மக்கள் சக்திக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. அரசாங்கம் மீதான விருப்பம் 9% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றளவில் கத்தரிக்கப்பட்டுள்ள சனநாயக பிரவாகத்தில் எம்மால் வெற்றிபெற முடியும். அது தொடர்பில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அதனால் தாம் விரும்புகின்ற ஆட்சியை அமைத்துக்கொள்ள மக்கள்கொண்டுள்ள உரிமைமீது கைவைக்க தயாராக வேண்டாமென நாங்கள் ரணிலிடம் கூறுகிறோம். கைவைத்தால் கோட்டாபய சென்ற பாதையிலேயே ரணில் விக்கிரமசிங்கவையும் அனுப்பிவைக்க மக்கள் செயற்படுவார்கள் என்பதில் ஐயம் கிடையாது.
நாங்கள் எவருமே தற்போது பொறுப்புடையவர்களாக அரசியலில் ஈடுபடவேண்டும். கிராமங்களுக்கு புதிய தலைமைகளை அறிமுகஞ்செய்து தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம், இந்து சமயங்களைச்சேர்ந்த மக்களை இலங்கையர்கள் என்றவகையில் ஒன்றுசேர்க்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாமனைவரும் எமது கைகளால் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவோமென்ற திடசங்கற்பத்துடன் ஒன்றுசேர்வோம். எவராலும் தோற்கடித்திடமுடியாத நாட்டை சரிக்கட்டுகின்ற பிரமாண்டமான மக்கள் பலத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக கூட்டுமனப்பான்மை, சகோதரத்துவம், பொதுநலம் போன்ற சிறந்த பண்புகளை ஒன்றாக சேர்த்திடுவோம். கிடைக்கின்ற முதலாவது தருணத்திலேயே ரணில் விக்கிரமசிங்காக்களை மகிந்த ராஜபக்ஷாக்களை விரட்டியடித்து வீழ்த்தப்பட்ட நாட்டை கட்டியழுப்புவதற்காக அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார். நாட்டின் அனைத்து மக்களும் சந்தோஷமாக வசிக்கின்ற நாளைய தினத்தை எம்மால் உருவாக்க முடியும். அதற்காக போராட, அர்ப்பணிப்புச்செய்ய, உழைத்திட நாங்கள் தயார். எங்கள் கைகளால் எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம். எமது தலைமுறையினர் நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுதுவார்கள். இந்த கொடிய ஆட்சிக்குள் வசிக்கின்ற இறுதிப் பரம்பரை நாங்கள்தான். அனைவருக்கும் வெற்றிகிட்டட்டுமாக!
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட– இன்று தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் எதிர்ப்பு பேரணியில் வந்தார்கள்? அரசாங்கம் எமது நாட்டின் பெறுமதிமிக்க தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: வரம்பற்ற வரிச்சுமையை திணித்து மக்கள்மீது சுமத்தியுள்ள அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: மக்களின் அத்தியாவசிய பண்டங்களின் விலையை வரம்பற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே. எனினும் இந்த எதிர்ப்பு தெரிவிப்பதால் மாத்திரம் நின்றுவிட மாட்டாது. […]
–2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட–
இன்று தெல்கந்த சந்தியில் இருந்து நுகேகொட வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் எதிர்ப்பு பேரணியில் வந்தார்கள்? அரசாங்கம் எமது நாட்டின் பெறுமதிமிக்க தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: வரம்பற்ற வரிச்சுமையை திணித்து மக்கள்மீது சுமத்தியுள்ள அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக: மக்களின் அத்தியாவசிய பண்டங்களின் விலையை வரம்பற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே. எனினும் இந்த எதிர்ப்பு தெரிவிப்பதால் மாத்திரம் நின்றுவிட மாட்டாது. தேசிய மக்கள் சக்தியின் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்புவதற்காக வரிசைப்படுத்துகின்ற எதிர்ப்பு இயக்கமாகும். இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பொது ஆதனங்களைக் கொள்ளையடிக்கையில் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்கையில் சனநாயகத்தை சுருட்டிக்கொள்ளும்போது பல தசாப்தங்களாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். தற்போது எதிர்ப்பு ஒரு திட்டவட்டமான திருப்புமுனைக்கு வந்து ஊழல்மிக்க ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும்வரையும் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை கட்டியெழுப்புதல் வரையும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டின் அரசியல் மிகவும் திட்டவட்டமான தீர்வுக்கட்டமான திருப்புமுனையை நோக்கிப் பயணித்துள்ளது. அடுத்த வருடத்தின் நவெம்பர் மாதமளவில் புதிய அரசாங்கமொன்றை, புதிய ஆட்சியொன்றை நிறுவுவோமென நாங்கள் உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது இந்த கொடிய அழிவுமிக்க ஆட்சியின் இறுதி வரவுசெலவுத் திட்டமாக மாறுவது திண்ணம்.
இந்த வரவுசெலவினை சமர்ப்பித்து தலையணை உறைபோல மறுபக்கம் புரட்டுவதாக ரணில் குறிப்பிட்டார். இதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னரும் ரணில் தலையணை உறையை மறுபக்கம் புரட்டியதாகக் கூறினார். இரண்டு தடவைகள் தலையணை உறையை திருப்பிப்போட்டால் இருந்த அதே பக்கமல்லவா தற்போது இருக்கும். நாட்டின் வளங்களை விற்று, கடன்பெற்று வருகைதந்த பயணத்தின் மற்றுமொரு அடியெடுப்பு மாத்திரமே. ஒரு நாட்டினதும் உலக மக்களினதும் அவசியப்பாடுகளுடன் அமைந்தொழுகத்தக்கவகையில் பண்டங்கள் மற்றும் சேவைகள் உற்பத்தியை மாற்றியமைத்து முன்கொண்டுசெல்கின்ற திட்டமொன்று இந்த ஆட்சியாளர்களிடம் கிடையாது. சதாதகாலமும் தேயிலை, இரப்பர், தெங்கு ஏற்றுமதிப் பொருளாதாரம் பற்றியே பேசினார்கள். தேயிலை, இரப்பர், தெங்கின் அளவுக்கே இந்த தலைவர்களும் பழையவர்களே. உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களுடன் நேரொத்தவகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகளை செய்வதில் இந்த ஆட்சியாளர்கள் வெற்றிபெறவில்லை. உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு நேரொத்ததாக அமையத்தக்கவகையில் கல்வியை மாற்றியமைப்பதில் இந்த தலைவர்கள் வெற்றிபெறவில்லை. அதனால் உலகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, பொருளாதாரம் சீரழிந்து, குற்றச்செயல்கள் நிறைந்த நாடொன்று எஞ்சியுள்ளது. பிரஜைகளுக்கு தமது அத்தியாவசிய உணவுகள் மற்றும் ஔடதங்களை உள்ளிட்ட பண்டங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அழிந்துபோன ஒரு நாடும் சமூகமும் எம்மெதிரில் உள்ளது. எழுபத்தைந்து வருட சாபக்கேடு இதுதான். ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவில் முன்வைப்பது அந்த சாபக்கேட்டின் நீடிப்பினையாகும். ரணில் வரவுசெலவின் முதலாவது அத்தியாயத்திலேயே எழுபத்தைந்து வருடகால சாபக்கேடு பற்றி சொல்லாமல் சொல்லப்படுகின்றது. ரணில்களின் அரசியல் கொள்கைதான் வரவுசெலவுத் திட்டத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 75 வருடகால அழிவினைப் பற்றி அவர்கள் இப்போது எம்மிடம் கூறுகிறார்கள். ரணிலிடமிருந்தோ அல்லது மகிந்தவிடமிருந்தோ அல்லது அதே பாணியிலான பின்தொடர்பவர் ஒருவரிமிடருந்தோ நாட்டை மீட்டெடுத்தலை எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் கனவான்கள் கூறுவது “எங்கள் கொள்கையையே ரணில் அமுலாக்கி வருகிறார்” என்பதாகும். நாட்டை முன்நோக்கி நகர்த்தவல்ல உபாய மார்க்கம் தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே இருக்கின்றது.
கால்நடை வளங்கள் சபைக்குச் சொந்தமான விவசாயப் பண்ணைகள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் கைகளிலேயே இருக்கின்றன. எமது நாட்டின் பாற்பண்ணைத் தொழிலுக்கு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்து மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கைவிட்டு இருபத்தெட்டாயிரம் ஏக்கர் காணிகளை விற்கத் தயாராகி வருகிறார். 31 விவசாயப் பண்ணைகளைச் சேர்ந்த 28,000 ஏக்கர்களை இந்தியாவின் “அமூல்” கம்பெனிக்கு விற்றுத் தீர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் விற்பனைப் பட்டியலில் இருப்பது நட்டமடைகின்ற நிறுவனங்கள் மாத்திரமல்ல. இலங்கையின் அரச நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய இலாபத்தை ஈட்டுகின்ற நிறுவனங்களும் விற்கப்படுகின்றன. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கடந்த வருடத்தில் பன்னிரண்டாயிரத்து நானூற்றி எண்பத்தாறு மில்லியன் இலாபத்தை ஈட்டியது. இந்த வருடத்தின் செத்தெம்பர்வரை நான்காயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மில்லியன் இலாபம் பெற்றுள்ளது. காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வரி வருமானமும் பங்கிலாபமும் பொது திறைசேரிக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. இலங்கை வங்கியின் கடந்த வருட இலாபம் முப்பதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழு மில்லியன் ஆகும். மக்கள் வங்கியின் கடந்த வருட இலாபம் இருபத்தோராயிரம் மில்லியன் ஆகும். விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இவ்வருட செத்தெம்பர் வரையான இலாபம் இருபத்தாறாயிரம் மில்லியன் ஆகும். மக்களுக்குச் சொந்தமான பாரிய இலாபம் ஈட்டுகின்ற இந்’த நிறுவனங்களை விற்க ரணிலுக்கு இடமளிக்கப் போகிறோமா? தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் தொழிற்சங்க இயக்கத்துடன் ஒன்றுசேர்ந்து இந்த வளங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க செயலாற்றி வருகின்றது.
இந்நாட்களில் பாராளுமன்றத்தில் ஊழலுக்கெதிரான நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. அதற்குள்ளே இருப்பது ஊழல்பேர்வழிகளுக்கு இடையிலான முரண்பாடாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எங்களுக்கு குறைந்த அளவிலான ஊழல்பேர்வழிகள் அல்லது அதிக அளவிலான ஊழல்பேர்வழிகள் என்ற தெரிவு கிடையாது. கள்வன் கள்வனே, ஊழலை நிறுத்துவதற்கான இடையறாத போராட்டமே தேசிய மக்கள் சக்திக்கு இருக்கிறது. அதனை நாங்கள் புரிந்து வருகிறோம். இந்த நாட்டை படுகுழிக்குள் தள்ளுவதில் தாக்கமேற்படுத்தியது தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாத்திரமல்ல: மக்களின் செல்வத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்தமையும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் – மோசடிகளில் கைதேர்ந்தவர்களான மொட்டுவிடமே ரணில் விக்கிரமசிங்கவின் உயிர் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே அதனை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
அதைப்போலவே ஒட்டுமொத்த அரச பொறியமைப்புமே ஆட்டங்கண்டுள்ளது. இலங்கையில் போதைத்தூள் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் பொலீஸார் அறிந்துள்ளதாக மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கூறுகிறார். எனினும் எண்ணிக்கையில் ஏறக்குறைய முப்பது நாற்பது வரையுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பற்றி அறியாதிருக்கும் அளவுக்கு பொலீஸார் பச்சிளம் பாலகர்களா? அரச பொறியமைப்பினை அரசியல் பலத்தினால் இருகூறாக்கியதன் விளைவுகள்தான் இவை. கோப் குழுவின் முன்னிலையில் விசாரணைக்காக அழைப்பிக்கப்பட்ட குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுடன் கோப் குழுவின் தவிசாளர் சைகை மொழியில் குறிப்பால் உணர்த்துகிறார். எந்தவொரு நிறுவனத்திற்கும் தற்போது பொறுப்புக் கூறுதலோ பொறுப்பு வகித்தலோ கிடையாது. கிரிக்கெற் நிறுவனம் தொடர்பில் அமைச்சரவையில் இணக்கப்பாடு கிடையாது. பொலீஸ் மா அதிபரொருவரை நியமிக்க இயலாதுள்ளது. பல சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர்களுக்கு எதிராக வழங்குகள் நிலவுகின்றன. ஒரு நாடு இவ்வாறு பயணிக்க முடியுமா? இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ்பெற்றுக்கொண்டு பயணிக்க முடியுமா? சிதைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அரச பொறியமைப்பினையும் மேலிருந்து கீழ்நோக்கி மீண்டும் பலப்படுத்த வேண்டும். பொலீஸின் சுற்றுப்புறங்களிலும் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன, பாதாள உலகத்தினர் காணிகளை கைப்பற்றிக் கொள்கிறார்கள். எனினும் எந்தவிதமான பொறுப்புக்கூறலும் கிடையாது. சுங்கம், உண்ணாட்டரசிறை திணைக்களம், பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, சபாநாயகருக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலுமின்ற நாட்டை நகர்த்திச்செல்ல முடியுமா?
அரச பொறியமைப்பு மாத்திரமல்ல, அரசியல் பொறியமைப்பும் சிதைவடைந்து இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்தபோதிலும் பிறரது அமைச்சரவையால் நாட்டை ஓட்டிச்செல்ல முடியாது. அரசியல் கட்டமைப்பினால் அரச பொறியமைப்பு நெறிப்படுத்தப்படல் வேண்டும். ரணிலிடம் அரசியல் கட்டமைப்பு கிடையாது. ரணில் விக்கிரசிங்க எந்தவொரு குழுவினை நியமித்தாலும் அந்த குழுவின் தலைவர் சாகல. வேறு அரசியல் கட்டமைப்பு கிடையாது. முன்னர் நிலவியது ராஜபக்ஷாக்களின் அரசியல் கட்டமைப்பு. அரச கட்டமைப்பு முறைப்படி நெறிப்படுத்தப்படுவதில்லை என்பது உயர்நீதிமன்றத்திலும்கூட நிரூபணமாகிவிட்டது.
அரச பொறியமைப்பு மாத்திரமல்ல, அரசியல் பொறியமைப்பும் சிதைவடைந்து இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக இருந்தபோதிலும் பிறரது அமைச்சரவையால் நாட்டை ஓட்டிச்செல்ல முடியாது. அரசியல் கட்டமைப்பினால் அரச பொறியமைப்பு நெறிப்படுத்தப்படல் வேண்டும். ரணிலிடம் அரசியல் கட்டமைப்பு கிடையாது. ரணில் விக்கிரசிங்க எந்தவொரு குழுவினை நியமித்தாலும் அந்த குழுவின் தலைவர் சாகல. வேறு அரசியல் கட்டமைப்பு கிடையாது. முன்னர் நிலவியது ராஜபக்ஷாக்களின் அரசியல் கட்டமைப்பு. அரச கட்டமைப்பு முறைப்படி நெறிப்படுத்தப்படுவதில்லை என்பது உயர்நீதிமன்றத்திலும்கூட நிரூபணமாகிவிட்டது.
ராஜபக்ஷாக்கள் அரசாங்கமொன்றை அமைத்தார்கள். தவறாகவேனும் தலைமைத்துவம் வழங்க அரசியல் கட்டமைப்பொன்று இருந்தது. இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமொன்றை அமைத்திருக்கின்றபோதிலும் அரசியல் கட்டமைப்பொன்று கிடையாது. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் தொலைதூரக் கிராமங்கள்வரை பயணிக்கின்ற, தொலைதூரக் கிராமங்களின் அவசியப்பாடுகள் கொழும்பை மையமாகக்கொண்ட கட்டமைப்புவரை பயணிக்கின்ற புதிய அரச கட்டமைப்பினையே எமது நாடு தாபிக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதற்காக செயற்படுகின்ற ஒரே அரசியல் கட்டமைப்பினைக்கொண்ட இயக்கமாகும். முறையான அரசியல் தலைமைத்துவத்தைக்கொண்ட கிராமங்கள் வரை தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய பொறியமைப்பினைக் கட்டியழுப்பியே நாங்கள் அரசாங்கமொன்றை நிறுவுவோம். தேசிய மக்கள் சக்தியை கிராமம்வரை விரிவாக்குவதன் மூலமாக மாத்திரமே சீரழித்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். நாங்கள் கிராம அலுவலர் பிரிவு வரை வட்டாரச் சபைகளை நிறுவுவது வாக்குப் பெட்டியில் வாக்குகளை நிரப்பிக் கொள்வதற்காக மாத்திரமல்ல. கிராமத்தைக் கட்டியெழுப்புதல்வரை அவசியமாகின்ற அரசியல் தலைமைத்துவத்தை வழங்குகின்ற கட்டமைப்பு என்றவகையிலாகும்.
அரச வருமானத்தைப் பெற்றுத்தருகின்ற நான்கு பிரதான தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் என்பவையே அவை. இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் கட்டியெழுப்பப்படவேண்டியது தேர்தல் நடைபெறுகின்ற நாளில் சென்று புள்ளடி இடுவதற்காக மாத்திரம் அல்ல. திறைசேரிக்கு செல்வத்தை அழைப்பிக்கின்ற வினைத்திறன்கொண்ட நான்கு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் என்றவகையிலாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நாட்டை சரிக்கட்டக்கூடிய செயற்பாட்டாளர்கள் என்றவகையிலேயே பொறியியலாளர்கள், கல்விமான்கள், சுகாதாரத்துறையில் திறன்கொண்டவர்கள், விவசாய விஞ்ஞானிகளை உள்ளிட்ட குழுவினர் உருவாக்கப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவருக்கும் மக்கள் முன்னிலையில் சென்று கூறுவதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. 1977 இல் திறந்த பொருளாதாரத்தைக் கொண்டுவந்தோம் என்றுதான் முன்னர் ஐக்கிய தேசிய கட்சி ஊருக்குப் போய் கூறியது. மகிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரின் “லீ குவான் யூ” எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மலேசியாவின் “மஹதீர் மொஹமட்” போன்றவர் எனவுமே மகிந்தவின் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். அந்த இருவரும் சேர்ந்து உருவாக்குகின்ற நாடு எப்படியிருக்குமென எங்களிடம் கேட்டார்கள். மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் ஆசியாவின் அதிசயத்தைக் கட்டியெழுப்புவதாகக் கூறினார்கள். அப்பா வீடுகளை அமைத்தாரென சஜித் பிரேமதாசவால் இன்று கூறமுடியுமா? தற்போது எவராலும் ஒன்றுமே கூறமுடியாத “பக்காத் திருடர்கள்” என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகத்துடன் முன்நோக்கிப் பயணிக்கின்ற புதிய உரையாடலொன்றை சமூகத்துடன் கட்டியெழுப்ப முடிவதும் அதனை அமுலாக்க முடிவதும் தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே ஆகும். இதற்காக செயலாற்றி வரும்போது ரணில் விக்கிரமசிங்க தேர்தலொன்றைத் தருவாரா எனும் உரையாடலும் ஒருபுறம் இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தற்போது இழுத்துக்கொண்டிருப்பது கோட்டாவின் குற்றியையாகும். ரணில் விக்கிரமசிங்கவின் கோட்டா குற்றி அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டிய சனாதிபதி தேர்தலுடன் முற்றுப்பெறுகின்றது. உரிய வகையில் சனாதிபதி தேர்தல் கிடைக்காதென்பது மக்களுக்கு உறுதியாகின் அடுத்த செப்தெம்பருக்கு முன்னர் ரணிலை வீட்டுக்கு அனுப்புவார்கள். இன்று மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடிக்க வீதியில் இறங்கியதுபோல் செயற்படாதிருப்பது சனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டேயாகும். கோட்டாபயவை விரட்டியப்பதன் மூலமாக இடைவெளியை நிரப்பவல்ல மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்று இருக்கவில்லை. முண்டம் பாராளுமன்றத்தில் எஞ்சியது. பாராளுன்றத்தினால் ரணிலின் தலை பொருத்தப்பட்டது. விரட்டியடிப்பதால் பயனில்லை என்பதையும் மக்கள் எதி்ர்பார்ப்புகளை ஈடேற்றுகின்ற அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மாத்திரமே விரட்டியடிக்க வேண்டுமென்பதையும் அந்த அனுபவ வாயிலாக மக்கள் தற்போது அறிவார்கள். ரணில் விக்கிரமசிங்கவைப்போல் புண்ணியத்திற்காக சான்ஸ் எடுப்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்தமாட்டோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்பும் திட்டத்தைக் கொண்டதாகவே நாங்கள் அரசாங்கத்தை விரட்டியடிப்போம். அதன் மிகவும் முக்கியமான மைல்கல் சனாதிபதி தேர்தலாகும். பாரியளவில் எதிர்பார்ப்புச் சிதைவினை அடைந்துள்ள மக்கள் எம்மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் தொடர்பில் மிகவும் பாரதூரமான பொறுப்பே எமக்கு இருக்கின்றது.
பாரம்பரியரீதியாக மகிந்தாக்களை ரணில் விக்கிரமசிங்காக்களை நம்பி செயலாற்றிய பெருந்தொகையான மக்கள் அவர்கள்மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பார்க்கிலும் பல்லாயிரம் மடங்கு நம்பிக்கையுடனேயே எம்மை நாடி வருகிறார்கள். இவ்விதம் வருகின்ற மக்களிடம் பிரதானமாக இரண்டு எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. ஒன்று தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நிறுவுவது பற்றிய நம்பிக்கை. இந்த நாட்டில் மாத்திரமல்ல வெளிநாட்டில் வசிக்கின்ற நல்ல வாழ்க்கையைக் கழிக்கின்ற இலங்கையர்கள்கூட பல்லாயிரக்கணக்கில் எம்மைச்சுற்றிக் குழுமியுள்ளமை ஐக்கிய அமெரிக்காவில் உறுதியாகியது. வருகின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை நிறுவவேண்டும். அதற்காக செயலாற்றவேண்டிய முக்கியமான ஏறக்குறைய பத்து மாதங்கள் பிறந்துள்ளது. இலங்கை அரசியலிலும் இலங்கை வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக அமைகின்ற ஏறக்குறைய பத்து மாத காலப்பகுதிக்கள் பலம்பொருந்தியவகையில் கைவிடாமல் மல்லுக்கட்டவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவவேண்டும். வரிச்சுமைக்கு எதிராக, விற்றுத்தீர்ப்பதற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, சனநாயகத்தை சுருட்டுவதற்கு எதிராக, தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம். அதற்காக நாங்கள் அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்புவோம். நாங்கள் அமைக்கின்ற அரசாங்கத்தைச் சுற்றி உலகத்தின் புதிய அறிவினை வரிசைப்படுத்தி, உலகத்துடன் போட்டியிடக்கூடிய பொருளாதாரமொன்றைக் கட்டியழுப்பிட வேண்டும். சமூக நீதி, நேர்மை, வினைத்திறன், ஒவ்வொரு பிரஜையினதும் நன்மதிப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். எம்மனைவரதும் தோள்கள்மீது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியைக் கட்டியழுப்புகின்ற அத்துடன் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பொறுப்பு சமத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக வருங்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவி வீழ்ச்சியடையச் செய்வித்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்காக நாமனைவரும் ஒருவர்போல் செயலாற்றுவோம். உங்கள் அனைவருக்கும் வெற்றிகிட்டட்டும்.
–2023.11.17 – தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு– ராஜபக்ஷாக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த பின்னர் இற்றைவரை பயணித்த பாதையை மாற்றியமைக்க வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம். எனினும் எந்தவிதமான மாற்றமுமின்றி இற்றைவரை பயணித்த பாதையிலேயே பயணித்து மக்களால் வாழமுடியாத அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்னிலையில் மண்டியிட்டு எதேனும் தொகையை பெற்றுக்கொள்ள செயலாற்றுவதோடு ஒட்டுமொத்த நெருக்கடியின் சுமையை மக்கள் மீது திணிப்பதே சமர்ப்பித்துள்ள வரவுசெலவில் அடங்கியுள்ளது. வரவுசெலவுக்குள்ளேயோ அதற்கு வெளியிலோ […]
–2023.11.17 – தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு–
ராஜபக்ஷாக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த பின்னர் இற்றைவரை பயணித்த பாதையை மாற்றியமைக்க வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம். எனினும் எந்தவிதமான மாற்றமுமின்றி இற்றைவரை பயணித்த பாதையிலேயே பயணித்து மக்களால் வாழமுடியாத அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்னிலையில் மண்டியிட்டு எதேனும் தொகையை பெற்றுக்கொள்ள செயலாற்றுவதோடு ஒட்டுமொத்த நெருக்கடியின் சுமையை மக்கள் மீது திணிப்பதே சமர்ப்பித்துள்ள வரவுசெலவில் அடங்கியுள்ளது. வரவுசெலவுக்குள்ளேயோ அதற்கு வெளியிலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமும் கிடையாது. ரணில் விக்கிரமசிங்காக்கள் பொறுப்புக்கூறவேண்டிய நெருக்கடியின் சுமையை மென்மேலும் மக்கள்மீது திணித்து ஒருவருட காலத்திற்குள் மின்கட்டணம் மூன்றுதடவைகளில் 400% இற்கு மேல் அதிகரிக்கப்பட்டது. இதனால் மக்களால் மின்கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாததைப்போன்றே கைத்தொழில்கள் சீரழியவும் காரணமாக அமைந்துள்ளது. மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக ஏறக்குறைய 2000 கைத்தொழில்களும் தொழில் முயற்சிகளும் மூடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் அறிவித்திருந்தன. இதனால் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஏறக்குறைய பதினைந்து இலட்சம் பேருக்கு தொழில்கள் அற்றுப்போயின. வங்கிக்கடன்பெற்ற 556 தொழில்முயற்சிகள் வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மென்மேலும் பலவீனப்படுத்துகின்ற செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை இந்த தரவுகளின்படி தெளிவாகின்றது. நாட்டை மீட்டெடுப்பதற்கான நோக்கு, திட்டம் அல்லது தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அன்றைய பொழுதினைக் கழித்து மக்கள் பாரிய அழுத்தத்திற்கு இலக்காக்கப்பட்டுள்ளார்கள்.
மீண்டுமொரு சுற்றில் பாரியளவில் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டமையால் மற்றுமொரு சுற்றில் பண்டங்களின் விலைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் மீது இந்த வரிச்சுமையை அதிகரித்து அரசாங்கத்தைச் சுற்றியுள்ள செல்லங்களுக்கு பாரிய சலுகைகளை வழங்கி இருபத்தைந்து சதமாக விளங்கிய சீனி வரியை ரூபா 50 வரை அதிகரித்தமை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒட்டுமொத்த நெருக்கடியையும் மக்கள்மீது திணித்து அழிவுமிக்க பாதையிலேயே இழுத்துச்சென்று அழுத்தத்தை மென்மேலும் மக்கள்மீது சுமத்தி அரசாங்கம் வேறு நடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை பொதுஜன பெரமுனவினதும் மகிந்த ராஜபக்ஷவினதும் இந்த வரவுசெலவு பற்றிய நிலைப்பாட்டினை மக்களிடம் முன்வைக்கவேண்டும். ஒவ்வொருவரும் தாம் விடுபட்டுக் கொள்வதற்காக பலவிதமான கதைகளைக் கூறிவருகிறார்கள். அவ்வாறான கேலிக்கூத்துகளால் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. இந்த நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்காக்களும் இணையாக பொறுப்புக்கூறவேண்டும். உயர்நீதிமன்றம்கூட அவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமெனத் தீர்மானித்துள்ளது. நீதிமன்றம் என்னதான் கூறினாலும் அவர்கள் பொறுப்பினை ஏற்கப்போவதும் கிடையாது: அதிகாரத்தைக் கைவிடவும் போவதில்லை. மிகவும் சாதகமான வாழ்க்கையை எதிர்பார்த்து இவர்களிடம் அதிகாரத்தைக் கையளித்த பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்க நடைமுறைச்சாத்தியமான எதனையும் செய்வதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு ஏப்பிறல் மாதத்தில் இருந்து ரூபா 10,000 சம்பளத்தை அதிகரிப்பதாக கூறினாலும் சனவரி மாதத்தில் இருந்தே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளுக்கு எதிராக வீதியில் இறங்குகின்ற மக்களை அடக்குவதற்கான பங்கரவாத தடுப்புச் சட்டம், சமூக வலைத்தள கட்டுப்பாட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை கொண்டுவரத் தொடங்கியுள்ளார்கள். தமது உரிமைகளுக்காக கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்செய்த ஆசிரியர்கள், அதிபர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் அழித்து வருகிறார்கள்.
எஞ்சியுள்ள இறுதி வளங்களையும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விற்று வருகிறார்கள். தபால் அலுவலகத்தையும் விற்றுத்தீர்க்கப் போகிறார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கின்ற கைத்தொழில் அதிபர்களை மின்கட்டணம், எரிபொருள் விலை, வரிச் சுமையை அதிகரித்து வீழ்த்துகிறார்கள். ஏற்றுமதியாளர்களை வீழ்த்துகிறார்கள். நாட்டை கட்டியெழுப்புவதற்காக இடையீடுசெய்யக்கூடிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் மீது பாரிய வரிச்சுமையைத் திணித்து நாட்டைக் கைவிட்டுச் செல்கின்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள். மக்களுக்கு எதிரான, மக்களை வதைக்கின்ற சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்கு உலகின் முன்னிலையில் ஏதேனும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த அனைத்து துறைகளையும் அழித்து வருகிறார்கள். அதற்காக இருந்த கிரிக்கெற் விளையாட்டினையும் எமது கலாசாரத்தையும் கைத்தொழில்களையும் அழித்து நாட்டை வெற்றுத் தரிசுநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அழிவுமிக்க பயணப்பாதைக்கு ஒட்டுத் தீர்வுகள் கிடையாது. ரணில் விக்கிரமசிங்காக்களையும் இந்த அழிவுமிக்க வழிமுறையையும் தோற்கடித்து மக்கள்நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதை விடுத்து வேறு பதில் கிடையாது. இந்த ஆட்சியைத் தோற்கடித்திட பிரமாண்டமான மக்கள் பலத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் மக்களின் உரிமைகளுக்காக போராடவும் வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இந்த ஆட்சியைத் தோற்கடித்திட பிரமாண்டமான மக்கள் பலத்தை உருவாக்க வேண்டியதே மக்களின் பொறுப்பாக அமைந்துள்ளது. மறுபுறத்தில் மக்களுக்கு எதிரானவகையில் செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் மீது இருந்த நம்பிக்கை 9% வரை வீழ்ச்சியடைந்துள்ளமை மதிப்பாய்வு அறிக்கையொன்றில் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த நிலைமையில் ரணில் விக்கிரமசிங்காக்கள் அரசியலமைப்பின் மறைவில் இருந்துகொண்டு பலவந்தமாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிசெய்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டமொன்றும் மக்கள் பலமும் சேர்ந்திருக்கின்றது. மிகுந்த ஒழுக்கத்துடனும் ஒழுங்கமைந்தவகையிலும் நோக்கமொன்றைக் கொண்டதாகவும் அரசாங்கம் மீதான எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தோற்கடிப்பதற்கான ஆர்ப்பாட்ட இயக்கத்தையும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அணிதிரட்டுவதற்கான செயற்பாடுகளையும் தேசிய மக்கள் சக்தி அமுலாக்கி வருகின்றது. தனித்த போராட்டங்களுக்குப் பதிலாக ஒட்டுமொத்த மக்களையும் சேர்த்துக்கொண்ட செயற்பாடுகள் மூலமாக இந்த ஆட்சியை முடிவுறுத்தி மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவுவதற்கான இலக்கினைக் கொண்டதாக செயலாற்றுதல் வேண்டும். அதற்கான எதிர்கால செயற்பாடுகளில் ஒரு படிமுறையாக நுகோகோடவில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சனநாயகரீதியாக ஒழுக்கத்துடன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதுவரை முன்நோக்கிப் பயணிக்கவேண்டியுள்ளது. மக்களை அல்லற்படுத்த ரணிலுக்கு இடமளித்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க எவருக்கும் உரிமை கிடையாது. அமைதிவழியில் எதிர்ப்பினைக் காட்டுவதற்கான மக்களின் உரிமையைப் பாவித்து மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக தமது எதிர்ப்பினைக் காட்டுவதை நுகேகொடவில் தொடங்குகிறோம். மக்கள் பலத்தை அரசாங்கத்திற்கு வெளிக்காட்டுவதற்காக அனைவரும் நுகேகொடவிற்கு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்கின்ற போராட்டத்தில் ஒன்றுசேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.ල්ලා සිටිනවා.
“அரசாங்கத்தின் காலத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள்” –தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–
இந்த ஆட்சியானது தமது அதிகாரக் கருத்திட்டத்திற்காக தமது வழியுரிமைக்காக மாத்திரம் இயங்கிவருகின்ற அரசாங்கமென்பது மிகவும் நன்றாக உறுதியாகி உள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினர்களுமே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்தாலும் தீர்வுக்கட்டமான விடயங்களின்போது அரசாங்கத்தை தோற்கடித்திட செயலாற்றுவதில்லை என்பது மிகவும் தெளிவாகின்றது. மக்களை அல்லற்படுத்திய அவர்களுக்கு எதிராக மக்களிடமிருந்து கிடைக்கின்ற தண்டனையை காலந்தாழ்த்த அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு பழக்கமான டீல் அரசியலில் ஈடுபட்டு செயலாற்றி வருகின்ற விதம் தெளிவானதாகும். பௌத்த சமயத்தையும் பல்வேறு நூல்களையும் மேற்கோள்காட்டி அவர் பலவிதமான ஒப்புதல் வாக்குமூலங்களை முன்வைக்கிறார். மாபெரும் உன்னதமான கதைகளைக் கூறினாலும் விற்றுத் தின்கின்ற மற்றும் மற்றும் டீல் அரசியலைத் தவிர வேறு பதில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிடையாது. மாறியுள்ளதாக குறிப்பால் உணர்த்துவதற்காக ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தாலும் நடைமுறையில் தெளிவாகின்ற விடயம் கடுகளவேனும் மாறத் தயாரில்லை என்பதாகும். வரவுசெலவு பற்றிய கேள்விகளை எழுப்புகையில் ஐ.எம்.எஃப். நிபந்தனைகள் காரணமாக ஒன்றையுமே செய்யமுடியாது எனக் கூறுகிறார். அப்படியானால் நிதி அமைச்சரோ அல்லது அரசாங்கமோ எதற்காக? சர்வதேச தாபனங்களுடன் செயலாற்றுகையில் நாட்டுக்கு அவசியமான மக்களின் பக்கத்தில் இருந்து சிந்திக்கின்ற நிகழ்ச்சிநிரலை அமுலாக்குவதற்காகவே அரசாங்கமும் அமைச்சரவையும் நியமிக்கப்படுகின்றது. சர்வதேச தாபனங்களின் நிகழ்ச்சிநிரல்களையும் விளங்கிக்கொண்டு எமது நிகழ்ச்சிநிரலை வெற்றியீட்டச் செய்விக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் காலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேர்தலொன்று கிடைக்கின்ற முதலாவது தருணத்திலே அரசாங்கம் விரட்டியடிக்கப்படுமென்பதை அறிந்த அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்குப் பயந்து ஒளிந்து இருக்கின்றது. இந்த நிலைமையில் பிரசைகள் என்றவகையில் எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் எதிர்காலம், சனநாயகம், எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக பிரசைகளே முன்வரவேண்டும். ஆட்சியாளர்கள் பொறுப்பினை கைவிட்டுள்ள தருணத்தில் பிரசைகள் ஏனைய நாட்களைவிட பலம்பொருந்தியவகையில், துணிச்சலுடன், திடங்கற்பத்துடன், நோக்கமொன்றுடன் அதற்காக செயலாற்ற வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அற்காகவே எந்நேரமும் மக்களுடன் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றது. பிரசையின் பொறுப்பினை ஈடேற்றுவதற்காக ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் பிரசைகளுக்கு அவசியமான ஒழுங்கமைத்தல் பலத்தையும் தலைமைத்துவத்தையும் வழங்கி முன்நோக்கி நகரும்பொருட்டு மிகுந்த திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகின்றது. நீண்டகாலம் கழிவதற்கு முன்னர் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை உருவாக்குகின்ற வரலாற்றுரீதியான மாற்றத்திற்காக திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகின்றது. அதுவரை நிலவுகின்ற ஆட்சிக்கு தலைசாய்த்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. எமது உரிமைகளுக்காக நுகோகொடவில் நடாத்தப்படுகின்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்காக, ரீலோட் பொலிஸ் மா அதிபரின்கீழ் சட்டமுறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென நாங்கள் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூறிக்கொள்கிறோம்.
-Colombo, November 17, 2023- இன்று (17) பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லேவுக்கு (Gopal Bagle) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை முகம்கொடுத்து வருகின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல்நிலை செயலாளர் எல்டோஸ் மெத்திவ் […]
-Colombo, November 17, 2023-
இன்று (17) பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் திரு. கோபால் பாக்லேவுக்கு (Gopal Bagle) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை முகம்கொடுத்து வருகின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் முதல்நிலை செயலாளர் எல்டோஸ் மெத்திவ் (Eldos Mathew) அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
-Colombo, November 16, 2023- காசா துண்டுநிலத்தில் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் தாபனத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கும் (OHCHR) இன்று கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர். சர்வதேச மனிதாபிதான சட்டத்திற்கு அமைவாக பாலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து தரப்பினர்களுடனும் உடனடியாக ஒத்துழைத்துச் செயலாற்றுமாறும் இந்த கடிதத்தில் கோரிக்கை […]
-Colombo, November 16, 2023-
காசா துண்டுநிலத்தில் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் தாபனத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கும் (OHCHR) இன்று கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
சர்வதேச மனிதாபிதான சட்டத்திற்கு அமைவாக பாலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து தரப்பினர்களுடனும் உடனடியாக ஒத்துழைத்துச் செயலாற்றுமாறும் இந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஹரினி அமரசூரிய (பாராளுமன்ற உறுப்பினர்)> சமன்மலீ குணசிங்க (தேமச நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்)> டாக்டர் ஸ்;வஸ்திகா சமரதிவாகர (தேமச உறுப்பினர்) ஆகியோரால் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சிரேட்ட மனித உரிமைகள் ஆலோசகர் ரகு மேனனிடம் இன்று இந்த கடிதம் கொழும்பு ஐக்கிய நாடுகள் தாபன அலுவலக வளாகத்தில் கையளிக்கப்பட்டது.
மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நலன்புரி சேவைகளை வெட்டிவிடுகின்ற நடவடிக்கைகளின் தாக்கங்கள் மற்றும் பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பிற்கான வரவுசெலவு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டமையை உள்ளிட்ட இலங்கையின் நிகழ்கால சமூக – பொருளாதார மற்றும் அரசியல் சூழமைவு பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.