தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க இந்த சபையில்; தங்கியிருக்கின்றவர்கள் மத்தியில் இதற்கு முன்னர் எமக்காக வாக்குகளைப் பாவித்தவர்களைப் போன்றே வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை அளித்த பலர் இருக்கிறார்கள். அந்த அனைவரையும் சகோதரத்துவத்துடன் வரவேற்பதோடு, இந்த அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதற்காக அணிதிரண்டமை தொடர்பாக பாராட்டுக்கு இலக்காகின்றீர்கள். பல தசாப்தங்களாக கடைப்பிடிக்கப்பட்ட செயற்பாடுகளால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய அனைத்துவிதமான அழிவுகளையும் பெற்றுக்கொடுத்து விட்டார்கள். மிகவும் அழிவுமிக்க அந்தத்தை நோக்கி பொருளாதாரம் பயணித்து பாரிய […]
இந்த சபையில்; தங்கியிருக்கின்றவர்கள் மத்தியில் இதற்கு முன்னர் எமக்காக வாக்குகளைப் பாவித்தவர்களைப் போன்றே வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை அளித்த பலர் இருக்கிறார்கள். அந்த அனைவரையும் சகோதரத்துவத்துடன் வரவேற்பதோடு, இந்த அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதற்காக அணிதிரண்டமை தொடர்பாக பாராட்டுக்கு இலக்காகின்றீர்கள். பல தசாப்தங்களாக கடைப்பிடிக்கப்பட்ட செயற்பாடுகளால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய அனைத்துவிதமான அழிவுகளையும் பெற்றுக்கொடுத்து விட்டார்கள். மிகவும் அழிவுமிக்க அந்தத்தை நோக்கி பொருளாதாரம் பயணித்து பாரிய பண்டத் தட்டுப்பாடு, விலைகள் அதிகளவில் உயர்வடைந்தமை போன்றே அத்தியாவசிய பண்டங்களைக்கொண்ட ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் இறுகிப்போயுள்ள நிலைமை உருவாகியுள்ளது. செலுத்தவேண்டியுள்ள கடன் தவணைகளை செலுத்துதல் பற்றிய ஐயப்பாட்டு நிலை தோன்றியுள்ளது. சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை ஆழமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இற்றைவரை நிலவிய மரபுரீதியான அரசியல் பயணப்பாதையால் இந்த ஆழமான நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்க இயலுமா? அனுபவங்கள் வாயிலாகவும் தமது வாழ்க்கை ஊடாகவும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது யாதெனில் பண்டைய மரபுரீதியான அரசியல் பயணப்பாதையால் எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல இயலாது என்பதாகும்.
இது இயற்கை அனர்த்தம் காரணமாக நேர்ந்ததொன்றல்ல. கடைப்பிடிக்கப்பட்ட தவறான பொருளாதார, அரசியல் பயணப்பாதையின் பாதகவிளைவுகள் இவ்வாறு ஏற்பட்டுள்ளன. கினற்றில் விழுந்தது கிணற்று வாயில் வழியாகவெனில் வெளியே வரவேண்டியதும் கிணற்று வாயில் வழியாகவே. இந்த அழிவுமிக்க நிலைமைக்கு எமது நாட்டை தள்ளிவிட்டது தவறான பொருளாதார, அரசியல் கொள்கையெனில் சரியான பொருளாதார, அரசியல் கொள்கையொன்றை தாய்மண்ணில் நிலைநாட்டுவதன் மூலமாகவே தீர்வு கிடைக்கும். உயிர் வாழ்வதற்கு ஏற்ற வருமான வழிவகையொன்று உள்ள தாம் புரிகின்ற தொழில் பற்றிய கௌரவத்தை எதிர்பார்க்கின்ற பலர் நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது தொழில் தேடுவதற்காக மாத்திரமல்ல, சமூகப் பாதுகாப்பினை தேடியே ஆகும். ஆனால் தனித்தனியாக எவ்வளவுதான் மல்லுக்கட்டினாலும் இதிலிருந்து மீட்புப்பெற இயலாது. கூட்டுப் பிரயத்தனமொன்று அவசியமாகும். அத்தகைய கூட்டுப் பிரயத்தனமொன்றுக்கான மனிதநேயமிக்க அர்ப்பணப்பு மற்றும் தியாகம் செய்கின்ற மனிதர்களைக்கொண்டே தேசிய மக்கள் சக்தியின் இந்த மேடை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பால் உங்களுடன் ஒன்றுசேர்ந்து அனைத்து மக்களையும் அணிதிரளச் செய்விக்கக்கூடிய மக்கள் இயக்கமொன்றாக தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பவதாக உத்தரவாதமளித்து பிரகடனஞ் செய்கிறோம்.
இந்த அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையில் இருந்து எமது நாடு மாற்றியமைக்கப்படல் வேண்டுமென அனைவரும் உணர்ந்துள்ளார்கள். தனித்தனியாக எவ்வளவுதான் மல்லுக்கட்டினாலும் பயனில்லை. வேடனின் வலையில் சிக்கிய காடைக்குருவிகள் தனித்தனியாக எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் பயனில்லை. ஆனால் இறுதியில் அங்கே இருந்த போதிசத்துவ காடைக்குருவியானவர் கூட்டாக மல்லுக்கட்ட வேண்டுமென தெளிவுபடுத்திக் கொடுக்கிறார். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையும் அதுவேதான். நாங்கள் இந்த நாட்டை பொறுப்பேற்கத் தயார். அது சம்பந்தமான நேர்மையும் நல்லெண்ணமும்கொண்ட தேவை எங்களிடம் நிலவுகின்றது. இந்த மேடையில் இருக்கின்ற எவருமே அல்லது இங்கு கலந்துகொண்டுள்ள உங்களில் எவருமே தனிப்பட்ட தேவைகளின்பேரில் பங்கேற்கவில்லை. எம்மனைவரையும் ஒன்றாக இணைத்துக் கட்டுகின்ற நூலொன்று இருக்கின்றது. அந்த நூல் தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்கத் தயார், இந்த நாட்டை மீட்டெடுக்க தயார் என்கின்ற என்கின்ற நிலையாகும். இந்த நாடு சீரழிவிற்கு இலக்காகவேண்டிய ஒரு நாடல்ல.
இந்த நாட்டை அனர்த்தத்திற்கு இலக்காக்குகின்ற பிரதான காரணி ஊழல் மிகுந்த அரசியலாகும். கொவிட் பெருந்தொற்றினால் மரணத்தின் விளிம்பில் உள்ள மக்களின் அன்டிஜன் தொகுதியிலிருந்து ஆட்சியாளர்கள் திருடுகிறார்கள். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களிடமிருந்து தொற்றுநோய்த்தடை செயற்பாங்கிலிருந்து திருடுகின்ற ஆட்சியாளர்கள் நாட்டை உருப்படியாக்கப் போவதில்லை. பல தலைமுறைகளாக சிறுபோகம், பெரும்போகம் பயிர்செய்த விவசாயம் அவசியமான உள்ளீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில் சீனப் பசளையிலிருந்து சூறையாடுகின்ற ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் முதலில் இந்த ஊழல்மிக்க ஆட்சியை நிறுத்தவேண்டும். அந்த ஊழில்மிக்க கருத்திட்டங்கள் எமது நாட்டுக்கு யானைக்கால் போல சுமையானது. ஊழல்நிலை என்பது அந்த நேரத்தில் புரிகின்ற இலஞ்சம் மாத்திரமல்ல. ஊழல் நிலைமையால் புரியப்படுகின்ற தாக்கம் அளப்பரியது. நாட்டின் கடன் அளவு பதினொரு ரில்லியனாக அமைகின்றவேளையில் சொத்துக்களின் அளவு ஒன்று தசம் எட்டு ரில்லியன் என முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஒருதடவை கூறியிருந்தார். இதனால்தான் எமது நாட்டு பிரமாண்டமான கடன் மேட்டில் சிக்கியுள்ளது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதில் நூறு கோடி ரூபாவாக அமைந்த கடன் பங்கு கடந்த ஏப்பிறல் 30 ஆந் திகதியளவில் பதினாறு இலட்சம் கோடி முப்பதாயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. எடுத்த கடன்களைக்கொண்டு என்ன செய்தார்கள் என்பது எந்தவோர் அட்சியாளராலும் கூறுமுடியுமா? எனவே முதலில் இந்த நாட்டை கட்டியெழுப்ப ஊழலற்ற அரசியல் அவசியம். இந்த நாட்டில்; ஊழலே அற்ற தேசிய மக்கள் சக்தியாலேயே அதனை சாதிக்க முடியும். இந்த ஊழல்பேர்வழிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஊழல் மூலமாக ஈட்டிக்கொண்ட ஆதனங்களை மீளக் கையேற்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே அதனை உறுதியாக சாதிக்க இயலும். நாங்கள் அதனைச் செய்வோம்.
இரண்டாவதாக, இந்த நாட்டைக் கட்டிழுப்ப கூட்டு முயற்சியொன்று அவசியம். மக்கள் தனித்தனி ஆட்களின் பின்னால் தியசென் குமாரமார்களை தேடிக்கொண்டு எவ்வளவுதான் சென்றார்கள்? நாட்டைக் கட்டியெழுப்புவது ஒரு தனிமனிதனின்; மாயாஜால வித்தையாக அமையமாட்டாதென்பதை நாங்கள் எப்போதுமே கூறிவருகிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் பற்றிய பாரிய எதிர்பார்ப்புடன் வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் வாடகைக்காக வாங்கிய விமானங்கள் மூலமாக வாக்களிக்க வந்தார்கள்;. ‘மனிதனை ஒரு நல்ல ஆளாக மாற்ற முடிவது, அவரது இயல்புநிலையை விளங்கப்படுத்துவதன் மூலமாகவே’ என அன்ரன் செக்கோஃப் கூறியுள்ளார். மனிதன் இயல்பாகவே திருடனாக, ஊழல் பேர்வழியாக, அழுத்தம் கொடுப்பவராக அமைவதில்லை. அந்த மனிதன் இயல்பாகவே உயர்வானவன். அந்த மனிதனை இந்த அனர்த்தத்திற்கு இழுத்துப்போட்டவர் யார்? தனித்தனியாக தனக்காக ஓடுகின்ற சமூகமொன்றை உருவாக்கியதன் மூலமாகவே. அந்த சமூகத்திற்குள் மனிதன் மோசடிப் பேர்வழியாகவும் ஊழல் பேர்வழியாகவும் அமைந்தமையாலாகும். எனவே கூட்டானவனாக மாற்றுவதன் மூலமாகவே அவனை அதிலிருந்து மீட்டெடுக்க இயலும். அரசியல் மேல் மாடியிலிருந்து கீழ் நோக்கி இறங்குவதன் மூலமாகவே அதனை சாதிக்க முடியும். இன்று நிலவுகின்ற அரசியலானது சிறப்புரிமைகள் நிறைந்த ஒரு பதவியாகும். சட்டத்திற்கு கட்டுப்படாத மனிதனொருவன் உருவாக்கப்பட்;டுள்ளான். இந்த அரசியல்வாதியை மிகுந்த சிறப்புரிமைகளை அனுபவிக்கின்ற, சட்டத்திற்கு மேலாக இருக்கின்ற அரசியல் மேல் மாடியிலிருந்து கீழிறக்க வேண்டும். அதன் பின்னர் பொதுமக்களுடன் தோளோடு தோள்நின்று சமபங்காளிகளாக சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டாளராக மாற்றிடவேண்டும். அரசியல்வாதி மேல்மாடியில் இருந்துகொண்டு கூட்டாக செயற்படுவோமென பிரசைகளுக்கு கூறமுடியாது. ஓர் அரசியல்வாதி என்றவகையில் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்பு, ஒரு தொழில்வாண்மையாளர் என்றவகையில் என்னிடம் கைளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்பு, ஒரு தொழில் முயற்சியாளர் என்றவகையில் உங்களிடம் அதைப்போலவே கமக்காரனுக்கு, மீனவனுக்கு கையளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்புகளில் கூட்டாக ஈடுபடுத்தப்படுவதன் மூலமாகவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.
ஓய்வூதியம், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லம், முன்னாள் சனாதிபதிகளை பராமரித்தல், அவர்களுக்கு மாளிகைகளை வழங்குதல் அனைத்தையும் இல்லாதொழித்திட வேண்டும். இல்லாதொழித்து பிரசைகளுடன் தோளோடு தோள்நின்று இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியாக அரசியலை மாற்றவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனைச் சாதிக்க இயலும். பழைய மரபுரீதியான பாசறைக்கு ஒன்றுமே செய்ய இயலாதென அவர்கள் நிரூபித்துள்ளார்கள். ஊழலற்ற அரசியலும் சமூகத்தின் கூட்டான இடையீடும் என்கின்ற அடிப்படை விடயங்கள் இரண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமாகும். அதன் பேரில் கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்கவேண்டும். எமக்கு ஒரு தூரநோக்கும் வேலைத்திட்டமும் இருக்கின்றது. ஆனால் அது பரிபூரணமானதென நான் கூறப்போவதில்லை. புதிய கருத்துக்கள், முன்மொழிவுகள் சேர்க்கப்பட்டு அதனைப் பூரணப்படுத்த வேண்டும். எமக்கு ஒரு தூரநோக்கும் வேலைத்திட்டமும் இருக்கின்றது. குறிப்பாக பொருளாதாரக் கட்டமைப்பு சம்பந்தமாக நாங்கள் ஏற்படுத்துகின்ற மாற்றம் மூன்று அடிப்படை அத்திவாரங்களைக் கொண்டதாக மேற்கொள்ளப்படல் வேண்டும். தேசிய உற்பத்தியை உயர்த்துதையும், உலகச் சந்தையில் பண்டங்களுக்கும் சேவைகளுக்காகவும் நியாயமான பங்கினை கையகப்படுத்திக் கொள்தையும,; மக்களை அந்த பொருளாதாரத்தில் பங்காளிகளாக்கி அவர்களுக்கிடையில் நன்மைகள் நியாயமாக பகிர்ந்து செல்லவைப்பதையும் மேற்கொள்ள வேண்டும். இன்று மக்களில் பெரும்பகுதியினர் இந்த பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவர்கள் மனிதப் புழுதிகளாக வாழ்க்கையில் மாற்றப்பட்டுள்ளார்கள். இன்றும் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 38 வீதம் மேல் மாகாணத்தில் இருந்தே வழங்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் இருந்து நூற்றுக்கு ஐந்து தசம் ஐந்து. பொருளாதாரம் விரிவடைந்து மக்கள் பொருளாதாரத்துடன் சமமாக இணையவில்லை என்பதே அதன் மூலமாக கூறப்படுகின்றது. எனவே மக்கள் பொருளாதாரத்தின் முனைப்பான பங்காளிகளாக மாற்றப்படல் வேண்டும்.
மக்களுக்கிடையில் பொருளாதாரத்தின் பங்கு மிகவும் அநீதியான வகையிலேயே பிரிந்து செல்கின்றது. மேல் மட்டத்தில் இருக்கின்ற நூற்றுக்கு பத்து வீதமானோர் தேசிய செல்வத்தின் நூற்றுக்கு முப்பத்தெட்டு தசம் நான்கினை அனுபவித்து வருகிறார்கள். இது நியாயமானதா? நாங்கள் அனைவரும் ஒன்சேர்ந்து ஒரு பாண் தயாரித்து அதன் பங்குகளில் நூற்றுக்கு முப்பத்தெட்டு தசம் நான்கினை பத்துப்பேர் அனுபவிக்கையில் மேலும் பத்து பேருக்கு கிடைப்பது ஒரு துண்டுக்கு (சிலைஸ்) சற்று அதிகமானதே. நாட்டில் பொருளாதார விரிவாக்கத்தை அடைவதைப் போலவே நன்மைகளும் நியாயமாக பகிர்ந்து செல்லவேண்டும். பொருளாதார நன்மைகள் நியாயமாக பகிர்ந்து செல்லாமல் சமூகமொன்று சாதகமானதாக அமையமாட்டாது. உலகின் எந்தவொரு நாட்டுக்கும் பிறிதொரு நாட்டின் பொருளாதார முறையை சீராக்கிக்கொள்ள இயலாது. ஒருசில பிரதான காரணிகளை அடிப்படையாயகக்கொண்டே தமது நாட்டின் பொருளாதார உபாய மார்க்கம் வகுக்கப்படுகின்றது. அவற்றில் இடஅமைவு முதன்மை இடம் வகிக்கின்றது. எமது நாடு மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பா, இந்தியா. அவுஸ்திரேலியா மற்றும் தூரக்கிழக்கு ஆகிய நான்கு பிரதான கப்பற் பாதையிலேலேயே எமது நாடு இடஅமைவு பெற்றுள்ளது. ஆண்டொன்றுக்கு முப்பத்தாறாயிரம் கப்பல்கள் இந்த பாதையினூடாக பயணிக்கின்றன. இந்த நான்கு கப்பற் பாதைகள் ஊடாக உலக வர்த்தகத்தில் நூற்றுக்கு முப்பது வீதமான போக்குவரத்து இடம்பெறுகின்றது. எமது நாட்டின் அபிவிருத்தியி;ன்போது இந்த இடஅமைவிளை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் எமது நாட்டில் இருக்கின்ற இயற்கை வளங்கள் பற்றிய சரியான மதிப்பீடொன்று அவசியமாகும். தங்கம், செம்பு, எரிவாயு போன்ற அதிக விலைகொண்ட வளங்கள் படிவுகள் எம்மிடம் இல்லை. ஆனால் நாட்டைப்போல் எட்டுமடங்கு கடல் வளம் எமக்குச் சொந்தமாக இருக்கின்றது. கண்கவர் கடற்கரை, கனிய வளங்கள், இரண்டு பருவக்காற்று மழை, மத்தியகோட்டுக்கு அருகில் உள்ளமை மற்றும் முனைப்பான நிலம் என்பவை எம்மிடமுள்ள அதிருஷ்டவசமான வளங்களாகும். இந்த வளங்களைப் பாவித்தல் எமது அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படை அத்திவாரமாக அமைகின்றது.
மூன்றாவதாக, எமது நாட்டின் மனித வளம் மிகவும் முக்கியமான வளமாகும். உலகின் சனத்தொகை அடர்த்தியின்படி எமது நாடு இருபத்தி நான்காம் இடத்தை வகிக்கின்றது. ஒரு சதுர கிலோமீற்றரில் அண்ணளவாக முந்நூற்றி நாற்பது பேர்வரை வசிக்கிறார்கள். இந்த மனித வளத்தை விருத்திசெய்தல் எமது பொருளாதார உபாயமார்க்த்தின் முக்கியமான அம்சமாகும். அதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை ஈடுபடுத்தப்படல் வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று எந்த இடத்தில் இருக்கின்றன? முதலாம் ஆண்டில் சேர்கின்ற பிள்ளைகளில் நூற்றுக்கு முப்பத்தேழு வீதம் சாதாரண தரம் எழுத முன்னராக பாடசாலையை விட்டு விலகிச் செல்கிறார்கள். போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் நூற்றுக்கு எழுபது வீதத்திற்கு மேற்பட்ட பகுதியினர் சாதாரணதரம் வரை கற்றவர்களல்ல’ சிறைவாசம் அனுபவிப்பவர்களில் நூற்றுக்கு எழுபது வீதத்திற்கு மேற்பட்ட பகுதியினர் சாதாரணதரம் வரை கற்றவர்களல்ல. வறுமை மற்றும் கல்வியறிவின்மை அத்துடன் சமூக குற்றச்செயல்களுக்கிடையில் தொடர்பு நிலவுகின்றது. இதனால் எமது கல்வியின் அடிப்படை நோக்கம் அறிவுமிக்க மனிதனை உருவாக்குவதாகும். சுகாதாரத்தின் ஊடாக ஆரோக்கியமான மனிதன் உருவாக்கப்படுவதுபோல விளையாட்டுத்துறை மூலமாக விடாமுயற்சியுள்ள மனிதன் உருவாக்கப்படுகிறான். இலங்கைப் பிரசை அறிவு படைத்த, ஆரோக்கியமான, செயலூக்கமுள்ள மனிதனாக கட்டிவளர்க்கப்படுவான். உலகின் மிகவும் முன்னேற்றமடைந்த மனிதவளத்தை இலங்கையிலிருந்து கட்டியெழுப்புவது எமது எதிர்பார்ப்பாகும். அதனைச் சாதிக்க இயலுமென்ற திடமான நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.
இன்றைய உலகம் பலவிதமாக முடிச்சுப் போடப்பட்டுள்ளது. தொடர்பாடல், போக்குவரத்து, உலகச் சந்தை, போக்குவரத்து என்பவை ஒன்றுடனொன்று முடிச்சுப் போடப்பட்டுள்ளது. உலகில் இருந்து விலகிய தேசமொன்றை உருவாக்க எவரேனும் முயற்சி செய்வாரெனில், அவர்கள் ஆயிரத்து எண்ணூறுகளுக்கு முற்பட்ட காலத்திற்குச் சொந்தமானவர்களே. உலக சந்தையில், பொருளாதாரத்தில் பல்வேறு அதிகாரப் பாசறைகள் உருவாகி மோதல்களும் போட்டியும் நிலவுகின்றன. அதற்குள்ளே இலங்கையின் இடஅமைவு எந்த இடத்தில்? பல தசாப்தங்களாக கடைப்பிடித்த தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாக ஒவ்வொரு நாட்டினதும் பொந்துக்குள் புகுந்து இருக்கிறோம். சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கொடுக்கும்போது இந்தியா அந்த துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைக் கேட்கின்றது. அமெரிக்கா கெரவலபிட்டிய மின்நிலையத்தைக் கேட்கின்றது. இதனால் நாங்கள் மிகவும் விரிவான நோக்கும் வேலைத்திட்டமும் கொண்டதாக பொந்தில் இருந்து வெளியில் வரக்கூடிய புதிய, அணிசேரா, ஒவ்வொரு நாட்டுடனும் ஆளுமைமிக்கதாக செயலாற்றக்கூடிய வெளியுறவுக் கொள்கையொன்றை அமுலாக்க வேண்டும். நாட்டின் உள்ளகத்தில் எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை, குளங்களின் தொகுதி என்பவை நாகரிகத்தின் விரிவாக்கத்தின் பேரிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்றும் எமது உழைப்புப்படையில் நூற்றுக்கு இருபத்திரண்டு வீதம் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. ஏற்றுமதி வருமானத்தில் நூற்றுக்கு இருபத்தி இரண்டு வீதம் விவசாயத்திலிருந்தே பெறப்;படுகின்றது. எமது நாட்டின் கைத்தொழிலில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் விவசாயத்தைச் சார்ந்ததாகும். எமது நாட்டின் விவசாயம் உணவுப் பாதுகாப்புப் பக்கத்திலும் கிராமிய மக்களின் வருமான வழிவகைகளை உயர்த்துவதிலும் மிகவும் முக்கியமானதாகும். எமது நாட்டின் நாகரிகம், மனித வளம், உலக அரசியல் மற்றும் எமது நாட்டின் வளங்களின்பேரில் கட்டியெழுப்பப்பட்ட புதிய பொருளாதார வழிமுறைக்குள் நாங்கள் செல்லவேண்டும். அது சம்பந்தமாக எம்மிடம் தூரநோக்கும் வேலைத்திட்டமொன்றும் இருக்கின்றது. இதனை செயற்படுத்துபவர்கள் தொழில் முயற்சியாளர்களே. அரசாங்கம் இலக்குகளை வகுக்கின்றது. தொழில் முயற்சியாளன் அந்த இலக்காகக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தை அமுலாக்குகின்றான். இன்று நடைபெறுவது தொழில் முயற்சியாளன் புதிய துறைகளில் கைவைக்காதிருப்பதே. அரசாங்கம் பொருளாதார நோக்கிற்கிணங்க வேலைத்திட்டமொன்றை அறிமுகஞ் செய்யும்வரை தொழில்முயற்சியாளர்கள் ஞானா அக்காவை சந்திக்கச் செல்வார்கள். நாங்கள் கமக்காரர், தொழிலாளர், தொழில் முயற்சியாளர், அரச ஊழியர் அனைவரையும் ஒரு தூரநோக்கு கொண்டதாக நெறிப்படுத்துவோம். ஐந்து ஆறு வருடங்களுக்குள் அதனூடக எமது நாட்டை விருத்தியடைந்த நாடாக மாற்ற இயலும். பிரசைகளுக்கு சதாகாலமும் சாதகமான எதி;ர்பார்ப்புகளே இருந்தன. வாக்குச் சாவடியில் எந்தவொரு வாக்காளரும் வாக்களிக்கையில் நாட்டைச் சீரழிக்கின்ற நோக்கத்துடன், தேசிய வளங்களை விற்கின்ற நோக்கத்துடன், எமது நாட்டை இந்தளவுக்கு அழிவுப்பாதையில் இழுத்துச் சொல்கின்ற நோக்கத்துடன் புள்ளடி இடவில்லை. சாதகமான எதிர்பார்ப்புடனேயே ஒவ்வொரு வாக்காளனும் புள்ளடியிட்டான். ஆனால் வாக்காளனின் சாதகமான நல்ல கனவுக்குப் பதிலாக வாக்குகளைப் பெற்றவர்களின் நல்ல கனவாக விளங்கியது தனது குடும்பம் பற்றிய எதிர்பார்ப்பாகும். தேசிய வளங்களை விற்கின்ற, மிகவும் கீழ்த்தரமான, பேராசைகொண்ட வாழ்க்கையே ஆட்சியாளனிடம் இருந்தது. பிரசைகளின் எதிர்பார்ப்புகளை இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புகின்ற ஆட்சியின் ஊடாக நாட்டை முன்நோக்கி எடுத்துச்செல்வதையே நாங்கள் கட்டியெழுப்புவோம். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவைக்கு அனைத்துத் துறையையும் பிரதிநிதித்துவம் செய்து தெரிவுசெய்யப்பட்ட குழுவினர் இருக்கிறார்கள். நாங்கள் ஊருக்குச் சென்று இந்த நாட்டைப் புதிய பாதையில் திருப்புவதற்கான அரசியலில் பிரவேசிப்போம். எழுபத்தி மூன்று வருடங்களாக பயணித்துக் கொண்டிருக்கின்ற அழிவின் பாதைக்குப் பதிலாக தீர்வின் பாதையைத் தெரிவுசெய்வோம். இது தான் தீர்வின் பாதை. அந்தப் பாதையில் அனைவரும் ஊக்கத்துடன் ஒன்றுசேர்வோமென அழைப்பு விடுக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி மனிதப் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின்கீழ் நான் உரைநிகழ்த்த எதிர்பார்க்கிறேன். வாழ்க்கை பற்றிய பயத்துடன் எமதுமகங்களின் அரைவாசிமறைக்கப்பட்டுள்ள காலத்தில், எமது வீடுகளுக்கு வெடிக்கின்ற எரிவாயு வருகின்ற காலத்தில், எமது வீடுகளில் பிள்ளைகள் கற்பதற்காக மரங்கள் மீது. கூரைகள் மீது, மலைகள் மீது ஏறுகின்ற காலத்தில், போஷாக்குமிக்க உணவுவெளையொன்றைக் கொள்வனவுசெய்ய முடியாத அளவுக்கு விலைகள் உயர்வடைந்துள்ள காலத்தில் மனிதப் பாதுகாப்பு என்றால் என்ன என்பது பற்ச் […]
மனிதப் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளின்கீழ் நான் உரைநிகழ்த்த எதிர்பார்க்கிறேன். வாழ்க்கை பற்றிய பயத்துடன் எமதுமகங்களின் அரைவாசிமறைக்கப்பட்டுள்ள காலத்தில், எமது வீடுகளுக்கு வெடிக்கின்ற எரிவாயு வருகின்ற காலத்தில், எமது வீடுகளில் பிள்ளைகள் கற்பதற்காக மரங்கள் மீது. கூரைகள் மீது, மலைகள் மீது ஏறுகின்ற காலத்தில், போஷாக்குமிக்க உணவுவெளையொன்றைக் கொள்வனவுசெய்ய முடியாத அளவுக்கு விலைகள் உயர்வடைந்துள்ள காலத்தில் மனிதப் பாதுகாப்பு என்றால் என்ன என்பது பற்ச் சிந்திப்பது மிகவும் முக்கியமானது. தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த சிறப்பு தலைப்பு பற்றி விசேட கவனஞ் செலுத்துகிறோம். எமது நாட்டின் ஆட்சியாளர்கள் பாதுகாப்பு பற்றி அடிக்கடி பேசிவருகிறார்கள். ஆனால் அவர்கள் பாதுகாப்பு எனப் பேசிவருவது அரசாங்கத்தின் பாதுகாப்பு மாத்திரமே என்பது மக்கள் நாளுக்குநாள் அனுபவித்து வருகின்ற துன்பங்களிலிருந்து எமக்கு புலனாகின்றது. எங்களுக்கு மனிதப் பாதுகாப்பு அவசியமாகும். மனிதப் பாதுகாப்புமிக்க நாடு, பாதுகாக்கின்ற நாட்டை உருவாக்குகின்ற பயணத்தைத்தான் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். நவீன சமூகத்தில் பல பாதுகாப்பு திரிபுருக்கள் இருக்கின்றன. ஒன்று தேசிய பாதுகாப்பு. வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடுகளிலிருந்து எமது நாட்டைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியமானதாகும். அது வெறுமனே இராணுவத்தைக் கட்டியெழுப்புவது மாத்திரமல்ல. சர்வதேச உறவுகள் பற்றிய புலனுணர்வு ஊடாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். நாங்கள் வசிக்கின்ற அரச கட்டமைப்பினை பாதுகாத்துக் கொள்ளவேண்டியது முக்கியமானதாகும். அரசாங்கத்தின் பாதுகாப்பினை எடுத்துக்கொண்டால் அது முக்கியமானதாகும். அது மனிதப் பாதுகாப்புடன் ஒத்தவரத்தக்கதாக விரிவடைந்து அமைத்துக்கொள்ளப்படல் வேண்டும்.
ஆனால் இவையனைத்தும் இருந்தாலும் மனிதப் பாதுகாப்பு இல்லாவிட்டால் அந்த நாட்டினை முன்னேற்றமடைந்த நாடெனக் கூறிவிட இயலாது. எமது நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன், சந்தோஷமாக இல்லாவிட்டால் அதில் பயனில்லை. மனிதப் பாதுகாப்பு மிகவும் நன்றாக ஒளிரும் இடமே மனித வாழ்க்கை. நாங்கள் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் உணவில் பாதுகாப்பான, கல்வியில் பாதுகாப்பான, சுகாதாரத்தில் பாதுகாப்பான ஒரு நாட்டை உருவாக்கவே திட்டமிடுகின்றோம். உளரீதியாக பாதுகாப்பான உடல்ரீதியாக பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாகும். அதோ அத்தகைய ஒரு நாடுதான் மனிதப் பாதுகாப்புமிக்க நாடு எனக் கூறப்படுகின்றது. அவ்வாறான ஒரு நாட்டின் மக்கள் ஆழமான மனித விழுமியங்களை மனதில் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய ஒரு நாட்டின் மக்கள் மனித உணர்வகளால் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள். அத்தகைய ஒரு நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் மனித கௌரவத்துடன் வாழ்கிறார்கள். அத்தயை ஒரு நாட்டு மக்கள் அத்தகைய ஆழமான சிந்தனை கொண்டுள்ளார்கள். ஆக்கமுறையான சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். அர்த்தமுள்ள கலை இரசனையை அனுபவிக்கிறார்கள். அர்த்தமுள்ள பொழுதுபோக்கு வாழ்க்கையை கழிக்கிறார்கள். சுற்றாடல் விலங்குகளுடன் சகவாழ்வு வாழ்வதற்காக இடையறாத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அத்தகைய ஒரு நாட்டில் ஆண்கள் மாத்திரமல்ல பெண்களும் பாதுகாப்பானவர்களே. அத்தகைய ஒரு நாட்டில் தாய்மார்கள் மாத்திரமல்ல மகள்மார்களும் பாதுகாப்பானவர்களே. அத்தகைய நாட்டில் பிள்ளைகள் பாதுகாப்பானவர்கள். இனத்துவ பெரும்பான்மையினர் மாத்திரமன்றி சிறுபான்மை இனக்குழுவினரும் பாதுகாப்பானவர்கள். அத்தகைய நாட்டில் ஒரு கலாசாரம் மாத்திரமன்றி அனைத்துக் கலாசாரங்களும் பாதுகாப்பானவையே. அனைத்து கலாசாரங்களுடனும் ஒருவரோடொருவர் உரையாடலில் ஈடுபடுகிறார்கள். உண்மையாகவே மனிதப் பாதுகாப்பு நிலவுகின்ற ஒரு நாட்டின் நிலைமை இதுதான். மனிதப் பாதுகாப்பு நிலவுகின்ற ஒரு நாட்டில் அனைவருக்கும் சார்புரீதியில் சமமான பொருளாதாரப் பலம் இருக்கவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அத்தகைய ஒரு நாட்டை எம்மால் வெளிநாட்டிலிருந்து கொண்டுவர இயலாது. ஆனால் எமது நாட்டை அத்தகைய ஒரு நாடாக மாற்ற இயலுமென்பதை நாங்கள் அறிவோம். அந்த மாற்றம் கூட்டான ஆர்வத்துடன் செய்யப்படவேண்டிய மாற்றமாக அமைதல் வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் அனைவரும் இங்கு குழுமி இருக்கிறீர்கள். அந்த பணிக்காகவே நாங்கள் அடுத்த மாதத்தில் இருந்து மக்கள் மத்தியில் செல்ல எதிர்பார்க்கிறோம்.
மனிதப் பாதுகாப்புமிக்க ஒரு நாட்டை எம்மால் தனித்து உருவாக்கிட இயலாது. நாட்டு மக்கள் உக்கிப்போன அரசியல் கட்சிகளின் பாதகத்தன்மையின் இருளில் இருந்து வெளியில் வந்து புதிய மூச்சினை எடுக்கவேண்டி உள்ளது. நாங்கள் புதிய மூச்சு உள்ள இடமாகவே தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். சகோதரத்துவத்தின் மேசையைச் சுற்றி சமமானவர்;களாக அமர்ந்து உணவு உட்கொண்டு நாங்கள் உரையாடுவோம். கருத்தியல்சார்ந்த பிரிவினைகளின் படுகுழிக்கு மேலாக சகோதரத்துவத்தின் சூடுபிடித்த கரங்களால் நாங்கள் ஒருவரோடொருவர் இணைவோம். அதற்கான காலமே தற்போது கனிந்துள்ளது. நோய்ப் படுக்கையில் வீழ்ந்த நாட்டை நாட்டு மக்களின் சகோதரத்துவத்தின் சக்தியால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும். இது அதற்கான காலமாகும். நான் பேசுகின்ற இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ளது எதிர்பார்ப்பாகும். எதிர்பார்ப்பு என்பது தாங்கிக்கொள்ள முடியாத யதார்த்தத்திற்கு எதிராக எமது உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து எழுகின்ற வெளிப்பாடாகும். அந்த எதிர்பார்ப்பு எம்மில் தனித்தனியாகவன்றி கூட்டாக வெளிப்பட்ட தினத்தில் இந்த நாட்டை மாற்றியமைப்பதை எவராலும் நிறுத்திவிட இயலாது. அதனால்த்தான் நாங்கள் தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பொருளாதார நெருக்கடியொன்றுக்குள் விழுந்துள்ளோம்.
அது மாத்திரமல்ல, நாங்கள் ஒரு நாடு என்றவகையில் கடுமையான ஆன்மீக நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளோம். இந்த ஆன்மீகரீதியான நெருக்கடி கவலைக்கிடமானவகையில் வெளிப்படுகின்ற இடம்தான் இந்த நாடு இவ்வளவுக்கு வீழ்ந்துள்ள நிலையிலும் தனித்தனியாக முன்னேற்றமடைய, வெற்றியிட்ட இயலுமென்ற தன்னல உணர்வு. அத்தகைய தனிப்பயனாக்கப்பட்ட மனோபாவங்கள் இருக்குமாயின் நாட்டின் அனைத்து மக்களினதும் நல்ல இதயங்களில் நல்ல நரம்புகளுடன் உரையாடக்கூடிய சக்தியே தேசிய மக்கள் சக்தியாகும். இந்த நாட்டில் நல்லதை பிரார்த்திக்கின்ற மனிதர்களின் இதயங்களில் நற்சிந்தனைகள் மறைந்துள்ள இடங்களை திறந்துவிடத்தான் நாங்கள் தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம். நீதி, நியாயம், பொருளாதாரம், சனநாயகம் என்பவற்றின் உள்நாட்டுத் தோற்றப்பாடு ஒன்று இருக்கின்றது. நாங்கள் அதனை உள்நாட்டுரீதியாக வெற்றிகொள்ள வேண்டும். அப்போதுதான் கல்விரீதியாக, சுகாதாரரீதியாக, மனநிம்மதிரீதியாக மனிதப் பாதுகாப்புமிக்க ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியும். எனினும் இருபத்தோராம் நூற்றாண்டில் நாங்கள் எமது நாட்டில் மனிதப் பாதுகாப்பு எனக் காண்பது உலகில் மேலும் பிற நாடுகளில் உள்ள முற்போக்குவாத மனிதர்களின் நல்லாசி மற்றும் சகோதாரத்துவத்துடன் கட்டியெழுப்பக்கூடிய, கட்டியெழுப்பப்படவேண்டிய பாதுகாப்பு என்ற வகையிலேயே காண்கிறோம். சுற்றுப்புற உலகத்துடன் நீதிநியாயத்தின் அடிப்படையில் உறவுகளைப் பேணிவர நாங்கள் தயார். எமது அபிமானம் அழிந்துவிடாத விதத்தில் உறவுகளைப் பேணிவர நாங்கள் தயார்.
ஊழல் பேர்வழிகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அதைப்போலவே ஊழல்பேர்வழிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி எல்லா நாடுகளிலும் நிலவுகின்றது. அதோ அவ்விதமாக தமது நாட்டில் நீதியைக் கோரிநிற்கின்ற மக்கள் எங்கள் பயணத்தின்; சகபாடிகள். எனவே நாங்கள் உலகத்தை விளித்துக் கூறுவது எங்களுக்கு உதவுங்கள். எங்களுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வாருங்கள். எமது சிறிய மிளகு விதைக்கு செலுத்துகின்ற விலை, எமது கிராமங்களில் வறிய குடிசைகளுக்குச் சென்று அந்த வீடுகளில் உள்ள பிள்ளைகளை எடுத்துக்கொண்டு பாடசாலைக்குச் செல்வதாக கூறக்கூடிய அரசியல் இயக்கமொன்று எங்களுக்குத் தேவை. அதனைத்தான் நாங்கள் கட்டியெழுப்பி வருகிறோம். எங்கள் தேயிலைக்கு நீங்கள் செலுத்துகின்ற விலை, எமது கிராமங்களுக்குச் சென்று அந்த வீடுகளில் உள்ள பிள்ளைகளை நோய்நொடிகளிலிருந்து பாதுகாப்பதாக உலகத்திற்கு எடுத்துக்கூறக்கூடிய அரசியல் இயக்கமொன்று எங்களுக்குத் தேவை. தேசிய மக்கள் சக்தி அந்த இயக்கமாக மாறுமென்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. தேயிலை, மிளகுஅளவிலாள சிறிய கம்பியூட்டர் சிப்ஸ் தயாரிக்கக்கூடிய மக்கள் எமக்கு இருக்கிறார்கள். அந்த மக்களை உருவாக்க எமக்கு உதவுமாறு எம்மால் உலகத்திற்கு எடுத்துரைக்ககூடிய ஆட்சியொன்று எமக்கு அவசியமாகும். அந்த ஆட்சியைத்தான் நாங்கள் கட்டியெழுப்பி வருகிறோம்.
உலக வல்லரசு நாடுகளின் அரசியல் மனச்சாட்சி அவ்வளவு எளிதில் உருகமாட்டாதென்பதை நாங்கள் அறிவோம். என்றாலும் உலகம் பூராவிலும் நீதி, நியாயத்திற்கு மதிப்பளிக்கின்ற பிரசைகள் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். உலகத்தில் பெரும்பாலான மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவதைக் காண விரும்புகின்ற உலகளாவிய பிரிவினரை சகோதரத்துவத்துடன் விளிக்கக்கூடிய குழுவினவரின் கைகளில் அந்த நாட்டின் ஆட்சி நிலவவேண்டும். எங்களுக்கு டீல் வேண்டாம். எங்களுக்கு கொமிஸ் வேண்டாம். எமக்கு இந்தக் கட்டியெழுப்ப உதவுமாறு நேர்மையாக வேண்டுகோள் விடுக்கக்கூடிய ஆட்சியொன்று எமக்கு அவசியமாகும். எமது கூட்டு மனச்சாட்சி இறந்துவிட்டதெனில் உலக முற்போக்குவாதிகளின் மனச்சாட்சி உருகக்கூடிய விதத்தில் எம்மால் அந்த கதையைக் கூறமுடியாது. நாங்கள் அவ்விதமாக மனச்சாட்சி மடிந்த மக்கள் அல்ல. இதைவிட சாதகமான நாடு, இதைவிட சாதகமான உலகம் பற்றிய கனவு மடிந்துபோய் விட்டதெனில் புலமைசார் வகையில் சிந்தனைரீதியாக மடிந்துவிட்ட மக்களல்ல நாங்கள். உங்கள் மனங்களில் இன்னமும் இருக்கின்ற நேர்மையின் நீதியின் சகோதரத்துவத்தின் உயிருடன் உரையாடவே தேசிய மக்கள் சக்தி தோன்றியிருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எங்களுக்கு இந்த பெருந்தொற்றுக் காலத்திலும்கூட வருகைதந்து, செவிமடுக்கின்ற உங்களைக் காண்கின்ற எங்களுக்கு அந்த புதிய உலகின் உயிர் துடிக்கின்ற ஓசை கேட்கின்றது. இனிமேலும் எம்மை எமது தனிநபர் கனவுகளில் சிறைப்படுத்தி, எமக்கு எமது வேலைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறுகின்ற பல்வேறு அரசியல் இயக்கங்கள், ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டை அழித்தொழிக்கும் வரை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் முண்டியடித்துக்கொண்டு வந்து இந்த சபையில் இன்று இருப்பதைப் போலவே இந்த கனவை நனவாக மாற்றியமைக்க அணிதிரள்வோமாக.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் நான் ஒரு கேள்விக்கு பதில் தேடுகிறேன். இன்னும் 10 வருடங்களில் எனது மகள் என்னிடம் கேட்கின்ற கேள்வியாகும். அப்பா நான்றாக படித்திருக்கிறேன்: எனக்கு தொழிலொன்று கிடையாது: எனக்கு பாதுகாப்பு கிடையாது: நான் ஒரு நல்ல வாழ்க்கையை கழிக்க வேறோரு நாட்டுக்குச் செல்லவேண்டும்: போகட்டுமா? என அவள் என்னிடம் கேட்பாள். அதோ அந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதால் தான் […]
கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் நான் ஒரு கேள்விக்கு பதில் தேடுகிறேன். இன்னும் 10 வருடங்களில் எனது மகள் என்னிடம் கேட்கின்ற கேள்வியாகும். அப்பா நான்றாக படித்திருக்கிறேன்: எனக்கு தொழிலொன்று கிடையாது: எனக்கு பாதுகாப்பு கிடையாது: நான் ஒரு நல்ல வாழ்க்கையை கழிக்க வேறோரு நாட்டுக்குச் செல்லவேண்டும்: போகட்டுமா? என அவள் என்னிடம் கேட்பாள். அதோ அந்த கேள்விக்கு பதில் இல்லை என்பதால் தான் நான் எனது தொழில்சார் பொறுப்புகளிலிருந்து விடுபட்டு அரசியலில் முனைப்பாக பங்களிப்புச்செய்ய தீர்மானித்தேன். நாங்கள் திறந்த பொருளாதாரத்திற்குள்ளேயே இருக்கின்றோம். அதற்குள்ளே சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுமாயின் சமவாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். கல்விக்கு சமவாய்ப்பு வழங்கவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் இதற்குள் நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையில் 8.6 மில்லியன் பேர் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் வேலையை ஒரு தொழிலாக மாற்றிக்கொள்ள பலருக்கு இயலாமல் போயிற்று. இலங்கையில் உள்ள தொழில்களில் 62மூ ஒழுங்கமையாத தொழில்களாகும். அதாவது ஈரீஎஃ;ப், ஈபிஎஃப் கிடைப்பதில்லை. தொழில் ஓர் உரிமையல்ல. தமது குடும்பத்திற்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிலொன்றைப் புரிய பெரும்பாலானோருக்கு இயலாமல் போயுள்ளது. இலங்கையில் 70மூ குடும்பங்கள் சார்புரீதியான வறுமையால் வாடுகின்றன. அவர்களுக்கு எம்மைப்போல் இயலுமை கிடையாது. தொழில்சார் கௌரவத்தை இழந்துள்ளார்கள். அரச ஊழியரின் தொழில்சார் கௌரவத்தை இழந்துள்ளார்கள்.
அதைப்போலவே சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளரெனில் நீங்கள் இறுகிப்போயுள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்களுக்கு தொழில்நுட்பத்தை மூலதனத்தை வழங்க எவருமே கிடையாது. உங்களின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எவருமில்லை. எமது நாடு வறிய நாடாகும். எமது நாட்டில் எல்லோரிடமும் மூலதனம் கிடையாது. சிறிய தொழில்முயற்சியொன்றை ஆரம்பிக்க நேரிட்டால் மூலதனம் இல்லாமை காரணமாக பாரிய தொழில்முயற்சிகளுடன் போட்டியிட இயலாது. போட்டித்தன்மையை வழங்கவேண்டுமானால் அரசாங்கத்தின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு கூட்டிணைக்கப்பட்ட கம்பெனியில் இருக்கலாம். இறக்குமதி, எற்றுமதி கம்பெனியில் இருக்கலாம். மீள் எற்றுமதி செய்கின்ற ஒரு கம்பெனியில் இருக்கலாம். பெறுமதி சேர்க்கின்ற ஒரு கம்பெனியில் இருக்கலாம். இன்று உங்களின் தொழில்முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. நாங்கள் தொழில்வாண்மையாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் என்றவகையில் தனிப்பட்ட நோக்கத்திற்காக செல்ல முயற்சி செய்தாலும் எம்மால் தனித்தனியாக அந்த இலக்குகளை அடைய இயலாதென்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
ஒட்டுமொத்த நாடும் சீரழிகின்ற வேளையில் தமது மக்கள் சீரழிகின்ற வேளையில் நாங்களும் சீரழிகின்றோம். அந்த முறைக்குள்ளே எமது தனிப்பட்ட நோக்கங்களை எம்மால் தீரத்துக்கொள்ள இயலாத நிலை தோன்றியுள்ளது. நாங்கள் எவ்வாறு இதற்கு அப்பால் நகர்வது? நாங்கள் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படை இடங்களுக்கு வரவேண்டும். உற்பத்தி எல்லை இயலுமை வளையத்தை விருத்திசெய்துகொள்ள வேண்டும். எங்களுக்கு மனித மூலதனம், தொழில்நுட்பம், இயற்கை வளங்களின் உற்பத்தித்திறனை விருத்திசெய்துகொள்ளவேண்டி நேரிடும். நாங்கள் அவற்றைச் செய்துகொள்ளவில்லை. ஒரு நாடு தனக்கு சார்புரீதியாக அநுகூலங்கள் கிடைக்கின்ற உற்பத்திகளையும் சேவைகளையும் மேற்கொள்ளவேண்டும். ஆடைத்தொழிற்றுறையில், தகவல் தொழில்நுட்பத்துறையில் எமக்கு அநுகூலம் நிலவுகின்றது. ஆனால் அவற்றை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்சென்று உலகப் பொருளாதாரத்ததில் எமது பங்கினைக் கையகப்படுத்த எம்மால் இயலவில்லை. அதைப்போலவே எமது நாட்டுக்கு சார்புரீதியற்ற இடஅமைவு அநுகூலம் நிலவுகின்றது. மீன்பிடி வளத்தின் அநுகூலம் நிலவுகின்றது. கனிய வளங்களின் அநுகூலம் நிலவுகின்றது. நாங்கள் தற்போது அந்த சார்புரீதியற்ற அநுகூலத்தை வெளிநாட்டவர்களுக்கு விற்று வருகிறோம். எமது ஆட்சியாளர்கள் எமக்குப் புரிந்துள்ளது அதுதான். அவர்களின் நோக்கம் எங்களதும் உங்களதும் பிள்ளைகளின் வாழ்க்கையை உயர்த்துவதல்ல: அவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து அதைப்போல மூன்று நான்கு மடங்கினை அவர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அதுவரை தெரிவுசெய்தவற்றில் இருந்து அரசியல்ரீதியான தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான ஒருசி;ல அளவுகோல்களை வழங்க நான் விரும்புகிறேன். முதலில் அரசியல் புரிய வருபவரின் நோக்கத்தைப் பார்க்கவேண்டும். அது பொதுவான நோக்கமா, தனிப்பட்ட நோக்கமா எனப் பார்க்கவேண்டும். அவர்களின் பாவனை என்ன என்பதைப் பார்க்கவேண்டும். வாழ்கின்ற விதத்தை கண்டுகொள்ள வேண்டும். அவர்களிடம் ஒத்துணர்வு இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தனியாள் ஓருவரை அதிகாரத்திற்கு கொண்டுவந்து சந்தித்த அழிவினை நாங்கள் அனுபவித்துள்ளோம். அது கூட்டு முயற்சியாக அமைதல் வேண்டும். ஒரே நோக்கத்தின்பால் அணிதிரட்ட வேண்டும். எனது விடயத்துறை தரவு விஞ்ஞானமாகும். உலகில் மிக அதிகமான கேள்வி நிலவுவது அந்த விடயத்துறைக்காகும். தரவு விஞ்ஞானத்தில் இடம்பெறுவது தரவுகளைப் பாவித்து முடிவுகளை மேற்கொள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அவசியமான அறிவினை முகாமைத்துவத்திந்கு வழங்குவதாகும். ஒரு நாட்டுக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்த்துவைக்க எம்மால் தரவுகளைப் பாவிக்க இயலும். அதனைக்கொண்டு எதிர்வுகூற இயலும். ஆனால் எமது ஆட்சியாளர்களுக்கு இவற்றில் இருந்து பயன்பெறவேண்டிய அவசியமில்லை. முழு உலகுமே உச்சமட்டக் கைத்தொழில் புரட்சிக்கு சென்றாலும் எமது நாட்டின் கைத்தொழில்கள் இரண்டாவது கைத்தொழில் புரட்சிக்குக்கூட செல்லவில்லை. உற்பத்தித்திறனை மே;மபடுத்தவில்லை. நாங்கள் ஊழல்மிக்க தீத்தொழில் புரிகின்ற ஒரு வகுப்பினருக்கு எமது அதிகாரத்தை சர்வசன வாக்குரிமைப் பலத்தினால் பரிமாற்றிக் கொண்டுள்ளோம். அந்த அதிகாரத்தை நாங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும். அந்த தீர்வுக்குச் செல்வதானால் எமக்கு கட்டாயமாக குழுவொன்று அவசியமாகின்றது. அந்த குழுவினரையே நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் இருக்கின்ற இடத்தில் இருந்துகொண்டே தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு நாங்கள் இளைஞர் சமுதாயத்திற்கு முன்மொழிகிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை அங்கத்தவர் கலாநிதி ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி இரண்டாயிரத்தி பத்தொன்பதில் தொடங்கிய பயணத்தின் தீர்வுக்;கட்டமானதும் முக்கியமானதுமான திருப்புமுனைக்கு இன்று வந்துள்ளது. கொவிட் தடைகளுக்கு மத்தியில் நாங்கள் செய்த வேலைகளின் பெறுபேறாக எமது தலைமைத்துவத்தையும் நிறைவேற்றுப் பேரவையையும் அறிமுகஞ்செய்ய எம்மால் இயலுமாயிற்று. எமக்கிடையில் நிலவிய உரையாடல்கள,; கொள்கை வகுத்தல் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த இடத்திற்கு வருகைதந்துள்ளோம். எம்மை கேள்விக்குட்படுத்தியவர்கள் எம்மை விமர்சித்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். மேலும் பலர் இணையத்தளம் […]
தேசிய மக்கள் சக்தி இரண்டாயிரத்தி பத்தொன்பதில் தொடங்கிய பயணத்தின் தீர்வுக்;கட்டமானதும் முக்கியமானதுமான திருப்புமுனைக்கு இன்று வந்துள்ளது. கொவிட் தடைகளுக்கு மத்தியில் நாங்கள் செய்த வேலைகளின் பெறுபேறாக எமது தலைமைத்துவத்தையும் நிறைவேற்றுப் பேரவையையும் அறிமுகஞ்செய்ய எம்மால் இயலுமாயிற்று. எமக்கிடையில் நிலவிய உரையாடல்கள,; கொள்கை வகுத்தல் வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த இடத்திற்கு வருகைதந்துள்ளோம். எம்மை கேள்விக்குட்படுத்தியவர்கள் எம்மை விமர்சித்தவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். மேலும் பலர் இணையத்தளம் ஊடாக எம்மோடு இணைந்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
தேசிய மக்கள் சக்தி என்பது, உரையாடல்கள் ஊடாக நின்றுவிடாத செயற்பாங்கிற்குள்ளே முன்நோக்கிச் செல்கின்ற ஓர் அமைப்பாகும். இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பியமைக்கான பிரதான காரணம் எமது நாட்டையும் எமது வாழ்க்கையையும் இதைவிட அழகான வசதியான இடத்திற்கு வைப்பதாகும். ஒருவரையொருவர் அழுத்தத்திற்கு இலக்காக்குவதைவிட ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற, இயற்கையை அழிப்பதற்குப் பதிலாக கட்டிவளர்க்கின்ற, கலாசாரரீதியாக முன்னேற்றமடைந்த மனிதநேயம்கொண்ட சமூகமொன்று எமக்கு உரித்தாக வேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அத்தகைய உலகமொன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்று. அர்ப்பணிப்பு, அரசியல் தலைமைத்துவம் மற்றும் பாவனையொன்று எம்மிடம் இருக்கின்றது. இதைப்போன்ற பல ஆட்களும் அமைப்புக்களும் உள்ளனவென்பது எங்களுக்குத் தெரியும். அந்த அனைவரும் ஒன்றுசேர்வதற்கான மேடையொன்றைத்தான் நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோம்.
இன்று எமது நாடு இருக்கின்ற இடத்திற்கு இழுத்துப்போட்ட பிரதான காரணம் எம்மிடையில் இருக்கவேண்டிய ஈடுபாடுகள், ஒத்துழைப்பு, கூட்டுமனப்பான்மை அழிக்கப்பட்டமையாகும். அது தானாகவே இடம்பெற்ற ஒன்றல்ல. அழிக்கப்பட்டது. சமூமொன்று இல்லையென கற்பிக்கப்பட்டது. போட்டித்தன்மை நிறைந்த தன்னலம் கருதுகின்ற தனிப்பயனாளிக்கப்பட்ட மனிதனொருவன் சமூகத்திற்கு அறிமுகஞ் செய்யப்பட்டான். நாங்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் சாதாரணமானதெனவும் இயற்கையானதெனவும் எங்களுக்கு உணர்த்தப்பட்டது. இதனால் இந்த நிலைமைகளை மாற்ற முடியாதென எமக்கு கூறப்பட்டது. இல்லாவிட்டால் நாங்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் தனிப்பட்ட பலவீனங்கள் என கூறப்பட்டது. எனவே தனித்தனியாக தீர்த்துக்கொள்ளுமாறு எமக்கு வற்புறுத்தி அரசியலில் இருந்து எம்மை விலக்கிவைத்தார்கள். சனநாயகச் செயற்பாங்கில் நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக மாற்றப்பட்டோம். எதிர்பாரப்பு மற்றும் ஒத்துணர்வுக்குப் பதிலாக குரோதமும் உதாசீனப்போக்கும் உருவாக்கப்பட்டது.
ஆட்சியாளர்களும் அவர்களின் நண்பர்களும் செல்வந்தர்களாகி நாங்கள் எல்லாவிதத்திலும் ஏழைகளானதே இறுதியில் எமக்கு நேர்ந்தது. இது மாற்றியமைக்கப்படல் வேண்டும். கூட்டுமனப்பான்மையும் பொதுமையும் என்பது தனிப்பட்ட சுதந்திரத்தையும் அடையாளத்தையும் அற்றுப்போகச் செய்விப்பதல்ல. தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு கூட்டுமனப்பான்மையயை மதிக்கின்ற சமூகமொன்றை உருவாக்க முடியும். ஆனால் இன்று சமூகத்திற்கும் ஆளுக்கும் இடையில் சமநிலை கிடையாது. இன்றுள்ள பெறுமானங்கள் மற்றும் பாவனைகள் மூலமாக தனிப்பட்ட நோக்கங்களும் தனியான பயணமுமே இருக்கின்றமையே எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. எமது ஈடுபாடுகள், உறவுகள் மற்றும் எமது குடும்பங்கள் போன்றே பொது நன்மைகளே அதன் மூலமாக அழிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தேடுகின்ற இடைத்தொடர்புகளே அதன் மூலமாக கீழடக்கப்படுகின்றது. பொது நன்மைக்காக இருக்கின்ற அர்ப்பணிப்பு, சேவை புரிவதற்குள்ள ஆர்வம் அழிக்கப்பட்டுள்ளது. போட்டித்தன்மைக்கும் மனிதப் பண்புகளுக்கும் இடையில் சமநிலை அவசியமாகும். இந்த சமநிலை அற்றுப்போனமையால் பிரச்சினைகளுக்கான தீர்வினைக்காண ஆட்கள் என்றவகையில் தூண்டப்பட்டுள்ளார்கள். ஆனால் இன்று நாங்கள் முகங்கொடுப்பது பொது மற்றும் கட்டமைப்புசார்ந்த பிரச்சினைகளையாகும். எமது கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இவையனைத்திலும் இருப்பது கட்டமைப்புசார்ந்த பொதுப் பிரச்சினைகளாகும். எனவே இந்த நிலைமைகளை மாற்றியமைத்திட கட்டமைப்புசார்ந்த மாற்றமொன்று அவசியமாகும். அந்த மாற்றத்தை தனித்தனியாகவன்றி கூட்டாகவே ஏற்படுத்திக்கொள்ள முடியும். எம்மை சிறைப்படுத்தியுள்ள மூடநம்பிக்கைகள், மனோபாவங்கள், விஞ்ஞானரீதியற்;ற கருத்துக்கள் தற்போது நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
முழு உலகுமே ஒரு புதிய பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றது. புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது. கொவிட் நெருக்கடியிலிருந்து மாற்றம் பற்றிய ஒருசில பாடங்கள் எமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. முழு உலகுமே தற்போது அந்த மாற்றத்திற்காக தூண்டப்பட்டுள்ளது. அந்த புதிய உலகம் எம்மருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதெனும் நற்செய்தியை இன்று காலையில் கேள்விப்பட்டோம். சிலீ தேசத்தில் சனாதிபதி தேர்தல் முடிவுகளின்படி ஒரு மாணவர் தலைவராக விளங்கிய கேப்ரியல் வொறிட் வெற்றிபெற்ற சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இடதுசாரி, முற்போக்குவாத, சனநாயகத்தை மதிக்கின்ற அனைவருக்கும் அது பாரிய சமிக்ஞை என நான் நினைக்கிறேன். எம்மால் இந்த உலகத்தை மாற்றியமைத்திட இயலுமென்ற நம்பிக்கையின் பேரில்தான் தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பபட்டது. வாருங்கள்! நாங்கள் வேலைசெய்வோம்: வேலைகளை பொறுப்பேற்போம்: நாங்கள் அர்ப்பணித்திடுவோம், புதியதோர் உலகம், இன்றைய தினத்தைவிட அழகான உலகத்தை உருவாக்கிட ஒன்றுசேர்வோம்: அதனைக் கட்டியெழுப்புவோம்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டவாதி லால் விஜேநாயக்க இது எமது நாடு பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக எல்லாப் பக்கங்களிலும் சீரழிந்துள்ள தருணமாகும். சுதந்திரம் கிடைத்து எழுபத்தி மூன்று வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் இந்த பிராந்தியத்தின் நாடுகள் மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு சீரழித்து இருக்கிறார்கள். நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவந்த அரசியலை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் தோற்கடிக்கவேண்டியது ஆட்களை மாத்திரமல்ல. அவர்களின் அரசியலையும் தோற்கடிக்க […]
இது எமது நாடு பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக எல்லாப் பக்கங்களிலும் சீரழிந்துள்ள தருணமாகும். சுதந்திரம் கிடைத்து எழுபத்தி மூன்று வருடங்களாக நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் இந்த பிராந்தியத்தின் நாடுகள் மத்தியில் ஆப்கானிஸ்தானுக்கு மாத்திரம் மேலாக இருக்கின்ற நிலைமைக்கு சீரழித்து இருக்கிறார்கள். நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவந்த அரசியலை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் தோற்கடிக்கவேண்டியது ஆட்களை மாத்திரமல்ல. அவர்களின் அரசியலையும் தோற்கடிக்க வேண்டும். பொருளாதார ரீதியாக எமது நாடு வீழ்ந்துள்ள நிலைமை பற்றி புதிதாக கூறவேண்டியதில்லை. அதைப்போலவே எமது சமூகமும் சீரழிந்துள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவுகளை ஒன்றிணைத்து இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதில் தோல்விகண்டுள்ளார்கள். பாராளுமன்றத்தைப் பார்த்தால் எத்தகைய ஆட்சியாளர்களை நியமித்துள்ளளோம் என்பது தெளிவாகின்றது.
நாடு எந்தளவுக்கு சீரழிந்துள்ளது எனக் கூறப்போனால் இளைஞர் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் நாட்டை விட்டுச் செல்லவே எதிர்பார்க்கிறார்கள். அதற்காக பல்வேறு வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நாடு பற்றிய அவர்களின் முழுமையான நம்பிக்கை சிதைவடைந்து விட்டது. எதிர்காலமொன்று இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை. மிகவும் பயங்கரமான நிலைமை இதுவாகும். இதனால் மக்கள் விடுதலை முன்னணியும் ஏனைய இடதுசாரி பிரிவுகளும் ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தியை தாபித்தன. மாற்று அரசியலை இந்த நாட்டுக்கு அறிமுகஞ் செய்வதற்காகவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது. அதைப்போலவே மாற்று வேலைத்திட்டமொன்றையும் மாற்றுத் தலைவரொருவரையும் அறிமுகம் செய்வதற்காகவே. அதைப்போலவே எழுபத்தைந்து பேரை உள்ளடக்கிய நிறைவேற்றுப் பேரவையொன்றை அறிமுகம் செய்வதற்காகவே. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் தொடரை நாடு பூராவும் எடுத்துச்சென்று மக்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுப்போம். அந்த கொள்கையில் ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டுமாயின் அதற்கும் இடமுண்டு. சீரழிந்த இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அவசியமான அரசாங்கமொன்றை நிறுவுவதற்காக செயலாற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். மாவட்ட மட்டத்திலான சம்மேளனங்களை வருங்காலத்தில் நடாத்தி மக்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறுகின்ற வகையில் செயலாற்றி சீரழிந்த நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஒன்றுசேருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். தேசிய மக்கள் சக்தி ஒருசில கட்சிகள் அல்லது ஒருசில குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாற்று அரசியல் ஊடாக சீரழிந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்று குவிகின்ற அனைவருக்குமான பொது நடுநிலையமாக இது கட்டியெழுப்பப்படு;ம். இதனைச் சுற்றி அணிதிரளுமாறு நாங்களை மக்களிடம் மன்றாடுகிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் நிஹால் அபேசிங்க பிரமாண்டமான மக்கள் சக்தியாக மாற்றுவதற்காகவே நாங்கள் தேசிய மக்கள் சக்தியை விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தேசிய நிறைவேற்றுப் பேரவையை நியமித்துக்கொண்டோம். இது ஆரம்பம் மாத்திரமே. இந்த தேசிய பேரவை அடுத்ததாக மாவட்ட பேரவைகளை தாபிப்பதில் இடையீடு செய்யும். இந்த நாட்டில் ஒவ்வொரு பிரதேச சபை, நகர சபைப் பிரிவும் கிராம அலுவலர் பிரிவும் உள்ளடங்கத்தக்கதாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரிவுப் பேரவைகளை நியமிப்போம். […]
பிரமாண்டமான மக்கள் சக்தியாக மாற்றுவதற்காகவே நாங்கள் தேசிய மக்கள் சக்தியை விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தேசிய நிறைவேற்றுப் பேரவையை நியமித்துக்கொண்டோம். இது ஆரம்பம் மாத்திரமே. இந்த தேசிய பேரவை அடுத்ததாக மாவட்ட பேரவைகளை தாபிப்பதில் இடையீடு செய்யும். இந்த நாட்டில் ஒவ்வொரு பிரதேச சபை, நகர சபைப் பிரிவும் கிராம அலுவலர் பிரிவும் உள்ளடங்கத்தக்கதாக நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரிவுப் பேரவைகளை நியமிப்போம். நம்பிக்கையான நேர்மையான நல்ல மனிதர்களின் ஒதுக்கமாக இந்த பேரவைகளை நியமிப்போம். நாங்கள் இந்த நாட்டு மக்கள்மீது பரிபூரணமான நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த மக்கள்தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள பிரதானமான வளம். இந்த மனிதவளத்தைப் பாவிப்பதுதான் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்ற எந்தவோர் அரசியல் குழுவிற்கும் உள்ள சவால். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது அவ்வளவுதூரம் சிரமமானதாக அமையமாட்டாதென நாங்கள் நம்புகிறோம்.
2019 இலும் 2020 இலும் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை நம்பியே வாக்களித்தார்கள். ஆனால் மிகவும் குறுகிய காலத்தில் இந்த நம்பிக்கை பாரதூரமானவகையில் வற்றிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்நாட்டிலுள்ள அனைவரும் பாரதூரமான விதத்திலான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பலவற்றுக்கு உள்ளாக்கப்பட்டே கடந்த ஒரு வருடமும் 08 மாதங்களும் கழிந்தது. தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்நாட்டின் சகோதர மக்களுக்கு இது கானல் நீருக்குப் பின்னால் செல்வதாகுமென தெளிவுபடுத்த முயற்சிசெய்தோம். மக்களின் எதிர்பார்ப்பு சீக்கிரமாக மீறப்படுகின்றது என்பதாகும். இதனால் எம்மோடு ஒன்றுசேருங்கள் என அந்த நேரத்தில் மக்களிடம் கூறினோம். ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அந்த கோரிக்கைக்கு அவ்வளவுதூரம் செவிசாய்க்கவில்லை. அங்கு பல்வேறு மக்கட் பிரிவுகள் இருந்தன. கல்வியறிவுடன்கூடிய தொழில் அல்லது தொழில் முயற்சியில் ஈடுபட்டு மிகவும் நேர்மையாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்த்த பாரிய குழுவினர் இருந்தார்கள். ஒருசிலர் தொழில்களைக் கைவிட்டு அரசியலில் ஈடுபட்டார்கள். புத்திஜீவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவின் குழுவுடன் இணைந்தார்கள். திருவாளர் கோட்டாபய ராஜபக்ஷ புதிதாக அரசியலில் வந்தவர் என்பதால் பழைய வழமையான ஊழல் செயற்பாங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்ப இடையீடு செய்வாரென பலரும் நம்பினார்கள்.
ஆனால் அதன் பின்னால் சென்ற பெரும்பாலானோர் தற்போது வழிதவறி உள்ளார்கள். அதனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுகின்ற தேசிய இயக்கமொன்றாக தேசிய மக்கள் சக்தியை மாற்றவேண்டிய நிலை எங்களுக்கு எற்படுகின்றது. நாங்கள் அவர்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றைக் கொடுக்கிறோம். அவர்களை நாங்கள் வென்றெடுத்து அவர்களுக்கு இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பொறுப்பினையும் தரப்பினர்களாக மாறுகின்ற பொறுப்பினையும் கையளிக்கவேண்டும். நேர்மையான, நம்பிக்கைமிக்க வெகுசன தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பி நாங்கள் அவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற அரும்பணியுடன் தொடர்புகொள்ள வாய்ப்பு வழங்கவேண்டும். நேர்மையான, ஊழலற்ற, நாட்டை நேசிக்கின்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு இந்த நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வசிக்கின்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியைத் தவிர உங்களக்கு வேறு பாதையொன்று கிடையாது. தேசிய மக்;கள் சக்தி என்றவகையில் தற்போது ஒன்றுசேர்ந்துள்ள எங்களால் மாத்திரம் செய்யக்கூடிய பணியல்ல. இது உங்களுடையதும் தேசமாகும். இது எம்மனைவரதும் தேசமாகும். தேசத்தின் பிள்ளைகளுக்காக இந்த நாட்டை எஞ்சவைக்கவேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். உங்கள் பிள்ளைகள் வசிப்பதற்கான சுற்றுச்சூழலை உருவாக்கவேண்டும். நாங்கள் பல அர்ப்பணிப்புகளை செய்யவேண்டி ஏற்படும். அதற்காக உங்களின் சக்திக்கேற்றவாறு பங்களிப்புச் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறோம்.