(-Colombo, November 18, 2024-) 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை – ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு – பிரதமரின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் […]
(-Colombo, November 18, 2024-)
21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை
– ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
– பிரதமரின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.
புதிய அமைச்சரவை 21 பேருக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் பின்வருமாறு.
01.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க:பாதுகாப்பு, நிதி ,திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்
02.கலாநிதி ஹரிணி அமரசூரிய: பிரதமர், கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
03.விஜித ஹேரத்; வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்
04.பேராசிரியர் சந்தன அபேரத்ன:பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
05.சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார; நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
06.சரோஜா சாவித்ரி போல்ராஜ்;மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
07.கே.டி லால் காந்த;விவசாயம்,கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
08.அநுர கருணாதிலக: நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர்
09.ராமலிங்கம் சந்திரசேகர்: கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
10.பேராசிரியர் உபாலி பன்னிலகே; கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
11.சுனில் ஹந்துன்னெத்தி: கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்
12.ஆனந்த விஜேபால: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
13.பிமல் ரத்னாயக்க:போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர்
14.பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி:புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
15.டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ: சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
16.சமந்த வித்யாரத்ன : பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
17.சுனில் குமார கமகே : இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
18.வசந்த சமரசிங்க:வர்த்தக,வாணிப ,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
19.பேராசிரியர் கிரிசாந்த அபேசேன : விஞ்ஞான,தொழில்நுட்ப அமைச்சர்
20.பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ: தொழில் அமைச்சர்
21.பொறியியலாளர் குமார ஜயகொடி: வலுசக்தி அமைச்சர்
22.டொக்டர் தம்மிக பட்டபெந்தி;சுற்றாடல் அமைச்சர்
இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்
(-Colombo, November 15, 2024-)
(-Colombo, November 15, 2024-)
(-Colombo, November 14, 2024-) “வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம்” – வாக்களித்த பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க […]
(-Colombo, November 14, 2024-)
“வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம்”
– வாக்களித்த பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார்.
வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி உறுதிபட கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் காணப்பட்ட ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தை இனிவரும் தேர்தல் காலங்களிலும் எதிர்பார்ப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் அதை உணர்ந்துள்ளனர் என்றும் அதனையே இந்நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
196 பாராளுமன்ற உறுப்புரிமைக்காக 8361 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். 29 ஆசனங்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படும்.
(-Colombo, November 11, 2024-) சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தீர்மானம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் […]
(-Colombo, November 11, 2024-)
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தீர்மானம்
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடன் சுமையால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
பராட்டே சட்டத்தை (Parate Execution) அமுல்படுத்துவது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வங்கித் துறைக்கு வழங்கக்கூடிய ஆதரவு மற்றும் தற்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெற்றுக்கொண்டுள்ள கடன்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன் தொடர்பான அறிக்கை யொன்றைத் தயாரிக்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது வங்கிகள் பராட்டே சட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரை யாடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் வங்கி கண்காணிப்பு பணிப்பாளர் ஆர். ஆர். எஸ். டி சில்வா ஜயதிலக, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.டி. அமரகோன், வரையறுக்கபட்ட இலங்கை வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திரஜித் போயகொட, யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் ரொட்ரிகோ, சம்பத் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் மனோஜ் அக்மீமன, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் சம்பத் பெரேரா, கொமர்ஷல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் நளின் சமரநாயக்க, ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை மீட்பு மற்றும் புனர்வாழ்வு அதிகாரி நிரோஷ் பெரேரா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமால் தேவரதந்திரி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
(-Colombo, November 8, 2024-) மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. […]
(-Colombo, November 8, 2024-)
மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அங்கு, உப்பு நீர் தடுப்பு கட்டப்பட்டதால், வெள்ள நிலைமை மற்றும் விவசாய நிலங்களுக்கு உப்பு நீர் வரும் நிலை ஏற்படுகின்றதா என்பதையும் அதற்கான நிரந்தரத் தீர்வுகளை வழங்குவது முறையான ஆய்வுக்குப் பின்னரே செய்யப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பொறியாளர்கள் தீர்மானித்த்துடன், இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் ஆதரவைப் பெறுவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல் வழங்கினார்.
அத்துடன், இதற்கான பரிந்துரைகளை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கிய கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அதற்கான தீர்வை வழங்குமாறும், அந்தப் பணிகளை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறும் மேலும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், அந்த வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் சபை இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது வலியுறுத்தினார்.
உப்பு நீர் தடுப்பினால் நில்வலா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் தமது விளைநிலங்களை இழத்தல் உட்பட வாழ்வாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அந்த நிலைமையை விரைவாக மாற்ற வேண்டியது அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினா்.
மேலும், மாத்தறை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(-Colombo, November 1, 2024-) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, […]
(-Colombo, November 1, 2024-)
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடபட்டது.
மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமத் கினாவும்(fathimath Ghina)இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.